ஞாயிறு, 14 டிசம்பர், 2025

ஆரோக்கியமாய் வாழ

மனிதர்களின்  நோய்களுக்கு காரணங்களாக இருப்பது  எதிர்மறையான( negative) உணர்வுகளான கோபம், வெறுப்பு,கவலை, பொறாமை.
இந்த உணர்வுகளை சரி செய்யாமல் எந்த மருந்துகளும் முழுமையான பலன்களை கொடுக்காது.
 மேலே சொல்லப்பட்டுள்ள எதிர்மறையான உணர்வுகளின் காரணமாக மனிதர்களின் ரத்தத்தில் பிராண சக்தியின் அளவு குறைந்து காணப்படும். ரத்தத்தில் பிராண சக்தி இருந்தால் மட்டுமே மனிதர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு, மூலிகை எதுவானாலும் நல்ல பலன்களை கொடுக்கும்.
 எந்த உயர்வான மூலிகைகளை கொடுத்தாலும் முழுமையான பலன்கள் வேண்டுமானால் மேலே சொல்லப்பட்ட உணர்வுகளை சரி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.
 ஒரு சில எதிர்மறையான உணர்வுகள் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டே இருக்கும். இவைகளை சரி செய்ய வேண்டுமானால் தொடர் பயிற்சிகள்( தியானம், மூச்சுப் பயிற்சி ) செய்து வர வேண்டும். சில மலர் மருந்துகள் (flower remedies)நல்ல பலன்களை கொடுக்கலாம். நிரந்தர தீர்வுக்கு உணர்வுகள் நேர்மறையானதாக( positive) மாற வேண்டியது அவசியம்.

#fbpost2025シ 
#herbalremedies 
#flowerremedies 
#meditation 
#pranichealing

ஒரே நாளில் வழிபட வேண்டிய கோயில்கள்

ஒரே நாளில் வழிபட வேண்டிய தலங்கள்
-----------------------------------------------------------------------------

அம்மன் தலங்கள்:
(1) பெளர்ணமி காலை-மேலூர் (திருவுடைநாயகி).
(2) பெளர்ணமி மதியம்-திருவெற்றியூர் (வடிவுடைநாயகி)
(3) பெளர்ணமி மாலை-(வட) திருமுல்லை வாயில் (கொடியிடைநாயகி) 
   
ஆத்தூர் தலங்கள்:
(1) போளூர்- தான்தோன்றீஸ்வரர்,
(2) ஏத்தப்பூர்- சாம்பமூர்த்தீச்வரர்,
(3) ஆத்தூர்- காயநிர்மலேஸ்வரர்,
(4) ஆறகழூர்- காமநாதீஸ்வரர்,
(5) கூகையூர்- சுவர்ணபுரீஸ்வரர்,
   
குடந்தை தலங்கள்:
(1) காலை- குடந்தைகீழ்க்கோட்டம்
(2) நண்பகல்- திருநாகேச்சுரம்
(3) மாலை-திருபாம்புரம்
   
பஞ்சபைரவர் தலங்கள்:
(1) நல்லூர்.
(2) வலஞ்சுழி,
(3) சக்திமுத்தம்,
(4) பட்டீச்சரம்,
(5) ஆவூர் (பஞ்சபைரவர்கள் அருள்)
  
பஞ்சலிங்கத் தலங்கள்: (மதுரை)
(1) தி்ருஆப்புடையார்கோவில்,
(2) திருஆவினன்குடி,
(3) இன்மையில் நன்மை தருவார்,
(4) முக்தீஸ்வரர்,
(5) பழைய சொக்கநாதர்.
   
பஞ்சாட்சர தலங்கள்: (குடந்தை)
(1) தர்மேஸ்வரம்,
(2) பட்டீஸ்வரம்,
(3) சோழமாளிகை‌‌, (சோழர் அரண்மனை இருந்த இடம்)
(4) சிவசக்திமுத்தம்,
(5) ஆலயவடதளி.
  
பஞ்சாட்சர தலங்கள்: (சேலம்) 
(1) சேலம்- சுகவனேஸ்வரர்,
(2) உத்தமசோழபுரம்- கரபுரநாதர்,
(3) பில்லூர்- வீரட்டானேசுவரர்,
(4) பரமத்தி- வீமேஸ்வரர்,
(5) இடையார்- திருவேலிநாதர்.
   
பஞ்சாரண்ய தலங்கள்:
(1) உஷத்காலம்- வைகறை- திருக்கருகாவூர் (முல்லைவனம்)
(2) காலசந்தி- காலை- அவளிநல்லூர் (பாதிரிவனம்)
(3) உச்சிக்காலம்- நன்பகல்- அரதைபெரும்பாழி (வன்னிவனம்),
(4) சாயரட்சை- மாலை- திருஇரும்பூளை (ஆலங்குடி) (பூளைவனம்)
(5) 5.அர்த்தயாமம்- அர்த்தசாமம்- கொள்ளம்புதூர் (வில்வவனம்)
   
மகாசிவராத்ரியன்று;
(1) முதல்காலம்- குடந்தைகீழ்க்கோட்டம்- நாகேஸ்வரர்,
(2) இரண்டாம்காலம்-  திருநாகேச்சுரம்- நாகநாதர்,
(3) மூன்றாம்காலம்- திருபாம்புரம்-‌பாம்புரேஸ்வரரையும்,
(4) நான்காம் காலம்- நாகூர் நாகேஸ்வரரையும்- உடன் ஆதிசேஸனையும் வழிபடவும்.

முக்தி தலங்கள்:
(1) காலையில்-
கடம்பந்துறை- கடம்பர்,
(2) பகலில்- சிவமலை சொக்கர்- அய்யர்மலை-
ரத்னகிரீசுவரர்,
(3) மாலையில்- திருவேங்கிநாதர்- திருஈங்கோய்நாதர்

நவகைலாயங்கள்:
(1) சேர்ந்தபூமங்கலம்,
(2) இராசபதி,
(3) தென்திருப்பேரை,
(4) வைகுண்டம்,
(5) முறப்பநாடு,
(6) குன்னத்தூர்,
(7) கோடகநல்லூர்,
(8) சேரன்மாதேவி,
(9) பாபநாசம். 
   
நவதிருப்பதிகள் - வைகுண்ட ஏகாதசியன்று!:
(1) ஸ்ரீவைகுண்டம்- சுக்கிரனுக்குரிய தலம்
(2) திருவரகுண்மங்கை-
சூரியனுக்குரிய தலம்,
(3) திருப்புளிங்குடி- சந்திரனுக்குரிய தலம்,
(4) திருத்துலைவில்லி மங்களம்- (இரட்டைத்திருப்பதி) - இராகு- கேதுக்குரிய தலம்,
(5) திருக்குளந்தை- செவ்வாய்க்குரிய தலம்,
(6) திருக்கோளூர்-
குருபகவானுக் குரியதலம்,
(7) திருப்பேரை- சனிபகவானுக்குரிய தலம்,
(8) திருக்கூர்- (ஆழ்வார்திருநகரி)- புதனுக்குரிய தலம்.

கரன் லிங்கம் பிரதிஷ்டை தலங்கள்
(1) வைக்கம்,
   வைக்கத்தப்பன் கோயில் 
(2) கடுதுருத்தி,
   மகாதேவன் ஆலயம் 
(3) ஏற்றுமானூர்
   ஏற்றுமானூரப்பன் கோயில்

செவ்வாய், 25 நவம்பர், 2025

மன அமைதிக்காக சில வரிகள்

மன அமைதிக்கான சில சிந்தனைகள்...

1. தனிமையில் அமர்ந்து எதனால் உங்களுக்கு பிரச்னைகள் வருகின்றன. அதில் தீர்வு காண என்ன வழி என யோசியுங்கள்.

2. நல்ல மனிதர்களுடனும், அனுபவம் வாய்ந்த பெரியவர்களுடனும்
ஆலோசனை கேளுங்கள்.

3. ஒருபோதும் மூடர்களின் செயல்களை பார்த்து உங்கள் மகிழ்ச்சியை இழந்துவிடாதீர்கள். நல்ல மனிதர்களின் அனுபவ அறிவு நிறைந்தவர்கள் நட்பை இழந்துவிடாதீர்கள்.

4. உங்கள் மனதை எது பாதித்தாலும் அதை தொலைவில் வையுங்கள்.
நினைவில்கொண்டு வராதீர்கள்.

5. வீட்டிலிருப்பவர்களுடனும்,
நண்பர்களுடனும் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, நிச்சயமாக இறைவனுடன் பேசுவதற்கு நேரம்
ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் இடையூறு செய்யும் எதுவானாலும் ஒதுக்கி தள்ளுங்கள்.

6. எக்காரணத்தை கொண்டும் பாவம் செய்யும் ஒருவரை பார்க்காதீர்கள். உங்கள் மனதில்கூட பாவஎண்ணங்கள் வர அனுமதிக்காதீர்கள். நிம்மதியை யாருக்காகவும் இழக்காதீர்கள்.

7. நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என திடமாக நம்புங்கள். ஒருவேளை மனதிற்கு
பிடிக்காத சம்பவம் வந்தால் அது உங்களிடம் நிரந்தரமாக விடைபெற்று செல்வதற்காக வந்ததாக மகிழ்ந்து நிரந்தர விடைகொடுத்து அனுப்புங்கள்.

8. வாரம் ஒருமுறை ஆதரவற்றோர் இருப்பிடம், அரசு ஆஸ்பத்திரி
முதியோர் இல்லம் சென்று
உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். உடல் ஊனமுற்றோர் வேலை செய்யும் பொழுதும். கண்பார்வையற்றோர் அகர்பத்தி விற்கும் பொழுதும் இறைவன் உங்களை பூமியில் எந்தவிதமான குறையுமின்றி படைத்ததற்காக
நன்றி கூறுங்கள்.

9. தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள முற்படுங்கள். நேரத்தை
விரயம் செய்யும்எதையும் அனுமதிக்காதீர்கள். நேரத்தில்
உறங்கி, நேரத்தில் எழுங்கள்.

10. உங்களை பார்ப்பவருக்கு உற்சாகம் வரும் அளவு உங்கள் தோற்றம் இருக்கட்டும். ஒருசெயலை ஆரம்பிக்கும் முன் முடிவை தெரிந்து கொள்ளுங்கள். இதன்விளைவு எதில்கொண்டு சேர்க்கும் என ஆராயுங்கள். உங்களை புரிந்து மதிப்பவர்களுக்காக கண்டிப்பாக சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

11. எல்லாம் உலகில் உங்களுக்கு பிடித்தமாதிரி நடக்கும் என எதிர்பார்க்காதீர்கள். இவ்வுலகில்
எவ்விதத்திலும் நீங்கள் எதிர்பார்ப்பது சில நேரங்களில் உங்களஏமாற்றத்தில்
கொண்டு போய் நிம்மதியை இழக்க செய்துவிடும். செல் போனை தேவையானவற்றிற்கு மட்டுமே உபயோகம் செய்யுங்கள். வீணடிக்காதீர்கள்.

12. எதிலும் நேர்மையாக இருங்கள். தர்மத்தின் வழிப்படி நடக்க மறவாதீர்கள். இறைவனை சதா சர்வகாலமும் துணைவனாக வையுங்கள். மனம் குழம்பும் பொழுது சிறிது நேரம் எதுவும் பேசாமல் இறைவனை நினைத்து அவரிடம் மனம் விட்டு பேசிவிட்டு உங்கள் காரியத்தை துவங்குங்கள். அமைதி உங்களின் நிரந்தர நண்பனாகிவிடும்....

திங்கள், 24 நவம்பர், 2025

ஆலய அதிசயங்கள்

ஆலய அதிசயங்கள்!! 
1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.

3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.

4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.

5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே. 

6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.

7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.

8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.

9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.

10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.

11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.

12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.

13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.

14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.

16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.

17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.

18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.

19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.

20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.

21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

மறக்காமல் பகிருங்கள் நண்பர்களே, அனைவர்க்கும் தெரிய படுத்துங்கள்...

வியாழன், 20 நவம்பர், 2025

தியானம்

எண்ணங்கள்
ஓஷோ.

எண்ணங்களின் ஓட்டத்தை 
நிறுத்துவது எப்படி?????

எண்ணங்களை நிறுத்த முடியாது!

அது நிற்காது என்பதல்ல,ஆனால் 
அதை நிறுத்த முடியாது!

அது தானாகவே நிற்கின்ற ஒன்றாகும்.

இந்த வித்தியாசமானது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.இல்லையெனில் உனது மனதைத் துரத்திக்கொண்டு சென்று நீ பைத்தியமாகிவிட முடியும்.

எண்ண ஓட்டத்தை நிறுத்துவதால் மனம் அற்ற நிலை எழுவதில்லை.

எண்ணவோட்டம் இல்லாத போது,மனமற்ற நிலை இருக்கிறது.

அதை நிறுத்துவதற்கான அந்த முயற்சியே அதிக கவலையை உருவாக்கிவிடும்.

அது அதிக சச்சரவை உருவாக்கிவிடும்.அது உன்னை இரண்டாக பிளவு பட்டவனாக ஆக்கிவிடும்.

நீ உனக்குள் இடைவிடாத குழப்பத்தில் இருப்பாய்,இது உனக்கு உதவப்போவதில்லை.

மேலும் வலுக்கட்டாயமாக ஒருசில நொடிகள் அதை நிறுத்துவதில் நீ வெற்றி பெற்றாலும்கூட,அது ஒரு சாதனையே அல்ல.ஏனெனில் அந்த ஒரு சில நொடிகள் கிட்டத்தட்ட உயிரற்றவையாகவே இருக்கும்.

அவை உயிர்த்துடிப்புடன் இருக்காது.ஒருவித அசையாத தன்மையை நீ உணரலாம்.ஆனால் அமைதியை உணர முடியாது.ஏனெனில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அசையாத தன்மையானது அமைதி அல்ல.

அதற்கு அடியில் தன்னுணர்வு இழந்த நிலையில் ஆழத்தில் அடக்கி வைக்கப்பட்ட மனமானது வேலை செய்து கொண்டே இருக்கிறது.

ஆகவே,மனதை நிறுத்துவதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது.ஆனால் மனம் என்பது நிற்கிறது.அது நிச்சியம்.அது தானாகவே நிற்கிறது.

மனதை ஆழ்ந்த மரியாதையோடு பார்.சண்டை போடுபவனாக இருக்காதே.

நன்றாக கவனி.

மனதின் மிகச்சிறிய வேறுபாடுகளை,அதன் திடீர் திருப்பங்களை,அதன் அழகான திருப்பங்களை,திடீரென்று அது தாவிக் குதிப்பதை கவனி.

மனமானது விளையாடுகின்ற விளையாட்டுகளை,அது நெசவு செய்கின்ற கனவுகளை,கற்பனைகளை,நினைவுகளைக் கவனி.

அது உருவாக்குகின்ற ஆயிரத்தொரு திரையிடல்களைக் கவனி...கவனி.

அங்கு நின்று கொண்டு,தனியாக தூரவிலகி,அதில் ஈடுபடாமல் மனதைக் கவனி.

அப்போது நீ மெல்ல மெல்ல அதை உணர ஆரம்பிப்பாய்.

உனது முழுக்கவனம் எந்த அளவுக்கு ஆழமானதாக ஆகிறதோ அந்த அளவுக்கு உனது விழிப்புணர்வு ஆழமானதாக ஆகிறது.

மேலும் அதில் இடைவெளிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.ஒரு எண்ணம் போகிறது.ஆனால் அடுத்த எண்ணம் இன்னும் வரவில்லை.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

ஒரு மேகம் கடந்து சென்றுவிட்டது.அடுத்த மேகம் வந்து கொண்டிருந்தது.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

அந்த இடைவெளியில் மனம் அற்ற நிலையின் சிறு காட்சியை நீ முதன்முறையாக காண்பாய்.

மனம் அற்ற நிலையின் ருசியை நீ தெரிந்து கொள்வாய்.

ஆரம்பத்தில் இவை வெறுமனே அபூர்வமான தருணங்களாக இருக்கும்.

இடைவெளிகள் சிலவாகவும் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையே அதிக காலம் எடுத்துக் கொள்வதாகவும் இருக்கும்.

ஆனால் சமாதி நிலை என்றால் என்ன என்கிற ஒரு சிறிய காட்சியை உனக்கு கொடுக்கும்.

சிறிய குளம் போன்ற அமைதி வரும்,அதன் பின்னர் அது மறைந்து விடும்.

ஆனால் இப்போது நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை நீ தெரிந்து கொள்வாய்.

எனவே மீண்டும் கவனிக்க ஆரம்பி.

ஓஷோ....

எண்ணங்கள் இல்லா நிலை

எண்ணங்கள்
ஓஷோ.

எண்ணங்களின் ஓட்டத்தை 
நிறுத்துவது எப்படி?????

எண்ணங்களை நிறுத்த முடியாது!

அது நிற்காது என்பதல்ல,ஆனால் 
அதை நிறுத்த முடியாது!

அது தானாகவே நிற்கின்ற ஒன்றாகும்.

இந்த வித்தியாசமானது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.இல்லையெனில் உனது மனதைத் துரத்திக்கொண்டு சென்று நீ பைத்தியமாகிவிட முடியும்.

எண்ண ஓட்டத்தை நிறுத்துவதால் மனம் அற்ற நிலை எழுவதில்லை.

எண்ணவோட்டம் இல்லாத போது,மனமற்ற நிலை இருக்கிறது.

அதை நிறுத்துவதற்கான அந்த முயற்சியே அதிக கவலையை உருவாக்கிவிடும்.

அது அதிக சச்சரவை உருவாக்கிவிடும்.அது உன்னை இரண்டாக பிளவு பட்டவனாக ஆக்கிவிடும்.

நீ உனக்குள் இடைவிடாத குழப்பத்தில் இருப்பாய்,இது உனக்கு உதவப்போவதில்லை.

மேலும் வலுக்கட்டாயமாக ஒருசில நொடிகள் அதை நிறுத்துவதில் நீ வெற்றி பெற்றாலும்கூட,அது ஒரு சாதனையே அல்ல.ஏனெனில் அந்த ஒரு சில நொடிகள் கிட்டத்தட்ட உயிரற்றவையாகவே இருக்கும்.

அவை உயிர்த்துடிப்புடன் இருக்காது.ஒருவித அசையாத தன்மையை நீ உணரலாம்.ஆனால் அமைதியை உணர முடியாது.ஏனெனில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அசையாத தன்மையானது அமைதி அல்ல.

அதற்கு அடியில் தன்னுணர்வு இழந்த நிலையில் ஆழத்தில் அடக்கி வைக்கப்பட்ட மனமானது வேலை செய்து கொண்டே இருக்கிறது.

ஆகவே,மனதை நிறுத்துவதற்கு எந்த ஒரு வழியும் கிடையாது.ஆனால் மனம் என்பது நிற்கிறது.அது நிச்சியம்.அது தானாகவே நிற்கிறது.

மனதை ஆழ்ந்த மரியாதையோடு பார்.சண்டை போடுபவனாக இருக்காதே.

நன்றாக கவனி.

மனதின் மிகச்சிறிய வேறுபாடுகளை,அதன் திடீர் திருப்பங்களை,அதன் அழகான திருப்பங்களை,திடீரென்று அது தாவிக் குதிப்பதை கவனி.

மனமானது விளையாடுகின்ற விளையாட்டுகளை,அது நெசவு செய்கின்ற கனவுகளை,கற்பனைகளை,நினைவுகளைக் கவனி.

அது உருவாக்குகின்ற ஆயிரத்தொரு திரையிடல்களைக் கவனி...கவனி.

அங்கு நின்று கொண்டு,தனியாக தூரவிலகி,அதில் ஈடுபடாமல் மனதைக் கவனி.

அப்போது நீ மெல்ல மெல்ல அதை உணர ஆரம்பிப்பாய்.

உனது முழுக்கவனம் எந்த அளவுக்கு ஆழமானதாக ஆகிறதோ அந்த அளவுக்கு உனது விழிப்புணர்வு ஆழமானதாக ஆகிறது.

மேலும் அதில் இடைவெளிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.ஒரு எண்ணம் போகிறது.ஆனால் அடுத்த எண்ணம் இன்னும் வரவில்லை.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

ஒரு மேகம் கடந்து சென்றுவிட்டது.அடுத்த மேகம் வந்து கொண்டிருந்தது.அப்போது அங்கு ஒரு இடைவெளி இருக்கிறது.

அந்த இடைவெளியில் மனம் அற்ற நிலையின் சிறு காட்சியை நீ முதன்முறையாக காண்பாய்.

மனம் அற்ற நிலையின் ருசியை நீ தெரிந்து கொள்வாய்.

ஆரம்பத்தில் இவை வெறுமனே அபூர்வமான தருணங்களாக இருக்கும்.

இடைவெளிகள் சிலவாகவும் ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையே அதிக காலம் எடுத்துக் கொள்வதாகவும் இருக்கும்.

ஆனால் சமாதி நிலை என்றால் என்ன என்கிற ஒரு சிறிய காட்சியை உனக்கு கொடுக்கும்.

சிறிய குளம் போன்ற அமைதி வரும்,அதன் பின்னர் அது மறைந்து விடும்.

ஆனால் இப்போது நீ சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை நீ தெரிந்து கொள்வாய்.

எனவே மீண்டும் கவனிக்க ஆரம்பி.

ஓஷோ....

திங்கள், 17 நவம்பர், 2025

தமிழ்நாட்டு கோயில்களும் பலன்களும்

எந்த கோவிலுக்கு சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்!
ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்.
ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார தலங்கள்.
ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்!

1. அமிர்தகடேஸ்வரர் கோவில்,திருக்கடையூர்

2. எமனேஸ்வரமுடையார் கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி

3. காலகாலேஸ்வரர் கோவில், கோவில்பாளையம்,

4. சித்திரகுப்தசுவாமி கோவில், காஞ்சிபுரம்,

5. தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி,

6. ஞீலிவனேஸ்வரர் கோவில். திருப்பைஞ்ஞீலி.

7. வாஞ்சிநாதசுவாமி கோவில், வாஞ்சியம்.

ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார தலங்கள்!

1. தன்வந்திரி கோவில், ராமநாதபுரம், கோவை.

2. பவஒளஷதீஸ்வரர் கோவில், திருத்துறைப்பூண்டி.

3. பிரசன்னவெங்கடேச பெருமாள் கோவில், குணசீலம்.

4. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.

5. மகா மாரியம்மன் கோவில், வலங்கைமான்.

6. வைத்தியநாதசுவாமி கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

7. வைத்தியநாதசுவாமி கோவில், வைத்தீஸ்வரன் கோவில்.

எதிரி பயம் போக்கும் பரிகார தலங்கள்

1. அங்காளம்மன் கோவில், மேல்மலையனூர்.

2. அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.

3. காலபைரவர் கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.

4. காளமேகப்பெருமாள் கோவில், திருமோகூர்.

5. காளிகாம்பாள் கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.

6. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் கோவில்,அதியமான்கோட்டை.

7. தில்லைகாளியம்மன் கோவில், சிதம்பரம்.

8. பிரத்யங்கராதேவி கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.

9. மாசாணியம்மன் கோவில், ஆணைமலை.

10. முனியப்பன் கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.

11. ரேணுகாம்பாள் கோவில், படவேடு.

12. வெட்டுடையார் காளியம்மன் கோவில், கொல்லங்குடி

கடன் பிரச்சினை தீர்க்கும் பரிகார தலங்கள்

1. அன்னமலை தண்டாயுதபாணி கோவில், மஞ்சூர், ஊட்டி

2. கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு.

3. சாரபரமேஸ்வரர் கோவில், திருச்சேறை, கும்பகோணம்.

4. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.

5. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோவில், திருமலை.

கல்வி வளம் பெருக அருளும் பரிகார தலங்கள்

1. கரிவரதராஜ பெருமாள் கோவில், மாதவரம், சென்னை

2. தேவநாதசுவாமி கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.

3. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.

4. வரதராஜபெருமாள் கோவில், செட்டிபுண்ணியம்.

குழந்தைப்பேறு அருளும் பரிகார தலங்கள்

1. ஏகம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்.

2. சங்கரராமேஸ்வரர் கோவில், தூத்துக்குடி.

3. சிவசுப்ரமண்யசுவாமி கோவில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி.

4. தாயுமானசுவாமி கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

5. பாலசுப்ரமணியசுவாமி கோவில், ஆயக்குடி, தென்காசி.

6. மயூரநாதசுவாமி கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.

7. முல்லைவனநாதசுவாமி கோவில், திருக்கருகாவூர்.

8. நச்சாடை தவிர்தருளியசுவாமி கோவில், தேவதானம், ராஜபாளையம்.

9. விஜயராகவபெருமாள் கோவில், திருபுட்குழி.

குடும்பத்தில் ஒற்றுமை அருளும் பரிகார தலங்கள்

1. அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம்.

2. அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருச்செங்கோடு.

3. அங்காளம்மன் கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்.

4. கல்யாணவிகிர்தீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூ டலூர்.

5. சங்கரநாராய ணசுவாமி கோவில், சங்கரன் கோவில்.

6. நவநீதசுவாமி கோவில், சிக்கல்.

7. பள்ளிக்கொண்டீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி.

8. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா கோவில், மஞ்சக்கம்பை.

9. மாரியம்மன்,காளியம்மன் கோவில், ஊட்டி

10. லட்சுமி நரசிம்மர் கோவில், பரிக்கல்.

11. வெக்காளியம்மன் கோவில், உறையூர்

12. தலசயனப் பெருமாள் கோவில், மாமல்லபுரம்.

செல்வ வளம் அருளும் பரிகார தலங்கள்

1. அனந்தபத்ம நாப சுவாமி கோவில், அடையாறு.

2. அஷ்டலட்சுமி கோவில், பெசன்ட் நகர், சென்னை.

3. கைலாச நாதர் கோவில், தாரமங்க லம்.

4. பக்தவச்சலப்பெருமாள் கோவில், திருநின்றவூர்.

5. மாதவப்பெருமாள் கோவில், மயிலாப்பூர்.

திருமணத்தடைகள் நீக்கும் பரிகார தலங்கள்

1. உத்வாகநாதசுவாமி கோவில், திருமணஞ்சேரி.

2. கல்யாணபசுபதீஸ்வரர் கோவில், கரூர்.

3. கல்யாணவேங்கடரமணசுவாமி கோவில், தான்தோன்றிமலை.

4. கைலாசநாதர் கோவில், தாரமங்கலம்.

5. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் கோவில், பாரிமுனை.

6. பட்டீஸ்வரர் கோவில், பேரூர். கோவை.

7.நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை.

8. வரதராஜபெருமாள் கோவில், நல்லாத்தூர்.

9. வீழிநாதேஸ்வரர் கோவில், திருவீழிமழலை.

தீவினைகள் அகன்றிட அருளும் பரிகார தலங்கள்

1. காலபைரவர் கோவில், குண்டடம்.

2. காளிகாம்பாள் கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.

3. குறுங்காலீஸ்வரர் கோவில், கோயம்பேடு.

4. சரபேஸ்வரர் கோவில், திருபுவனம்.

5. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.

6. பண்ணாரிமாரியம்மன் கோவில், பண்ணாரி.

நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர அருளும் பரிகார தலங்கள்

1. அக்னீஸ்வரர் கோவில், திருப்புகலூர்.

2. தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தீர்த்தமலை, அரூர்.

3. பூவராகசுவாமி கோவில், ஸ்ரீமுஷ்ணம்.

4. வராகீஸ்வரர் கோவில், தாமல். காஞ்சீபுரம்.

நோய், நொடிகள் தீர்க்கும் பரிகார தலங்கள்

1. இருதயாலீஸ்வரர் கோவில், திருநின்றவூர்.

2. தோரணமலை முருகன் கோவில், தோரணமலை.

3. பண்ணாரிமாரியம்மன் கோவில், பண்ணாரி.

4. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.

5. வீரராகவர் கோவில், திருவள்ளூர்.

6. வீழிநாதேஸ்வரர் கோவில், திருவீழிமழலை.

7. வைத்தியநாதசுவாமி கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அருளும் பரிகார தலங்கள்

1. தாயுமானசுவாமி கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

2. பாதாள பொன்னியம்மன் கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.

3. மகாதேவர் கோவில், செங்கனூர்.

முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த பரிகார தலங்கள்

1. சங்கமேஸ்வரர் கோவில், பவானி.

2. மகுடேஸ்வரர் கோவில், கொடுமுடி.

3. வரமூர்த்தீஸ்வரர் கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.

4. வீரராகவர் கோவில், திருவள்ளூர்.

5. ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்.

6. திருப்பள்ளி முக்கூடல். குருவிராமேஸ்வரம் கோவில், திருவாரூர்

7. காசி விஸ்வநாதர்

8. பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்

9. சொரிமுத்து அய்யனார் கோவில்

10. பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்

புதன், 5 நவம்பர், 2025

தமிழ் சினிமாவில் தமிழினத்தின் வரலாறு மறைமுகமாக.

நாதன் என்றால் நா+ தன் நாவை தன்னிடம் கொண்டவன் அதாவது முதல் முதலில் பேசியவன் என்ற பொருள். சிவனே முதல் முதலில் மக்களை பேச வைத்தவர் என்பதால் அவரே பேச்சியப்பன் மற்றும் நாதன் என்ற பெயருக்கு சொந்தக்காரர். சிவனை வழிபட்டவர்களுக்கும் நாதன் என்ற பெயர் வரும். 

இரவு வானத்தை ஆராய்ச்சி செய்ததால் 
ரா + வாணன் = ராவணன்
 என்ற பெயர் வந்தது. ராவணன் ஒரு விண் ஆராய்ச்சி சித்தர். தமிழில் விசும்பு என்பதற்கு வானம் , விண் என்ற பொருள் உள்ளது. சிவனை வணங்கிய ராவணன் தான்  விசுவநாதன்.

காசி விஸ்வநாதன் என்பது ராவணனை குறிக்கிறது ராமேஸ்வரத்தை ராமனின் இடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் இரண்டு இடத்தையும் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மறைமுகமாக. எல்லாவற்றிலும் ராமனையும் ராவணனையும் இணைத்து விளையாடுவது யூதர்களின் பழக்கம். 

ராவணன் இசையில் தேர்ந்தவன் , சினிமா துறையிலும் ராவணன் ராமனை குறிப்பதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற இணையரை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒன்றாக பணியாற்றி பின்பு பிரிந்து விட்டதாக சொல்கிறார்கள். ராவணனும் ராமனும் ஒன்றாக இருக்க முடியாது அல்லவா அதனால் தான் இந்த சடங்கு போல. விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற ஒரு படத்தில் இருவருக்கும் ஒரே பெண்ணையே மனைவி போல காட்டுவார்கள்.

தமிழ் திரைப்படங்களில் பல படங்களில் ராவணன் ராமனை மறைமுகமாக கதாபாத்திரமாக மாற்றி கதை சொல்லி இருப்பார்கள். அதில் ஒரு படம் தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ் இதில் ராஜாராம் அதாவது ராமனாக கமலும் விஸ்வநாதன் என்று வில்லனாக பிரகாஷ்ராஜும் நடித்திருப்பார்கள். கமலுக்கு ஜோடியான சினேகாவின் பெயர் ஜானகி அதாவது சீதை. 

இந்தப் படத்தில் ராமன் ஒரு படிக்காதவன் மேலும் காட்டில் வழிபறி செய்துதான் பிழைத்துக் கொண்டிருந்தான் என்பதை மறைமுகமாக சொல்லி  இருக்கிறார்கள். வட்டி என்ற பெயருடன் வரும் பிரபு கதாபாத்திரம் லட்சுமணனை குறிக்கலாம் கருணாஸ் கதாபாத்திரம் அனுமனை குறிக்கலாம் குரங்குகள் உயரத்தில் வாழும் இந்த படத்தில் அதற்கு எதிராக கருணாஸ் உயரத்தை கண்டால் பயப்படுவார். மார்க்கபந்து விபிடணனை குறிக்கலாம். 

டாக்டர் விசுவநாதன் என்று சொல்வதன் மூலம் ராவணன் தன் காலத்தில் மிகப்பெரிய மருத்துவராக இருந்தார் என்று புரிகிறது. இதில் காதல் தோல்வியில் விஷத்தை குடித்த கதாபாத்திரத்திற்கு நீலகண்டன் என்று சிவனின் பெயரை வைத்து சிவனை இழிவு படுத்தி இருப்பார்கள். 

வேட்டையாடு விளையாடு படமும்  இராமாயண கதை தான். ஆடு என்பது ராமனை குறிக்கிறது காட்டில் வந்தவர்களை எல்லாம் வேட்டையாடி விளையாடி இருக்கிறார்கள். கமலின் பெயர் ராகவன் அதாவது ராமனின் பெயர். அமுதன் இளமாறன் என்ற இரட்டையர்கள் ராவண இந்திரர்களை குறிக்கலாம். இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் கமல் ராமனாகவும் ஒரு சில காட்சிகளில் ராவணனாகவும் மாறுவது போல கதை அமைத்திருக்கிறார்கள். வில்லன்களை மருத்துவர்களாக காட்டி இருக்கிறார்கள் அதனால் ராவண இந்திரன் மிகப்பெரிய மருத்துவர்கள் என்பது புரிகிறது.

வில்லன்கள் காட்டில் பெண்களை வேட்டையாடுவது ராம லட்சுமணனை குறிக்கிறது. ராம லக்ஷ்மணன் இடையில் ஓரின சேர்க்கையும் இருந்தது என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். 
இதில் சீதையாக வரும் ஜோதிகாவை மண்ணில் புதைப்பார்கள் ராமாயணத்திலும் கடைசியில் சீதை பூமாதேவியுடன் மண்ணுக்கே சென்று விடுவார் அதே போல சீதை பிறக்கும்போது மண்ணிலிருந்து வந்ததாகத்தான் காட்டுவார்கள். ஏனென்றால் சீதை என்பது ஒரு நிலம் என்பதை மறைமுகமாக குறிக்க. 
நானே வருவேன் என்ற தனுஷ் படத்தில் தனுஷ் கதாபாத்திரம் ராமனை தான் குறிக்கிறது அதிலும் காட்டில் வருபவர்களை கொடூரமாக கொள்ளும் மனநோயாளி போல தான் தனுஷை காட்டி இருப்பார்கள். இவர்கள் திரும்பத் திரும்ப ராமன் ஒரு கொலைகாரன் மனநோயாளி என்பதை தான் படங்களின் மறைமுகமாக பதிவு செய்கிறார்கள். இந்தப் படத்தின்  தேதி செப்டம்பர் 29 அதாவது ஒன்பதாவது மாதம் 29 என்பது 2+9=11 குறிக்கிறது. அதாவது 9/11

இதைப் பற்றி சுசித்ரா ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.
https://youtu.be/jGAt7jkqKPU?si=txxfazZE_Gs9xkg1

மேலும் பொல்லாதவன் படிக்காதவன் படங்கள் கூட ராமனை தான் மறைமுகமாக குறிக்கிறது. ராமனின் எண் 9 ( ராம நவமி) திருநங்கைகளை குறிக்கிறது எனவே ராமன் ஒரு திருநங்கையாக இருந்திருக்க வேண்டும்.

உண்மைக்கு மாறாக ராமனை ஏதோ பெரிய கதாநாயகன் போல சித்தரித்து பொய்யான ராமாயண கதையை எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் மறைமுகமாக ராமனின் உண்மை வரலாற்றை திரைப்படங்களில் காட்டுகிறார்கள் இந்த மன நோயாளிகள்.

 தமிழர் மெய்யியல் ஆசிவகம் (Facebook)

வெள்ளி, 3 அக்டோபர், 2025

ஆரிய திருட்டு

ஆரிய திருட்டு

1. வண்ண ஆசிரமம் வர்ணாசிரமம் ஆன கதை

கசார் பகுதியில் இருந்து வந்த யூதர்கள் ஆகிய ஆரியர்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த ஆடு மாடுகளை மேய்த்து கொண்டிருந்த ஒரு நாடோடிக் கூட்டம். சிந்துவெளிப் பகுதி வரை தமிழர்கள் மிகச்சிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது.  
சிந்துவெளிப் பகுதியில் நீரை தேக்கி வைத்த அணைகளை உடைத்து ஊருக்குள் வெள்ளத்தை ஏற்படுத்தி  அப்பாவித் தமிழர்களை கொன்று சிந்துவெளி நாகரிகத்தை முதலில்  அழித்தார்கள். இதற்கான சான்று பிராமணர் நேரு எழுதிய டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற புத்தகத்திலேயே உள்ளது.
 https://youtu.be/950-awkxBE4
சமீபத்தில் எடுக்கப்பட்ட இந்தி திரைப்படமான மொஹஜந்தாரோவிலும் இது மறைமுகமாக காட்டப்பட்டுள்ளது. தாடகை வதம் என்ற ராமாயணக் கதையிலும் இது மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் வரலாற்றில் இவர்கள் இந்தியாவுக்குள் வந்த காலமும் சிந்துவெளி நாகரீகம் அழிந்த காலமும் ஒன்றாக உள்ளது.

தமிழர்களின் ஆதி மெய்யியல் ஆசீவகம் என்ற  சமணம். ஆசீவகம் என்பது ஏழு வண்ண கோட்பாடுகள் கொண்ட ஒரு சமயம். அவை கருப்பு, நீலம் ,பச்சை ,சிவப்பு ,மஞ்சள், வெண்மை, நீர் வண்ணம். ஏழு கன்னி வழிபாடு என்பதும் ஆசீவக வழிபாடே. 
ஆசீவக சித்தர்கள் தாங்கள் உறங்கும் இடமான பள்ளிகளில் பாடம்  சொல்லிக் கொடுத்தார்கள். மொத்தம் 18 ஆண்டுகள் ஒவ்வொரு மூன்று ஆண்டு படிப்புக்கும் ஒரு நிறம். ஆறு நிலை கடந்த பிறகு ஏழாவது நிலை என்பது நீர்வண்ண நிலையான நிர்வாண நிலை அதை துறவரம் மேற்கொள்பவர்கள் மட்டும் மேற்கொண்டனர் . மற்றவர்கள் தாங்கள் கற்ற கல்வி மூலம் தொழில் செய்து பிழைத்து வந்தனர். இந்த வண்ண உடை வழமை இன்றும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களிடம் காணப்படுகிறது. அங்குள்ள 18 படிகளும் 18 ஆண்டு படிப்பை குறிக்கிறது. 

வண்ண ஆசிரமம் நடத்திய சித்தர்களை வதை செய்து  சித்தர் + வதை - சித்திரவதை செய்து கொன்று வர்ணாசிரமம் என்ற அநீதியை புகுத்தி மக்களை பிரித்து ஆண்டனர் யூத பிராமணர்கள். வண்ணம் என்ற சொல்லையே ஆரியர்கள் வர்ணம் என்றே ஒலித்தனர்.

2. மனுநீதி சோழனும் மனுதர்மமும்.

பண்டைய தமிழகத்தின் சோழ வம்சத்தில் பிறந்த மன்னர், எல்லாளன் என்னும் இயற்பெயரை உடைய மனுநீதி சோழன்.இவர் திருவாரூரை தலை நகராகக் கொண்டு இலங்கையை உள்ளடக்கிய அப்போதைய சோழ சாம்ராஜ்யத்தை 44 ஆண்டுகள்(205 கி. மு -165 கி. மு ) ஆட்சி செய்தவர் . அவர் நீதி தவறாது வாழ்ந்தார் என்பதே நமக்கு வரலாறு உணர்த்தும் உண்மை . 
நீதிகேட்ட பசுவிற்காக தன் மகனையே தேர்க்காலில் இட்டு நீதியை நிலை நாட்டியவர் என்று சொல்லப்படுபவர்.

தமிழர்களில் யார் நீதிக்கு பெயர் பெற்றவரோ அவரின்  பெயராலேயே மனுநீதி தர்மம் என்ற ஒரு அநீதியை ஏற்படுத்தி மக்களை பிரித்து ஆண்டனர் ஆரியர்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் கிபி நான்காம் நூற்றாண்டில் தான் யூத பிராமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது வடக்கே குப்தப் பேரரசு தெற்கே களப்பிரர்கள் ஆட்சி இந்த காலகட்டத்தை பயன்படுத்தித்தான் வரலாற்றை அழித்து அதாவது புத்தகங்களை அழித்து தங்கள் புளுகுனி புத்தகங்களை எழுதினார்கள். பொய் புராணக்கதைகளை எழுதினார்கள்.

3. சமஸ்கிருதம்

வட இந்திய தமிழ் மொழி பிராகிருதம், பாலி என்ற மொழிகளாக  திரிந்தது. புத்தர் சொன்ன பொன்மொழிகளை நூலாக எழுதுவதற்கு இந்த கொச்சை மொழிகள் பயன்படவில்லை அதனால் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் மொழியை செம்மை ஆக்கினர். அதுதான்  செங்கதை என்று அழைக்கப்பட்ட சான்ஸ்கிரிட். கதை என்றால் பேசுவது சமைக்கப்பட்ட மொழி என்பதால் சமை கதை என்று அழைக்கப்பட்டு அதுவே பின்பு சமஸ்கிரதம் என்று மாறியது. 

கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை இந்தியா முழுவதும் தமிழர்களின் ஆட்சியே நடந்தது. முதன்முறையாக யூத பிராமணன் சாணக்கியனின் வழிகாட்டுதலில் மௌரிய பேரரசு சந்திரகுப்தன் தலைமையில் தமிழர்களான நந்த பேரரசை  வீழ்த்தினான். அன்றிலிருந்து யூத பிராமணர்களின் கை ஓங்கியது. பிந்துசாரணுக்கும் அவனது பிராமண வைபாட்டிக்கும் பிறந்தவன் அசோகன். பதவிக்கு வரவேண்டிய உண்மையான இளவரசனை சூழ்ச்சியால் கொன்று அசோகன் அரசனானான். 

அசோகன் காலத்தில் ஆசீவகம் மிகக் கொடூரமாக அழிக்கப்பட்டது. தென்னிந்தியா அப்போது தமிழர்கள் வசம் இருந்தது அதனால் ஆசீவகத் துறவிகள் தென்னிந்தியா ஆன கர்நாடகத்தில் வந்து சரவணபெலகுளா வில் தங்கினார்கள். சமண வெள்ளைக் குளம் என்பதுதான் சரவணபெலகுளா என்று மாறி இருக்கிறது.

கடைசி மவுரிய அரசனை அவனது தளபதியான புஷ்யமித்ர சுங்கன் என்ற பிராமணன் கொன்று ஆட்சியை கைப்பற்றினான். அது தான் முதல் முறையாக பிராமணனின் நேரடிக் கட்டுப்பாட்டில் வட இந்தியா வந்தது. அந்தக் காலகட்டத்தில் புத்த துறவிகளை மிக கொடூரமாக கொன்று தீர்த்தனர் அவர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்களிடமிருந்து கைப்பற்றினர். புத்தகம் எழுத உருவாக்கப்பட்ட மொழி என்பதால் தான் அது இன்றுவரை பேச்சு வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை அது யாருக்கும் தாய்மொழியும் இல்லை. ஆரியர்களின் பயன்பாட்டில் அந்த மொழி சிதைந்து மேலும் கொச்சையாக மாறியது. அந்த மொழி மிகவும் பழமையானது என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. அதற்கு எந்தவித தொல்பொருள் ஆதாரமும் இல்லை. இந்த சமஸ்கிருதத்தை தமிழோடு கலந்து பல மொழிகளை உருவாக்கி இன்று தமிழர்களை ஒரு சிறிய எல்லைக்குள் அடக்கி விட்டனர்.

4. பூணூல் திருட்டு

மக்கள் தங்களுடைய வழிகாட்டுதலுக்கு சித்தர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்றனர் சித்தர்களிடம் ஆலோசனை பெற்றனர். சித்தர்கள் அவர்களுக்கு உரிய தீர்வுகளை தந்தனர். 
ஆசு - உடனடி
ஈவு - தீர்வு
அகம் - இடம்
மக்களுக்கு உடனடி தீர்வு கிடைத்த இடம் ஆசு+ ஈவு+ அகம் - ஆசீவகம்.

சித்தர்கள் மருத்துவமும் கல்வியையும் போதித்தனர். கல்வியை  முடித்தவர்கள் ஆசாரி என்றழைக்கப்பட்டனர். ஆசீவக பள்ளியில் படித்ததால் ஆசு + அறி = ஆசாரி. ஆசு + அறியர் = ஆசிரியர் ஆனார்கள். 

கல்வி கற்றதற்கு ஆதாரமாக பூணூல் அணிவிக்கப்பட்டது. ஆசாரி களுக்கு சமூகத்தில் உள்ள உயர்ந்த மதிப்பை பார்த்து  அந்தப் பூணூலையும் தமதாக்கிக் கொண்டனர் யூத பிராமணர்.

5. குடுமி திருட்டு

அறுவை சிகிச்சை மருத்துவம் செய்யும் குலமாக அம்பட்டர் குலம் இருந்தது. சிகிச்சைக்கு முன்பு காயம் பட்ட இடத்தில் உள்ள முடிகளை கத்தியை கொண்டு நீக்கினர். இவர்கள் தங்களுடைய முடி தங்களுடைய தொழிலுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக சிரைத்துக்கொண்டு பின்னால் மட்டும் குடுமி போட்டுக்கொண்டனர். கருமையான முடி பின் மண்டையில் வட்டவடிவில் வெட்டி கொண்டதால் அல் + வட்டம் - அல்வட்டர் - அம்பட்டர் ஆனார்கள். ஆரியர்களின் முடி கருமையாக அப்போது இல்லாததால் வெறும் பட்டர் ( பட் ) என்று தங்களை அழைத்துக்கொண்டனர். இவர்களிடம் மருத்துவத்தையும் குடிமியையும் ஆட்டை போட்டுக்கொண்டனர் யூத பிராமணர்கள் இவர்களை வெறும் முடி திருத்துபவர்கள் ஆக தரம் தாழ்த்தியும் விட்டனர்.

6. பிராமணர்கள், அந்தனர், பார்ப்பனர், ஐயர் என்ற  பெயர்கள் திருட்டு

நீர்வண்ண நிலையான நிர்வாண நிலை அதாவது அம்மண நிலையை அடைந்த துறவிகளை அமணர் என்று அழைத்து அதுவே பின்பு சமணர் என்று மாறியது.
 பேர் அமணர் - பிராமணர் என்று மாறியது. அவர்கள் ஊரின் எல்லையில் வசித்தனர் அந்தம் என்றால் எல்லை என்று பொருள் அதனால் துறவிகளே பிராமணர் ,அந்தணர், ஐயர் என்று அழைக்கப்பட்டனர். 

ஓலைச்சுவடிகளை பார்த்து பிரதி எடுப்பவர்கள் பார்ப்பனர் என்று அழைக்கப்பட்டனர்.

சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த அனைவரின் அடையாளங்களையும் திருடினர் யூத பிராமணர்கள்.

7. சைவ உணவு திருட்டு

ஆடு மாடு மேய்த்த நாடோடிக் கூட்டம் ஆன ஆரியர்கள் முதலில் அசைவ உணவை தான் உண்டு வந்தனர். வேளாளர்களும் துறவிகளும் சைவ உணவை உண்டு வந்தனர் அவர்களுக்கு சமுதாயத்தில் உள்ள மதிப்பை பார்த்து தங்களுடைய அசைவ உணவு பழக்கத்தை விட்டனர் யூத பிராமணர்கள்.

8. கலைகள் இலக்கியங்கள் திருட்டு

நாடோடி கூட்டத்திற்கு நாகரீகம் உருவாக்க தெரியாது. ஓரிடத்தில் சூழ்நிலை சரியில்லை என்றால் உடனே வேறு ஒரு இடத்திற்கு மாறிவிடுவார்கள். ஆனால் வேளாண்மை செய்து ஒரே இடத்தில் வாழ்ந்து வந்த தமிழர்கள் பல சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வாழ்ந்து பழகியதால் கலையையும் இலக்கியத்தையும் உருவாக்கினார்கள். நடனம், இசை போன்ற கலைகள் எல்லாம் யூத பிராமணர்கள் தமிழர்களிடமிருந்து திருடியது தான். மேலும் தமிழ் இலக்கியங்களை அழித்து சமஸ்கிருத மொழியில் மொழிமாற்றம் செய்து தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஆயுள் வேதம் என்ற மருத்துவ நூலை ஆயுர்வேதம் ஆக மாற்றி உள்ளனர். சிற்பம் ,தச்சு வேலை , பொன் நகை செய்தல் போன்றவை அவர்களுக்கு வராததால் இன்றும் நம் தமிழர்களே அதை செய்கிறார்கள் .

9. சின்னம் திருட்டு

தாமரையும் ,யானையும் தமிழர்களின் மெய்யியல் ஆன ஆசிவகதின் முக்கிய சின்னங்கள். இன்று தாமரையை தங்கள் கட்சியின் சின்னமாக யூத பிராமணர்களின் கட்சியான பாரதிய ஜனதா வைத்துள்ளது. அதனால் தமிழர்களையும் தாமரைக்கு எதிராக பேச வைக்கிறார்கள்.

10. சமணப் பாரம்பரியத்தை திருட உருவாக்கப்பட்ட ஜெயன சமயம்.

சமண வாழ்விடங்கள் அதாவது சித்தர்கள் வாழ்ந்த இடங்கள் இந்தியா முழுவதுமே இருக்கிறது குறிப்பாக தமிழகத்தில் நிறைய உள்ளது. அவற்றை பற்றி ஆராய்ந்து பிற்கால தமிழர்கள் தங்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள கூடாது என்பதற்காக அவற்றை சொந்தம் கொண்டாட ஜெயனம் என்ற போலி சமயத்தை ஆரியர்கள் உருவாக்கியுள்ளனர். மார்வாடிகள் என்று அழைக்கப்படுபவர்கள் யூதர்களே அவர்களும் யூத பிராமணர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்களே.

இன்று அரசியல், நீதித் துறை, நிர்வாகம் ஏன் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் ஐஐடி போன்ற தொழில்நுட்ப கல்லூரிகள் இவையெல்லாமே யூத பிராமணர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது, அவர்களே பெரும்பான்மையானவர்கள் ஆக அங்கே இருக்கிறார்கள். 

தமிழர்கள் அதிகாரம் அற்றவர்களாக அடிமைகளாக இருக்கிறார்கள் தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். இதிலிருந்து தமிழர்கள் விழித்தெழ வேண்டும்.

- நன்றி தமிழ் சிந்தனையாளர் பேரவை.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

108 சிவன் கோயில் தரிசன பலன்கள்

#108_பிரபல_சிவன் #கோயில்கள்_தரிசன #பலன்கள்  
1 #திருகுடந்தை #ஊழ்வினை_பாவம் #விலக
2 திருச்சிராப்பள்ளி வினை அகல
3 திருநள்ளாறு கஷ்டங்கள் விலக
4 திருவிடைமருதூர் மனநோய் விலக
5 திருவாவடுதுறை ஞானம் பெற
6 திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க
7 திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக
8 திருத்தில்லை முக்தி வேண்ட
9 திருநாவலூர் மரண பயம் விலக
10 திருவாரூர் குல சாபம் விலக
11 திருநாகை (நாகப்பட்டினம் ) சர்ப்ப தோஷம் விலக
12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) முக்தி வேண்ட
13 திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க
14 திருநெல்லிக்கா முன்வினை விலக
15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய
16 திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக
17 திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக
18 திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக
19 திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட
20 திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
21 திருசிக்கல் ( சிக்கல் ) துணிவு கிடைக்க
22 திருச்செங்காட்டங்குடி கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக
23 திருக்கண்டீச்சுரம் நோய் விலக , தீராத புண் ஆற
24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் ) குடும்ப கவலை விலக
25 திருக்கருவேலி ( கருவேலி ) குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க
26 திருவழுந்தூர் ( தேரெழுத்தூர் ) முன் ஜென்ம பாவம் விலக
27 திருச்சத்திமுற்றம் மண வாழ்க்கை கிடைக்க
28 திருப்பராய்துறை ( திருச்சி ) கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற
29 திருநெடுங்களம் ( திருச்சி ) தீரா துயரம் தீர ( இடர் களைய )
30 திருவெறும்பூர் ( திருச்சி ) அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற
31 திருப்பைஞ்ஞீலி ( திருச்சி ) யம பயம் விலக
32 திருவையாறு அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
33 திருவைகாவூர் வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க
34 திருக்கஞ்சனூர் திருமண தோஷம் விலக
35 திருமங்கலக்குடி (சூரியனார் கோவில்) குழந்தை பாக்கியம் பெற
36 திருமணஞ்சேரி திருமண தோஷம் விலக
37 திருமுல்லைவாயில் சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக
38 திருவெண்காடு ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை
39 திருநெல்வேலி பிராமண குற்றம் விலக
40 திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் முக்தி வேண்ட
41 திருவாலவாய் ( மதுரை ) தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட
42 திருப்பரங்குன்றம் ( மதுரை ) வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட
43 திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் தீரா பாவம் விலக
44 திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
45 திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர் ) தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
46 திருவக்கரை செய்வினை தோஷம் விலக
47 திருவேற்காடு வாணிப பாவம் விலக
48 திருமயிலாப்பூர் மூன்று தலைமுறை தோஷம் விலக
49 திருஅரசிலி ( ஒழுந்தியாம்பட்டு ) காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
50 திருவாலங்காடு வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக
51 திருவேட்டிபுரம் ( செய்யாறு ) ஞானம் கிடைக்க
52 திருப்பனங்காடு பந்த பாசத்தில் இருந்து விலக
53 திருவூறால் ( தக்கோலம் ) உயிர்வதை செய்த பாவம் விலக
54 திருப்பாச்சூர் குடும்ப கவலைகள் நீங்க
55 திருவெண்ணைநல்லூர் பித்ரு தோஷம் விலக
56 திருவதிகை நல் மனைவி அமைய
57 திருவாண்டார் கோவில் முக்தி வேண்ட
58 திருமுது குன்றம் ( விருத்தாசலம் ) தீரா பாவம் விலக
59 திருக்கருவூர் ( கரூர் ) பசுவதை செய்வதன் வழிபட
60 திருப்பாண்டிக் ( கொடுமுடி ) பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக
61 திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட
62 திருகோகர்ணம் ( கர்நாடகம் ) தேவ தோஷம் விலக
63 திருப்புகழூர் பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க
64 திருத்தோணிபுரம் ( சீர்காழி ) குல சாபம் நீங்க
65 திருவைத்தீஸ்வரன் கோவில் பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக
66 திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு ) கர்வத்தால் குரு துரோகம்
67 திருப்பனந்தாள் பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக
68 திருப்புறம்பயம் மரண பயம் விலக
69 திருநெய்த்தானம் மோட்ஷம் வேண்ட
70 திருவானைக்காவல் கோவில் கர்மவினை அகல
71 திருவேதிக்குடி தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக
72 திருவலஞ்சுழி வறுமை அகல
73 திருநாகேஸ்வரம் ஸர்ப்ப ஸாபம் விலக
74 திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் ) நவகிரஹ தோஷம் விலக
75 திருநல்லம் (கோனேரிராஜபுரம்) வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக
76 திருத்தெளிச்சேரி ( காரைக்கால் ) சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர
77 திருசெம்பெரின்பள்ளி வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க
78 திருத்தலச்சங்காடு ( தலைச்செங்காடு ) அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக
79 திருவன்னியூர் ( அன்னூர் ) சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட
80 திருநன்னலம் ( நன்னிலம் ) ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட
81 திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் ) கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக
82 திருமருகல் கணவன் மனைவி அன்புடன் வாழ
83 திருச்சிக்கல் பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட
84 திருச்சேறை இல்லறம் மேலும் சிறக்க
85 திருக்கோளிலி ( திருக்குவளை ) நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட
86 திருவாய்மூர் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
87 திருநெல்லிக்கா கல்வி மேன்மை அடைய
88 திருவெண்டுறை ( வண்டுறை ) வறுமையிலிருந்து விலக
89 திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குலம் ) வினைகள் விலக
90 திருஆலங்குடி புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற
91 கொட்டாரம் அமைதி பெற
92 திட்டை சந்திர தோஷம் விலக
93 பசுபதி கோவில் இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட
94 கொட்டையூர் செய்த பாவங்கள் வேயொரு வீழ
95 ஓமாம்புலியூர் சனி தோஷம் விலக
96 தருமபுரம் சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக
97 மயிலாடுதுறை அனைத்து பாவங்களும் விட்டோட
98 உத்தரகோச மங்கை கர்மவினைகள் அகலும்.
99 இராமேஸ்வரம் பித்ரு தோஷம் விலக
100 காளையர்கோவில் பிறவி பயன் கிடைக்க
101 பெண்ணாடம் ஊழ்வினை தோஷம் அகல
102 இராஜேந்திரப்பட்டினம் கர்மவினை அகல
103 அவினாசியப்பர் ஏழு தலைமுறை பாவங்கள் விலக
104 குரங்கினில் முட்டம் நினைத்த காரியம் நடக்க
105 பவானி பித்ரு தோஷம் போக்க
106 ஆச்சான்புரம் மண வாழ்க்கை சிறக்க
107 ஆடுதுறை திருஷ்டிசுபம். தோஷம் விலக
108 சங்கரன்கோவில் ஸர்ப்ப தோஷம் விலக. 
சுபம்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

பெண்களுக்கான பதிவு

பெண்கள் கண்டிப்பா படிங்க...

வண்டி பிரேக் டவுன் ஆனா மெக்கானிக் கடை தேடுவோம் 

அதுமாதிரி தான் எப்ப அடைக்கும் எப்படி அடைக்கும் தெரியாது 
Non communication disease
சொல்லாம கொ(ல் )ள்ளா ம வர வியாதி 

🌷 பூ வ பெண்ண உவமையா சொல்ல காரணம்...
இயற்கை படைப்பு பேராற்றல் பெண் ஓர் தேவதை...

அதே பெண்ணை பேய் என்றும் காட்டேரி என்று ஏன் கூறுகிறார்கள்...

மனம் தான் காரணம் 
நம் உடலில் நோய் என்னும் சாத்தான் உள்ளே வர...

ஆசை பேராசை பொறாமை கோவம் வஞ்சம் 

உயிர் ஆற்றலை சிதைக்கும் உணவு பாஸ்ட்புட் fried ரைஸ் மைதா பரோட்டா  குறிப்பா 

பிராய்லர் முட்ட ஹாப்ஃஆயில் ஆம்லெட்
பிராய்லர் சிக்கன் 65 fried சிக்கன் தந்துரி
, 5 வெள்ளை (1-பட்டை தீட்டுன முனை உடைஞ்ச வெள்ளை அரிசி சக்க வயித்த அடைக்க மட்டும் 

2.பால் ஜெற்சி மாடு அது பன்றியும் நாட்டு மாடும் கிராஸ் செய்த ஒரு உயிரினம் பன்றி போல -லிட்டர் லிட்டர் ஆ வர 

3.சக்கர pure white சாக்கடை குப்பையை எடுக்க காஸ்டிக் சோடா னு ஒன்னு போடுவாங்க வேணா டீ கடைல சக்கர மூட்டைல எழுதி இருக்கும் பார்த்து confirm பண்ணுங்க
4.உப்பு இங்கதான் மாட்டுறதே பிரீபிலோ வா வாங்கு 
கல் உப்பு கரஞ்சுடுது
போரொஷ் என்னும் படிகாரம் இன்னும் சில கலந்தா கெட்டியா இருக்கும், அதான் உடம்புல கட்டி வரது...

Last but not least 
5.அல்லோலோபதி வெள்ளை உப்பு மாத்திரை 
-
சடக்குனு போய் படக்குனு போட்ட்டா  வலி நின்றும் மெடிக்கல் ல 
அப்புறம் 
பைலை தூக்கிட்டு லோ லோ பத்து ஸ்பெஷலிஸ்ட், 4 பேரு, ஆட்டோ கார் அப்பொய்ன்மெண்ட் தான் பல அடுக்கு மாடி ஆஸ்பத்திரி தான்,சாதாரண ஆஸ்பத்திரி ல யாராச்சும் பாப்பாங்களா கௌரவம் 🧐 )

சோலி 🤪 

குழந்தை பெண்கள் ரோட்டுக்கடை காளான் என்னும் காலன் 
பழைய உணவு
பிரிட்ஜ் (குப்பைதொட்டி )ல வச்சு சாப்பிடும் பழக்கம் 
இது 90%  வீட்லயும் சிங்க் ல பாத்திரம் 
சாக்கடை என்னும் கொடிய கிருமி உருவாகுவது 
இங்கேதான் 

நம் கண்ணுக்கு தெரியாது 
ஆனால் 
ஒரு நோய் எதனால வருது னு பல்வேறு ஆராய்ச்சி...
இதுலாம் வேற்று கிரகம் வெளிநாட்டு ல இல்லை 

1stகமெண்ட் பாருங்க 
எத்தனை லட்சம் பேரு 
இந்தியால
தமிழ்நாட்டுல 

தீர்வு 
நாம மாறுநா தான் உண்டு 

விரலி மஞ்சள் போட்டு பொம்பள புள்ளைங்க குளிங்க 

திலர்த்த வர்மம் என்னும் நெற்றி பொட்டு ல குங்குமம் (சுத்தமான) வைங்க 
வேர் பலப்படும்...

நாப்கின் தயவு செய்து பயன்படுத்தாதீங்க 
(காசு கூட போனாலும் ஆர்கானிக் நாப்கின் நம்ம மரபு வழியில் பலர் முன்னெடுக்குறாங்க 
Mohammed Abuthahir 
Shafa naphkin   (*ஸஃபா மூலிகை பருத்தி நாப்கின்கள்* )அத பயன்படுத்துங்கள்... விளம்பரம் அல்ல...
ஆர்கானிக்  பக்கத்துல என்ன கிடைக்குமோ பயன்படுத்துங்கள்...

விழிப்புணர்வு பதிவு தொடரும் 

தாய்மார்களே குழந்தைகளே

தடுப்போம் 
கர்ப்பப்பை புற்றுநோய்
 வர்ம மருத்துவர் கிஷோர் அவர்களின் பதிவு 17/8/2025

புதன், 13 ஆகஸ்ட், 2025

கொங்கு வட்டார மொழிகள்

நமது கொங்கு வட்டார வழக்கிலிருந்து மறைந்து கொண்டிருக்கும் சில சொற்களை இங்கு நினைவு கூர்வோம்:

தொறப்புக்குச்சி
பொடக்காலி
அண்ணாங்கால்
கொடாப்பு
உருவாஞ்சுருக்கு
பால் பீய்ச்சுதல்
தயிர் சிலுப்புதல்
அட்டாலி , 
சால்பரி
மக்கிலி (மக்கிரி )
கொத்து
மொளக்குச்சி
சாளை
கடவுப்படல்
தடுக்கு
தட்டக்கூடை
வால்கவுறு
கவலை(ளை)யோட்டுதல்
தரம்பு கட்டுதல்
கொடுவாள்
கருக்கருவாள்
களத்துமேடு
பாம்பேரி
பெருக்கான்
முட்டுவழி
தொக்கடா
வெள்ளதாரை
தரம்புகட்டை
ஒண்டுகவை
மொகரப்பூட்டு
மரக்கால்
தும்மி
சாடு
குடுதாழி
ராக்கூடை
வாக்கூடை
தார்க்கோல்
மொளக்குச்சி
நாச்சோறு
ஒதுக்குபடல்

பொங்கச் சருவம்
தூக்குப் போசி...
சப்பாரம்
மாடகுழி ( விளக்கு ஏற்றுமிடம்)
கடவு( நுழைவு வாயில்)
ரஸ்தா ( பாதை)
கொறங்காடு
அம்புளி ( சோளத்தை இடித்து ஊற வைத்து செக்குல ஆட்டி இரவு புளிக்க வைத்து காலையில் காச்சப்படும் கூழ்)
ஆணம் (கொழம்பு )
கற சோறு
மொசல் ( முயல்)
வைக்கப்பில் (வைக்கோல்புள்ளு)
சோளத்தட்டு (தீவனம்)
மொளவு (கறிக்குழம்புக்கு சேர்க்கும் மசாலா)
மொறம்.
மக்கரி
தலமாறு (ஏரு திரும்பும் முனை)

அங்கராக்கு ...

தொவயல் (கல்லத் தொ வயல்)

சும்மாடு
திருவ
கரித்துணி
ஊரப்பானை
சருவம்
அண்ணாக்கவுரு
மங்கிலியம்
தட்டம்
கவுட்டி
கவ்வை கோலு (குச்சி)
அணப்பு
பொலி
சலதாரை
பொறக்கடை
பட்டியாளு நேரம்
கோழி கூப்புட
பொழுதோட
வெடியால
பழையசோத்து நேரம்
இரணிய நேரம்
சைனம்
மொதபஸ்
கடைசி வண்டி
பெளசரு (கார்)
சவ்வாரி
நொங்குவண்டி
பல்லுக்குச்சி
ஊறத்தண்ணி
புழுதண்ணி
மத்துக்குச்சி
மத்துக்கோல்
தெரட்டி
மொறச்சீரு
குச்சு
ஒலக்கை
ஒரலு
மேவரம்
கெழவரம்
தெக்கால
வடக்கால
பக்காபடி
முத்திரைப்படி
வள்ளம்
ஒலக்கு
தூத்துக்கூடை
வெதப்பொட்டி
வெஞ்சனம்
மேத்திண்ணை
திண்டு
நட்டடுப்புச் சாம்பல்
இட்டாலி
முக்கிட்டாலி
சீடை கட்டுறது
எறவுத் தண்ணி
கோடாலி கொண்டை
பின் கொசுவம்
அடுக்கு
ஆப்பை
உரி
கொட்டம்
தொண்டுப்பட்டி
மொடகாடு
வாரிக்குழி
ஒரம்பு
கடையோடறது
பொறவு
அக்கட்டால
அங்கிட்டு
இங்கிட்டு
காத்தாட
மேம்போக்கு

சாடு கவை
ஒண்டுக்கட்டை
கம்பரக்கத்தி
சீவக்கட்டை
மேத்திண்ணை
எரவானம்(தாவாரம்)
ரக்கிலி(கீரை)
கொக்கிச் சல்லை
ஒட்டுக் கூடை
கன்னித் தும்பு
தலை கயிறு
வடம்
வால் கயிறு
பாதாள சோதி
தார்க்கறுது
மயிறு கோதி
கோனூசி
அஸ்க்கா
பாம்பேரி
கொடுவாப் பூன்
தாம்புக் கன்னி
கொட்டாப்புடி
மஞ்சி
அவினி
கருக்காம்பட்டை
பனங்கறுக்கு
தொரட்டி
தேங்காத் தொட்டி
நாச்சோத்துக் கும்பம்
உரிக்காக் கொடி
கத்தக்கொடி
முஷ்டக் கொடி
தாதரா
பன்னை
குமுட்டி
தொய்யல்
ஒருக்கட்டத் தொய்யல்
தாருமுள்
தார்க்கருது
மயிருகோதி
மேத்திண்ணை.
எரவாரம்

தேகுசா
பொங்கச் சருவம்
சால்பானை
படிக்கம்
ஆரீக்கல்
ஒல்லு
ஒலக்கை
செக்கு
கொக்கிச்சல்லை
தொண்டுப்பட்டி
கெடாக் குட்டி
பிறவக் குட்டி
காளைக்கன்னு
கெடாரிக் கன்னு.
தொறப்பு
நாதாங்கி

குச்சூடு
மச்சூடு
தொட்டிகட்டு 
தலவாசல்
தட்டுக்காரம்
தாட்சான்
ஈட்டாக்குட்டி
ஒலுப்பட்டி
சொரப்புரடை
தூரி

கூட்டாஞ்சோறு
ராட்டை
ஒடக்கா
கூட்டுச்சாறு
பனங்கா
துலுக்கானி சோளம்
குரங்கு பொகீளை

பக்காப்படி
பட்டணரவை
வேப்பெண்ணை கலயம்
கும்பா
சாவக்குஞ்சு வெடைகுஞ்சு
தொலவு
அத்துவானம்

உக்கரம் சுரேசு முகநூல் பதிவு...

புதன், 6 ஆகஸ்ட், 2025

குடிப்பழக்கம் நல்லதா?

இன்றைய நடைமுறை வாழ்வில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை உணவு குடிநீர் மாதிரி இந்த குடிப்பழக்கம் ஆகிவிட்டது. காலை முதல் இரவு வரை எந்த நேரமும் குடிப்பழக்கத்தை தொடர்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். குடிப்பதனால் உடலில் என்ன நடக்கிறது? மனித உடலுக்குள் போதை பொருட்கள் சென்றவுடன் அவன் நிகழ்காலத்தை மறக்கிறான். அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது மேல் மனதின் செயல்பாடுகளில்தான். அந்த மேல் மனதில் தான் எண்ணம் சிந்தனை இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த மேல் மனதின் பிடியிலிருந்து போதை பொருட்கள் எடுத்துக் கொள்பவன் விடுபடுகிறான். இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மேல் மனமானது போதை பழக்கத்தின் போது நிறுத்தி வைக்கப்படுவதனால் அவன் ஆனந்தத்தில் மிதக்கிறான்.. அறிவியல் பூர்வமாக சொல்வது என்றால் போதை போடும்போது அவனது மூளையில் சுரந்து கொண்டிருக்கும் ரசாயனங்களில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த ரசாயனத்தில் ஏற்படும் மாற்றம் மேல் மனதின் பிடியிலிருந்து விடுவிக்கிறது. அந்த மேல் மனதில் இருந்து விடுபடும் போது அதில் ஒரு சுகம் கிடைக்கிறது அது ஒரு ஆத்மார்த்தமான சுகமாகவே இருக்கும். இதுபோல எண்ணங்களற்ற நிலையை சித்தர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எப்படி? என்றால் தியானப் பயிற்சி செய்வதனால் மேல் மனதின் பிடியில் இருந்து விடுவிக்கலாம். பலவகையான தியான பயிற்சிகள் உள்ளது. அவற்றில் ஏதாவது ஒரு தியானப் பயிற்சியை மேற்கொண்டு வந்தால் மனமற்ற நிலையை பெறலாம். மணமற்ற நிலையை அடையும்போது அது ஒரு பேரானந்தமான நிலையாக இருக்கும். குடிப்பழக்கத்தில் இருப்பவர்கள் இந்த மனமற்ற நிலையை விரும்புவதால் அடிக்கடி அந்த பழக்கத்தை தேடுகிறார்கள். அதுவே தியான பயிற்சி தொடர்ந்து செய்யும்போது அந்த பேரானந்த பரவச நிலை உச்சத்தை அடைகிறது. இறை நிலையை அடைவதற்கும் பயன்படுகிறது.
@selvaraju 
7/08/2025

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

காய்ச்சல் நல்லது

மூட்டு வலியை குணமாக்கும் காய்ச்சல்.
கேன்சரை குணமாக்கும் காய்ச்சல்.
கர்ப்பப்பை கட்டிகளை கரைக்கும் காய்ச்சல்.
மஞ்சள் காமாலையை குணமாக்கும் காய்ச்சல்.
ஆஸ்துமாவை குணமாக்கும் காய்ச்சல்.
கண் பார்வையை அதிகமாக்கும் காய்ச்சல்.
#காய்ச்சலைக்கொண்டாடுவோம்.
#காய்ச்சல்நல்லது.

சனி, 2 ஆகஸ்ட், 2025

விருத்த ஆகாரங்கள்

விருத்த ஆகாரங்கள்.

1.பால் + பன்றி மாமிசம் +காது   செவிடாகலாம், 

2, மாட்டு மாமிசம் + மட்டன் கண்கள் பழுதாகலாம், குரல் மாறும். 

3. பாலும், பழமும்  சரும நோய்கள் ஏற்படலாம்.

4. பாலும் மீனும்
சரும நோய்கள் ஏற்படலாம்.

5. பால் + முள்ளங்கி + கேரட் சரும நோய்கள்  ஏற்படலாம்.

6.பாலும் + ரொட்டி முதலிய அதிக அமில சுரப்பு, வீக்கம், ஜலதோஷம்  சோகை முதலியன.

7. பாலும், ஆல்கஹாலும்
உயர் ரத்த அழுத்தம்.

8. மீனும் ஆல்கஹாலும் தோல் வியாதிகள். 

9.கோழி இறைச்சி + தயிர் மலட்டுத்தன்மை. ஆண்மைக் குறைவு.

மேலும் சில விருத்த ஆகாரங்கள் அடுத்த பதிவில் தொடரும்.....

தலையில் உள்ள பொடுகுக்கு காரணம்

உடலியக்கத்தில் விஷமேறியதன் மூலம் அது மண்டையோட்டில் விளைவுகள் ஏற்படுத்துவதால் தலைப்பொடுகு உருவாகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. வெளியேற்ற முடியாத அளவிற்கு கழிவுகள் உடலில் தேங்கியிருப்பதால் மூளைப்பகுதி பாதிப்பிற்குள்ளாகும்.உடலில் விஷத்தன்மை உற்பத்தியாவதைத் தடுத்து நிறுத்தி அவற்றை இயற்கையான வழியில் அகற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மருந்தாகப் பயன்படுத்தப்படும் பொடுகு நிவாரணியில் பொடுகு டானிக்கு களில் கிளிசரின் மற்றும் விஷமிக்க ஆன்டி பயாடிக்கள், செயலூக்கிகளும் அடங்கியுள்ளன. இவற்றை மண்டையோடும், மூளையும் உறிஞ்சு வதால் தலைவலியும், நினைவிழப்பும் நரம்புத் தளர்ச்சியும், செவிட்டுணர்வும் கண்பார்வை மங்கலும் ஏற்படுகிறது. தலையில் ஒட்டுண்ணியைப் போன்ற தலைப்பேன்கள் இருப்பதுபோல உடல் முழுக்க ஒட்டுண்ணிகள் பரவுகின்றன. இவை உடலில் இருந்துதமக்கான உணவை எடுத்துக் கொள்ளும்போது பேன்களும் தலையில் ஊறத்தொடங்குகின்றன. மைக்ரோஜைமியன் கோட்பாட்டினைப் போலவே இதன் போக்கினை புரிந்து கொள்ளலாம். இவ்வரு வருப்பான பூச்சியினம் பொடுகுத் தொற்றுள்ள அனைவரிடமும் இருப்பதில்லை. யாருக்கு உள்ளும் புறமும் நிறைய கழிவுகள் சேர்ந்திருக்கிறதோ அவர்களிடம் தான் பேன் அதிகமாகப் பரவுகிறது. நோயாளிகள் பலரிடத்தில் பேன் அகற்றுதலை ஒரு நோய் நிவாரண வடிவமாக நாம் பார்த்திருக்கிறோம். அதுபோன்ற நிவாரண வேலைகள் செய்யும்போது நோயாளியைத் தூய்மையான சூழலில் வைத்திருந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வடிவிலான நீர்ச்சிகிச்சை அளித்தால் நிவாரணம் கிடைத்து விடும். பலர் வேறு சிகிச்சை பெறும்போது தான் தம்மிடத்தில் ஒட்டுண்ணிகள் தொற்றியதாக நினைவு கூர்ந்துள்ளனர். பேன் அகற்றுவதற்கு நாம் பரிந்துரைக்கும் சிகிச்சை குளிர்ந்த நீர் குளியல்,இனிமா கொடுப்பது,இயற்கை உணவு மற்றும் சீப்பு பயன்படுத்துவது மட்டுமே போதுமானது. ஆண்டிசெப்டிக் சோப்பு கூட தவிர்க்கப்பட வேண்டியவை.
@Selvaraju 

கணவன் மனைவி உறவு

☀கணவன் மனைவி உறவுக்கு
இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள். விட்டுக் கொடுப்பதால் சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆக வேண்டும் என்றாலும், முடிவில் நன்மை நடக்கும் என்பதை உணருங்கள் 

☀கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், சேமிப்பதும் கருத்து வேறுபாடுக்கு இடம் தரும்.

☀நானே பெரியவன் என்ற அகந்தையை விடுங்கள் அர்ததமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள். 

☀குடும்பத்தை நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத் தான் இருக்க வேண்டும். எந்நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

☀நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விடடொழியுங்கள்

☀உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

☀மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள், அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய்
ஆசைப்படாதீர்கள். 

☀எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். 

☀கேள்விப்படும் எல்லா விஷயத்தையும் நம்பாதீர்கள்.அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள் 

☀உங்கள் கருத்தில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். மற்றவர் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள பழகுங்கள். 

☀மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள். புன்முறுவல் காட்டவும், அன்புச் சொற்களைப் பேசவும் கற்றுக் கொள்ளுங்கள்.

-வேதாத்திரி மகரிஷி

பாலுணர்வு

பாலுறவில் அடிக்கடி ஈடுபடும் உயிரினம் மனித இனம் அவ்வாறு அடிக்கடி ஈடுபடும் போது பால் சார்ந்த உச்சகட்ட இன்பங்கள் மூளையில் நிகழ்கிறது. அவ்வாறு இன்பம் நிகழும் போது. மூளையில் சில பொருட்கள் சுரக்கின்றன.

"அந்த வேதிப்பொருட்களில் ஒன்று நுண்ணறிவை உருவாக்கக் கூடியது. அந்த நுண்ணறிவு தான் மற்ற உயிரினங்கள் அனைத்தையும் விட உயர்வான இடத்தில் மனித இனத்தை வைத்திருக்கிறது.

நெப்போலியன் ஹில் சொல்கிறார். செக்ஸ் உணர்வு புனிதமானது. அபரிமிதமான செக்ஸ் உணர்வு இருப்பது ஒரு வரம். ஏனெனில் அபரிமித செக்ஸ் உணர்வு இருப்பவர்கள் தான் மகா வெற்றியாளர்களாக உருவாகிறார்கள்.

காதலும், சரசமும், செக்சும் தான் ஒரு நபர் ஜீனியஸ் ஆவதற்கான படிக்கட்டுகள். இதைத்தவிர, ஒரு மனிதன் ஜீனியஸ் ஆவதற்கு வேறெந்த குறுக்கு வழியும் இல்லவே இல்லை. 

மேலும், உலகம் தோன்றிய நாள் முதலாக, செக்ஸ் உணர்வைப் பயன்படுத்தாமல், ஒரு பேரரசனோ, பெருந்தலைவனோ. கலைஞனோ,
கவிஞனோ உருவானதேயில்லை. இனி மேலும் உருவாகவும் முடியாது.

மனித வரலாற்றை ஆழமாக ஆராய்வதன் வாயிலாகவும் நாம் மேற்கண்ட உண்மையை உணர்ந்து கொள்ளலாம். பாலுறவில் அதிகமாக ஈடுபடும் இனம் தான் இது வரை உலகம் முழுவதையும் ஆட்சி செய்திருக்கிறது. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரை, இந்தியா தான் உலகின்
அசனாக இருந்திருக்கிறது. அப்போது இந்தியா பாலுறவிற்கு ஆதரவான
மனநிலையில் இருந்திருக்கிறது.

காமத்திற்கு சூத்திரம் எழுதிய காலமும் சரி, கஜூராகோ கோவிலின் சிற்பங்களை உருவாக்கிய காலமும் சரி இந்திய பூமியின் பொற்காலமாக இருந்திருக்கிறது. 

#தந்த்ராவழியில்தாம்பத்யவாழ்க்கை புத்தகத்திலிருந்து.....
நன்றி🌻
@Selvaraju
9715092335

கேன்சர்!! ஏன்?

கேன்சர் வர காரணம், 
புகை பிடித்தல், 
மது அருந்துதல், 
ரசாயன விவசாயம்,
ரசாயனத் தொழிற்சாலையில் தொடர்ந்து  வேலை செய்வது  என்கிறார்கள். 
மேலே சொல்லப்பட்ட ரசாயன கூறுகளால் கேன்சர் வருவதில்லை. 
மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும்போது ,
உடல் அந்த ரசாயன கூறுகளை வெளியேற்ற முயற்சி செய்யும். 
அந்த விஷ கூறுகளை வெளியேற்றும் முயற்சியின் போது தான் சளி, காய்ச்சல், வாந்தி, பேதி இன்ன பிற நடவடிக்கைகளில் உடல் ஈடுபடும்.
அந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளும் ரசாயன மருந்துகளள்,சளி காய்ச்சல் வாந்தி பேதியை உடலிலேயே அடக்கிவிடும்.
அதனால்   கழிவுகள் உடலிலேயே தேங்கிக் கொள்கிறது.
உடலில் தேங்கியுள்ள நாள்பட்ட ரசாயன கழிவுகள் கேன்சராக மாறுகிறது.
கேன்சருக்கு முக்கிய காரணமே கழிவுகளை உடலிலேயே அடக்குவது தான்.
கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றுவது தான் சரியான சிகிச்சை முறையாகும்.
பாரம்பரிய சிகிச்சை முறைகள் இதை கச்சிதமாக செய்கிறது.

ரசாயன மருந்துகள் சம்பந்தமான படிப்பில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.
@selvaraju 
9715092335

ரத்த அழுத்தம்(BP) தேவையா?

ரத்த அழுத்தம்(BP) இருந்தால்தான் அது ஆரோக்கியமான உடல்.
 அந்த ரத்த அழுத்தத்தை மருந்து மாத்திரை கொண்டு அடக்கி வைப்பது அந்த உடலுக்கு கேடு.
 நாம் உண்ட உணவு செரிமானமாக ரத்த அழுத்தம் தேவை. நடப்பதற்கும் ஓடுவதற்கும் ரத்த அழுத்தம் தேவை . உடலில் உள் உறுப்புகளில் ஏற்பட்ட தொந்தரவுகளை சரி செய்ய ரத்த அழுத்தம் தேவை. ஏதாவது அடிபட்டிருந்தால் அந்த இடத்தில் உள்ள தொந்தரவை சரி செய்வதற்கு ரத்த அழுத்தம் தேவை . கண்ணில் ஏதாவது தொந்தரவு இருந்தால் அதை சரி செய்வதற்கு ரத்த அழுத்தம் தேவை. மூட்டுகளில் சேரும் கழிவுகளை வெளியேற்ற ரத்த அழுத்தம் தேவை. நுரையீரலில் சேரும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு ரத்த அழுத்தம் தேவை. இப்போ சொல்லுங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் தேவையா?
@selvaraju
9715092335

உணவு பற்றிய அடிப்படை புரிதல்

உணவு பற்றிய அடிப்படை விதிகள் :

 நிலம் :
1. நன்றாக பசித்த பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. தண்ணீர் குடித்த உடனே உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது தண்ணீர் குடித்த பிறகு குறைந்தபட்சம் 10 நிமிடமாவது ஆக வேண்டும்.
3. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு பிறகு தான் தண்ணீர் பருக வேண்டும்.
4. சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் வரை அமர்ந்து தான் இருக்க வேண்டும் உடனே செயல்படக்கூடாது.
5. சாப்பிடும் போது கவனம் சாப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். வாயை மூடி சாப்பிட வேண்டும்.
6. நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
7. சாப்பிடும் போது தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். வெறும் தரையில் சாப்பிடக்கூடாது தரை விரிப்பு ஏதாவது இருக்க வேண்டும்.
8. இனிப்பு, துவர்ப்பு சுவை அளவாக  சேர்க்க  வேண்டும்.

 நீர் :

1. தண்ணீர் சாப்பிடும் போது எப்பொழுதும் கீழே அமர்ந்துதான் சாப்பிட வேண்டும் நின்று கொண்டு தண்ணீர் பருகக் கூடாது.
2. தண்ணீர் பருகும் போது அண்ணாந்து முழுவதுமாக தண்ணீரை வாயில் கொட்டக்கூடாது. டீ குடிப்பது போன்று சப்பி சப்பி தான் சாப்பிட வேண்டும். அல்லது ஒவ்வொரு விழுங்காக வாயில் ஊற்றி சுவைத்து பிறகு பருக வேண்டும்.
3. ஏதாவது சாப்பிட்ட உடனே தண்ணீர் பருக கூடாது.சிறிது இடைவெளி விட்டே தண்ணீர் பருக வேண்டும்.
4. எப்பொழுதுமே வயிறு முட்ட தண்ணீர் குடிக்க கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக்கொள்ளலாம்.
5. பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீரை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
6. குளிர்பானங்களையும் குளிர்சாதன பெட்டிகளில் வைத்த தண்ணீரையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
7.RO தண்ணீரையும் தவிர்க்க வேண்டும்.
8. வாய்ப்பு உள்ளவர்கள் மழை நீரை பிடித்து வடிகட்டி குடித்து வரலாம்.
9. தேவையில்லாமல் இயற்கை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கக் கூடாது.
 10.அவரவர்கள் வாழும் இடத்தில் கிடைக்கக்கூடிய தண்ணீர் சிறந்த தண்ணீர் ஆக இருக்கும்.
11. உப்பு சுவையை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 நெருப்பு :

1. ஒவ்வொருவருக்கும் மிதமான உடல் உழைப்பு அவசியம். உடல் இயங்கினால் மட்டுமே அந்த உடலுக்கான வெப்ப சக்தி கிடைக்கும்.
2. அது உடற்பயிற்சியாகவும் யோகா மாதிரியான பயிற்சியாகவும் இருக்கலாம்.
3. விளையாடும்போது உடலுக்கான வெப்பசக்தி கிடைக்கும்.
4. தோட்ட வேலை செய்வது விவசாயம் சம்பந்தமான வேலை செய்வது ஆடு மாடுகள் மேய்ப்பது இவைகளின் போது உடல் இயங்கும். அப்போது அந்த உடலுக்கான வெப்ப சக்தி கிடைக்கும்.
5. வாய்ப்பு கிடைக்கும் போது தோட்டத்தில் மண்வெட்டி, கடப்பாறை கொண்டு ஏதாவது வேலைகள் செய்யலாம்.
6. ஆடு மாடுகளின் தொழுவத்தை சுத்தம் செய்யலாம்.
7. கசப்பு சுவையை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 காற்று :

1. இரவில் தூங்கும் அறை எப்பொழுதும் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
2. ஒவ்வொருவரும் கண்டிப்பாக எளிமையான சுவாசப் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
3. முழுவதுமாக அடைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
4. தூசிகள் குப்பைகள் நிறைந்த பகுதிகளுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
5. நெகிழி குப்பைகளை நெருப்பில் இட்டு எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
6. பெருங்குடலை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
7. புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
8. இஞ்சி, சுக்கு, மிளகு, ஏலக்காய் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.( உணவில்)

 ஆகாயம் :

1. இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை அனைவரும் கண்டிப்பாக தூங்கியே ஆக வேண்டும்.
2. சக மனிதர்கள் மீது அன்பையும் கரிசனத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
3. சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்லக்கூடாது.
4. பால், வெள்ளை சர்க்கரை தவிர்க்க வேண்டும்.
5. மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
6. புளிப்பு சுவை சேர்க்க வேண்டும். புளிப்பு சுவைக்காக கொடம்புளி, எலுமிச்சை பழம் சேர்க்கலாம்.
7. உடலுக்கு ஓய்வு அவசியம்.
 இந்த ஐம்பூத சக்திகளின் செயல்பாடுகளை புரிந்து பின்பற்றி வந்தால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
 இறுதியாக மனதை சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் வைத்துக் கொள்வது மிக அவசியமாகும்.
 எந்த ஒரு ஆடம்பரத்திற்கும் ஆசைப்படலாம் ஏக்கப்படக்கூடாது. தன்னிடம் இருப்பது சிறப்பு என்ற மனோநிலை தான் மகிழ்ச்சியான நல்வாழ்வை கொடுக்கும்.

 மகிழ்ந்திருப்போம் வாழ்த்துகள்... 💛💛💛💛
@selvaraju
9715092335

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

காமராஜரின் துரோகம்

காமராசர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பாராளுமன்றம்வரை திறந்த காரில் பிரதமர் சிறிமாவோவால் அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது சிங்களவர்கள் பூ தூவி வரவேற்றனர். இப்படியொரு வரவேற்பு வேறு எந்த தலைவருக்கும் சிங்கள அரசு வழங்கவில்லை.

தமிழ் மக்களுக்கு விரோதமான சிறிமா சாத்திரி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு காமராசர் காரணமாக இருந்தமைக்கு நன்றியாகவே இத்தகைய வரவேற்பு வழங்கப்பட்டது.

இன்று மீண்டும் காமராசர் ஆட்சியை கொண்டு வருவோம் என சில தமிழ்த்தேசியர் கூறுகின்றனர். அவர்களுக்கு காமராசரின் இந்த துரோகம் தெரியுமா?
 நன்றி. தோழர் பாலன்.

புதன், 30 ஜூலை, 2025

பால் வணிகம்

ஒரு காலத்தில் பால் காலை நேரத்தில் மட்டும் தான் கிடைக்கும். இப்பொழுது பால் 24 மணி நேரமும் கிடைக்கிறது. எப்போ வேண்டுமானாலும் கடைக்கு சென்றால் பால் வாங்கிக் கொள்ளலாம். அப்படி ஒரு நவீன வாழ்வியல் முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டிற்கு அருகில் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு வீட்டில் தான் பால் கிடைக்கும். அந்த வீட்டில் உள்ள முதியவர்கள் பால் மோர் போன்றவை வீட்டில் வைத்துக்கொண்டு கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய வீட்டில் தான் பால், பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர் வெண்ணெய் நெய் இவைகள் எல்லாம் கிடைக்கும். அவர்களுடைய வீட்டில் தான் பால் வாங்குவோம். அதுவும் குழந்தை இருக்கும் வீட்டில் மட்டுமே பால் வாங்கும் பழக்கம் இருந்தது மற்றவர்கள் யாரும் பால் பயன்படுத்துவது இல்லை. அப்படி ஒரு நிலைமை அந்த காலத்தில் இருந்தது. இந்த காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை எழுந்த உடனே பால் தான் கேட்கிறார்கள். அந்த பாலில் காபி, டீ என்று பலவகையாக பயன்படுத்துகிறார்கள். பால் வணிகம் என்பது 1990 காலகட்டத்திற்கு பிறகு தான் ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் தான் பாலை வாங்கி சேமிக்கும் பழக்கமும் உருவானது. இன்று பால் வணிகம் என்பது பல கோடி ரூபாய் புரளும் மிகப்பெரும் தொழிலாக வளர்ந்து இருக்கிறது. வெண்மை புரட்சிக்கு பிறகு வெளிநாட்டு மாடுகள் இறக்குமதியான அதற்குப் பிறகு பால் வணிகம் கொடி கட்டி பறக்க ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு கோடியே லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது என்றால் ஒரு நாளைக்கு விற்பனையாகும் பாலின் அளவு 5 கோடி லிட்டராக இருக்கிறது. பால் வணிகத்தில் இது எப்படி என்று தான் புரியவில்லை. செயற்கை பால் ரசாயனம் கலந்த பால்கள் அதிகமாக விற்பனையாகிறது. அந்தப் பாலை குடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் புதிய புதிய வியாதிகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் முதியவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. 60 வயதை கடந்தவர்கள் பால் சார்ந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. பால் பருகுவதால் நமது உடலில் பித்தம் அதிகரிக்கிறது. பித்தம் என்றால் நமது ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. ரத்தத்தில் அமிலத்தன்மை நீண்ட நேரம் நீடித்தால் அந்த உடல் அழிவை சந்திக்கும் என்பதால் அமிலத்தன்மையான இரத்தத்தை காரத்தன்மைக்கு மாற்றுவதற்காக உடலில் எலும்புகளில் உள்ள சுண்ணாம்பு சத்தை எடுத்து அமிலத்தன்மை காரமாக மாற்றுகிறது. நமது உடல் இதேபோல் அடிக்கடி தொடர்ந்து கொண்டிருந்தால் நமது உடலில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. சுண்ணாம்புசத்து பற்றாக்குறையினால் எலும்புகள் வலு இழக்கிறது.
@selvaraju
30/07/2025

ஞாயிறு, 27 ஜூலை, 2025

செயற்கை வாசனையூட்டிகள்

செயற்கையான வாசனை திரவியங்களை ( perfume)பயன்படுத்தியவர்கள் அருகில் வரும் போது சில நிமிடங்கள் கூட நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் எப்படி ஒரு நாள் முழுக்க தாங்கிக் கொள்கிறார்கள் என்று தான் புரியவில்லை. இந்தப் பிரபஞ்சத்திற்கும் நமக்குமான தொடர்பவே  நம்முடைய சுவாசம் தான். செயற்கை அல்லாமல் இயற்கையான நறுமணங்களை அளவாக பயன்படுத்திக் கொள்ளலாம். செயற்கையான (chemical)வாசனையூட்டிகள் உடல் நலத்தை பாதிக்கும்.அதற்கு நம்முடைய உடல் காட்டும் எதிர்ப்பு தான் தலைவலி.
@selvaraj

சனி, 26 ஜூலை, 2025

சரம் பார்த்தல்

சரம் பார்த்தல் என்பது, காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பார்க்கவேண்டும்.

1. திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு இடப்புறம் வரவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சந்திரக்கலையில் இயங்க வேண்டும்.

திங்கள் அன்று சூரியக்கலை ஓடினால் - தாயிடம் வெறுப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, ஜலதோசம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகும்.

புதன் அன்று சூரியக்கலை ஓடினால் - மாமனாரிடம் மதிப்பு போகும், தாய்மாமனிடம் உறவு கெடும், உடல் வலி, குடைச்சல், மூட்டு வலி வரும்.

வெள்ளி அன்று சூரியக்கலை ஓடினால் - பார்வை பழுதாகும், தாம்பத்ய உறவு கெடும்.

2. சனி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் தவறாமல் நமது மூச்சு வலப்புறம் ஓடவேண்டும். அதாவது காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் பார்த்தால் இந்த மூன்று நாட்களிலும் நமது சரம் சூரியக் கலையில் இயங்க வேண்டும்.

சனிக்கிழமை சந்திரக்கலை ஓடினால், கடன் தொல்லை, சண்டை சச்சரவு, சரும நோய், ஜூரம் வரும்.

ஞாயிறு அன்று சந்திரக்கலை ஓடினால், தந்தையிடம் அன்பு குறையும், தொழிலில் அமைதி இருக்காது, தலைவலி, இருமல், சளி உண்டாகும்.

செவ்வாய் அன்று சந்திரக்கலை ஓடினால், உடன்பிறந்தோரிடம் பிணக்கு, வெப்பக்காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்சுவலி ஏற்படும்.

3. வளர்பிறையில் வருகின்ற வியாழன் அன்று இடப்புறம் (சந்திரக்கலை) சுவாசம் நடைபெறவேண்டும். தேய்பிறையில் வருகின்ற வியாழன் அன்று வலப்புறம் (சூரியகலை) சுவாசம் நடைபெறவேண்டும்.

வியாழக்கிழமைகளில் மட்டும் பிறைக்குத் தக்க சரம் ஓடும். மேற்கண்டவாறு ஓடாமல் மாறி இயங்கினால், பெற்ற மக்களால் துயரம், அடிவயிற்று வலி, மலடு ஆதல் போன்றவை நிகழும்.

மேற்கண்டவாறு அந்தந்த நாட்களில் அந்தந்த சரம் ஓடவில்லை எனில் தக்க உபாயத்தினாலும் ஆசாரியரிடமும் பயின்று சர ஓட்டத்தை சரி செய்ய வேண்டும்.

புதன், 7 மே, 2025

தமிழ்நாட்டில் உள்ள நதிகள்

.            தமிழகத்தில் உள்ள நதிகள்,
      படித்தால்மலைத்துப்போவீர்கள்..!

1. கடலூர் மாவட்டம்
a)தென்பெண்ணை, 
b)கெடிலம், 
c)வராகநதி, 
d)மலட்டாறு, 
e)பரவனாறு,                                 
f)வெள்ளாறு, 
g)கோமுகி ஆறு, 
h)மணிமுக்தாறு, 
i)ஓங்கூர்

2. விழுப்புரம் மாவட்டம்
a)கோமுகி ஆறு, 
b)மலட்டாறு, 
c)மணிமுத்தாறு

3. காஞ்சிபுரம் மாவட்டம்
a)அடையாறு, 
b)செய்யாறு, 
c)பாலாறு, 
d)வராகநதி, 
e)தென்பெண்ணை,                   
f)பரவனாறு   

4. திருவண்ணாமலை மாவட்டம்
a)தென்பெண்ணை, 
b)செய்யாறு, 
c)வராகநதி, 
e)வெள்ளாறு

5. திருவள்ளூர் மாவட்டம்
a)கூவம், 
b)கொஸ்தலையாறு, 
c)ஆரணியாறு, 
d)பாலாறு

6. கரூர் மாவட்டம்
a)அமராவதி, 
b)பொன்னை

7. திருச்சி மாவட்டம்
a)காவிரி, 
b)கொள்ளிடம், 
c)பொன்னை, 
d)பாம்பாறு

8. பெரம்பலூர் மாவட்டம்
a)கொள்ளிடம்

9. தஞ்சாவூர் மாவட்டம்
a)காவிரி, 
b)வெட்டாறு, 
c)வெண்ணாறு, 
d)கொள்ளிடம்,  
e)அக்கினி ஆறு

10. சிவகங்கை மாவட்டம்
a)வைகையாறு, 
b)பாம்பாறு, 
c)குண்டாறு, 
d)கிருதமல் ஆறு,

11. திருவாரூர் மாவட்டம்
a)காவிரி, 
b)வெண்ணாறு, 
c)பாமணியாறு, 
d)குடமுருட்டி

12. நாகப்பட்டினம் மாவட்டம்
a)காவிரி, 
b)வெண்ணாறு

13. தூத்துக்குடி மாவட்டம்
a)ஜம்பு நதி, 
b)மணிமுத்தாறு, 
c)தாமிரபரணி, 
d)குண்டாறு,                                  
e)கிருதமல் ஆறு, 
d)கல்லாறு, 
e)கோராம்பள்ளம் ஆறு

14. தேனி மாவட்டம்
a)வைகையாறு, 
b)சுருளியாறு, 
c)தேனி ஆறு, 
d)வரட்டாறு,
e)வைரவனாறு

15. கோயம்புத்தூர் மாவட்டம்
a)சிறுவாணி, 
b)அமராவதி, 
c)பவானி, 
d)நொய்யலாறு, 
e)பம்பாறு
f)கெளசிகா நதி

16. திருநெல்வேலி மாவட்டம்
a)தாமிரபரணி, 
b)கடனா நதி, 
c)சிற்றாறு, 
d)இராமநதி, 
e)மணிமுத்தாறு,
f)பச்சை ஆறு, 
g)கறுப்பா நதி, 
h)குண்டாறு, 
i)நம்பியாறு, 
k)கொடுமுடிஆறு,   
l)அனுமாநதி,
m)கருமேனியாறு, 
n)கரமணை ஆறு

(சேர்வலாறு.மணிமுத்தாறு.கடனா ஆறு. பச்சையாறு. சிற்றாறு. பேயனாறு.நாகமலையாறு,காட்டாறு.சோம்பனாறு,கௌதலையாறு.உள்ளாறு.பாம்பனாறு.காரையாறு.நம்பியாறு.கோதையாறு.கோம்பையாறு.
குண்டாறு இவை அனைத்தும் தாமிரபரணியின் துணையாறுகள் )

17. மதுரை மாவட்டம்
a)பெரியாறு, 
b)வைகையாறு, 
d)குண்டாறு, 
e)கிருதமல் ஆறு,   
f)சுள்ளி ஆறு, 
g)வைரவனாறு, 
h)தேனியாறு, 
i)வாட்டாறு, 
j)நாகலாறு, 
k)வராகநதி, 
l)மஞ்சள் ஆறு, 
m)மருதாநதி, 
n)சிறுமலையாறு, 
o)சுத்தி ஆறு, 
p)உப்பு ஆறு

18. திண்டுக்கல் மாவட்டம்
a)பரப்பலாறு, 
b)வரதம்மா நதி, 
c)மருதா நதி, 
d)சண்முகாநதி,                                          e)நங்கட்சியாறு, 
f)குடகனாறு, 
g)குதிரையாறு, 
h)பாலாறு, 
i)புராந்தளையாறு,                        
j)பொன்னை, 
k)பாம்பாறு, 
l)மஞ்சள் ஆறு

19. கன்னியாகுமரி மாவட்டம்
a)கோதையாறு, 
b)பறளியாறு, 
c)பழையாறு, 
d)நெய்யாறு, 
e)வள்ளியாறு

20. இராமநாதபுரம் மாவட்டம்
a)குண்டாறு, 
c)கிருதமல் ஆறு, 
d)வைகை, 
e)பாம்பாறு,                                                           f)கோட்டகரையாறு, 
g)உத்திரகோசம் மங்கை ஆறு

21. தருமபுரி மாவட்டம்
a)காவிரி, 
b)தொப்பையாறு, 
c)தென்பெண்ணை  

22. சேலம் மாவட்டம்
a)காவிரி, 
b)வசிட்டாநதி, 
c)வெள்ளாறு

23. விருதுநகர் மாவட்டம்
a)கௌசிகாறு, 
b)வைப்பாறு, 
c)குண்டாறு, 
d)அர்ஜுனா நதி, 
e)கிருதமல் ஆறு

24. நாமக்கல் மாவட்டம்
a)காவிரி, 
b)உப்பாறு, 
c)நொய்யலாறு

25. ஈரோடு மாவட்டம்
a)காவிரி, 
b)பவானி, 
c)உப்பாறு

26. திருப்பூர் மாவட்டம்
a)நொய்யலாறு, 
b)அமராவதி, 
c)குதிரையாறு

27. புதுக்கோட்டை மாவட்டம்
a)அக்கினி ஆறு, 
b)அம்பூலி ஆறு, 
c)தெற்கு வெள்ளாறு, 
d)பம்பாறு,                             
e)கோட்டகரையாறு

இப்படி நதிகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கின்றது.

தமிழ்நாட்டு நதிகளில் உள்ள நீர்த் தேக்கங்கள் / அணைகள்...

              நீர்த் தேக்கத்தின் பெயர்
                  ***********************

வராக நதி படுகை

1. வீடூர்

பெண்ணையாறு படுகை

2. கிருஷ்ணகிரி

3. சாத்தனூர்

4. தும்பஹள்ளி

5. பாம்பார்

6. வாணியாறு

வெள்ளாறு நதிப் படுகை

7. வெல்லிங்டன்

8. மணிமுக்தா நதி

9. கோமுகி நதி

காவேரி நதிப் படுகை

10. மேட்டூர்

11. சின்னாறு

12. சேகரி குளிஹல்லா

13. நாகவதி

14. தொப்பையாறு

15. பவானி சாகர்

16. குண்டேரி பள்ளம்

17. வரட்டுப் பள்ளம்

18. அமராவதி

19. பாலாறு, பெருந்தலாறு

20. வரதமா நதி

21. உப்பாறு (பெரியாறு மாவட்டம்)

22. வட்டமலைக் கரை ஓடை

23. பரப்பலாறு

24. பொன்னையாறு

25. உப்பார் (திருச்சி மாவட்டம்)

வைகை நதிப் படுகை

26. வைகை

27. மஞ்சளாறு

28. மருதா நதி

வைப்பார் நதிப் படுகை

29. பிளவுக்கல் (பெரியாறு நீர்த்தேக்கம்)

30. பிளவுக்கல் (கோவிலாறு நீர்த்தேக்கம்)

31. வெம்பக்கோட்டை நீர்த்தேக்கம்

32. குள்ளுர் சந்தை

தாமிரபரணி நதிப் படுகை

33. மணிமுத்தாறு

34. கடனா

35. ராம நதி

36. கருப்பா நதி

37. குண்டாறு

கோதையாறு நதிப் படுகை

38. பேச்சிப் பாறை

39. பெருஞ்சாணி

40. சித்தாறு - i

41. சித்தாறு - ii

மேற்கு நோக்கிப் பாயும் நதிக்களை கிழக்கே திருப்புதல்

பெரியாறு நதிப் படுகை

42. பெரியாறு

43. மேல் நீராறு அணைக்கட்டு

44. கீழ் நீராறு

சாலக்குடி நதிப்படுகை

45. சோலையாறு

46. பரம்பிக்குளம்

47. தூனக்கடவு

48. பெருவாரிப் பள்ளம்

பாரதப் புழை நதிப் படுகை

49. ஆழியாறு

50. திருமூர்த்தி

இப்படி நீர்த்தேக்கங்களையும் நீண்ட வரிசைப்படுத்தலாம்.

தமிழக நீர்நிலைகள்

நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947-ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கு குறைவாக 20,000 நீர் நிலைகள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

மதுரை, சென்னை மாநகரங்களைச் சுற்றி 500 ஏரிகள் - குளங்கள் காணாமல் போய்விட்டன. பழவேற்காடு ஏரியை ஆந்திர அரசு சிறிது சிறிதாக அபகரித்துக் கொண்டது. வீராண ஏரியும் சரியாகப் பராமரிப்பு இல்லை.

இன்றைக்கு தமிழகத்தில் 18,789 பொதுப்பணித்துறை ஏரிகள், 29,484 கிளை வாய்க்கால்கள், 86 ஆறுகள், 200 அணைகள் என்ற புள்ளிவிபர கணக்கில் தமிழக நீர் நிலைகள் உள்ளன. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்துவிட்டது. விவசாய சாகுபடி நிலங்களும் குறைந்துக்கொண்டே வருகின்றன. நீர் நிலைகளில் நீரில்லாமல் நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் 1.10 கோடி ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம் என்ன? 

இருக்கின்ற நீர் நிலைகளை தூர் வாராமல் மதகுகளை சரிவர பழுது பார்க்காமல், நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்வதை தடுக்காமல் இருந்த நிலையில் நீர் நிலைகளுடைய பயன்பாடு குறைந்துவிட்டது.

மணல் திருடர்கள் ஆறுகளிலும், ஏரிகளிலும் உள்ள மணலை கொள்ளை அடித்ததனால் நீர் வரத்துகளெல்லாம் குறைந்துவிட்டன. இயற்கையின் அருட்கொடையான அந்த நீர் நிலைகளை நாம் சரிவர பாதுகாக்காமலும் ஆயக்காட்டு நலன்களை புறந்தள்ளியதால் இன்றைக்கு இவ்வாறான கேடுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது...

மன்னராட்சியில் கூட மக்களுடைய பங்களிப்பில் குளங்களும், நீர் நிலைகளும் வெட்டப்பட்டு மக்களாலேயே பராமரிக்கப்பட்டது. அது அக்காலம்.... 

இன்று நம்மிடம் உயரிய தொழில்நூட்பமும் உபகரணங்களும் இருந்தும் என்ன பயன்?

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய க்யூபா நம்பியது மண்ணையும் மனித வளத்தையுமே

மனிதர்கள் பூமியில் தோன்றலாம். சில காலங்களில் வாழ்ந்து மடியலாம். ஆனால் நாகரீகத்தின் தொட்டிலான நதிகள் என்றைக்கும் நிரந்தரமானது. அதை தாயை போல நதி தீரங்களை  பாதுகாப்பதுதான் மானிடத்தின் அடிப்படை கடமையாகும்....

எங்கே...செல்லும்..இந்த...பாதை.

நினைக்க..✍️ மதுரை.,இஸ்மாயில்.

திங்கள், 31 மார்ச், 2025

பெண்கள் நமது கண்கள்

தமிழ் சமூகத்தில் பெண்களை சார்ந்துதான் குடும்பங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இதை அறிந்த உலக வல்லாதிக்க சக்திகள்,பெண்களின் சிந்தனைகளை சிதைக்க பல வழிகளில் முயற்சித்து வருகிறது. புராண கூத்துகள்(கதைகள்) மேடை நாடகங்கள், திரைப்படங்கள்,தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் பத்திரிகைகள் இவைகளில் பெண்களைப் பற்றி தரக்குறைவாக சித்தரிப்பார்கள். பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பதை ஆண்களின் பொது புத்தியாகவே ஆக்கி இருப்பார்கள். பெண்களின் சிந்தனையில் அல்லது அவர்களுடைய ஆழ்மனதில் எதிர்மறையான சிந்தனைகளை பதிவு செய்துவிட்டால் அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த கதையும் அதோ கதை தான். பெண்கள் மட்டுமல்ல பெண்கள் ஆண்கள் எல்லோருக்குமே ஆழ்மனதில் ஒரு கருத்தை பதிவு செய்துவிட்டால் அந்த கருத்துப்படி தான் அவர்கள் தொடர்ந்து இயங்குவார்கள். இதில் பெண்களின் ஆழ்மனம் அடிக்கடி விழிப்பு நிலைக்கு வந்து விடும் ஏனென்றால் பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் தான் அவர்களுடைய மனம் இயங்கும். உணர்ச்சிவசப்படும்போது ஆழ்மனம் வெடிப்பு நிலைக்கு வந்து விடும் அந்த நேரத்தில் சிந்திக்கும் சிந்தனைகள் அத்தனையும் ஆழ் மனதில் பதிவாகிவிடும் ஆழ்மனதில் பதிவாகிவிட்ட சிந்தனைகள் அனைத்தும் அவர்களுடைய வாழ்வில் தொடர் நிகழ்வுகள் ஆகிவிடும் இதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது. என்னுடைய புருஷன் சரியில்ல என்னுடைய புல்லை சரியில்ல என்று எந்த வீட்டில் பெண்கள் புலம்பி கொண்டிருக்கிறார்களோ அந்த வீட்டினுடைய கணவனும் குழந்தைகளும் கண்டிப்பாக சரியில்லாமல் போய்விடுவார்கள் இது இயற்கையின் நியதி. ஆணா பெண்ணோ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்போது ஆழ்மனம் விழிப்பு நிலைக்கு வந்து விடும் ஆழ்மனம் தான் பிரபஞ்சத்தின் ட்ட்ழ்மனதில் பதிவாகிவிட்ட கருத்துகள் பிரபஞ்சத்தில் பதிவாகி வாழ்க்கையின் தொடர் நிகழ்வுகள் ஆகிவிடும்.

திங்கள், 17 மார்ச், 2025

சப்த கன்னிகள் வழிபாடு

வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு கன்னி அம்மன் வழிபாடும் 

ஏழு கன்னி அம்மன் வழிபாட்டிற்கும் வாரத்தின் 7 நாட்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தலைப்பை பார்த்தவுடன் என்ன தோன்றும். ஆனால் சம்பந்தம் இருக்கிறது. 

முதலில் ஆங்கில ஏழு நாட்களுக்கும் தமிழ் ஏழு நாட்களுக்கும் கூட சம்பந்தம் இருக்கிறது. உதாரணமாக ஆங்கிலத்தில் சனிக்கிழமை Saturday என்று அழைக்கப்படுகிறது. Saturn என்பது சனி கிரகத்தை தான் குறிக்கிறது. 

அடுத்து ஞாயிற்றுக்கிழமை என்பது ஆங்கிலத்தில் sunday எனப்படுகிறது. Sun என்றாலும் ஞாயிறு என்றாலும் சூரியனை தான்  குறிக்கிறது.

அடுத்து நாம் திங்கட்கிழமையை நிலவை குறிப்பது போல் பெயர் வைத்திருக்கிறோம். ஆங்கிலத்தில் அதை moon day என்று அழைப்பதற்கு பதிலாக monday என்று அழைக்கிறார்கள். 

தமிழ் வார நாட்கள் ஒவ்வொன்றும் ஒரு கிரகத்தை குறிப்பது போல் இருக்கும். ஆங்கிலத்தில் மூன்று நாட்கள் மட்டும் அவ்வாறு இருக்கிறது. இதில் இருந்து தமிழ் நாகரிகத்தின் வழியே தான் ஆங்கில வார முறையும் வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

ஒரு காலகட்டத்தில் தமிழர்களுக்கு ஏழு கிரகங்களை பற்றிய அறிவு இருந்தது மேலும் கிரகங்களிலிருந்து வரும் அலைகள் மனிதனை பாதிக்கிறது என்பதை தமிழர்கள் உணர்ந்து இருந்தார்கள். 

உதாரணமாக சூரியனிலிருந்து வரும் அலைகள் நமக்கு சுறுசுறுப்பை தருகிறது வியர்வை கூட வருகிறது. நிலவு இல்லாத அம்மாவாசை நாட்கள்  மனிதர்களுக்கு மனநிலையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துவதை நாம் கண்கூடாக  காண்கிறோம். நிலவுக்கு மதி என்று இன்னொரு பெயரும் உள்ளது. நிலவின் அடிப்படையிலேயே அதாவது ஒரு பௌர்ணமி அல்லது அம்மாவாசைக்கும் இன்னொரு பௌர்ணமி அல்லது அமாவாசைக்கும் இடைப்பட்ட நாட்களை வைத்து தான் மாதங்கள் கணக்கிட்டோம். அதனால் மாதங்களுக்கும் திங்கள் என்ற பெயர் உள்ளது.

இந்த ஏழு கிரகங்களின் பாதிப்பிலிருந்து மனிதர்களை தற்காத்துக் கொள்ள ஒரு வழிபாட்டு முறை ஏற்படுத்தப்பட்டது அதுதான்  ஏழு கன்னி வழிபாடு.

கிரகம் என்றால் ஆங்கிலத்தில் planet என்று பொருள் எடுத்துக் கொள்கிறார்கள் அது தவறு. உண்மையில் கிரகம் என்றால் பூமியைத் தவிர வேறொரு இடம் என்று தான் பொருள். 

வேறு + அகம் = வேறகம் - கேரகம் - கிரகம்

நாம் நம் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு அதாவது ஒரு அகத்தில் இருந்து இன்னொரு அகத்திற்கு செல்வதை கிரகப்பிரவேசம் என்கிறோம்.

தமிழர்களின் மெய்யியலான சமணம் என்ற ஆசீவகத்தின் முக்கியமான முதல் வழிபாடு இந்த ஏழு கன்னி வழிபாடுதான். இதை உருவாக்கியவர் மிக முக்கியமான சித்தரான நாம் கடவுளாக வணங்கும் முருக சித்தர் தான்.

இதற்கு ஆதாரம் வட ஆப்பிரிக்க நாடுகளான பெர்பெர் நாடும் எகிப்து நாடும் முருகரை அம்மன் என்றே அழைக்கிறது. அம்மன் கோயில் சிவா ஓசிஸ் ( siwa oasis )என்ற இடத்தில் தான் உள்ளது.

அந்த நாகரிகங்களும் தமிழ் நாகரீகங்கள் தான். முருகருக்கு மயில், யானை, ஆடு போன்ற வாகனங்கள் உள்ளது அதில் ஆட்டை அவர்கள் முருகனோடு இணைத்து வழிபட்டார்கள்.

முருக சித்தர் ஏழு பெண் உருவக கடவுள்களை ஏழ கோள்களுக்கு நிகராக உருவாக்கினார். இதில் கருப்பு நிறத்திற்கான கடவுள் ஆன காளி வழிபாடு மிகப் பழமையான வழிபாடு அதையும் ஏழு அம்மன்களில் ஒன்றாக முருகர் சேர்த்துக் கொண்டார்.

ஏழு அம்மன் சிலைகளை வைக்காமல் ஒரே சிலையாக வைத்து ஏழு நாட்களுக்கு அலங்காரத்தை உடுத்தும் உடையின் நிறத்தை மாற்றி ஒவ்வொரு அம்மனாக வழிபடும் முறை தான் மாரியம்மன் வழிபாட்டு முறை. இதை கேரளத்தில் பகவதி அம்மன் என்கிறார்கள் அதாவது வகை வகையாக வதிப்பதால் வகைவதி என்று அழைக்கப்பட்டு அதுவே பின்பு பகவதி என்று மாறியது.

தமிழர் சமயம் ஆசிவகம் என்ற சமணம். இதன் கடவுள் வழிபாடு தான் இந்த ஏழு கன்னி , ஏழு முனி வழிபாடு 
ஆசிவகம் நிற கொள்கை கொண்ட சமயம் . சமணர்கள் என்ற சித்தர்கள் மக்களுக்கு தாங்கள் உறங்கும் பள்ளிகளுக்கு அருகே கல்வி போதித்தார்கள் . மொத்தம் 18 வருட படிப்பு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒரு நிறம் . மொத்தம் ஆறு நிறம் . ஏழாவது நிலை நீர்வண்ண நிலை என்ற நிர்வாண நிலை இந்த நிலை அடையும் ஒரு சிலர் மட்டுமே முக்தி என்ற கடை நிலை அடைந்தவர்களாக போற்றப்பட்டனர் . சித்தர்களை மக்கள் அண்ணன் என்று அன்போடு அழைத்தார்கள் சித்தர் அண்ணன் வாசல் சித்தன்னவாசல் ஆகியிருக்கிறது அங்கும் சமண ஓவியங்களே இருக்கிறது. திரு அண்ணா மலை என்ற திருவண்ணாமலையிலும் சமண வாழ்விடங்கள் நிறைய உள்ளது. தமிழர்களை அடிமைப்படுத்த இந்த சமண சித்தர்களை வதை செய்து ஆரியர்கள் கொன்றார்கள் அதுவே சித்தர் வதை சித்திரவதை என்ற வார்த்தை உருவாக காரணம். சமண கழுவேற்றம் இதைத்தான் குறிக்கிறது.

தமிழர் மெய்யியல் ஆன ஆசீவகத்தை 6 சமயங்களாக சைவம் ,வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் ,சௌரம் என்பது போல ஆரியர்கள் பிரித்து அழித்தார்கள். களப்பிரர் காலத்தில் நம்மை ஆண்டது ஆரியர்களே, பதினான்காம் நூற்றாண்டில் பிராமண அடிமைகளான விஜயநகர ஆட்சியில் ஆசீவகம் முற்றிலுமாக அழிந்து போனது.

முதல் வண்ணம் - கருப்பு  -  பெண்கடவுள்  = காளி , ஆண்  கடவுள் = காலன் என்ற சிவன் , தொடர்புடைய கோள் = சனி

இரண்டாம் வண்ணம் - நீலம்  - பெண்கடவுள்  = நீலாம்பரி என்கிற  நீல காளி , தொடர்புடைய கோள் = சந்திரன்

மூன்றாம் வண்ணம் - பச்சை - பெண்கடவுள்  = பச்சையம்மா  , வள்ளி , மீனாட்சி , துரோபதி , பாஞ்சாலி ( அனைவரும் ஒரே கடவுளே ) , தொடர்புடைய கோள் = புதன்

நான்காம் வண்ணம் - சிவப்பு - பெண்கடவுள்  = லட்சுமி , ஆண் கடவுள் - விஷ்னு , தொடர்புடைய கோள் = செவ்வாய்

ஐந்தாம் வண்ணம் - மஞ்சள் - பெண்கடவுள்  = பொன்னாம்பால் , கனகம் , தொடர்புடைய கோள் = வெள்ளி

ஆறாம் வண்ணம் - வெள்ளை - பெண்கடவுள்  = சரஸ்வதி , ஆண் கடவுள் - பிரம்மன் ( முருகர் தான் பிரம்மன், பெரிய+ அமணன்= பேர்+ அமணன்= பேரமணன்= பிராமணன் = பிரம்மன்) ,தொடர்புடைய கோள் = வியாழன்.

ஏழாம் வண்ணம் - நீர்வண்ணம் - பெண்கடவுள்  = காவிரியம்மா ,கங்கையம்மா , தொடர்புடைய கோள் = சூரியன்

கன்னி கோயில் கன்னிகளில் முதல் கன்னி கருப்பு நிறத்திலும் சிறிய அளவு இருக்க வேண்டும் . கடைசி கன்னி பெரிய அளவில் இருக்க வேண்டும் இதுவே முனிகளுக்கும் பொருந்தும் ஆனால் பழைய இந்த வழிபாடு தன் வளமையை இன்று இழந்து உள்ளது .அளவு நிறம் சரியாக இன்று கடைபிடிக்க படுவதில்லை .

இதே வழிபாடு சுமேரிய கலாசாரத்தில்  அனுநாகி ( ஏழு நாயகி ) என்ற பெயரில் உள்ளது .
ஐரோப்பாவிலும் ஏழு தேவதைகள் ( sevan angles , sevan archangles )   என்ற பெயரில் உள்ளது .   

ஒலிம்பிக் கொடியில் கூட இந்த ஆறு வண்ணங்கள் உள்ளது.

எல் என்றால் வெளிச்சம் சூரியன் , எல்லப்பன் 
அல் என்றால் இருட்டு , அல்லி இரவில் பூக்கும் மலர் , அல்லும் என்றால் இரவு 
தமிழர்கள் வெளிச்சம் இருட்டு இரண்டையும் வழிபட்டனர் .
எல் + அல் +அன் = எல்லாளன் 
ஆனால் அரேபியர் வெய்யில் கொடுமையால் இருளை மட்டும் "அல்லா" என்று வழிபட்டனர் .
ஐரோப்பியர் குளிரின் கொடுமையால் வெளிச்சத்தை " எல்லோஹிம் (Elohim )  " என்று வழிபட்டனர்.
ஏழு கன்னிகளில் 
காவேரி அம்மன் = காவேரி எல் = கேபிரியல் ( Gabriel )
மீனாட்சி அம்மன் = மட்சம் ( மீன் ) எல் =  மிச்சேல் = மைக்கேல் ( Michel )
காளி அம்மன் = ரா ( இருட்டு ) எல் = ரபேல் ( Raphael ) 

அங்கு என்ற தமிழ் வார்த்தைக்கு வளைவு என்று பொருள் , வளைவாக இருப்பதால் அங்குசம் ,அங்கூரம் என்ற பெயர் பெற்றன.  இந்த அங்கு என்ற தமிழ் வார்த்தையை தான் ஆங்கிலத்தில் கோணத்தை குறிக்கும் angle என்ற வார்த்தைக்கு மூலம். Angel என்ற வார்த்தைக்ககும் "அங்கு" என்ற வார்த்தை தான் மூலம். வட்டமான வளைவு பாதையில் கோள்கள் செல்வதால் அவைகளை ஏஞ்சல் என்று உருவகப்படுத்தினர். ஆகாயத்தில் மிதந்து உருளும் கோள்களை ரக்கை உள்ள பெண்களாக உருவகப்படுத்தினர். நம் ஏழு கன்னிகளும் 7 கோள்களோடு தொடர்புடையது. 

 தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி தமிழ் கலாச்சாரமே உலகின் மூல கலாச்சாரம்.

தமிழர்களின் உண்மையான வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ஆரியபிராமணர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் கட்டுக்கதைகளை நாம் நம்ப கூடாது. 

விழித்துக் கொள்வோம் பிழைத்துக் கொள்வோம்.

- நன்றி தமிழ் சிந்தனையாளர் பேரவை.

செவ்வாய், 4 மார்ச், 2025

இராசி காரகத்துவங்கள்

இராசி காரத்துவங்கள்
------------------------------------
மேஷம்:

முட்செடிகள், மலை, சிறு காடு, போர்க்களம், நெருப்புள்ள பகுதி, கள்ளர்கள் வாழும் பகுதி, பகலில் காடு, இரவில் ஊர் அதிகவாசி, சிவப்பு நிறம், அரசு, தலைப்பாகம், இராணுவம், தீயணைப்புத் துறை, தொழிற்சாலை, விவசாயம். 

ரிஷபம்:

மாட்டுத் தொழுவம், பழங்கள், வெண்மை நிறம், உணவுத் தானியங்கள், முகம், வயல்வெளி, தச்சுப்பட்டறை, பெண், வெள்ளி, இரத்தினக் கற்கள், வியாபாரம், வட்டித் தொழில், கால்நடை வளர்ப்பு, கலைப் பொருட்கள், வாசனைப்பொருட்கள், திரைப்படம், கவிதை, பாட்டு, தங்கும் விடுதி. 

மிதுனம்:

வியாபார ஸ்தலம், பெரிய மண்டபம், சூதாட்ட ஸ்தலம், நகரங்கள், கடலுக்கு அண்மைய இடம், பாடசாலை புத்தகப்பை வைக்கும் இடம், செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை, விண்வெளித்துறை, கல்வித்துறை, நிதித்துறை, சோதிடம், வியாபாரம், எழுத்துத்துறை, மேடைப்பேச்சு. 

கடகம்:

நீர்நிலை, ஆறு, குளம், குளியல் அறை, வயல் சார்ந்த இடம், முத்து, சங்கு, திரவப் பொருட்கள், ஏற்றுமதி, இறக்குமதி வேளாண்மைத் தொழில், சோதிடம், மருத்துவம், போக்குவரத்துத் துறை, கல்வித்துறை, கலைத்துறை, பால் விற்பனைத் தலம், தெய்வஸ்தலம், இளஞ்சிவப்பு நிறம். 

சிம்மம்:

அரண்மனை, அலுவலகம், குகை, உயரமான பகுதி, விலங்குகள் வசிக்கும் இடம், மாநில அரசு, வயிறு, அரசு உத்தியோகம், அரசியல் நிர்வாகப் பொறுப்பு, இரும்பு மற்றும் நெருப்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, அறுவை சிகிச்சை மருத்துவர், சமூக சேவை செய்தல், தர்ம ஸ்தாபனம் நடத்துதல். 

கன்னி:

புத்திசாலித்தனம், கூர்மையான அறிவு, பெரிய வியாபார ஸ்தலம், படரும் கொடிகள், கல்விச் சாலை, சாம்பல் நிறம், இடுப்பு, பூந்தோட்டம், நகரம், கணக்கர், தணிக்கையாளர், பலவித வியாபாரம், ஆசிரியர், எழுத்தர், மளிகைக்கடை, தானிய சேமிப்புக் கிடங்கு. 

துலாம்:

வியாபார வீதி, பணம் வைக்கும் இடம், பெண்கள் குழுமியுள்ள இடம், மனிதன் துலாக்கோலைப் பிடித்து இழுக்கும் தோற்றம், பலதரப்பட்ட நிறம், அடி வயிற்றுக்கு மேலுள்ள வயிற்றுப்பகுதி. 

விருச்சிகம்:

முட்கள், கற்கள் நிறைந்த பகுதி, விஷ ஜந்துகள் வாழும் பகுதி, கிராமம், பள்ளத்தாக்கு, தொழிற்சாலைப் பகுதி, குப்பை கொட்டும் பகுதி, சுரங்கம், ஆண் மற்றும் பெண்களின் மர்ம உறுப்புகள், கறுப்பும் சிவப்பும் கலந்த நிறம், இரும்பு, நெருப்பு சம்பந்தமான தொழில், மின்னியல் துறை, மாந்திரிகம், சோதிடம், ஆன்மீகம், ஆராய்ச்சி செய்தல், தாதுப்பொருட்கள் சம்பந்தமான தொழில். 

தனுசு:

காட்டுப் பிரதேசம், ஆயுத உற்பத்திச்சாலை, வில் வித்தை, தொடை, வளமான பகுதி, இராணுவத் தளம், பூஜை செய்யும் அறை, கஜானா, மரவியாபாரம், ஆன்மீகத் துறை, சட்டம் மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, போர்ப் பயிற்சி, தர்மஸ்தாபனம் நடத்துதல். 

மகரம்:

வீட்டுப் பொருள் வைக்கும் பகுதி, அணைக்கட்டுப் பகுதி, கடற்கரை, சேறு நிரம்பிய பகுதி, காவலர் குடியிருப்பு, தொழிற்சாலை நிரம்பிய பகுதி, உணவு விடுதி, உர வியாபாரம், எண்ணெய் வியாபாரம், சுரங்கத் தொழில், திரவப் பொருள் விற்பனை, கழிவுப் பொருட்கள் விற்பனை, தோல், இரும்பு வியாபாரம், கட்டிட வேலை, கடினமான வேலை, கீழ்மட்ட ஊழியம், முழங்கால். 

கும்பம்:

மறைவிடம், ரகசிய இடம், இருண்ட பிரதேசம், மதுபானக் கடைகள், இடுப்பின் பின்புறம், சூதாட்ட ஸ்தலங்கள், கசாப்புக் கடை, சோம்பேறிகள், புஞ்சை தானியம் விளையும் இடம், சோதிடம், ஆன்மீகம், ஆசிரியர், ஆலோசனை வழங்குபவர், விமானத்துறை, தீயணைப்புத் துறை, சிறைச்சாலை, வெடிகுண்டு தயாரித்தல், சுங்க இலாகா, உளவுத்துறை. 

மீனம்:

கிணறு, நீர் நிறைந்த தொட்டி, கடற்கரை, நதிக்கரை, புண்ணிய ஸ்தலங்கள், கல்வித் துறை, மருத்துவம், நீதித்துறை, கடற்படை, ஆலயப் பணி, மத போதகர்கள், புனித யாத்திரை, பாதங்கள்.