திங்கள், 27 மே, 2024

சித்த மருத்துவ ரகசியங்கள்

*சித்த மருத்துவ இரகசியங்கள்*
(பகுதி-40)

சித்த மருத்துவம் முழுக்க முழுக்க கடவுளால் அருளபட்ட மருத்துவ முறைகள் ஆகும். அதாவது சித்தர்கள் 10 அறிவு நிலைகளிள் இருந்து அருளபட்ட ஞான அறிவே சித்த மருத்துவம் ஆகும்.
இப்படி உயர்ந்த அறிவு நிலையில் இருந்து பார்க்கும்போது நோய்கான மூலகாரணத்தை சித்தர்கள் கண்டறிந்தனர்.அதில் முக்கிய பங்கு *ஊழ்வினைக்கு உண்டு* என்பதை கண்டறிந்தனர்.

#கர்மவினை

கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம்         _                   <
==========================================
*>அகத்தியர் சித்தர்.<*>கன்ம காண்டம் 300 நூலிருந்து......
*********************************************
விதியைப் பற்றியும், கர்மவினை பற்றியும் உலகம் முழுவதும் பரவலான நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகின்றது.''

இதில் நோய்கள் தோன்றுவதே கர்மவினை யால் தான் என்ற கருத்தை பொதுவாக இன்றைய ஹோமியோபதி மருத்துவம் தவிர வேறு எந்த ஒரு மருத்துவ முறைகளிலும் ஏற்றுக் கொள்வதில்லை.

அதே சமயம் சித்த மருத்துவ முறையிலும் இதனை ஆதாரங்களுடன் விளக்குகின்றது.

சித்தர் அகத்தியர் பெருமான் இயற்றிய பல லட்சம் பாடல்களில் 
"அகத்தியர் கன்ம காண்டம் -300" என்ற சிறப்பு வாய்ந்த நூலில் எந்த வித கர்ம வினையினால் என்னென்ன நோய்கள் தோன்றும் என மிகத்தெளிவாக விளக்கமளிக்கின்றார்.

ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத பாபத்தால் "#ஈளை_நோய்" வரும். [ ஈளை, இளைப்பு, ஆஸ்த்மா ]

பசுமையாய் வளர்ந்த இளம் செடி,கொடிகளை வெட்டுவதும்,சிறு பூச்சிகளின் கை, கால்களை வெட்டினால் "#வாதநோய் - பக்கவாதம்" வரும்.

பிறர் குடியை கெடுத்தல்,நல்லோர் மனதை நோகச் செய்தல், பிறர் பசியில் இருக்க அவர் பார்வையில் தான் உணவு உண்டால் வரும் நோய் "#குன்மநோய்_எட்டு" அதாவது அல்சர், குடற் புண் இதில் எட்டு வகை நோய் வரும்.[இன்று ஏராளமான பேருக்கு இந்நோய் உள்ளது]

மலராத அரும்பு பூக்களை கொய்தல், நந்தவனம் அழித்தல், பெற்றோர் மனம் நோகச் செய்தல் இதனால் "#குஷ்ட_நோய்" வரும்.(தொழுவியாதி)

ஊர்ந்து செல்லும் சிறு விலங்குகள், பறவைகள் போன்றவைகளைக் கொன்றால் வரும் நோய் "#வலிப்பு_நோய்" ஆகும்.

பிஞ்சு காய்கறிகள், இலை தழை பறித்தல்,பட்டை வெட்டுதல்,வேர் மற்றும் கொடிகள் வெட்டுவதால் #பீனிசம்,[சைனஸ்],"ஒற்றைத் தலை வலி, மண்டைக்குத்து, மண்டைக் கரப்பான்" போன்ற நோய்கள் வரும்.

இளம் பயிரை அழித்தல், விந்து அழித்தல், கன்றுக்குரிய பாலைக் குடித்தல்,இதனால் "#குழந்தையின்மை" குழந்தை பிறக்காது.

வீண் வம்பு பேசுதல், பிறரைப் பழித்தல், பொய் பேசல், ஆங்காரம் , ஆணவம் போன்ற வற்றால் "#சோகை_பாண்டு" [இரத்த சோகை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம்] நோய் வரும்.

உயிர்களை வதைத்தல்,ஊன் தின்னல், நன் மங்கையரைக் கற்பழித்தல், பிறர் செய்யும் புண்ணிய காரியங்களைக் கெடுத்தல், குடிநீரைக் கெடுத்தல் போன்றவற்றால் "#கிராணி, #கழிச்சல்",[சீத பேதி] நோய் வரும்.

பொய் மிக பேசல், பிறரை திட்டுதல், வஞ்சகம் பேசுதல்,கொடுத்த வாக்கை மறுத்தல், விஷமிடல் போன்றவற்றால் "#கண், #கன்னம், #வாய்" #பல் போன்றவற்றில் பல வகை நோய் வரும்.

குருவை தூற்றுதல், வழியிலே முள்ளிட்டு வைத்தல் இவற்றால் "#வண்டுகடி, #ஊறல், #கரப்பான்" நோய் வரும்.

வெடி வைத்தல், கல்லெறிதல், சிவ யோகிக்கு சினம் உண்டாக்குதல் இதனால் பிளவை எனும் "#இராஜபிளவை" முதுகு தண்டில் கட்டி வரும்.

பெண்களை மோகக்கண் கொண்டு, காம எண்ணத்துடன் உற்றுப் பார்த்தல், கோழி ,ஆடு போன்றவற்றை வெட்டும் போது பார்த்தல், ஆலயம் செல்ல விரும்பாமை,தெய்வ நிந்தனை போன்றவற்றால் "#கண்நோய்_96" - வகைகள் தோன்றும்.

*அகத்தியர் கன்மகாண்டம் -300*
பாடல் எண்;11 மற்றும் 12.

*கன்ம நிவர்த்தி*

வாரப்பா குடம் நூறு நந்தி வலம் வந்து மைந்தனே சிவபூசை விட்டுணுபூசை
நேரப்பா கோதானம் ஓமசாந்தி நிதம்பத்துத் தரஞ்செய்யில் தீருங்கன்மம்
பாரப்பா *கன்மநிவர்த்தி செய்யாவிட்டால் பலியாது வைத்தியந்தான் கன்மத்தாலே
பேரப்பா மருந்தினால் பிணியே தீர்ந்தால் பெருத்த கன்மம் வைத்தியனைப் பிடிக்குமன்றே.*

பிடியாமல் வைத்தியந்தா நோய்களுக்குப்
பெருத்த கன்மந் தீர்ப்பதற்குப் பேணிச் சொல்வேன் மடியாமல் கன்மங்கள் நிவர்த்திசெய்து வையகத்தினோய் தீர்த்தால் வைத்தியனாகுங்
கடிதான நோய்களுக்கு மருந்துசெய்தால் கன்மங்கள் போவதெங்கே கண்டு சொல்லு
குடி வழியே தொடருமடா கன்மந்தானுங் குறிப்பறிந்து கன்மத்தை நிவர்த்தி செய்யே.

இதற்கான தீர்வு அகத்தியர் கூறுகையில்.கர்ம வினைக்கான கன்ம நிவர்த்தியையும் கூறுகிறார்..
நோய் வந்தவுடன் அதற்கான காரணத்தை அறிந்து, கடவுளை வணங்கி அதற்கான கன்ம நிவர்த்தியை செய்து பின் 
அதற்கான மருந்தை உட்கொண்டால் மட்டுமே அந்த நோய் திரும்ப வராது, கன்ம நிவர்த்தி செய்யாமல்,நோய்கான  மருந்து  மட்டும் உட்கொண்டால் கண்டிப்பாக அந்த நோய் திரும்ப திரும்ப வரும் என்கிறார்..கன்ம நிவர்த்தி செய்யாமல் வைத்தியம் பார்த்தால் நோயாளியின்  கன்ம வினை வைத்தியனை சாரும் என்ற ஒரு மாபெரும் கன்ம வினை இரகசியத்தை எடுத்துரைக்கிறார் அகத்தியர் சித்தர்...
🌹🌹🌹🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹நன்றி..
 Manonmani அம்மா Facebook பக்கத்திலிருந்து..

திங்கள், 20 மே, 2024

அவ்வை பாட்டி சொல் கேளு

ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......

(01) பாராத பயிரும் கெடும்.
(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
(03) கேளாத கடனும் கெடும்.
(04) கேட்கும்போது உறவு கெடும்.
(05) தேடாத செல்வம் கெடும்.
(06) தெகிட்டினால் விருந்து கெடும்.
(07) ஓதாத கல்வி கெடும்.
(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
(09) சேராத உறவும் கெடும்.
(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
(11) நாடாத நட்பும் கெடும்.
(12) நயமில்லா சொல்லும் கெடும்.
(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
(15) பிரிவால் இன்பம் கெடும்.
(16) பணத்தால் அமைதி கெடும்.
(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
(18) சிந்திக்காத செயலும் கெடும்.
(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
(20) சுயமில்லா வேலை கெடும்.
(21) மோகித்தால் முறைமை கெடும்.
(22) முறையற்ற உறவும் கெடும்.
(23) அச்சத்தால் வீரம் கெடும்.
(24) அறியாமையால் முடிவு கெடும்.
(25) உழுவாத நிலமும் கெடும்.
(26)உழைக்காத உடலும்  கெடும்.
(27) இறைக்காத கிணறும் கெடும்.
(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
(31) தோகையினால் துறவு கெடும்.
(32) துணையில்லா வாழ்வு கெடும்.
(33) ஓய்வில்லா முதுமை கெடும்.
(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
(35) அளவில்லா ஆசை கெடும்.
(36) அச்சப்படும் கோழை கெடும்.
(37) இலக்கில்லா பயணம் கெடும்.
(38) இச்சையினால் உள்ளம் கெடும்.
(39) உண்மையில்லா காதல் கெடும்.
(40) உணர்வில்லாத இனமும் கெடும்.
(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.
(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
(43) தூண்டாத திரியும் கெடும்.
(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
(45) காய்க்காத மரமும் கெடும்.
(46) காடழிந்தால் மழையும் கெடும்.
(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.
(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.
(49) வசிக்காத வீடும் கெடும்.
(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.
(51) குளிக்காத மேனி கெடும்.
(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.
(53) பொய்யான அழகும் கெடும்.
(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
(55) துடிப்பில்லா இளமை கெடும்.
(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
(57) தூங்காத இரவு கெடும்.
(58) தூங்கினால் பகலும் கெடும்.
(59) கவனமில்லா செயலும் கெடும்.
(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.....

மரம் நடுதல் இடைவெளி

#நீண்டகாலப்_பயிர்கள்_நடும்_பொழுது_கவனிக்கவேண்டிய_முக்கிய_இடைவெளிகளின்_அளவீடுகள்

☘️ #வாழை_மரம் 8' × 8'

☘️ #தென்னை_மரம்  24' × 24'

☘️ #பப்பாளி_மரம்  7' × 7'

☘️ #மாமரம்_உயர்_ரகம். 30' × 30'

☘️ #மாமரம்_சிறிய_ரகம் 15' × 15'

☘️ #பலா_மரம்  22' × 22'

☘️ #கொய்யா_மரம்  14' × 14'
  (அப்பிள் கொய்யா 15'× 15')

☘️ #மாதுளை_மரம்  9' × 9'

☘️ #சப்போட்டா_மரம். 24' × 24'

☘️ #அன்ன_மீனா_மரம். 10' × 10'

☘️ #தோடை_மரம். 15' × 15'

☘️ #எலுமிச்சை_மரம்  14' × 14'

☘️ #திராட்சை.  9' × 6'

☘️ #நெல்லி_மரம்  14' × 14'

☘️ #முந்திரிகை_மரம். 14' × 14'

☘️ #கறிவேப்பிலை_மரம். 7' × 8'

☘️ #முருங்கை_மரம்.  12' × 12'

☘️ #கராம்பு_மரம்.  18'× 18'

☘️ #கறுவா_மரம்.  10' × 10'

☘️ #கோபி_மரம்.  7' ×  7'

☘️ #கொக்கோ_மரம்.  24' × 24'

☘️ #வேப்பமரம். 15' × 15'

☘️ #பனைமரம். 10' × 10'

☘️ #கமுகுமரம்.  7' × 7'

☘️ #தேக்கு_மரம் 10' × 10'

☘️ #மலைவேம்பு_மரம்.  10' × 10'

☘️ #சந்தன_மரம். 15' × 15'

☘️ #நாவல்_மரம்.  30' × 30'

☘️ #கற்றாழை   1.5'  × 2'

இந்த அளவீடுகள் குறையாது கட்டாயம் இருக்க வேண்டிய 'அடி' அளவுகள் ஆகும்

இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது

இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும்
இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும்

மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும்.

நீண்டு வளர்ந்தாலும் இதன் கேள்வி குறைவாகவே இருக்கும்

இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும்
மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும்.

நீங்கள் மட்டுமன்றி அனைவரும் இதுபோன்ற தகவல்களை அறிந்து கொள்ள உதவும்

Muba Mahroof
#Share