செவ்வாய், 29 நவம்பர், 2022

ஆழ்மனம்

*ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்*

 பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், “பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.”

சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம் தான், நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம், பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்று தான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதி தான். நாம் உயிர் வாழும் பூமி. இந்த பூமியை இயக்கிக்கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்தி தான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம் தான் அறிவுமனம், ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

“உருவமே இல்லாத ஆழ்மனம் தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம் தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம் தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.” இதுவரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும். இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்ல முடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அது தான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம், நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள் தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பது தான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவது தான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.

*ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.*

ஞாயிறு, 27 நவம்பர், 2022

நாட்டு மருந்துகள்

நம்முடைய தமிழ்நாட்டு பாரம்பரிய நாட்டு மருந்துகள்.


#கைகண்ட_அனுபவ_மருத்துவம்!

கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலைவாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள்.கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது.அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன்.பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-

கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!

நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத்.

அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."

சில எளிய மருத்துவம்: !!!

வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.

கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.

டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.

தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.

வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.

ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.
அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.

கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.

கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.

குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.

தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.

ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.

வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.

தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.

பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.

வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.

காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.

கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.

காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)

காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.

பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.

வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.

நாட்டுப்புற மருந்துகள்

நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.

மகளிர் மருத்துவம்
********************

திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :

1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.

3. சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.

1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.

2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.

3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

ஆடவர் மருத்துவம்
*********************

ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :

1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.

2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.

3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.

4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.

5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.

குழந்தையர் மருத்துவம்
**************************

அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.

1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.

2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.

3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.

4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.

5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.

பொது மருத்துவம்
*******************

ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :

1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.

2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.

3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.

4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.

5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.
நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்

பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது. 
உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது. 
உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாக ஆகின்றது.
நன்றி. சித்தர்களுக்கும் மற்றவர்கள் பயன்பெற வேண்டும் என்று நினைக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. 

செவ்வாய், 18 அக்டோபர், 2022

Shedule J பற்றிய விழிப்புணர்வு பதிவு

#எச்சரிக்கைப்பதிவு..

#அலோபதி மருத்துவத்தால் #குணப்படுத்த_முடியாத & ஷெட்யூல் J-யில் #ஆங்கில மருத்துவம் வைத்தியம் #பார்க்கக்கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 
நோய்களின் பட்டியல் :
=======================

ஆங்கில மருத்துவம் விழி பிதுங்கி நிற்கும் 51 வியாதிகள்..
Dr. பஸ்லூர்ரஹ்மான் M.B.B.S., Dr MRSH MD Ph.D(Acu)
====================

ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் #மருந்தேஇல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Drugs “Drugs and Cosmetics Act, 1940, 1945, 1995, ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drugh may not purport to prevent or cure or make claims to prevent or cure”.

‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்’ 1940ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ‘J’ என்ற பிரிவின் கீழ் 51 வகை ஆங்கில மருத்துவத்தின் வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும்!’ என்றோ, ‘மருந்துகளைக் கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன்!’ என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.

நோயால் வாடும் மக்களின் நன்மைக்காக, அவர்கள் உயிர்களும், உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நமது அரசாங்கம், ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்கள் மொத்தம் 51 என்று மேற்சொன்ன சட்டத்தில் ஷெட்யூல் - Jயில் வலியுறுத்தியுள்ளது. இந்த 51 வியாதிகளையும் ஆங்கில மருத்துவர்கள் எவரும் தங்கள் மருந்துகளால், குணப்படுத்த முடியும் என்றோ, குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்று எச்சரிக்கிறது.

            இந்த 51 நோய்களும் ஆங்கில மருத்துவத்துக்கு மட்டுமே சொந்தமானவை. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது நோய்கள் இந்த ‘லிஸ்ட்’டில் சேரும் வாய்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. இந்த வகையில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் நோய்கள் ‘எய்ட்ஸ், சார்ஸ்’ ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ஹெப்படைட்டிஸ் என்ற ஒரு நோயும் இதிலே அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

இவ்வாறாக, ஆங்கில மருத்துவம், தான் கண்டுபிடித்த நோய்கள் ஒவ்வொன்றையும் ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொன்றாக அவற்றைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து அந்த நோய்களை அடக்கம் செய்து கொண்டு வரும் வேளையில் இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்..

அதாவது, ஆங்கில மருந்துகளில் எந்த ஒரு மருந்தும் ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள ஆங்கில மருத்துவத்தில் நோய்களைக் குணமாக்காது என்பதை அந்த மருத்துவம் சர்வதேச அளவில் ஒப்புக்கொண்டு அதை பகிரங்கமாக அச்சிட்டிருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காகவும், எனவே, ஆங்கில மருத்துவம் பார்க்கும் எந்த ஒரு மருத்துவரும், ஆங்கில மருத்துவத்தில் மருந்து என்பதே கிடையாது என்ற உண்மையான காரணத்தினால் ஷெட்யூல்-Jயில் உள்ள நோய்களுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது என்பதற்காகவும்,

          ஆங்கில மருத்துவம் இந்த 51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது என்று கூறுவது #தவறான, ஆபத்தான போக்கு. நோயால் அவதியுறும் மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்பதை #எச்சரிப்பதற்காகவும், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின் பேரில் நமது அரசாங்கமும் தகுந்த எச்சரிக்கையுடன் ஆங்கில மருந்துகளை ‘மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தின்’, பிடியில் ஷெட்யூல் -J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று 51 நோய்கள் அடங்கிய பட்டியலைச் சேர்த்திருக்கிறது.

ஷெட்யூல் J-யில் ஆங்கில மருத்துவம் வைத்தியம் பார்க்கக் கூடாது என்று வரையறுக்கப்பட்டுள்ள 51 
நோய்களில் விவரம் வருமாறு...
1. எய்ட்ஸ்
2. நெஞ்சுவலி
3. ‘அப்பெண்டிஸைட்டிஸ்’ என்னும் குடல் வால் நோய்
4. இருதய இரத்தக் குழாய்களில் அடைப்பு
5. தலை வழுக்கை
6. கண்பார்வை அற்ற நிலை
7. ஆஸ்துமா
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை
9. கண்புரை
10. தலைமுடி வளர, நரையை அகற்ற
11. கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறுகள்
13. காது கேளாமை
14. நீரிழிவு நோய்
15. கர்ப்பப் பை சம்பந்தமான அனைத்துக் கோளாறுகள்
16. வலிப்பு நோய் - மன நோய்கள் அனைத்தும்
17. மூளைக்காய்ச்சல்.
18. உடல் நிறம் கருப்பாக இருப்பினும் சிகப்பாக்குதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண்
21. மரபணு நோய்கள்
22. க்ளாகோமா எனும் கண்வலி நோய்
23. கழுத்து (தைராய்டு) வீக்கம்
24. ஹெர்னியா எனும் குடலிறக்க நோய்
25. அதிக மற்றும் குறைவான இரத்த அழுத்தம்
26. விரை வீக்கம்
27. பைத்தியம்
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி செய்ய.
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட.
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்.
32. பற்களை உறுதிப்படுத்த என்று, கால்ஷியம் மருந்துகள் மூலமாக வைத்தியம் பார்ப்பது.
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (ஹெபடைட்டிஸ்), மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும்
34. இரத்தப் புற்றுநேரய்.
35. வெண் குஷ்டம்
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்துதல்.
37. மூளை வளர்ச்சிக்குறைவு.
38. மாரடைப்பு நோய்
39. குண்டான உடம்பு மெலிய
40. பக்க வாதம்
41. உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்
42. மூல நோய் மற்றும் பவுத்திரம்
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த வயதில் தலை நரை
46. ரூமாட்டிக் இருதய நோய்
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம்
48. கழுத்து வலி, மற்றும் முதுகுத் தண்டில் ஏற்படும் அனைத்து வலிகளும்
49. திக்குவாய்
50. சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப் பை கற்கள்
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்துக் காணப்படுதல்.

ஆக, மேற்கண்ட இந்த ஷெட்யூல்-J-யில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த 51 வியாதிகளுக்கும் ஆங்கில மருத்துவம் தங்கள் மருந்துகளால் வைத்தியம் அளித்து வருவது குற்றச்செயல் என்று அரசாங்கம் சட்டப்பூர்வமாக எச்சரித்த பின்பும் இந்த அனைத்து நோய்களுக்கும் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவும், மக்கள் நலனுக்கு எதிராகவும் ஆங்கில மருத்துவத்தால் பகிரங்கமாகவும், ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்ற பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகளைக் கொண்டும் ஆங்கில மருந்துக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபங்களை வாரி வழங்கிக் கொண்டும் சட்ட விரோத காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய மருத்துவச் சங்கமும் (IMA) தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலும் (TMC) ஷெட்யூல் - J பற்றி பொதுமக்களுக்கு விளக்காதது ஏன்? இந்தக் குற்றச் செயல்புரியும் மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடம் தவறாக அடையாளம் காட்டிக் கொண்டிருப்பதேன்? 

போலி மருத்துவத்தை விஞ்ஞானப் பூர்வமானது என்றும் போலி மருத்துவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்றும் மக்களிடம் முன்னிலைப்படுத்தக் காரணம் என்ன? குற்றச் செயல்களுக்கு இன்றுவரை துணைபோய்க்கொண்டிருக்கக் காரணம் என்ன?

மேற்கண்ட 51 நோய்களுக்கு மருந்துகளே ஆங்கில மருத்துவத்தில் கிடையாது என்றிருக்க சட்டத்தை பகிரங்கமாகத் தூக்கியெறிந்து விட்டு மருந்துகளைக் கொடுத்து நோயாளிகளின் உயிர்ச்சக்தியை சாகடித்துக் கொண்டிருக்கும் ஆங்கில மருத்துவம், அம்மருத்துவத்தைச் சார்ந்தவர்களை ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்று மக்களிடையே நடமாடவிடும் இந்தத் துரோகச் செயலை மக்களே! அரசுக்கு தெரிவியுங்கள். மருத்துவச் சங்கத்தில் கேட்பதற்கு ஆளில்லை என்ற ஒரே காரணத்தால் தான் இப்படிப்பட்ட கொடூரச் செயல் நடந்துக் கொண்டிருக்கிறது.

மக்களே! இந்திய மருத்துவச் சங்கத்தை ஆங்கிலேயர்களின் மருத்துவத்தைப் பார்க்கும் டாக்டர்கள் மட்டுமே அடங்கப்பெற்ற குழுவாகப் பாதுகாத்து வருகின்றனர். அம்மருத்துவம் நோய்களைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ லாயக்கற்றது என்று தீர்மானித்து சட்டமாக்கிய பின்பும் அதைப்பற்றி மக்களிடம் மூச்சுக் கூட விடவில்லை.
ஷெட்யூல்-J-சட்டத்தின்படி இன்றுள்ள டயாபிடிஸ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், கார்டியாக் (இருதய) ஸ்பெஷலிஸ்ட்டுகள், இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான ஸ்பெஷலிஸ்ட்டுகள், மூளை சம்பந்தப்பட்ட ஸ்பெஷலிஸ்ட்டுகள், தைராய்டு ஸ்பெஷலிஸ்ட்டுகள், சிறுநீரக ஸ்பெஷலிஸ்ட்டுகள் பைத்தியக்கார ஸ்பெஷலிஸ்ட்டுகள் போன்ற இவர்கள் அனை வரும், இன்னும் அனைத்து ஸ்பெஷலிஸ்ட்டுகளும் போலிகள் என்ற அடைமொழியுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள். 

மக்களே இது பற்றிய விளக்கத்தை உங்களிடமும், மறைத்து, அரசாங்கத்திடம் மறைத்தது ஏன் என்பதற்கான விளக்கத்தைக் கேளுங்கள்.
TMC இதைப் பற்றி மக்களுக்குச் சொல்லாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் நன்மையா? தங்கள் சங்கத்தில் உள்ள மருத்துவர்களுக்கு செய்யும் நன்மையா? தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்குப் பதிலாக அதன் இடத்தில் அகில இந்திய ஹெல்த் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தி இந்தியாவில் இருக்கும் அனைத்து மருத்துவங்களும் அடங்கப் பெற்ற சுகாதாரக் கவுன்சிலை அமைக்க வேண்டும். அதில் ஆங்கிலேயர்களின் மருத்துவத்தையும், ஒரு அங்கமாக்கி, அம்மருத்துவத்தின் அடாவடித்தனங்களை ஒரு நிலைக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

மக்கள் உடல் நலன், சுகாதாரம் போன்றவைகளுக்காக அரசாங்கம் ஆற்றப்போகும் காரியங்கள் அனைத்துக்கும் அது நன்மையாக முடிவதற்கும், தீமையாக முடிவதற்கும், இந்த தார்மீகப் பொறுப்பேற்கும். உரியநடவடிக்கையிலும் இறங்க வேண்டும் என்ற சட்டப்பூர்வமான அதிகாரத்தையும் வழங்கவேண்டும். அல்லது தங்கள் உடல் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் வெகு விரைவில் இழந்துவிடுவார்கள்.

        அடென்லால், கால்ஸிகார்ட், ஃப்ரூஸிமைட், இன்னும் அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த என்று இருதய சிறப்பு நிபுணர்கள் கொடுக்கும் அனைத்தும் நச்சுக்கள், உயிரைக் குடிப்பவை. இவையனைத்தும் சிறுநீரகங்களை படிப்படியாகச் சாகடிக்கும் நச்சுக்கள். அது மட்டுமல்ல, இருதய இயக்கத்தையே பாழாக்கும். அத்துடன் உடலின் மீதமுள்ள உறுப்புக்களும் கெடும். இரத்த அழுத்தத்திற்கான இருதய ஸ்பெஷலிஸ்ட்டுகள் என்பவர்கள் போலிகள் (Indian Drugs and Cosmetics Act, 1940 Schedule-J) சட்டத்தின்படி எழுதும் மாத்திரைகள் ஒவ்வொன்றும் வயிறு, கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் என்று ஒவ்வொரு உறுப்பாக சீரழிப்பவை.

போலிகள் சட்டத்தின்படி தண்டனைக்குரியவர்கள் யார் எனில், ‘எந்த டாக்டர் அதிக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்து என்று நோயாளிகளை நம்பவைத்து ஆங்கில மருந்துகளை எழுதிக் கொடுக்கிறாரோ, அந்த மருத்துவரே ஆவார்’ என்பதாகும். சட்டத்தின்படி எந்த மருத்துவரும் அதிக இரத்த அழுத்தம் உட்பட எந்தவிதமான இருதய நோய்க்கும் குணப்படுத்தும் மருந்துகள் இவை அல்லது கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை என்று நோயாளிகளிடம் கூறுவாரேயானால் அவர் ஏமாற்றி தொழில்புரியும் போலி டாக்டராவார்.

     ஆனால் ஆங்கில மருத்துவம், சட்டத்தை துச்சமென மதித்து அகம்பாவத்துடன் போலிகளுக்கு ‘இருதய ஸ்பெஷலிஸ்ட்’ என்று அடைமொழியைக்ப் கொடுத்திருக்கிறது. இவர்கள் தொழில் நடத்தும் முறை எப்படி என்பதை வாசகர்களாகிய நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலம், நம் நாட்டு மக்களின் எதிர்காலம் காக்கப்படவேண்டும் என்ற உணர்வோடு இது எழுதப்படுகிறது. உங்கள் ஒவ்வொருவர் ஊரிலும் மருந்து ஆய்வாளர்கள் இருப்பார்கள். இவர்கள் உங்கள் நலனுக்காக விழித்துக் காத்திருந்து வேலை செய்யக் கடமைப்பட்டவர்கள். நோயாளிகளாகிய நம் ஒவ்வொருவர் உயிரும் இவர்கள் கையிலே இருக்கிறது. இவர்களின் வித்தியாசமான, போக்கால்தான் இன்று ஆங்கில மருத்துவம் போலிகளுக்கு ஸ்பெஷலிஸ்ட் பட்டம் கொடுத்து சட்டத்தை மிஞ்சி நடக்கும் அளவுக்கு உங்களிடையே உலாவ விட்டிருக்கிறது.

மருந்து ஆய்வாளர்கள் கடமை என்னவென்றால் “இருதய நோய்கள் முதலாக எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தும் மருந்துகள் இவை; குணப்படுத்தும் மருந்துகள் இவை என்று கூறி, மக்களை ஏமாற்றி, நம்ப வைத்து மருந்துச் சீட்டுகளை எழுதிக் கொடுக்கும் ஆங்கில மருத்து வர்களிடம் அவர்களின் சட்டமீறுதலைப் பற்றிக் கடுமையாக எச்சரிக்கவேண்டும். அவர்கள் எழுதும் மருந்துகள் பற்றி அவற்றின் தன்மைகள் பற்றி, பக்கவிளைவுகள் பற்றி முறையாக நேர்காணல் மூலமாக பரீட்சிக்க வேண்டும். ஆங்கில மருத்துவம் அவர்களுக்கு அளித்துள்ள ஸ்பெஷலிஸ்ட் பட்டங்களை உடனடியாக நீக்கச் சொல்ல வேண்டும். தங்கள் விசிட்டிங் கார்டுகளிலிருந்தும், போர்டுகளிலிருந்தும் மறைமுகமாக மக்களை ஏமாற்றும் அந்த போலி அடைமொழிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

“உங்கள் உடல் நலன், சமுதாய நலன் காக்கப்பட Drug Inspectors உடனடியாக மேற்சொன்ன நடவடிக்கைகளை எடுக்கிறார்களா?” என்று கவனியுங்கள். இன்றிலிருந்து செயல்படத் தவறும் Drug Inspectorகளைத் தட்டியெழுப்பி கவனிக்கச் சொல்லுங்கள்.

Drug Inspectorகளைக் கண்டுபிடிப்பது மிக எளிதான காரியம். உங்கள் வீட்டு அருகாமையிலுள்ள எந்த ஒரு மருந்துக்கடையிலும் அவர்கள் விலாசத்தை முழுமையாகக் கேட்டு அறிந்து கொள்ளலாம். உங்கள் நன்மைக்காக உங்கள் நலன் காக்கும் நண்பர்கள். அவர்களை நீங்கள் தினமும் விழிப்புணர்வுடன் சந்தித்து விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

வாசகர்களே, இந்தப் பட்டியலில் உள்ள நோய்களுக்கு ஸ்பெஷலிஸ்டுகள் என்று கூறும் ஒவ்வொருவரும் போலிகள். காரணம் சிறப்பு மருத்துவர்கள் என்ற அடைமொழி மறைமுகமாக பாமர மக்களை பெரிய அளவில் ஏமாற்றக் கூடிய தாக உள்ளது. மருத்துவமனைகளில் போர்டுகளில் காணப்படும் இந்த அடைமொழிகளை நீக்க சொல்வதில் சமுதாயமே கண்காணிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

நன்றி : ‘#மருந்துகளால்_வரும்நோய்கள்’
ஹெல்த் டைம் வெளியீடு...

படித்துவிட்டு அனைவருக்கும் பகிருங்கள்...பிறருக்கும் உதவட்டுமே..!!!

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

தாமிரபரணி சங்கு மண்டபம்.

நம்ம மாநிலத்தை தண்ணீர் பிரச்னைக்காக பக்கத்து மாநிலங்களோட சண்டை போட வைக்காத ஒரே நதி தாமிரபரணிதான். பொதிகை மலையில் உற்பத்தியாகும் இந்த நதிதான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களோட தாகத்தைத் தீர்த்து, பசுமையைக் கொழிக்க வைக்குது.

இந்த தண்ணியில தாமிரச்சத்து கலந்திருக்கிறதால, இந்த நதிக்கு தாமிரபரணினு காரணப் பெயர் வந்திருக்கும்னு சொல்றாங்க. அதாவது, பொதிகை மலை உச்சியில் பூங்குளம்ங்கிற இடத்துல இருந்துதான், தாமிரபரணி நதி உற்பத்தியாகுது. இந்தப் பூங்குளம் பகுதியிலதான், அகத்தியர் கோயில் இருக்கு. இதை தரிசிக்க ஆண்டுதோறும், குறிப்பிட்ட சில மாசம் தமிழ்நாட்டு பக்தர்கள், கேரளா வழியாகத்தான் மலைக்குப் போறாங்க. ஏன்னா, தமிழ்நாட்டு எல்லைவழியா சொரிமுத்து அய்யனார் கோயிலைத் தாண்டி மேல ஏறிப்போக முடியாது. காரணம், நம்ம வனத்துறையோட கட்டுப்பாடுதான். பொதிகை மலைப் பயணம் ஏறத்தாழ டிஸ்கவரி சேனல்ல வர்ற 'பியர் கிரில்ஸ்' (Bear Grylls) நிகழ்ச்சிக்கு சமமா இருக்கும்.

தாமிரபரணி உற்பத்தியாகி வர்ற வழியில சில மரங்களோட இலைகள்லயும், பாறைகள்லயும், தாமிரச்சத்து இருக்கிறதாவும், அந்தச் சத்து தண்ணியோட கலந்து வருதுனும் சொல்றதுண்டு. அறிவியல்பூர்வமாவே, இந்த தண்ணியில தாமிரச்சத்து இருக்குனு கண்டுபுடிச்சிருக்காங்க.

பதார்த்த குண சிந்தாமணி'யில...

"தாம்பிரவாற் றுப்புனலால் சுரமும் பித்துவிழித் தும்பிரமுட் காய்ச்சல் சுவாச நோய் சோம்பிமிகக் 
கக்குகய மென்புருக்கி கைகா லெரிவடனே மிக்குறுதா கங்களும்போம் விள்"னு 

எழுதி வெச்சிருக்காங்க. அதாவது தாமிரபரணி தண்ணி எல்லா வகைக் காய்ச்சல், பித்ததோஷம், கண்புகைச்சல், உள்சுரம், சுவாச ரோகம், கக்குவான், என்புருக்கி, கை, கால் எரிச்சல், மிகுந்த நீர்வேட்கை ஆகிய நோய்களைத் தீர்க்கும்ங்கிறதுதான், அந்தப் பாட்டோட பொருள்.

தாமிரபரணி ஆறு, மலையில இருந்து, இறங்கி பாபநாசம் வழியா நடந்து, தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் பகுதியில் கடல்ல கலக்குது. இந்தப் பாட்டுல சொல்லி வெச்சிருக்கிற பலன் இந்த காலத்துக்குப் பொருந்துமானு கேட்கப்படாது. இந்தக் காலத்துல பல விதமான ரசாயன கழிவுகள் கலந்துதான், தாமிரபரணி கடலுக்குள்ள போய் சேருது. குறைஞ்சபட்சம் பாபநாசம் வரையிலும், வேணும்னா தண்ணி தூய்மையா இருக்கலாம். அதுக்கும் கீழ இறங்க, இறங்க தண்ணியோட தரம் மாறி, உருமாறிடுது. தாமிரபரணியில வெள்ளப்பெருக்கு உருவாகி, கடல் தண்ணியில கலந்தாதான், சுத்துப்பட்டுல நல்ல மழையும், கடலுக்குள்ள மீன் வளமும் பெருகும். நன்னீர் கடல்ல,கலக்குற பகுதிகளிலிருந்துதான் மேகங்கள் அதிகமான தண்ணீரை உறிஞ்சி மழையைக் கொடுக்குது. நன்னீர் இருக்கிற பகுதியிலதான், பல வகையான மீன்கள் உற்பத்தியாகி பெருகி வளருது. ஆக, இனிமேல் கடல்ல வெள்ள நீர் வீணா கலந்துடுச்சுனு சொல்லாதீங்க.

சரி, தாமிரபரணிக்கு வருவோம். அந்தக் காலத்திலிருந்தே, தாமிரபரணி வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்கு. பொதிகை மலையில் மழை பெஞ்சி, திடீர்னு வெள்ளம் வர்ற செய்தி திருநெல்வேலியில் இருக்கிறவங்களுக்கு எப்படி தெரியும்?

தாமிரபரணியில நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல்பூர்வமா தெரிஞ்சுக்கிட்டாங்க. அதுக்குப் பேரு, சங்குக் கல்மண்டபம். தாமிரபரணி ஆத்து மையத்தில சங்குக் கல்மண்டபம் அமைச்சிருந்தாங்க. மூணு பக்கம் திறந்தவெளியாகவும், தண்ணி வர்ற எதிர்ப்பக்கம் மட்டும் கற்சுவராலயும் அடைக்கப்பட்ட மண்டபம் அது. மண்டபம் உச்சியில சங்கு மாதிரி ஒரு அமைப்பு இருக்கும். ஆத்துல வெள்ளம் வரும்போது, அந்த மண்டபத்துக்குள்ள குறிப்பிட்ட அளவுக்கு மேல நீர்மட்டம் உயர்ந்தா, வெள்ளத்தோட இரைச்சலால் காத்து உந்தி தள்ளி, அந்த சங்கு சத்தமாக ஊதும். இதுதான் வெள்ளம் பற்றிய அறிவிப்பு. இதன் மூலமா, சுற்று வட்டார மக்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயிடுவாங்க.

நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகும். சங்கு சத்தம் குறைஞ்சதுனா, வெள்ளம் வடிஞ்சிருச்சுனு அர்த்தம். சங்குச் சத்தம் குறைஞ்ச பிறகு, கரையோர மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு வந்துடுவாங்க.

ஒரு காலத்துல பாபநாசம் தொடங்கி, கடல்ல சங்கமம் ஆகிற வரையிலும், குறிப்பிட்ட தூரத்துக்கு தாமிரபரணியில் ஒரு சங்கு மண்டபம் இருந்திருக்கு. அதுக்கு சாட்சியா, தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி (வைணவ ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த ஊர்)யில, தாமிரபரணிக் கரையில இன்னும் சங்கு மண்டடம் நின்னுக்கிட்டிருக்கு. பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே, வெள்ளம் வந்தா தப்பிக்கிறதுக்கு, முன்னறிவிப்பு சொன்ன. சங்கு மண்டபம் மட்டும் வெளிநாட்டுல இருந்திருந்தா, இந்நேரம் உலக பாரம்பர்ய சின்னமா அறிவிச்சிருப்பாங்க.
நன்றி. பசுமை விகடன்.