தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளின் வேலை தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகிவிடாமல் பார்த்துக் கொள்வதுதான். தமிழ்நாட்டில் மட்டும் எதற்கு இத்தனை அரசியல் கட்சிகள் உதயமாகிறது? தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகிவிட்டால் உலக அளவில் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும். ஏற்கனவே உலகை ஆண்டவர்கள் தமிழர்கள் தான் என்று அவர்களுக்கு தெரியும். தன்மானம் உள்ள தமிழன் எந்த அரசியல் இயக்கத்துடனும் பயணிக்க மாட்டான். உலக அளவில் தமிழர்கள் மட்டும் ஏன் சினிமா கூத்தாடிகள் பின்னாலயும் அரசியல்வாதிகள் பின்னாலயும் அலைந்து திரிகிறார்கள்.? யோசித்தால் புரியும் இது திட்டமிட்ட சதிதான் என்று.
அரசியல் கட்சிகளால் பொதுமக்களுக்குள் ஒற்றுமை இருக்காது. ஒரே கட்சியில் உள்ளவர்களுக்குள் பதவி மோகத்தால் பண மோக்கத்தால் பகை, வெறுப்பு,பொறாமை உணர்வே அதிகமாக வெளிப்படுகிறது. பொது மக்களை நல்வாழ்வு வாழவிடாமல் செய்யும் இந்த இயக்கங்கள் நமக்கு தேவையா?
தமிழ்நாட்டில் உள்ள வளம் அபரிமிதமானது. இங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அனைவருமே செல்வ செழிப்பாக வாழ தகுதி உள்ளவர்கள். அப்படி இருந்தும் தமிழர்கள் ஏன் கடன்காரர்களாகவும் ஒரு நிம்மதியான நிறைவான வாழ்வு வாழ முடியாமலும் இருக்கிறார்கள்??அதற்கு காரணம் இங்கு உள்ள அரசியல்வாதிகள் தான்.
நமது வளமான மண்ணை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வாழ்த்தவர்கள் தான் இந்த அரசியல்வாதிகள்.
கண்ட கண்ட ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்து விஷங்களையும் நமது மண்ணில் அனுமதித்து, மண்ணை மலடாக்கியவர்கள் இந்த அரசியல்வாதிகள்.
கண்ட கண்ட ரசாயன மருந்துகளையும் தடுப்பூசிகளையும் அனுமதித்தவர்கள் இந்த அரசியல்வாதிகள். தடுப்பூசி போடுவது போல் நடித்து அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தூண்டியவர்கள் இந்த அரசியல்வாதிகளும் சினிமா கூத்தாடிகளும்.
கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கை விடுவது எவ்வளவு அபத்தமானது. இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் பொது மக்களை கடன் வாங்கும் சூழ்நிலையில் வைப்பது கேவலம் இல்லையா? செழிப்பாக வாழ வைத்திருக்க வேண்டும் தானே? இந்த கேவலமான அரசியல்வாதிகள் உங்களுக்கு தேவையா??
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளையும், ஜாதி கட்சிகளையும், ஜாதி சங்கங்களையும், சினிமா கூத்தாடிகளின் இயக்கங்களையும் இழுத்து மூடும் காலம் வந்துவிட்டது.
#2026Elections
#2030Agenda