சினிமா கனவு
சினிமா கனவு இருந்து என்ன செய்ய அதற்கான செயல்பாடுகள்
குறைவா இருக்கே.2003 2004 ல் கொஞ்சம் உழைத்திருந்தால் போதுமா?வெறி வேணும் ஒவ்வொரு நிமிடமும்
அதைப் பற்றிய சிந்தனை வேண்டும் தொடர் உழைப்பு வேண்டும்.
சினிமா
கனவுகளுடன் நண்பன் சாம்பசிவம் அறையிலும் நண்பன் சமையல் முருகன் அறையிலும் தங்கியிருந்த
நாட்கள் அவை.சமையல் முருகனுடன் ஒரு நாள் சமையல் வேலைக்கு சென்றேன்.வடபழனி முருகன் கோவிலுக்கு
அருகில் இருக்கும் வள்ளி திருமணமண்டபத்தில் வேலை.திருமணத்திற்கு முதல்நாள் இரவு மண்டபத்திற்கு
சென்றுவிட்டோம்.20 தேங்காயை உடைத்து திருக சொன்னார்கள்.என் முதல் அனுபவம் தேங்காயில்
ஆரம்பித்த்து.20 தேங்காயை உடைத்து திருகுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.அடுத்தநாள்
சப்ளை செய்ய அனுமதிக்கப்பட்டேன்.நல்ல கூட்டம் சப்ளை முடிந்து சம்பளம் கொடுத்தார்கள்.சம்பளம்
ரூ350.00 என்று நினைக்கிறேன்.தூக்க அசதி என்பதால்
king fisher strong ஒன்று சாப்பிட்டுவிட்டு எங்கள் அறையில் நன்றாக தூங்கினேன்.அப்புறம்
எப்படி சினிமா வாய்ப்பு தேடுவது.
நண்பன்
சாம்பு(சாம்பசிவம்) ஒரு விளம்பர பட கம்பெனியில் உதவி இயக்க பிரிவில் இருந்தான்.அவனுடன்
படபிடிப்பு நடக்கும் இடத்திற்கு(பிரசாத் ஸ்டுடியோ) செல்வேன் மதிய சாப்பாடு சுவையாக
இருக்கும்.அன்று போத்தீஸ் விளம்பர படபிடிப்பு நடந்துகொண்டிருந்தது.
அதற்கு
பிறகுதான் SUCCESS CINEMA பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தேன்.அங்குதான் இளையராஜா அறிமுகமானார்.
One நிமிட் இவர் இசையமைப்பாளர் இளையராஜா அல்ல என் நண்பர் இளையராஜா.ஈரநிலம் சமயத்தில்
பாரதிராஜாவிடம் அலுவலக உதவியாளராக இருந்தவர்.இருவரும் சினிமா டைரக்டரிக்கு விளம்பரம்
புடிக்க செல்வோம்.இடையில் சினிமா,ஸ்க்ரிப்ட் பற்றி நிறைய பேசுவோம்.இடையில் பத்திரிகை
எடிட்டருக்கும் எங்களுக்கும் சின்ன பிரட்சினையின் காரணமாய் வெளியே வந்துவிட்டோம்.அப்பொழுது
எங்கள் ஆபீஸ் தி.நகரில் இருந்த்து நாங்கள் அடிக்கடி நடேசன் பார்க்கில் கூடுவோம்,கதை
பேசுவோம்.அது ஒரு கனாக்காலங்க… ஒருசாப்பாடு வாங்கி இரண்டுபேர் சேர் பன்னி சாப்பிடுவோம்.
இன்று
எனக்கு இரண்டு குழந்தைகள்.என் மனைவிக்கு சினிமா சென்னை பற்றி பேச்சு எடுத்தாலே பிடிக்கவில்லை,என்ன
செய்ய…..?