டீ கடைக்காரர் பொண்ணு
எனக்கு பொண்ணுப் பார்த்துக்கொண்டிருந்த நேரம்.தெரிந்த நண்பர் ஒருவர் ஒரு பொண்ணு இருக்கு பாக்கலாம் என்றார். நானும் சரியென்றேன்.பக்கத்தில் இருக்கும் நகரத்தில் இன்று திருவிழா அந்த பொண்ணு வரும் அப்போ அந்த பொண்ணைக் காட்டுகிறேன் என்றார்,நானும் சரி என்றேன். அன்று காலையில் குழித்து முடித்து என்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.எனக்காக நண்பர் காத்திருந்தார்.டீ சாப்பிடலாம் என்றேன்.அவரும் சரியென்றார்.பக்கத்தில் உள்ள டீ கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.என் பைக்கின் மேல் சாய்ந்துகொண்டு டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.பைக் கண்ணாடியில் ஒரு பொண்ணு சைக்கிள் தள்ளிக்கொண்டு வருவதைப் பார்த்தேன்.'சூப்பர் பொண்ணு' ல அப்படின்னு ஒரு பீலிங்.அப்புறம் அந்த பொண்ணு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.நான் சுதாரித்துக்கொண்டு பைக்கின் மேலிருந்து ஸ்டடியாக நின்றேன்.அந்தபெண் டீ கடையின் உள்ளே சென்றது.அப்போதான் புரிந்தது அது டீ கடைக்காரரின் பெண் என்று.நல்லஅழகான பொண்ணு என்று நினைத்துக் கொண்டேன்.திருவிழா கூட்டம் வந்தது அந்த பெண்ணை அவர் காட்டினார்.எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை.என் சிந்தனை எல்லாம் டீ கடை பெண்ணை சுற்றியே இருந்தது.
மூன்று மாத இடைவெளியில் அருகில் உள்ள கோவில் திருவிழா வந்தது.
அப்போ அந்த பெண்ணைப் பார்க்கவே சென்றிருந்தேன்.பார்த்தேன் மகிழ்ந்தேன். ஒரு நண்பரைப் பிடித்து அந்தப் பெண்ணை விசாரிக்கச் சொல்லியிருந்தேன்.விடை கிடைக்கும்முன் திருமணம் குழந்தை என்று நாட்கள் நகர்ந்துவிட்டன.சமீபத்தில் அந்த நகரத்திற்கு சென்றிருந்தேன்.அந்த டீ கடையைப் பார்த்தேன்.அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும்போலிருந்தது.அந்தப்பெண்ணுக்கு கல்யாணம் நடந்திருக்குமா.? குழந்தைகள் இருக்குமா? அவள் புருஷன் எப்படி இருப்பார்?குழந்தைகள் எப்படி இருக்கும்? இப்போ அவள் எப்படி இருப்பாள்? இப்படி பல கேள்விகள் என்னுள்.
யாரையும் எதிர்பார்க்காமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது மிக வேகமாக.