ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

தமிழும் தமிழர் சமயமும்..

*தமிழும், தமிழர் சமயமும் 🌈*

தமிழ் ஒரு இயற்கை மொழி, அத்தமிழே உலக வரலாற்றின் திறவுகோல்.

மனிதனின் இயற்கை மொழி என்பது 
1. *காகா* என கரையும் காக்கையை *காகா* என்றழைத்ததும்.
2. *குக்கூ* என்று கூவும் குயிலை *குக்கூ* என்றழைத்ததும்.
3. *மா* என்று கத்தும் மாட்டை *மாடு* என்றழைத்ததும்.
4. *மே* என்று கத்தும் ஆட்டை *மேசம்* என்றழைத்ததும் தான்.

*து* என்று துப்பும் அல்லது விரட்டும் ஒலி, *ஏய்* என்று தொலைவில் உள்ளவனை விளிக்கும் ஒலி, *ஐ* என்ற வியப்பை வெளிப்படுத்தும் ஒலி, *ஈ* என்று பல்லிளிக்கும் *தா* எனப் பொருள்படும் சில ஒலிகள் மட்டுமே, அவனது மிகவும் சொற்பமான *சொல் அகராதியில்* இருந்தன.

ஒலி எழுப்பாத பொருட்களுக்கு அவனுக்கு பெயரிடத் தெரியவில்லை, செயல்களை குறிக்கும் வினைச்சொற்களை அவனால் உண்டாக்க இயலவில்லை. அவனுக்குப் பேசும் நாக்கிருந்தது, ஆனால் பேசச் சொற்கள் தான் இல்லை. அதனால், சிவனுக்கு முந்தைய மனிதன் ஏறத்தாழ ஊமை மொழி பேசியவன் தான். அந்த ஊமை மனிதனை பேச வைத்தவன் தான் *முதலாம் தமிழ் சங்கத்தை* தொடங்கிய *சிவன்*.

அதே சிவன் தான் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே
1. இரும்பை அதன் தாது பொருளிலிருந்து உருக்கி பிரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டான். அதுவே *உருக்கு வேதம்*, ருக் வேதம், ரிக் வேதம் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அதை பிராமணன் திருடிக்கொண்டு மாற்றி எழுதிவிட்டான் என்பது வேறு கதை.
2. சிவன் வானியல் விஞ்ஞானத்தையும், அரசாளும் தத்துவங்களையும், மருத்துவ நுணுக்கங்களையும், இசைக்கருவி தொழில்நுட்பங்களையும், கால தத்துவங்களையும் தனது முதலாம் தமிழ் சங்கம் மூலம் வளர்த்தெடுத்தார்.

தமிழ்ச் சங்கங்கள் மொழியை மட்டும் அல்ல, விஞ்ஞானம், தொழிநுட்பம், புதிய தத்துவங்கள், அவற்றை கையாளும் கலைச் சொற்கள் போன்றவற்றையும் உருவாக்கின.

இரும்பை உருக்கிய சிவன் *திரிசூலம், வாள்* போன்ற வேட்டை மற்றும் போர் செய்யும் ஆயுதங்களையும் தயாரித்தார்.

*வாள்* என்ற சொல்லை அவர் எப்படி உருவாக்கினார் தெரியுமா ?

காலபைரவர் சிலையில் சிவன் *நாயுடன்*🐕‍🦺 காட்சியளிப்பார். நாய் *வேட்டை விலங்கு* என்பது  நாம் அனைவரும் அறிந்ததே. நாய்களை பற்றி நன்கறிந்தவர் தான் சிவன்.

நாய் மூன்று விதமான ஒலிகளை ஏற்படுத்தும். 
1. *லொல்* எனும் தனது இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் *அடையாள ஒலி.*
2. *வள்* என்று *சண்டை* போடும் போது அது எழுப்பும் ஒலி.
3. நாய் *ஊளையிடும்* ஒலி.

நாயின் லொல் என்ற ஒலி, நாம் நமது வருகையை அறிவிக்க இருமுவது போன்றது தான்.

*லொல்லா 👉🏻 னொன்னா 👉🏻நா👉🏻நாய்*

*நா* என்ற ஓரெழுத்து சொல் முதலில் நாயை குறித்து, பிறகு நாயின் அடையாளமான *தொங்கும் நாக்கை* குறித்து, அதன்பிறகு மிகவும் வித்தியாசமான நாக்கை உடைய விலங்கு என்ற பொருளில்

*நா (நாக்கு)+ ஐ (வியப்பான) = நாய்* 

சிறுவர்கள், ஒரு அழகான, அல்லது வியப்பான பொருளை பார்த்தால் *ஐ* என்று வியப்பார்கள்.

அதே வயதில் முதியவர்கள் *ம்ம்ம்... நல்லா இருக்கு...* என்பார்கள்.

இந்த *இம்* என்பது தான் *அம்* என்று, அழகையும், வியப்பையும் குறிக்கும் விகுதியானது.

*நா (நாக்கு) + அம்(அழகு) 👉🏻 நா + ம் 👉🏻 = நாம்*

அதாவது, அழகிய பேசும் நாக்கை உடையவன் என்று நம்மை அறிமுகப் படுத்திக்கொள்ளும் பொருளில் *நாம்* என்ற சொல் உருவாகி இருக்கவேண்டும்.

நாய் *வள்* என்ற ஒலியை எழுப்புவதின் மூலம், சக விலங்குகளோடோ அல்லது மனிதனோடோ சண்டையிடும் போது ஏற்படுத்தும் ஒலியாகும்.

நம்மிடம் சத்தமாக சண்டையிடுவது போன்று பேசுபவரை நாம் *"ஏன் வள் என்று குரைக்கிறாய்"* என்போம்.

சண்டை போடும் நாய் ஏற்படுத்தும் *வள்* என்ற ஒலியை, சண்டையை குறிக்கும் ஒலியாக சிவன் கருதினார். அதன் அடிப்படையில் தான் சண்டைக் கருவியான வாளுக்கும் பெயரிட்டார்.
*வள் 👉🏻 வாள்.*

தானாக *ஒலியெழுப்பாத* பொருட்களுக்கு பெயர் இப்படி தான் தோன்றியது.

*வள்* என்று ஒலியை ஏற்படுத்தும் நாய்க்கு *வாலும்* உண்டு. அதுவும் *வாள்* போன்றே வளைந்து இருக்கும்.

ஒரே சொல்லை இரண்டு வெவ்வேறு பொருட்களுக்கு அழைத்தால் குழப்பம் நிலவும் என்பதற்காக

*வல்லின ஒலி,*
*மெல்லின ஒலி*
என்ற கருதுகோள் முதலாம் தமிழ் சங்கத்திலேயே உருக்கொண்டது.

*வன்மையை* குறிக்கும் *வாள்* என்ற *ள* ஒலியானது, வன்மையாக *ள* என்றே ஒலிக்க வேண்டும்.

மென்மையான *வாலைக்* குறிக்கும் சொல்லின் *ள* ஒலியானது, மென்மையாக *ல* என்று ஒலிக்க வேண்டும்.


அதாவது, *வாள்* என்பதற்கும் *வால்* என்பதற்கும், உச்சரிப்பின் வழி வித்தியாசம் ஏற்படுத்தி, இவற்றை இரண்டு வெவ்வேறு சொற்களாகினர்.

சொற்களை உண்டாக்குவது அவ்வளவு எளிதல்ல. அதாவது, சொற்களை ஏரண முறைப்படி லாஜிக்கலாக உருவாக்க வேண்டியுள்ளதால், ஒரே அடிப்படையிலிருந்து உருவாக்கப்படும், வெவ்வேறு பொருள் கொண்ட ஒரே சொல்லை, ஒலிப்புகளை சற்று வித்தியாசப்படுத்தி, வெவ்வேறு சொற்களாக உருவாக்கினர்.

அதனால் தான் ஒலிகளில் *வல்லினம், மெல்லினம், இடையினம்* என்று வந்தது.

அதாவது *ன, ண, ந* என்றும், *ர, ற* என்றும், *ல, ள, ழ* என்றெல்லாம் *மூன்றாம் தமிழ் சங்கத்தில்* வந்தது, இது போன்ற காரணங்களால் தான்.

இவ்வாறாக சிவன் காலத்திலேயே வல்லின மெல்லின ஒலிகள் அடையாளப் படுத்தப் பட்டிருந்தாலும், *அகர* எழுத்துக்கள் அதாவது *Alphabets* அன்று உருவாகாததால் அவற்றிற்கு தனிக் குறியீடுகள் இல்லை.

சொற்களை குறிக்கும் படயெழுத்தான *சித்திர எழுத்துகள்* தான் அன்றைய எழுத்து முறை.

சண்டை நாய் எழுப்பும் வள் என்று ஒலியிலிருந்து, நாயின் வாலுக்கும், நாயின் வால் போன்று வளைந்திருக்கும் போராயுதமான வாளுக்கும் பெயர் வந்தது.

பிறகு நாயின் வாலே அனைத்து விலங்குகளின் பொதுப் பெயராகவும் மாறியது.

இப்பொழுது *வாளைக்* கொண்டு உருவான சொற்களில் சிலவற்றை காண்போம்.

*வானில்* இருக்கும் *வானவில்* வாள் போன்று வளைந்திற்கும். அழகாகவும் இருக்கும். அந்த வாளைக்கொண்டு 
*வாள் + அம்(அழகு) = வாளம் 👉🏻 வானம்* 

*Rainbow* விற்கு ஆதி பெயர் வானம் தான். ஆனால் Rainbow வில் ஏழு வண்ணங்கள் உள்ளதை கொண்டு

*வானம் 👉🏻வண்ணம்* என்ற சொல் உருவானது. அதாவது நிறத்திற்கான பொதுச்சொல்  இப்படி தான் உருவானது.

Rainbow - வுக்கு வானம் என்பது மூலப்பெயரானாலும், அந்த Rainbow ஆகாயத்தில் உள்ளதால், Rainbow - வைக் குறித்த வானம் என்ற சொல்லே ஆகாயத்தின் பெயராகி, அந்த ஆகாயத்தில் உள்ள Rainbow - வுக்கு *வானத்தின் வில்* என்ற பொருளில் வானவில் என்றப் பெயர் கொடுக்கப்பட்டது.

இதுவரை வாள், வால், வானம், வண்ணம், வானவில் என்ற சொற்கள், அடிப்படை ஒலிகளிலிருந்து எப்படி உருக்கொண்டன என்பதை பார்த்தோம்.


இந்த சொற்களிலிருந்து தான் *முருகன்* *வாழ்க்கை* என்ற சொல்லை உருவாக்கினர்.

1. சிவலிங்கத்தின் மாற்று வடிவமான *அறுமுனை நட்சத்திரத்தை*✡️ உருவாக்கியவர் முருகன் என்பதால் அவர் *6* என்ற எண்ணோடு தொடர்பு கொள்கிறார்.
2. வானில் *ஏழு கோள்களை* கண்டதால் *7* என்ற எண்ணுடனும் அவர் நெருங்கிய  தொடர்பு கொண்டவராக உள்ளார்.
3. குமரி கண்டத்தில் *ஆயர் குலத்* தலைவனாக இருந்த முருகனே, புல்லாங்குழலைக் கொண்டு *எழிசை* யைக் கண்டிருக்க வேண்டும். அதற்கு முன்பு வகுக்கப்பட்ட சுரங்கள் குறைவாக இருந்திருக்கும்.
4. குமரிக்கண்ட அழிவின் போது பெருந்திரளான பலதரப்பட்ட மக்களை நீருழியிலிருந்து காத்து, அவர்களோடு தென்னிலங்கையில் குடியேறினார்.
5. சிவனின் வரலாற்றை தக்க வைக்க *உருவ வழிபாட்டையும், கோயில் வழிபாட்டையும்* முதன் முதலாக தொடங்கினார். 
6. குமரிக்கண்ட கலைகளை காக்க, மக்கட் தொகை பெருக்கத்தை ஊக்குவித்து, அதற்கான வழிகளைச் சொன்னதால், அவர் *கருவளத்திற்கான கடவுளாக* அறியப்படுகிறார்.
7. ஆணின் *விந்தணு வடிவில் வேலினை* உருவாக்கினார். 
8. கரு வளர்ந்து குழந்தையாகும் படிநிலைகளை கண்டு சொன்னதால் இவர் *சேயோன்* என்றழைக்கப்பட்டர். அதனால் அவர் காலத்திற்கு பிறகு அவரை குழந்தையாகவும் வழிபட்டனர்.
9. கர்ப்பிணி பெண்களுக்கு 7ஆம் மாதத்தில் காப்பு வளை எனும் *வளைகாப்பு* நிகழ்த்தி  வளரும் கருவின் சுகத்திற்கு, சுக பிரசவத்திற்கும் வழிவகை செய்தார்.
10. மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய *விவசாய தொழிநுட்பத்தையும்* கண்டார். அதற்கான விவசாய நாட்காட்டியையும், (Sidereal Calendar) சிவனை குறித்த சித்தர் ஓரை *(சித்தர் + ஓரை = சித்தரோரை 👉🏻 சித்திரை)* என்ற தான் உருவாக்கிய நட்சத்திரத்தின் (நல் + சித்திரம்) அடிப்படையில் உண்டாக்கினார். அந்த நாட்காட்டியில் ஏழு கோள்களை குறித்த ஏழு நாட்கள் தொகுப்பை *"கோளமை"* அதாவது *"கிழமை"* என்றார்.
11. விவசாயப் பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்த கொள்ளை, கொலைகளிலிருந்து தற்காத்து கொள்ள *தற்காப்புக் கலைகளை* உருவாக்கினார்.
11. விவசாயம் வளர்ந்து, உணவு பாதுகாப்பு ஏற்பட்டவுடன், *கொல்லாமையையும், சைவ உணவு முறையையும்* வலியுறுத்தினார்.
12. சிவன் எதேச்சையாக கண்டு செயல்படுத்திய குண்டலினி ஓகத்தை, விஞ்ஞான முறையில் ஆய்ந்து, அதனை ஏழு படிநிலைகளாக  பகுத்து, *குண்டலினி* எழுப்பும் வித்தையை எளிதாக்கி மக்களுக்கு கற்பித்தார்.
13. மலை குன்றுகளில் தங்கி தவம் செய்து கடவுளாகும் வாய்ப்பு பெண்களுக்கு இல்லை என்பதால், இது பெண்களின் நிலையை காலப்போக்கில் தாழ்த்திவிடும் என்பதாலும், அது சமூக அழிவிற்கு வழிவகுக்கும் என்பதாலும், *பெண் தெய்வங்களை* உருவாக்கினர்.

அந்த பெண் தெய்வங்களையும் கோளுக்கு ஒன்று என்ற விதத்தில் *ஏழு மாதாக்களாக* (சப்த கன்னியர்கள்) உருவாக்கினார்.

அந்த சப்த மாதாக்கள் ஒவ்வொன்றிற்கும் தனிச்சிறப்புகளை வகுத்தார். முருகன் மனித வாழ்க்கையை ஏழு படிநிலைகள் கொண்டதாகப் பகுத்தார்.

அவற்றின் ஒவ்வொரு படிநிலைக்குமான அடையாள தெய்வமாக அந்த *ஏழு பெண் தெய்வங்களை* வடிவமைத்தார்.
 
ஒவ்வொரு படிநிலைக்குமான *காலம்,* வியாழன் சூரியனை சுற்றிவரும் 12 ஆண்டுகளையே அளவையாகக் கொண்டார். 

இதன்படி *7* பருவங்களில் வாழும் மனிதனின் வாழ்நாள் *84* ஆண்டுகள். ஏறத்தாழ, இதுவே சராசரி மனிதனின் வாழ்நாளும் கூட.

மூச்சைக் கட்டுப்படுத்தி *ஓகம்* செய்த சித்தர்கள், இதைப் போல பன்மடங்கு காலம் வாழ்ந்தனர் என்பது உண்மை.

*0 - 12 வயது* வரை உள்ள முதல் பருவமானது,

கருவறையிலிருந்து வெளிவரும் குழந்தை ஏதும் அறியாத *அஞ்ஞான* நிலையை குறிக்கும். எனவே, இந்த பருவத்திற்கு *கருத்த* நிறத்தையும், அந்த நிறம் குறிக்கும் *காளியையும்* அடையாள தெய்வமாக்கினார். போர் என்பதே மக்களின் அஞ்ஞான வெளிப்பாடு தான். அந்த வகையில் போர் கடவுளாக காளி, இந்த நிலைக்கு பொருத்தமான தெய்வமாகிறாள். இந்த தெய்வம் குமரிக்கண்டத்திலேயே அறியப்பட்டவள் தான். சிவன் அருளிய *இருமை தத்துவத்தின்* குறியீடாக, சிவன் பகலையும் வெண்மையையும், காளி இரவையும் கருநிறத்தையும் குறிப்பதாக சிவனின் வழி வந்தோர் அடையாளப்படுத்தினர்.

காளிக்கான கோள், மங்கலாகத் தோன்றும் காரி எனும் *சனிக் கோள்* தான். 

இந்த பருவத்தில் பெண் *பேதை* என்றும், ஆண் *பாலகன்* என்றும் அழைக்கப்படுவர்.

இந்த பருவத்திற்கான *தெய்வம்: காளி*
*நிறம்: கருப்பு*
*கோள்: சனி*
*கருதுகோள் : பேதைமை எனும் அறியாமை (Ignorance)*


*13 - 24 வயது* வரை உள்ள இரண்டாம் பருவமானது,

*நீல* நிறத்தாலும், *நீலாம்பிகை* எனும் புதிய தெய்வத்தாலும் குறித்தார். இந்த பருவத்தில் தான் குழந்தைகள் ஆண், பெண் என்ற *பாலின வளர்ச்சியை*, அதாவது Sexual Development அடைகின்றனர். இந்த பாலினங்களுக்கான ஈர்ப்பு தான் காதலாக உருக்கொள்கிறது. காதலர்கள் கூடி மகிழ்வதை தேனிலவு என்று தானே சொல்கின்றோம். நிலவின் ஒளி வெண்மை அல்ல, அது நீலம் தோய்ந்த வெண்மை. அதனால் தான் *நிலவை* நீல நிறத்திற்கு அடையாளமாக குறித்தார் முருகன்.

இந்த பருவத்தில் பெண் *பெதும்பை* என்றும், ஆண் *விடலை* என்றும் அழைக்கப்படுவர்.

இந்த பருவத்திற்கான *தெய்வம்: நீலாம்பிகை*
*நிறம்: நீலம்*
*கோள்: நிலவு*
*கருதுகோள்: காதல்*


*25 - 36 வயது* வரை உள்ள மூன்றாம் பருவமானது,

*பச்சை* நிறத்தாலும், *ஏர்வாணி* என்ற தெய்வத்தாலும் குறித்தார். ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நிகழ்வது இந்த பருவத்தின் தொடக்கத்தில் தான். திருமணத்தின் விளைவு *பிள்ளைப்பேறு.* பிள்ளைப்பேறு என்பது *இனப்பெருக்கம்* தானே, விவசாயம் என்பதும் இனப்பெருக்கம் தானே, ஏற்கனவே விவசாயம் கண்ட முருகன் விவசாயத்தின் தெய்வமாக பச்சை நிற ஏர்வாணியை குறித்திருந்தார். எனவே, இனப்பெருக்கத்தை குறித்த இந்த பருவத்திற்கான தெய்வமும் பச்சை நிற ஏர்வாணி தான். *வெள்ளிக்* கோள் என்பது புதிய தொடக்கத்திற்க்கான பிரம்ம முகூர்த்த வேளையை குறிப்பதால், புதிய உயிர்களை உருவாக்கும் பச்சை நிறத்தை குறித்த, இந்த பருவத்திற்கான கோளாக வெள்ளியை குறித்தார் முருகன்.
அதுவரை ஏர்வாணி என்றழைக்கப்பட்ட தெய்வம், அதன் பிறகு வெள்ளியை கொண்டு *வள்ளி* என அழைக்கப்பட்டாள்.

இந்த பருவத்தில் பெண் *மங்கை* என்றும், ஆண் *காளை* என்றும் அழைக்கப்படுவர்.

இந்த பருவத்திற்கான *தெய்வம்: வள்ளி*
*நிறம்: பச்சை*
*கோள்: வெள்ளி*
*கருதுகோள்: இனப்பெருக்கம் (Procreation)*


*37 - 48 வயது* வரை உள்ள நான்காம் பருவமானது,

*சிவப்பு* நிறத்தாலும், இல்லக்குமை எனும் *லட்சுமி* தெய்வத்தாலும் குறித்தார். தனது முந்தைய பருவத்தில் பெற்றெடுத்தப் பிள்ளைகளைப் பேணி காக்கும் பருவம் இது. தமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க, பொருளாதாரத்தை ஈட்ட, *கடினமாக உழைக்கும்* பருவமும் இது. உழைப்பு என்றாலே சிறு சிறு காயங்களாவது ஏற்படும், அதாவது உழைப்பு என்றாலே சிறிதளவாவது ரத்தம் சிந்தியிருக்க வேண்டும். அதை குறிப்பது தான் இந்த பருவத்திற்கான சிவப்பு நிறம். சிவந்த நிறம் கொண்ட *செவ்வாய்* தான் இந்த பருவ தெய்வமான லட்சுமியின் கோளும் கூட.

இந்த பருவத்தில் பெண் *மடந்தை* என்றும், ஆண் *மீளி* என்றும் அழைக்கப்படுவர்.

இந்த பருவத்திற்கான *தெய்வம்: லட்சுமி*
*நிறம்: சிவப்பு*
*கோள்: செவ்வாய்*
*கருதுகோள்: உழைப்பு (Hard work)*


*49 - 60 வயது* வரை உள்ள ஐந்தாம் பருவமானது,

*மஞ்சள்* நிறத்தாலும், *கனகவள்ளி* என்ற தெய்வத்தாலும் குறித்தார். அக்காலத்தில் பெருஞ்செல்வம் உண்டானது விவசாயத்தால் என்பதால், இவளது பெயரிலும் வள்ளி. கண்களை கொள்ளை கொள்ளும் தங்கம் தான் கனகம் என்பது. முந்தைய பருவத்தின் கடின உழைப்பின் பயனாக, குடும்பத்திற்கு *செல்வம்* வந்துசேரும்  பருவம் இது தான். செல்வத்தின் குறியீடான தங்கத்தின் நிறம் மஞ்சள் தானே, இன்னும் சொல்லப்போனால் இந்த பருவத்தின் நிறம் தங்கம் தான். சூரியனை சுற்றி வரும் *புதன்* எனும்  கோள் இந்த தெய்வத்திற்கான கோள். இதிலிருந்து வெளிப்படும் சூரிய ஒளியின் சிதறலில் மஞ்சள் நிறம் மிகுந்திருக்கும்.
இந்த பருவத்தில் பெண் *அறிவை* என்றும், ஆண் *மறவோன்* என்றும் அழைக்கப்படுவர்.

இந்த பருவத்திற்கான *தெய்வம்: கனகவள்ளி*
*நிறம்: மஞ்சள்*
*கோள்: புதன்*
*கருதுகோள்: செல்வம் (Wealth)*


*61 - 72 வயது* வரை உள்ள ஆறாம் பருவமானது,

*வெண்மை* நிறத்தாலும், *கலைவாணி* என்ற தெய்வத்தலும் குறித்தார். வெண்மை நிறம் *ஞானத்தைக்* குறிக்கும். இப்பருவம் எட்டிய பெண்கள் பல கலைகளையும் அறிந்திருப்பர். முதல் படிநிலையான கருப்பு என்ற அஞ்ஞான நிலையிலிருந்த மனிதன் வாழ்க்கை எனும் கல்வியின் பொருட்டு அனுபவ ஞானத்தைப் பெற்று தனது குடும்பப் பொருப்புக்களிலிருந்து ஓய்வு பெறும் பருவம் தான் இந்த வெண்பிறப்பு. இந்த பருவத்தில் தான் தம்பதியினர், *அறுபதாம் கல்யாணம்* செய்துகொள்வர். இந்தக் கல்யாணத்திற்கு லோகக் கல்யாணம் என்று பெயர். அதாவது, இதுவரை குடும்பத் தலைவன், தலைவியாக இருந்த தம்பதியினர், இந்தத் திருமணத்திற்குப் பிறகு, இந்த உலகத்தின் தலைவன் தலைவி ஆகின்றனர். அதை குறிக்கவே இந்த அறுபதாம் கல்யாணம். தனது குடும்பம் ஒழுக்கமாகவும், செல்வ வளத்தோடும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமானால், நம்மை சுற்றியுள்ள இந்த உலகமும், ஒழுக்கமாகவும், செல்வ வளத்தோடும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும். எனவே இந்த தம்பதியினர் தமது எஞ்சியுள்ள வாழ்நாளை, உலக மக்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும், போதித்து தொண்டு செய்து களிப்பர். இந்தப் பருவத்திலும் இதற்கடுத்தப் பருவத்திலும் வெண்மை நிற ஆடையையே அணிவார்கள். இந்த ஆறாம் பருவத்தின் தெய்வமான கலைவாணியின் கோள் , ஆறாவது கோளான *வியாழன்.* வி(Great) + யாழன் ( Musician). முருகனின் கலைவாணி யாழ் எனும் இசைக்கருவியை தான் வைத்திருந்தாள். யாழின் உயர் வடிவமான வீணையை கண்டவர் ராவணன் தான். ராவணனின் காலத்திற்கு பிறகு தான் கலைவாணி வீணையோடு சித்தரிக்கப்படுகிறாள்.

இந்த பருவத்தில் பெண் *தெரிவை* என்றும், ஆண் *திறவோன்* என்றும் அழைக்கப்படுவர்.

இந்த பருவத்திற்கான *தெய்வம்: கலைவாணி*
*நிறம்: வெண்மை*
*கோள்: வியாழன்*
*கருதுகோள்: கலைகளும், ஞானமும் (Arts & Wisdom)*


*73 - 84 வயது* வரை உள்ள ஏழாம் பருவமானது,

*நீர்* வண்ணத்தாலும், *மாவெளி* என்ற தெய்வத்தலும் குறித்தார். மாவெளி என்பது இலங்கையின் வற்றாத ஜீவநதி. பிற்காலத்தில்,  தமிழகத்தின் காவிரி ஆற்றை கொண்டு, இவள் *காவிரியம்மன்* எனப்பட்டாள். காவிரியம்மனைக் குறிக்கும் *காவிரி எல்* என்றப் பெயர் தான் அப்ரஹாமிக் மதங்களில் *Gabriel* எனப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தான் வற்றாத ஜீவநதியான கங்கையின் பெயரால் *கங்கையம்மன்* என்று அழைக்கப்படுகிறாள். இந்த ஏழாம் பருவத்திற்கான எல்லை 84 வயது என்பது ஒரு அடையாள எல்லை தான். உண்மையில் இந்தப் பருவத்தின் எல்லை என்பது, ஒவ்வொரு மனிதனின் வாழ்நாள் இறுதிவரையாகும். இந்த இறுதிப் பருவமென்பது மனிதன் சிவலோகப் பதவி அடையும் பருவமாகும்.

அதாவது, மனிதன் தனது பூத உடலை துறந்து, மனிதக் கண்ணறியாத ஆன்ம உடலைப் பெரும் பருவம் இது. அதனால் தான் இந்தப் பருவம் *Transparency* எனப்படும் நீர்வண்ணத்தால் குறிக்கப்படுகிறது. அதனால் தான் வற்றாத ஜீவ நதி இந்தப் பருவத்திற்கான தெய்வமானாள். பனிக்குடத்தில் கரும்பிறப்பாக தோன்றிய மனிதன் தனது வாழ்க்கையின் இறுதியில், தனது பூத உடலைத் துறந்து, நீர்வண்ண நிலையை எட்டியப் பிறகு ஆற்றங்கரையிலோ, குளக்கரையிலோ *இறுதிச்சடங்கு* நிகழ்த்துவதும் இதனால்தான். மனிதன் சிவலோகப் பதவி அடைவதை காலமாகினார் என்று சொல்வோம். அந்த காலம் என்ற சிவனின் கருதுகோளுக்கடிப்படை என்பதே *சூரியன்* தான். எனவே, மனிதனின் இறுதிப் பருவத்தைக் குறித்த, கங்கையம்மனுக்கான கோள் சூரியன் தான்.

இந்த பருவத்திற்கான *தெய்வம்: கங்கையம்மன்*
*நிறம்: நீர் வண்ணம்*
*கோள்: சூரியன்*
*கருதுகோள்: முக்தி அடைதல்.*


மனித வாழ்க்கையின் பருவங்களை ஆளும் ஏழு பெண் தெய்வங்கள் உருவான வரலாறு இது தான். முருகனுக்கு எவ்வளவு தெய்வீக ஆற்றல் உண்டோ, அந்த அளவிற்கு, அவர் உருவாக்கிய இப்பெண் தெய்வங்களுக்கும் உண்டு.

இந்த ஏழு பெண் தெய்வங்களுக்கும் ஏழு தத்துவார்த்த வண்ணங்கள் முருகன் கற்பித்தார் என்றும் கண்டோம்.

மனித வாழ்க்கை ஏழு வண்ண நிலைகளாக பகுக்கப்பட்டது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஏழாவது மாதத்தில் *வளைகாப்பு* செய்வதென்பது 

தாய்க்கும், சேய்க்கும் இந்த ஏழு தெய்வங்கள் துணை நிற்க வேண்டும் என்பதால் தான், இந்த ஏழு வண்ணங்களில் கர்ப்பிணி தாய்க்கு வளையல் அணிவிப்பார்கள்.

சிவனின் பெயரால் ஒவ்வொரு வண்ணமும் மூன்று என்ற எண்ணிக்கையில் 7×3 = 21 வளையல்களை கர்ப்பிணிப் பெண்ணின் ஒவ்வொரு கையிலும், வண்ண வரிசைப்படி அணிவிக்க வேண்டும்.

நம்மை தற்காக்கும் ஆயுதம் *வாள்* என்பதிலிருந்தே *வளைகாப்பு* என்ற சொல்லும், *வளையல்* என்ற சொல்லும் வந்திருக்க வேண்டும்.

இந்த நிகழ்வில் வழமையாக *கண்ணாடி வளையல்* அணிவிக்கிறோம் என்பதால் முருகன் காலத்திலேயே கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது புரிகிறது. கண்ணாடியில் மட்டும் தானே Transparency எனப்படும் *நீர் வண்ண வளையல்* செய்ய முடியும்.


முருகனுக்கு முன்பு ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு முன்பே, சிவன்  இரும்பை கண்டுபிடித்திருந்ததால், முருகன் காலத்தில் கண்ணாடி கண்டுபிடிக்கப் பட்டிருக்க வேண்டும், என்று கருத வாய்ப்புள்ளது.

ஆக, வாழ்க்கை என்பது *வண்ணமயமானது* என்பதை, முருகன், நாம் கருவில் இருக்கும் போதே உணர்த்தி விடுகிறார். 

வாழ்க்கை வண்ணமயமானது தான். இதை தான் ஆங்கிலத்தில் *Colourful life* என்றனர்.

வாழ்க்கையை முழுமையாகவும், சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தவரை *He lead a Colourful life* என்று பாராட்டுவது இயல்பு.

ஆனால், முருகன் காலத்தில் *வாழ்க்கை* என்ற சொல் இல்லை. எனவே அதற்கான சொல்லை அவர் உருவாக்க வேண்டும்.

*வானவில்லை* கொண்டு தான் *வண்ணம்* என்ற சொல் உண்டானது என்று கண்டோம். வாழ்க்கை என்பது ஏழு வண்ணங்களால் ஆனது போலவே, வானவில்லும் ஏழு தனித்துவமான வண்ணங்களால் ஆனது தான். முருகனின் ஏழு வண்ணங்களும், வானவில்லின் ஏழு வண்ணங்களும் வெவ்வேறானாலும் இரண்டுமே வண்ணமயமானது என்ற எதார்த்தத்தால் இந்த இரண்டிற்கும் தொடர்பு உண்டு.

வாழ்க்கைக்கான சொல்லை வானவில்லைக் கொண்டு உருவாக்கலாம் தானே ? வானவில்லை குறித்த *வானம்* என்ற மூலச்சொல் *வாளில்* இருந்து வந்தது தானே ? 

அதாவது *கைவாளிலிருந்து* வந்திருக்கலாம்.

*கைவாள்* என்ற சொல்லை பந்தாடினால் *வாள்கை* என்று வரும் தானே. அதாவது *வாள்க்கை*.

ஆனால் இந்தச் சொல், அமைதியாக வாழ எண்ணும் நம்மை, மீண்டும் சண்டை போடும் *வாளையே* நினைக்க வைக்கிறது.


அதை தவிர்க்க வேண்டுமானால், மிகவும் மென்மைப்படுத்தப்பட்ட ஒரு புதிய *ளகர ஒலி,* அதாவது *சிறப்பு ளகர ஒலியை* உண்டாக்க வேண்டும்.

ஏற்கனவே வல்லின *ள* ஒலி வாளையும், மெல்லின *ல* ஒலி வாலையும் குறித்தன. இப்போது வாழ்கையைக் குறிக்க உண்டான சிறப்பு ளகரம் தான் *ழ* என்ற ஒலி.

இந்த புதிய ஒலியை முருகன் எப்படி உருவாக்கினர் ?

*ள* ஒலியை உச்சரிக்கும் போது, நமது நாக்கு மேலண்ணத்தை உறுதியாகத் தொடுகிறது. இதன் மெல்லொலியான *ல* ஒலியை உச்சரிக்கும் போது, நமது நாக்கு மேலண்ணத்தை மென்மையாகத் தொடுகிறது. இப்போது, இதை விடவும் மென்மையாக உச்சரிக்க வேண்டும் என்றால், நமது நாக்கு ல ஒலியை உச்சரிப்பது போலவும், அதேவேளையில் மேலண்ணத்தை தொடாமலும் உச்சரிக்க வேண்டும்.

இப்படி பிறந்தது தான் *ழ* என்ற ஒலி. இந்த ஒலியை முருகன் புதிதாகத் தான் உருவாக்கினார்.

இப்பொழுது, *வாள்க்கை* என்ற சொல்லை, இந்த சிறப்பு ளகரத்தோடு உச்சரியுங்கள். *வாழ்க்கை.*
வந்ததா வாழ்க்கைக்கான சொல்.

மற்றுமொரு வியப்பான விடயம் என்னவென்றால் *வாழ்க்கைக்கும், சுத்தத்திற்கும்* தொடர்பு வந்த வரலாறு தான்.

வாழ்க்கை என்பது வண்ணமயமானது தானே. அந்த ஏழு வண்ண வாழ்க்கையில் கண்ணால் காண்பது ஆறு. அதாவது கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், மற்றும் வெண்மை. நமது சுப வாழ்வு கருப்பு நிறத்தில் தொடங்கி வெண்மையில் முடிகிறது.

*கருப்பு* நிறம் என்பது அறியாமை, தன்னலம், போர்க்குணம், ஆகியவற்றை குறிக்கும் வண்ணம்.

*வெண்மை* நிறம் என்பது ஞானம், பொது நலம், அமைதி மற்றும் அகிம்சையை குறிக்கும் வண்ணம்.

இதற்கும் மேலாக, கருப்பு வண்ணம் *அழுக்கை* காண்பிக்காது. ஆனால், வெண்ணையோ அதனை காண்பித்து விடும். கருப்பு என்பது அழுக்கை குறிக்கும் வண்ணம், வெண்மை என்பது *தூய்மையை* குறிக்கும் வண்ணம்.


ஆக, அழுக்காக தோன்றி, தூய்மையை நோக்கிப் பயணிப்பது தான் மனிதனின் வாழ்க்கை எனப்படுகிறது.

இதன்படி, வாழ்க்கை என்பதன் பொருள், நமது மனதில் உள்ள அழுக்கை களைந்து, தூய்மை அடைவது தான். அதாவது, வாழ்க்கையின் பயனும், தத்துவமும் தூய்மை அடைவது தான்.

கருப்பு என்பது அழுக்கின் எல்லை, இதனை *தாழ்ந்த எல்லை* எனலாமா!.
வெண்மை என்பது தூய்மையின் எல்லை, இதனை *உயர்ந்த எல்லை* எனலாமா!.

உயர்ந்த எல்லை என்பதை

உ (உயர்ந்த) + அத்தம் (எல்லை) = உத்தம் (மேண்மை) 👉🏻 சுத்தம் (தூய்மை) என்றழைக்கலாம் தானே.

*சுத்தத்தை* நோக்கிய பயணம் தான் வாழ்க்கை என்பது. அதாவது *உத்தமானவது* தான் வாழ்க்கையின் குறிக்கோள்.

*வாழைக்கு* எப்படி இந்த பெயர் வந்தது. வாள் போல வளைவாகவும், கைப்பிடி போன்ற அமைப்பை கொண்டு, வாள் போலவே இருக்கும்.

*வாள் + ஐ 👉🏻 வாளை 👉🏻 வாழை*

வாளிலிருந்து வானவில்லுக்கும், வானவில்லிலிருந்து வாழ்க்கைக்கும் பெயர் வந்தது என்பதை, வாழை தனக்கே உரிய வகையில் கூடுதலாக நிறுவியுள்ளது.

*வாழைக்கும்* மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்னவென்றால் வாழை தானாகவே புதிய தலைமுறைகளை உருவாக்கிக் கொள்ளும். அது போல நாமும் நமக்கு பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளுக்கு அவர்களின் பிள்ளைகள் என்று *வாழையடி வாழையாக வாழ்கிறோம்.*

வாழைக்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்ததா?

முடிவாக *ஆசீவகம்* என்னும் தமிழர் சமயம், எப்பேர்பட்ட வாழ்க்கை முறை என்பதும், முருகன் யார் என்றும் தெரிகிறதா ? ஆசீவகத்தின் சமய நூல் தான் *திருக்கூறல்* எனும் திருக்குறள். சிறப்பு ழகரத்தை  முருகன் உருவாக்கியதால் தான் Tammuz என்று அழைக்கப்பட்ட முருகன், தமிழ் என்றழைக்கப்பட்டு அவன் வளர்த்த மொழிக்கும் *தமிழ்* என்ற பெயர் வந்தது.

இந்த ஏழு சப்த கன்னிகள் தான் அப்ரஹாமிக் மதங்களில் வரும் *7 Arc Angels* என்பது.

இந்த ஏழு வண்ணங்கள் தான் சீனர்களின்  தற்காப்புக் கலைகளிலும் படிநிலையாக உள்ளது. தற்காப்பு கலையை உருவாக்கி, குருகுலக் கல்வியை பயிற்றுவித்தவர் முருகன் தான்.

இந்த அழகான, ஒழுக்கமான வாழ்க்கை முறையை தான் முருகன் ஏழு வண்ணங்களால் வகுத்தார். அந்த ஏழு வண்ணங்களை தான் இன்று ஒழுக்கமற்ற, கேவலமான வாழ்க்கை வாழும் *LGBT* அமைப்பின் கொடிக்கு கொடுத்து மகிழ்கிறான் *யூதன்.* 

இந்த வரலாற்று சிறப்புமிக்க தகவல்களை வருங்கால தலைமுறைக்குக் கடத்துங்கள். 


படைப்பு
*ஐந்தாம் தமிழர் சங்கம்*
73055 73469
88703 53835
63850 44036

வாழ்க வளத்துடன்🌈

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

தமிழ் மாதங்களின் பெயர்கள்

தமிழ் மாதங்களின் தொடக்கமும் அதன் பெயர்களுக்கான காரணங்களும்.

தமிழ் மாதங்களின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது உள்ள தமிழ் மாதங்களின் பெயர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட பெயர்கள் அந்த காலத்தில் மூன்று போகம் நெல் சாகுபடி இல்லை இரண்டு போகம் மட்டுமே வருடத்திற்கு நெல் சாகுபடி செய்யப்பட்டது. இன்று பெருமாள் என்று நாம் கடவுளாக வணங்கும் விஷ்ணுசித்தர் தான் இந்த பன்னிரண்டு தமிழ் மாதங்களை உருவாக்கியவர்.

தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை. அது ஏன் முதல் மாதம் சித்திரை?
இன்று திருவாதிரை என்று அழைக்கப்படும் ஓரையின் பழைய பெயர் சித்திரை .

 வானில் ஒரு பகுதியில்  தோன்றும் நட்சத்திரங்களை புள்ளியாக கொண்டு கற்பனையாக கோடு வரைந்து ஒரு உருவத்தை ஏற்படுத்துவதே ஓரை ( ஓர் + அய் ). இப்படி உருவாக்கப்படும் நற்சித்திரமே நட்சத்திரம்  எனப்பட்டது. முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஓரைதான் திருவாதிரை.

திரு + ஆதி + ஒரை = திருவாதிரை
ரிஷபம் உள்ளடக்கிய ராசிகளை கொண்ட ஓரை. ரிஷபம் என்ற மாடு சிவனின் வாகனம். சிவனே தமிழர்களின் முதல் கடவுள் ,முதல் சித்தன், ஓகக் கலையை கண்டுபிடித்த ஆதியோகி.
சித்தர்+  ஓரை = சித்திரை

வானில் 6 மணிக்கு திருவாதிரை நட்சத்திரம் தெரியும் நாளில் தமிழர்களின் வருடம்  பிறந்தது. அதன் நினைவாகவே முதல் மாதத்திற்கு சித்திரை என்று பெயர் வைக்கப்பட்டது. 

ஏப்ரல் 14 அன்று சித்திரை ஒன்றாம் நாள் வருகிறது. அப்படித்தான் தொடர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அது சரி அல்ல காரணம் எந்த நாளில் வானில் திருவாதிரை நட்சத்திரம் காலை 6 மணிக்கு சரியாக உதிக்கிறதோ அந்த நாள் தான் சித்திரை திருநாள். 

வானில் பூமி மற்றும் பிற கோள்களோடு சூரியனும் சுற்றுகிறது அதனால் திருவாதிரை நட்சத்திரம் எல்லா வருடங்களிலும் சரியாக ஏப்ரல் 14 அன்று உதிக்காது. சூரியன் ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கும் ஒரு முறை வானில் தனது பாதையில் ஒரு டிகிரி நகரும் அதனால் ஒவ்வொரு  60 ஆண்டுகளுக்கும் ஒரு நாள் தள்ளி சித்திரை பிறக்கும். அதேபோல் 1800 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் தள்ளி சித்திரை பிறக்கும் அதனை சரி செய்வதற்காக ஒரு மாதம் முன்னதாக வேறொரு ராசியில் சித்திரை ஒன்றாம் நாளை மாற்றுவார்கள். அப்படி மாற்றினால் தான் பருவ காலம் சரியாக கணிக்க இயலும். விவசாயத்திற்கு பருவ காலம் சரியாக வருவது மிகவும் முக்கியம். 

2020 முதல் சித்திரை திருநாள் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறிவிட்டது. அதாவது வானில் சூரியன் மேஷ ராசி பகுதியில் இருந்து மீன ராசி பகுதிக்கு வந்துவிட்டது. 

 தமிழர்கள் ஆட்சி இல்லாத காரணத்தால் இவற்றையெல்லாம் இப்போது சரி செய்ய முடியவில்லை. எனினும் ஐந்தாம் தமிழர் சங்கம் சரியான நாட்காட்டியை விற்பனைக்கு வைத்துள்ளது.

திராவிட கயவர்கள் வேறு தை மாதம் தான் முதல் நாள் என்று குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதன் அடிப்படையில் முதல் மாதம் வந்தது என்ற வரலாற்றுப் பின்புலம் தமிழர்களுக்கு தெரிந்து விட்டால் இவையெல்லாம் தானாக சரி ஆகிவிடும்.

2. வைகாசி
வை என்றால் வெளிச்சம் வெளிச்சம் தரும் கல் வைரம் , வைரவன் என்றால் சூரியனை குறிக்கும் கால வைரவன், காலபைரவன் ஆகியிருக்கிறது. சூரியனே காலத்தை கணக்கிட உதவுகிறது இதை வைத்து முதலில் காலத்தை கணக்கிட்டவர் சிவன் அதனால் சிவனை காலபைரவன் என்றும் காலன் என்றும் அழைக்கிறோம். சூரியனின் வெப்பம் காசும் மாதம் வைகாசி. ( வெயில் அதிகமான மாதம்)

3. ஆனி
செடியில் ஆழத்திற்கு செல்லும் வேர் ஆணிவேர் (ஆழ் நுழை - ஆழ் நு - அழ் நி - ஆனி). விதைத்த விதைகள் அவற்றின் வேர்கள் ஆழத்திற்கு செல்லும் மாதம். சுவற்றை துளையிட்டு உள்ளே செலுத்தும்  இரும்பை ஆணி என்கிறோம்.

4. ஆடி
செடி முளைத்து ஆடும் பருவம் ஆடி

5. ஆவணி
பெண்கள் பருவம் அடைந்தபின் அணியும் ஆடை தாவணி. இந்த தாவணி என்னும் சொல்தான் மெய் மயங்கி ( த் + ஆ = தா) ஆவணி என்றானது. அவிட்டம் நட்சத்திரத்தில் பருவமடைந்த ஆண்களுக்கான சடங்கும் இந்த மாதத்தில் தான் செய்யப்படுகிறது ஆவணி அவிட்டம் என்ற பெயரில்.

6. புரட்டாசி
விளைந்த பயிரை அறுத்து புரட்டி அடிக்கும் மாதம்.  புரட்டி அடி - புரட்டாடி - புரட்டாசி

7. ஐப்பசி
நெல்லை விளைவித்து அதை மருத நிலத்தை சேர்ந்தவர்கள் ஐந்து நிலத்து மக்களுக்கும் பிரித்துக் கொடுத்து ஐந்து நிலங்களின் பசியை தீர்க்கும் மாதம் ஐப்பசி. நெல்லைக் கொடுத்து மற்ற நிலங்களில் கிடைக்கும் பொருட்களைப் பண்டமாற்றி கொள்வார்கள்.

8. கார்த்திகை
முருக கடவுளுக்கான மாதம். முருகர்  விவசாய கடவுள் அதாவது விவசாயத்தை தோற்றுவித்தவர் அதனால்தான் விவசாயம் வேளாண்மை ( வேல் + ஆண்மை ) என்றும் அதை மேற்கொள்பவர் வேளாளர் ( வேளை ஆள்பவர் , வேல் + ஆளர் )என்றும் அழைக்கப்படுகிறார். முருகர் விவசாய நிலங்களை உருவாக்குவதற்கு காட்டை அழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் கார்காலத்தில் காட்டிற்கு தீ வைத்தார் விவசாயத்திற்காக. 
கார் + தீ + கையன் - கார்த்திகேயன்.

9. மார்கழி
மாரி என்றால் மழை ,மழை பொழிந்த பிறகு வரும் மாதம் அதாவது மாரி கழி - மார்கழி.

10. தை
தாய் என்பவள் குழந்தைகளை கரு உருவாக்குபவள். இரண்டாம் பருவத்தில் செடி முளைக்கும் மாதம். தாய் தை ஆனது தையல் என்றாலும் பெண்ணைத்தான்  குறிக்கும்.

11. மாசி
மகவுக்காக சூல் பிடிப்பது மகசூல். மகசூல் - மகசு - மகசி - மாசி.
நெல் சூல் பிடிக்கும் காலம்.

12.பங்குனி
இதுவும் முருகனுக்கான மாதம்தான். மலைகளில் வாழ்ந்த குறவர்கள் காட்டை அழித்து விவசாயம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் .அவர்களை போரிட்டு வென்றவர் முருகன். உத்தரை என்றால் உயர்ந்த தரை அதாவது மலையைக் குறிக்கும். குறவர்கள் வலிமையானவர்கள். 
வல் குனி - பல் குனி - பங்குனி . வலிமையானவர்களை குனிய வைத்த  நிகழ்வு
பங்குனி உத்திரம் இந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

- நன்றி தமிழ் சிந்தனையாளர் பேரவை.

வெள்ளி, 12 ஏப்ரல், 2024

வள்ளலார் அறிவுரைகள்

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. 
13. அவ்வப்போது பரிசுகள் அளி. 
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே. 
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே! 
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு. 
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ 

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள். 
                                    - வள்ளலார்

வியாழன், 4 ஏப்ரல், 2024

சப்த கன்னிகள் வழிபாடு

தமிழர்களின் மிக பழமையான வழிபாடு ஏழு கன்னி ஏழு முனி வழிபாடு . இன்றும் தமிழக கிராமங்களில் கன்னிமா கோயில்களும் அய்யனார் கோயில்களும் ஏராளமாக இருக்கின்றன . ஆனால்  தமிழக எல்லை பகுதியை தாண்டினால் இந்த வழிபாடு அதிகமாக இல்லை . சிந்து சமவெளி நாகரிகத்திலும் ஏழு கன்னி வழிபாட்டிற்கான சின்னங்கள் கிடைத்திருக்கின்றன .

ஏழு என்ற எண்ணிற்கும் தமிழர்களுக்குமான உறவு மிக நெருக்கமானது . 
பெண்ணின் ஏழு பருவங்கள் 
1. பேதை 
2. பெதும்பை 
3. மங்கை 
4. மடந்தை 
5. அரிவை 
6. தெரிவை 
7. பேரிளம் பெண்  

ஆணின் ஏழு பருவங்கள்
1. பாலகன் 
2.விடலை
3.காளை
4. மீளி
5. மறவோன் 
6.திறவோன் 
7.முதுமகன்

இலை , பூ , காய் , கனி என்று ஒவ்வொன்றுக்கும் ஏழு பருவங்கள் தமிழில் உள்ளது .
வாரத்திற்கு ஏழு நாட்கள் 
இசைக்கு ஏழு சுவரங்கள், உடலிலுள்ள குண்டலினி சக்தியை எழுப்ப வதற்கான சக்கரங்கள் ஏழு  என்று அடுக்கி கொண்டே போகலாம் .

திருக்குறளில் கூட ஒரு குறளில் ஏழு வார்த்தைகள் உள்ளது .
மொத்தம் 133 அதிகாரங்கள் 1 + 3 + 3 = 7
மொத்தம் 1330 குறள்கள்  1 + 3 + 3 + 0 = 7

தமிழர் சமயம் ஆசிவகம் என்ற சமணம். இதன் கடவுள் வழிபாடு தான் இந்த ஏழு கன்னி , ஏழு முனி வழிபாடு 
ஆசிவகம் நிற கொள்கை கொண்ட சமயம் . சமணர்கள் என்ற சித்தர்கள் மக்களுக்கு தாங்கள் உறங்கும் பள்ளிகளுக்கு அருகே கல்வி போதித்தார்கள் . மொத்தம் 18 வருட படிப்பு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒரு நிறம் . மொத்தம் ஆறு நிறம் . ஏழாவது நிலை நீர்வண்ண நிலை என்ற நிர்வாண நிலை இந்த நிலை அடையும் ஒரு சிலர் மட்டுமே முக்தி என்ற கடை நிலை அடைந்தவர்களாக போற்றப்பட்டனர் . சித்தர்களை மக்கள் அண்ணன் என்று அன்போடு அழைத்தார்கள் சித்தர் அண்ணன் வாசல் சித்தன்னவாசல் ஆகியிருக்கிறது அங்கும் சமண ஓவியங்களே இருக்கிறது. திரு அண்ணா மலை என்ற திருவண்ணாமலையிலும் சமண வாழ்விடங்கள் நிறைய உள்ளது. தமிழர்களை அடிமைப்படுத்த இந்த சமண சித்தர்களை வதை செய்து ஆரியர்கள் கொன்றார்கள் அதுவே சித்தர் வதை சித்திரவதை என்ற வார்த்தை உருவாக காரணம். சமண கழுவேற்றம் இதைத்தான் குறிக்கிறது.

தமிழர் மெய்யியல் ஆன ஆசீவகத்தை 6 சமயங்களாக சைவம் ,வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் ,சௌரம் என்பது போல ஆரியர்கள் பிரித்து அழித்தார்கள். களப்பிரர் காலத்தில் நம்மை ஆண்டது ஆரியர்களே, பதினான்காம் நூற்றாண்டில் பிராமண அடிமைகளான விஜயநகர ஆட்சியில் ஆசீவகம் முற்றிலுமாக அழிந்து போனது.

முதல் வண்ணம் - கருப்பு  -  பெண்கடவுள்  = காளி , ஆண்  கடவுள் = காலன் என்ற சிவன் , தொடர்புடைய கோள் = சனி

இரண்டாம் வண்ணம் - நீலம்  - பெண்கடவுள்  = நீலாம்பரி என்கிற  நீல காளி , தொடர்புடைய கோள் = சந்திரன்

மூன்றாம் வண்ணம் - பச்சை - பெண்கடவுள்  = பச்சையம்மா  , வள்ளி , மீனாட்சி , துரோபதி , பாஞ்சாலி ( அனைவரும் ஒரே கடவுளே ) , தொடர்புடைய கோள் = புதன்

நான்காம் வண்ணம் - சிவப்பு - பெண்கடவுள்  = லட்சுமி , ஆண் கடவுள் - விஷ்னு , தொடர்புடைய கோள் = செவ்வாய்

ஐந்தாம் வண்ணம் - மஞ்சள் - பெண்கடவுள்  = பொன்னாம்பால் , கனகம் , தொடர்புடைய கோள் = வெள்ளி

ஆறாம் வண்ணம் - வெள்ளை - பெண்கடவுள்  = சரஸ்வதி , ஆண் கடவுள் - பிரம்மன் ( முருகர் தான் பிரம்மன், பெரிய+ அமணன்= பேர்+ அமணன்= பேரமணன்= பிராமணன் = பிரம்மன்) ,தொடர்புடைய கோள் = வியாழன்.

ஏழாம் வண்ணம் - நீர்வண்ணம் - பெண்கடவுள்  = காவிரியம்மா ,கங்கையம்மா , தொடர்புடைய கோள் = சூரியன்

ஐயப்பனும் ஒரு ஐய்யனார் தான் அவரும் பள்ளி வைத்து நடத்தியவர் . இன்றும் கன்னி சாமிக்கு கருப்பு வண்ண உடையும் , குரு சாமிக்கு சிவப்பு உடையும் கோயிலில் வழிபாடு நடத்தும் பூசாரி வெள்ளை உடையும் அணியும் மரபு உள்ளது .18 படி உள்ளது .

கன்னி கோயில் கன்னிகளில் முதல் கன்னி கருப்பு நிறத்திலும் சிறிய அளவு இருக்க வேண்டும் . கடைசி கன்னி பெரிய அளவில் இருக்க வேண்டும் இதுவே முனிகளுக்கும் பொருந்தும் ஆனால் பழைய இந்த வழிபாடு தன் வளமையை இன்று இழந்து உள்ளது .அளவு நிறம் சரியாக இன்று கடைபிடிக்க படுவதில்லை .

கல்வி கடினமானவனை மென்மை ஆக்குகிறது . கராத்தே போன்ற தற்காப்புக்கலைகள் மென்மையானவனை கடினமானவன் ஆக்குகிறது . எனவே கராத்தேயில் முதலில் வெள்ளை பட்டையும் கடைசியில் கருப்பு பட்டையும் வழங்க படுகிறது .

இதே வழிபாடு சுமேரிய கலாசாரத்தில்  அனுநாகி ( ஏழு நாயகி ) என்ற பெயரில் உள்ளது .
ஐரோப்பாவிலும் ஏழு தேவதைகள் ( sevan angles , sevan archangles )   என்ற பெயரில் உள்ளது .   

ஒலிம்பிக் கொடியில் கூட இந்த ஆறு வண்ணங்கள் உள்ளது.

எல் என்றால் வெளிச்சம் சூரியன் , எல்லப்பன் 
அல் என்றால் இருட்டு , அல்லி இரவில் பூக்கும் மலர் , அல்லும் என்றால் இரவு 
தமிழர்கள் வெளிச்சம் இருட்டு இரண்டையும் வழிபட்டனர் .
எல் + அல் +அன் = எல்லாளன் 
ஆனால் அரேபியர் வெய்யில் கொடுமையால் இருளை மட்டும் "அல்லா" என்று வழிபட்டனர் .
ஐரோப்பியர் குளிரின் கொடுமையால் வெளிச்சத்தை " எல்லோஹிம் (Elohim )  " என்று வழிபட்டனர்.
ஏழு கன்னிகளில் 
காவேரி அம்மன் = காவேரி எல் = கேபிரியல் ( Gabriel )
மீனாட்சி அம்மன் = மட்சம் ( மீன் ) எல் =  மிச்சேல் = மைக்கேல் ( Michel )
காளி அம்மன் = ரா ( இருட்டு ) எல் = ரபேல் ( Raphael ) 

அங்கு என்ற தமிழ் வார்த்தைக்கு வளைவு என்று பொருள் , வளைவாக இருப்பதால் அங்குசம் ,அங்கூரம் என்ற பெயர் பெற்றன.  இந்த அங்கு என்ற தமிழ் வார்த்தையை தான் ஆங்கிலத்தில் கோணத்தை குறிக்கும் angle என்ற வார்த்தைக்கு மூலம். Angel என்ற வார்த்தைக்ககும் "அங்கு" என்ற வார்த்தை தான் மூலம். வட்டமான வளைவு பாதையில் கோள்கள் செல்வதால் அவைகளை ஏஞ்சல் என்று உருவகப்படுத்தினர். ஆகாயத்தில் மிதந்து உருளும் கோள்களை ரக்கை உள்ள பெண்களாக உருவகப்படுத்தினர். நம் ஏழு கன்னிகளும் 7 கோள்களோடு தொடர்புடையது. 

வாரத்தின் ஏழு நாட்கள் ஏழு கோள்களின் ஆதிக்கத்தை வைத்து உருவாக்கப்பட்டது. சனிக்கிழமை சனி கிரகத்தை குறிக்கும் ஆங்கிலத்திலும் saturday என்றுதான் சொல்கிறார்கள். Saturn என்றால் சனி கிரகம். ஞாயிற்றுக்கிழமையை சூரியனை குறிக்கும் Sunday  என்கிறார்கள். திங்கள் கிழமையை நிலவை குறிக்கும் moonday என்று சொல்வதற்கு பதில் Monday என்கிறார்கள். தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி தமிழ் கலாச்சாரமே உலகின் மூல கலாச்சாரம்.

சிந்து சமவெளி வரை இருந்த இந்தியாவில் தமிழர்கள் மட்டுமே இருந்தனர் . பின் வந்த ஆரியர் சூழ்ச்சியால் தமிழரை அடிமைப்படுத்தி தமிழர் வரலாறை திருடி தங்கள் வரலாறு என்று வெட்கம் இல்லாமல் சொல்லி கொண்டிருக்கிறார்கள் . இதே ஏழு கன்னி , ஏழு முனியை சப்த கன்னி சப்த ரிஷி என்று பொய்யான கடவுள் கதைகளை உருவாக்கி அதை நம்பவைத்துள்ளனர் .தமிழ் மொழியை புத்தர்களின் சமஸ்கிருத மொழியோடு கலந்து பல மொழிகளாய் மாற்றி தமிழர்களை பிரித்து இன்றும் மறைமுகமாக ஆண்டு கொண்டிருக்கின்றனர். தமிழர்கள் சுயத்தை உணர்ந்து விழிப்புணர்வு பெற வேண்டும்.

- நன்றி தமிழ் சிந்தனையாளர் பேரவை.

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகள்

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும் இருப்பிடமும்,

திருவொற்றியூர்:
********************

(1)பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார்கோவில் வீதி. ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

(2)பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்.

(3)ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.

(4)அருள்மிகு யோகீஸ்வரர் சாமி= வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.

(5)பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில், தங்கம் மாளிகை அருகில்.

(6)ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.

(7)மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதிகோவில்.

(8)முத்துக்கிருஷ்ண பிரம்மம்= ஆஞ்சநேயர் கோவில் பஸ்ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை.

(9)ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில், ஞான சுந்தர பிரம்மம் சமாதி. சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

ராயபுரம்:
***********

(1)குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.

(2)ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர்பாடி:
***************

(1)சிவப்பிரகாச சாமி= இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.

(2)கரபாத்திர சிவப்பிரகாச சாமி= 1வது தெரு சாமியார்தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில். பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:
************

(1)அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில் - பஞ்சமுக வடிவமும் உள்ளது.

(2)மதனகோபாலசாமி= மேல்பட்டி பொன்னப்ப முதலிதெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதிகோவில்.

(3)சந்திர யோகி சுவாமி= மங்களபுரம் ஐந்து லைட் அருகில்.

(4)வேர்க்கடலை சுவாமி= அய்யாவு தெரு, திரு.வி.க.நகர்.

(5)மதுரை சாமி= செம்பியம் வீனஸ் தியேட்டர் 2வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.

(6)மயிலை நடராஜ சுவாமி= கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:
**********

ஆறுமுகச்சாமி= 173/77 டிமலஸ் சாலை, பெரம்பூர்பேரக்ஸ் ரோடு- ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்- உருவப்பட பூஜை.

புரசைவாக்கம்:
******************

(1)வீரசுப்பையா சுவாமி
புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்- 52,பெரம்பூர் பேரக்ஸ்ரோடு மடத்தில் சமாதி கோவில்.

(2)ஈசூர் சச்சிதானந்த சாமி= கொசப்பேட்டை சச்சிதானந்தாதெரு (வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:
***********

(1)மோதி பாபா= 422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.

(2)அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதிசுவாமி= பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்- ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:
*******************

(1)கங்காத சுவாமி= ஹாரிங்டன் ரோடு 5வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.

(2)நாதமுனி சாமி= ஹாரிங்டன் ரோடு, பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.

(3)பன்றிமலை சாமி= 5, வில்லேஜ் ரோட்டில் "ஓம்நமச்சிவாய’" என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

(4)ஆதிசேஷானந்தா= நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.

(5)வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்:
*******************

ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி= அசோக் நகர்- சாமியார்மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்- ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.

வடபழனி:
************

அண்ணாசாமி, ரத்தினசாமி, பாக்கியலிங்கசாமிகள்= வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும்காரண கர்த்தாக்கள். இவர்களது சமாதி கோவில்முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:
***************

(1)திருவள்ளுவர்- வாசுகி அம்மையார்= லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.

(2)அப்பர் சாமிகள்= 171, ராயப்பேட்டை ஹைரோடு- சமஸ்க்ருத கல்லூரி
எதிரில், மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.

(3)குழந்தைவேல் சுவாமி= சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டுபில்டிங்கில் இருக்கிறது.

(4)முத்தையா சாமிகள்= குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:
*************

(1)தாடிக்கார சுவாமி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையேசந்து. உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதிகோவில். சிவலிங்க பிரதிஷ்டை.

(2)குழந்தைவேல பரதேசி= ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு, எஸ்.ஆர்.மெட்ரிக்மேல் நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதிகோவில்.

கிண்டி:
*********

(1)சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்= எம்.கே.என்.ரோடு 36ஆம் எண்- சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதிகோவில்- சிவலிங்க பிரதிஷ்டை. இத்துடன் இவரதுசீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி, ஸ்ரீஏழுமலை சாமிகளின்சமாதி, ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.

(2)சத்யானந்தா கோழீபீ சித்தர்= பஸ் ஸ்டாப் அருகில்உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:
*******************

(1)பாம்பன் சுவாமிகள்- கலா சேத்ரா அருகில் திருமடவளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதிஆலயம். ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.

(2)வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறியகோவில்.

(3)சர்க்கரை அம்மாள்= 75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:
***************

சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி= காந்தி சாலைதிருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்கபிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:
*********************

சச்சிதானந்த சற்குரு சாமிகள்= அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:
**************

நாகமணி அடிகளார்= கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் –நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:
*****************

மோனாம்பிகை- ஞானாம்பிகை- சாதுராம் இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம் (மாடர்ன்உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி.

சிட்லப்பாக்கம்:
******************

சாயி விபூதி பாவா= 83, முதல் மெயின்ரோடு, ஹெச்.சி.நகர்- சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில்சமாதி கோவில்- அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.

ஊரப்பாகம்:
***************

எதிராஜ ராஜயோகி- ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:
***********

துர்கை சித்தர்- ஜெயதுர்கா பீடம் கோவில்.

பெருங்களத்தூர்:
*********************

ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.

புழல்:
********

(1)கண்ணப்ப சாமி- புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்; ஜீவசமாதி மேடை மீதுசாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

(2)காரனோடை மல்லையா சாமிகள்:
காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ்வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது. இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

(3)அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்- காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில்இருக்கிறது. பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அலமாதி மார்க்கண்டேய மகரிஷி அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதிஅமைந்திருக்கிறது.

(4)கோவணச்சாமி- அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

(5)பூதூர் ஷா இன்ஷா பாபா-  செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடுரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது. இந்தகிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.

பஞ்சேஷ்டி
*************

புலேந்திரர் (சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)-  ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள்ஜீவசமாதி உள்ளது. இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர்:
**************

ஐயா சூரியநாத கருவூரார்: பதினெண் சித்தர் மடம் 13,குமாரசுவாமிதெரு, வரதராசபுரம், அம்பத்தூர். பிரதி அக்டோபர் 10 ஆம்தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

வடதிருமுல்லைவாயில்:
*****************************

(1)அன்னை நீலம்மையார்- 37/1 வடக்கு மாடவீதி, மாசிலாமணி ஈஸ்வரன் கோவில்அருகில் ஜீவசமாதி இருக்கிறது. பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

(2)மாசிலாமணி சுவாமிகள்- சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

பூந்தமல்லி:
**************

(1)கர்லாக்கட்டை சித்தர்-  வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.

(2)பைரவசித்தர்- பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

(3)கருடகோடி சித்தர்-  பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்:
********************

(1)அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை கிராமம்-  வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது. உயரமான சமாதிமேடை. சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

(2)வெள்ளறை கிராமம்- ராஜராஜ பாபா சித்தர், கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.

மாங்காடு :
*************

சர்வசர்ப்ப சித்தர்: மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில்கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்):
*****************************

மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்-
ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன. இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

கோவளம் :
*************

ஆளவந்தார் சாமி- கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.

திருக்கழுகுன்றம் :
**********************

(1)குழந்தை வேலாயுத சித்தர்
செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர்கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.

(2) அப்பூர்- பதஞ்சலி சுவாமி
திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர்பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

திருப்போரூர் :
*****************

சிதம்பரச்சாமி திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டுஉள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது. பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜைவிழா நடைபெற்று வருகிறது.

செம்பாக்கம் :
****************

இரட்டை சித்தர்கள்
செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில்செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள்உள்ளன.

கூடுவாஞ்சேரி :
*******************

மலையாள சாமி- கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது. அருகில்இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.

அச்சரப்பாக்கம் :
********************

முத்துசாமி சித்தர்- அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ளகுன்று இருக்கிறது. இந்த முருகன் கோவில் வெளியேசன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது. இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
 இணைய பக்கத்தில் எடுத்தது. பதிவு செய்தவருக்கு நன்றி🙏🏽