சனி, 28 டிசம்பர், 2024

ஹோமியோபதி மருத்துவம்

ஹோமியோபதி மருத்துவம் 
காலை வணக்கம் அனைவருக்கும் 

எனக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், பலவீனம் ஏற்பட்டது காய்ச்சல் பலவீனம் என்பதற்காக அதற்கான மருந்து கிடையாது நம் மருத்துவத்தில் ஆனால் அந்த காய்ச்சல் துயரரை என்ன செய்கிறது என்று தான் பார்க்க வேண்டியிருக்கிறது அப்படி பார்க்கும் போது காய்ச்சலால் போர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரு விருப்பம் ஏற்பட்டிருந்தது இந்த குறி குணங்கள் கண்டு ஹோமியோபதி மருந்து நக்ஸ் வாமிகா 6 மருந்து தேர்வு செய்து இரவு மருந்து எடுத்துக் கொண்டு தூங்கிவிட்டேன் காலை காய்ச்சல் விட்டிருந்தது உடன் அசதியும் இருமலும் ஏற்பட்டது . ஒரு தொந்தரவாக இருந்தது இருமல்,இருமலுக்கு என்று மருந்து எடுக்க முடியாது ஓமியோபதி மருத்துவத்தில் இருமலால் துயரர் எப்படி துன்பப்படுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும் படுத்தால் இருமலால் தூக்கம் வருவதில்லை இந்தக் குறி குணத்துக்கு ஹோமியோபதி மருந்து பல்சடில்லா 6 எடுத்துக் கொண்ட பிறகு இருமல் குறைந்து தூக்கம் வர ஆரம்பித்து விட்டது இப்போது மூக்கில் கெட்டியான மஞ்சள் சளி குறைந்து கொண்டே வருகிறது இதற்கு தேவைப்பட்டால் பல்சடில்லா 6 திரும்ப எடுக்க வேண்டி இருக்கும்.

வியாழன், 26 டிசம்பர், 2024

12 தாது உப்புகள்

**12 உயிர்வேதியியல் மருந்துகளுக்கான சுருக்கமான அறிமுகம்**
==================================

1. **கால்கேரியா ஃப்ளோரிகா**
- **விளக்கம்:** கால்சியம் ஃப்ளோரைடு, ஃப்ளூர் ஸ்பார்
- **பயன்பாடுகள்:** கண்புரை, முதுகுவலி, சுளுக்கு, மார்பக கட்டிகள், தாமதமாக பல் துலக்குதல், பல் சிதைவு மற்றும் வீக்கம், தோல் விரிசல், எளிதான இரத்தப்போக்கு, பரம்பரை சிபிலிஸ், அடினாய்டுகள்.

2. **கால்கேரியா பாஸ்போரிகா**
- **விளக்கம்:** கால்சியம் பாஸ்பேட், சுண்ணாம்பு பாஸ்பேட்
- **பயன்பாடுகள்:** நரம்பு பலவீனம், கால்-கை வலிப்பு, குடல் வீக்கம், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், தாமதமாக பல் துலக்குதல், காசநோய், மலத்தில் செரிக்கப்படாத உணவு, வயிற்றில் வாயு, நீரிழிவு தொடர்பான எலும்பு முறிவுகள், மன சோர்வு, பிரைட்ஸ் நோய் மற்றும் ஸ்க்ரோஃபுலஸ் தோல் நோய்கள்.

3. **கால்கேரியா சல்பூரிகா**
- **விளக்கம்:** கால்சியம் சல்பேட், ஜிப்சம், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்
- **பயன்பாடுகள்:** கொதிப்புகள், கார்பன்கிள்கள், சீழ் நிறைந்த முகப்பரு, தீக்காயங்கள், அரிப்பு, ஃபிஸ்துலா, சுரப்பி வீக்கம், நரம்பு பலவீனம், இனப்பெருக்க உறுப்பு பலவீனம், மனநிலை மாற்றங்கள், உள்ளங்காலில் எரியும் அரிப்பு, அலோபதி மருந்து பயன்பாட்டினால் ஏற்படும் பலவீனம்.

4. **ஃபெரம் பாஸ்போரிகம்**
- **விளக்கம்:** ஃபெரோசோ-ஃபெரிக் பாஸ்பேட், இரும்பு பாஸ்பேட்
- **பயன்பாடுகள்:** இரத்த சோகை, இரத்தப்போக்குக்குப் பிந்தைய இரத்த சோகை, விரைவான துடிப்பு, தலைவலி, வீக்கம் அல்லது பூசப்பட்ட நாக்கு, பசியின்மை, எடை மற்றும் வலிமை குறைதல், குழந்தைகளில் உடல் மற்றும் மன பலவீனம்.

5. **காளி முரியாட்டிகம்**
- **விளக்கம்:** பொட்டாசியம் குளோரைடு
- **பயன்பாடுகள்:** இதய பலவீனம், படபடப்பு, விரிவடைந்த இதயம், பெரிகார்டிடிஸ், இரத்த உறைவு, சுரப்பி விரிவாக்கம், நிமோனியா, கல்லீரல் பலவீனம், செரிமான கோளாறுகள், பசியின்மை, தொண்டை வலி.

6. **காளி பாஸ்போரிகம்**
- **விளக்கம்:** பொட்டாசியம் பாஸ்பேட்
- **பயன்பாடுகள்:** மன பலவீனம், மன முறிவு, மனச்சோர்வு, மன அழுத்தம் காரணமாக தலைவலி, மூளை சோர்வு, வாயு தூண்டப்பட்ட இதய பிரச்சினைகள், துர்நாற்றம் வீசும் மலம், நிற்கும்போது தலைச்சுற்றல், பெருமூளை இரத்த சோகை, இனப்பெருக்க உறுப்புகளில் பலவீனம்.

7. **காளி சல்பூரிகம்**
- **பயன்பாடுகள்:** தட்டம்மை, பெரியம்மை தோல் பிரச்சினைகள், மூச்சுத்திணறல் ஆஸ்துமா, பிற்பகல் காய்ச்சல், தோல் நிலைகள், ஒட்டும் மற்றும் துர்நாற்றம் வீசும் வெளியேற்றங்கள், உச்சந்தலையில் வறட்சியிலிருந்து பொடுகு.

8. **மெக்னீசியா பாஸ்போரிகா**
- **விளக்கம்:** மெக்னீசியம் பாஸ்பேட்
- **பயன்பாடுகள்:** பல்வேறு வகையான வலி மற்றும் வலிகள், தலைவலி, வயிற்று வலி, நரம்பியல், ஸ்பாஸ்மோடிக் வலி, நினைவாற்றல் இழப்பு, மோசமான செறிவு, நரம்பு பலவீனம் மற்றும் நரம்பு செல்களுக்கான ஊட்டச்சத்து.

9. **நேட்ரம் முரியாட்டிகம்**
- **விளக்கம்:** சோடியம் குளோரைடு
- **பயன்பாடுகள்:** உப்பு ஏக்கம், மலச்சிக்கல், தலைவலி (ஆஸ்துமாவுடன்), சளி, தும்மல், மூக்கு ஒழுகுதல், வெறி, மயக்கம், டைபாய்டு, காய்ச்சலின் போது மயக்கம், பெருங்குடல், கல்லீரல் கோளாறுகள், புழுக்கள், மன பலவீனம்.

10. **நேட்ரம் பாஸ்போரிகம்**
- **விளக்கம்:** சோடியம் பாஸ்பேட்
- **பயன்பாடுகள்:** அமிலத்தன்மை, செரிமான பிரச்சினைகள், குழந்தைகளுக்கு அதிகமாக உணவளிப்பதால் ஏற்படும் அதிகப்படியான லாக்டிக் அமிலம், கோனோரியா, நாக்கில் லேசான பூச்சு, மார்பு வலி (முலைக்காம்புக்கு கீழே), வாத தோள்பட்டை வலி, இரவு நேர வெளியேற்றம், கண் நோய், காது வெளியேற்றம்.

11. **நேட்ரம் சல்பூரிகம்**
- **விளக்கம்:** சோடியம் சல்பேட், கிளாபர்ஸ் உப்பு
- **பயன்பாடுகள்:** இரைப்பை அழற்சி, வாயு, வயிற்று வலி, கல்லீரல் கோளாறுகள், சீழ் கொண்ட நகப் படுக்கை வீக்கம், சோர்வு, மயக்கம், கண்களைச் சுற்றி மருக்கள், உச்சந்தலையில், முகம், மார்பு மற்றும் ஆசனவாய், நெஃப்ரிடிஸ், முதுகுத்தண்டு வலி, கழுத்து வலி, சாக்ரல் வலி.

12. **சிலிசியா**
- **விளக்கம்:** சிலிக்கா, சிலிசிக் ஆக்சைடு
- **பயன்பாடுகள்:** ரிக்கெட்ஸ், கீல்வாதம், புரோஸ்டேட் சுரப்பி விரிவாக்கம், நடுத்தர காது தொற்றுகள், உடலில் எங்கும் சீழ், ​​கீல்வாதம், மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் அஜீரணம்.

புதன், 25 டிசம்பர், 2024

ஈவே ராமசாமியும் கருணாநிதி யும்

Facebook -ல் வந்த பதிவு...

🤣ஈவேராவை முரசொலி பத்திரிகையில் கருணாநிதியால் கேட்கப்பட்ட பகுத்தறிவு கேள்விகளில் சில: ௭
1. இவரின் (ஈவேரா) உண்மையான தந்தை பெயர் என்ன?
2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?
3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?
4. இவர் 5 ௭ ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை (ஈவேராவை) செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன?
5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது?
6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்?
7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்?
8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?
9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்பட்டு இருக்கிறது தெரியுமா?
10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?
11. 72 ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக?
இதுபோன்று இன்னும் பலகேவலமான அர்ச்சனைகள் (ஈவேரா) பெரியாருக்கு தொடர்ந்தன. அவை தொடர்ந்து கருணாநிதி ஆசிரியராக இருந்த முரசொலியில் வெளியாகின.
எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் 'சான்றிதழ்' வழங்கப்பட்டவர்தான் பெரியார் என்ற ஈவேரா. அந்த பெரியார் வாழ்க என்று பாராளுமன்றத்தில் கத்துகிறார் கனிமொழி கருணாநிதி.
சரி, பெரியாருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? இவை எல்லாம் திராவிட அசிங்கங்கள்....

செவ்வாய், 24 டிசம்பர், 2024

நா முத்துக்குமார் அவர்களின் கவிதை🌻

நா.முத்துக்குமார் அவர்களின் கவிதை 

🍀மழை பெய்யா நாட்களிலும்

மஞ்சள் குடையோடு வரும்

ரோஜாப்பூ மிஸ்

வகுப்பின் முதல் நாளன்று

முன்பொரு முறை

எங்களிடம் கேட்டார்

"படிச்சு முடிச்சதும்

என்ன ஆகப் போறீங்க?"

_______

முதல் பெஞ்சை

யாருக்கும் விட்டுத் தராத

கவிதாவும் வனிதாவும்

"டாக்டர்" என்றார்கள்

கோரஸாக

இன்று

கல்யாணம் முடிந்து

குழந்தைகள் பெற்று

ரேஷன் கடை

வரிசையில்

கவிதாவையும்;

கூந்தலில் செருகிய

சீப்புடன்

குழந்தைகளை

பள்ளிக்கு வழியனுப்பும்

வனிதாவையும்

எப்போதாவது

பார்க்க நேர்கிறது.

________

"இன்ஜினியர் ஆகப்போகிறேன்"

என்ற எல்.சுரேஷ்குமார்

பாதியில் கோட்டடித்து

பட்டுத் தறி

நெய்யப் போய்விட்டான்.

_______

"எங்க அப்பாவுடைய

இரும்புக் கடையைப்

பாத்துப்பேன்"

கடைசி பென்ச்

சி.என்.ராஜேஷ்

சொன்னபோது

எல்லோரும் சிரித்தார்கள்.

இன்றவன்

நியூஜெர்சியில்

மருத்துவராகப்

பணியாற்றிக்கொண்டே

நுண் உயிரியலை

ஆராய்கிறான்.

_______

"பிளைட் ஓட்டுவேன்"

என்று சொல்லி

ஆச்சரியங்களில்

எங்களைத் தள்ளிய

அகஸ்டின் செல்லபாபு

டி.ன்.பி.ஸ்.சி. எழுதி

கடைநிலை

ஊழியனானான்.

____-___

"அணுசக்தி

விஞ்ஞானியாவேன்"

என்ற நான்

திரைப் பாடல்கள்

எழுதிக் கொண்டிருக்கிறேன்.

-_______

வாழ்க்கையின் காற்று

எல்லாரையும்

திசைமாற்றிப் போட,

"வாத்தியாராவேன்"

என்று சொன்ன

குண்டு சுரேஷ் மட்டும்

நாங்கள் படித்த

அதே பள்ளியில்

ஆசிரியராகப்

பணியாற்றுகிறான்.

"நெனைச்ச வேலையே

செய்யற,

எப்படியிருக்கு மாப்ளே?"

என்றேன்.

சாக்பீஸ் துகள்

படிந்த விரல்களால்

என் கையைப்

பிடித்துக்கொண்டு

"படிச்சு முடிச்சதும்

என்ன ஆகப் போறீங்க?

என்று மட்டும்

என் மாணவர்களிடம்

நான் கேட்பதே இல்லை! "

என்றான்.

நெல்லையின் சிறப்புகள் 🌼🦈

திருநெல்வேலி, திருநவேலி, நெல்லை என்று தமிழர்களாலும் , தின்னெவெளி (TINNEVELLY) என்று ஆங்கிலேயர்களாலும்  அழைக்கப்படும், தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரம். 

தலைநகர் சென்னையிலிருந்து 625 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இம்மாவட்டத்தில் ஒவ்வொரு ஊர்களுமே தனிச்சிறப்பைக் கொண்டுள்ளன.
  #நெல்லையின்_சிறப்புகள்

மிகவும் புகழ்பெற்ற நகரங்கள் :

திருநெல்வேலி , சங்கரன்கோவில் , தென்காசி , அம்பாசமுத்திரம், வள்ளியூர், திசையன்விளை, நாங்குநேரி ஆகும். செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது.

பெயர் விளக்கம்:

16 ஆம் நுற்றாண்டு நுல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு 'வேணுவனம்' என்று பெயர் சூட்டிப் பாடுகிறது. 'வேணு' என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். 

தனது அடியாரின் காய்வதற்காக போட்ட நெல் மழையில் நனைந்து விடாமல் திருவே (இறைவனே) #வேலியாக நின்று பாதுகாத்ததால். திருநெல்வேலி என்று பெயர்காரணம். இன்றும் ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

நெல்வயல்களே வேலியாக உடைய ஊர் என்கிற பொருளில் 'திருநெல்வேலி' எனவும் அழைக்கப்படுகிறது.

இரட்டை நகரங்கள் :

திருநெல்வேலியும் #பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. தாமிரபரணி ஆறு ஆனது இவ்விரு நகரங்களுக்கிடையே ஒடுகின்றது. பாளையங்கோட்டை கல்வி நிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் #ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது.

பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.
இரட்டை நகரங்களை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலமும் அங்கிருந்து தெரியும் நகரின் காட்சியும் அழகானவை..

சிறப்புகள் :

பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு :

சேரன்மாதேவிக்கு அருகே தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள், ஜெர்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சீவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பகுதியான மருகால்தலையில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலிமொழியில் அசோகன் கல்வெட்டுகளும், பௌத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன.
மொகலாயர் காலத்தில் கட்டப்பட்ட நாராயணம்மாள் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது.

திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன்கோட்டையில் காணலாம்.

வீரகேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழின் தோற்றம் :

தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் பாணினியையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.

திருநெல்வேலி ஆன்மீக சுற்றுலா தளங்கள் :

1.காந்திமதி சமேத நெல்லையப்பர் கோவில்.
2.தென்காசி விஸ்வநாதர் திருக்கோவில்.
3.சங்கரன்கோவில் கோமதியம்மன் கோவில்.
4.பண்பொழி திருமலைகுமாரக் கோவில்.
5.திருப்புடைமருதூர் திருக்கோவில்.
6. பாபநாசநாதர் திருக்கோவில், பாபநாசம்.
7. குற்றாலநாதர் திருக்கோவில், குற்றாலம்.
8.சொரிமுத்து அய்யனார் கோவில்.
9.கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்கள்.
10.திருக்குறுங்குடி நம்பி கோவில்.
11.நாங்குநேரி பெருமாள் கோவில்.
12.பணகுடி இராமலிங்கசுவாமி கோவில்.
13.வள்ளியூர் முருகன் கோவில்.
14.நித்திய கல்யாணி அம்மன் கோவில்.
15.சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில்.
16.குறுக்குத்துறை முருகன் கோவில்.
17. அம்பாசமுத்திரம் சிவன் கோவில்.
18.உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில்.
19.குட்டம் ஆனந்தவல்லியம்மன் கோவில்.
20.நவ திருப்பதி (நவ கைலாயங்கள்).
21.கைலாசநாதர் கோவில், அம்பை.
22.விஸ்வாமித்திரர் கோவில், விஜயாபதி.
23.அகத்தியர் கோவில், அகத்தியமலை.
24.இராஜகோபாலசுவாமி கோவில்,ஜங்சன்.
25.வரதராஜ பெருமாள் கோவில், தருவை.

26.பாளை கதீட்ரல் தேவாலயம்.
27.உவரி கப்பல்மாதா தேவாலயம்.
28.உவரி புனித அந்தோனியார் திருத்தலம்.
29.தெ.கள்ளிகுளம் பனிமயமாதா ஆலயம்.
30. திசையன்விளை உலக இரட்சகர் ஆலயம்.

31.ஆத்தாங்கரை பள்ளிவாசல்.
32.பொட்டல்புதூர் தர்கா.
33. கடையநல்லூர் ஜும்மா பள்ளிவாசல்.

முக்கிய இடங்கள் :

1.ஆதிச்சநல்லூர் அகழ்வராய்ச்சி மையம்.
2.மாவட்ட அறிவியல் மையம், கொக்கிரகுளம்.
3.முண்டந்துரை - களக்காடு சரணாலயம்.
4.கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்.
5.ஐந்தருவி.
6.அகத்தியர் மலை.
7.பாபநாசம் அணை.
8.மணிமுத்தாறு அணை.
9.பொதிகை மலை.
10.தேரிக்காடு.
11.கால்டுவெல் இல்லம், இடையன்குடி.
12.அரசு அருங்காட்சியகம், நெல்லை.
13.குண்டாறு அணை.
14.விஜயநாராயணம் கடற்படை தளம்.
15.மகேந்திரகிரி விண்வெளி மையம்.
16.தாமிரபரணி புஷ்கர தளங்கள்.
17.கூடன்குளம் அணுமின் நிலையம்.
18.பல முக்கிய சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவு இல்லங்கள்.
19.குத்துக்கல்வலசை.
20.மாஞ்சோலை.
21.பழைய குற்றாலம்.

அல்வா :

திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இருட்டுக்கடை அல்வா புகழ்பெற்றது.

சங்கரன்கோவில் பிரியாணி:

தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது.

இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும் இதன் சிறப்புகளாக உள்ளன. 
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை.

சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே அல்லாமல் வெளி ஊர் மற்றும் வெளிமாநில மக்களின் நல்லாதரவைப் பெற்றது.

கல்லிடைக்குறிச்சி இரட்டை அப்பளம் !!

இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிராபரணி ஆறு செல்லும் ஊரான கல்லிடைக் குறிச்சியானது இரட்டை அப்பளத்திற்குப் பெயர் போனது.  அப்பளம் இல்லாத விருந்து இல்லை. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தரமான, சுவையான அப்பளம். தாமிரபரணி, தரணிக்கு புகழ் சேர்க்கும் பற்பல  நிகழ்வுகளில். அப்பளமும் ஓர் சிறப்பு. மரவள்ளிக் கிழங்கு அப்பளம், அரிசி அப்பளம், உளுந்து அப்பளம்
அருமையாக இருக்கும்.

#LemonCity_Puliyangudi_TenkasiDistrict

புளியங்குடி, #திருநெல்வேலி சீமை #தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சியாகும். அதன் தற்போதைய உத்தேச மக்கள் தொகை எழுபதாயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
புளியங்குடி எலுமிச்சை நகரம் எனவே அந்தப் பகுதி மக்களால் பெருமையாகச் சொல்லப்படுகிறது. ஒரே ஒரு விவசாயப் பொருளை மட்டுமே வைத்து அந்தப் பகுதி பிரபலமாகி, அதன் பெயரிலேயே நகரம் அறியப்படுவது என்பது அநேகமாக தமிழ்நாட்டில் புளியங்குடி ஒன்றாகவே இருக்கும் எனத் தெரிகிறது. அதுவும் கூட எலுமிச்சை என்பது அரிசியையோ அல்லது உப்பையோ போல அத்தியவசியமான உணவுப் பொருள் அல்ல. அது ஒரு துணைப் பொருள் மட்டுமே.

திசையன்விளை சந்தை - சிறப்பு!

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் திசையன்விளை முருங்கைக்காய்.

திசையன்விளை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் முருங்கைகள் பயிரிடப்பட்டுள்ளது. வறட்சியை தாங்கும் சக்தி முருங்கைக்கு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலம் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர்.

பத்தமடை பாய் :

திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பூலித்தேவன் நினைவகம் :

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் 1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான்.
இத்தகைய மாவீரனை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவரோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனார் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும்செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி நிறுவனங்கள் :

மாநகராட்சி - திருநெல்வேலி.
நகராட்சிகள் - 6.
ஊராட்சி ஒன்றியம் - 19.
பேரூராட்சிகள் - 39.
சட்டசபை தொகுதிகள் - 11.

1.திருநெல்வேலி.
2.பாளையங்கோட்டை.
3.சேரன்மாதேவி.
4.அம்பாசமுத்திரம்.
5.தென்காசி.
6.ஆலங்குளம்.
7.வாசுதேவநல்லூர்.
8.சங்கரன் கோவில்.
9.இராதாபுரம்.
10.நாங்குநேரி.
11.கடையநல்லூர்.

கல்வி :

பள்ளிகள் : தொடக்கப்பள்ளிகள் 1,460 , நடுநிலை 411 , உயர்நிலை 90 , மேல்நிலை 129 , கல்லு}ரிகள் 14 உள்ளன.
தொழில் கல்வி நிறுவனங்கள்-3
அரசு மருத்துவக் கல்லு}ரி@ அரசு சித்த மருத்துவக் கல்லு}ரி
தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7
தொழிற் நுட்பக் கல்லு}ரிகள் 5
ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-8

மருத்துவம் :

மருத்துவமனைகள்-10, 
தொடக்க மருத்துவ நலநிலையம் - 55, 
துணை தொ.ம.நலநிலையம்-385.

ஆற்றுவளம் :

மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன.

தாமிரபரணி :

பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, களரியாறு, சேர்வை ஆறு ஆகிய வற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது. இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20 கி.மீ தொலைவிலுள்ள புன்னைக் காயல் என்னுமிடத்தில் மன்னார் வளைகுடாக் கடலுடன் கலக்கிறது.

தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1750 ச.கி.மீ. மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ.தான். இதிலும் 24 கி.மீ தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ தான்.

சிற்றாறு :

இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில் 27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து ஆறாக உருபெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு.

அணைகள் :

மணிமுத்தாறு அணை :

அணையின் மொத்த நீளம் 3 கி.மீ அதாவது 9820 அடியாகும். அதன் நடுவேயுள்ள கல் அணையின் நீளம் 1230 அடி தேக்கம் கூடிய நீரின் பரப்பு மூன்றே கால் ச.மைல் சாதாரணமாக 406 கோடி கன நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலம் நீர்பாசன வசதி பெறுகின்றன.

பாபநாசம் அணைகள் :

பாபநாசம் மலை மீது மேலணை-கீழணை என்ற 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலணை 2 மலைகளுக்கிடையில் கட்டப் பட்டுள்ளது. இங்கு 120 அடிவரை நீரைத் தேக்கி வைக்கலாம்.

ஸ்ரீமுகப்பேரி அணை :

தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி, பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும், ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500 ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.

கடநா நதி (கருணை ஆறு)அணை :

சம்பங்குளத்தில் உள்ளது கடநா நதி அணை.

மலைவளம் :

திருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1500 மீட்டர் ஆகும்.

அகத்தியமலை :

பொதிகை மலை என்பது இதுதான். இதன் உயரம் 1800 மீ. இங்குதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. அகத்தியர் மலை மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி தரும். இரண்டு பருவக்காற்றாலும் இம்மலை நன்மை அடைகிறது.

ஐந்தலை பொதிகை :

அகத்திய மலைக்குத் தெற்கே இம்மலை இருக்கிறது. சமவெளியிலிருந்து கிழக்கே நோக்கினால், வரிசையாக அணிவகுத்து நிற்கும் உருவத்தோற்றம் தென்படும். இங்கே தான் நாகமலையும் அதன் பக்க மலைகளும் உள்ளன. திருக்குறுங்குடிக்கப்பால் இம்மலைபகுதி 1800 மீ வரை உயர்ந்து காணப்படுகிறது. இதுவே திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் இறுதிக் கட்டமாகும்.

திருநெல்வேலியில் குறிப்பிடத்தக்கவர்கள் :

மணியாச்சி வாஞ்சிநாதன், மாவீரன் அழகுமுத்துக்கோன் ( கட்டாலங்குளம்), பூலித்தேவன், வீரபாண்டிய 
கட்டபொம்மன் (பாஞ்சாலங்குறிச்சி), 
ஊமைத்துரை - (பாஞ்சாலங்குறிச்சி), 
வ.உ.சிதம்பரனார் - (ஒட்டப்பிடரம்), 
மாவீரன் சுந்தரலிங்கனார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் (எட்டயபுரம்), சிங்கம்பட்டி ஜமீன்.

ஆன்மிகத் தலங்கள் :

காந்திமதி நெல்லையப்பர் கோவில் :

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில். இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

முப்பீட தலங்கள்:

அம்பாசமுத்திரம் - திருமூலநாதர்தி கோயில்.
ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் கோயில்.
வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில். (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

பஞ்ச ஆசன தலங்கள்:

ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்.
களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்.
நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்.
விஜயநாராயணம்- மனோன்மணீசர் கோயில்.
செண்பகராமநல்லூர் - ராமலிங்கர் கோயில்.

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்:

சங்கரன்கோவில் - சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் - மண் தலம் (ப்ருத்திவி).

கரிவலம்வந்தநல்லு}ர் - பால்வண்ணநாதர் - அக்னி தலம்.

தாருகாபுரம் - நீர் தலம்.
தென்மலை- காற்று தலம்.
தேவதானம் - ஆகாய தலம் (தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது).

காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்:

சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்.
ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் கோயில்.
கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்.
திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் கோயில்.
பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்.

இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்:

களக்காடு- சத்யவாகீசர்.
பத்தை - குலசேகரநாதம்.
பத்மனேரி - நெல்லையப்பர்.
தேவநல்லு}ர் - சோமநாதம்.
சிங்கிகுளம் - கைலாசநாதம்.

நவ சமுத்திர தலங்கள் :

1.அம்பாசமுத்திரம்.
2.ரவணசமுத்திரம்.
3.வீராசமுத்திரம்.
4.அரங்கசமுத்திரம்.
5.தளபதிசமுத்திரம்.
6.வாலசமுத்திரம்.
7.கோபாலசமுத்திரம்.
8.வடமலைசமுத்திரம் (பத்மனேரி).
9.ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

பஞ்ச பீட தலங்கள் :

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

கூர்ம பீடம் - பிரம்மதேசம்.
சக்ர பீடம் - குற்றாலம்.
பத்ம பீடம் - தென்காசி.
காந்தி பீடம் - திருநெல்வேலி.
குமரி பீடம் - கன்னியாகுமரி. (இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது).

காட்டு வளம் :

காடுகளின் பரப்பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள் அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன.
மரங்களில் கோங்குதான் விலை மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன.
அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன.
நாங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு.
செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.

காட்டு விலங்குகள் :

செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன.
சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில் காட் டெருதுகள் காணப்படுகின்றன.

புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம்.

தலை சிறுத்த சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன. எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன.

பறவைகள் :

மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப் படுகின்றன. சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள் இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம் குளத் திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன.
பருத்தி வாத்து என்ற ஒருஇனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது.
உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.

நிலவளம் :

திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது.

மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம். புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டங்களில் விளைகின்றன. இவை கரிசல் காடுகள்.

உவரி, கூடன்குளம் நெய்தல் நிலமாகவும்,
மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். திசையன்விளை வட்டத்தின் தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற்குன்றுகள் 200 அடிக்கும் மேல் உள்ளன.

தொகுப்பு :    
                       𝐔𝐯𝐚𝐫𝐢 𝐀.𝐌.𝐊𝐮𝐭𝐭𝐢,
    𝐒𝐫𝐢𝐒𝐮𝐲𝐚𝐦𝐛𝐮𝐥𝐢𝐧𝐠𝐚𝐬𝐰𝐚𝐦𝐲 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐂𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐭𝐲,
                     𝐔𝐯𝐚𝐫𝐢 - 𝐓𝐢𝐫𝐮𝐧𝐞𝐥𝐯𝐞𝐥𝐢 𝐃𝐭.

தருவைகள் :

பாலைவன ஊற்றுகளை போல இம்மணற்குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் 'தருவை'கள் என்று அழைக்கின்றனர்.

கனிமங்கள் :

சுண்ணாம்புக்கல் :

சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவையான இப்பொருள் நாங்குநேரி வட்டத்திலுள்ள வள்ளியூர், களக்காடு, முதலிய ஊர்களில் கிடைக்கிறது.

கார்னர்டு மணல் :

உப்புத்தாள் செய்ய உதவும் இவ்வகை மணல் கடலோரப் பகுதிகளில் கிடைக்கிறது.

அல்லனைட் :

அணுசக்திக்கு தேவையான இம்மூலப்பொருள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.

மோனசைட் :

இது உலோகச் சத்து நிறைந்த பொருள். கடற்கரை மணலில் கிடைக்கிறது. விளக்குத்திரி, மென்மையான எரியும் கம்பிகள், சில மருந்துகள் ஆகியவை செய்வதற்கு இது பயன்படுகிறது.

மைக்கா :

நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டியில் சிறிதளவு கிடைக்கிறது.

கிராபைட் :

உருக்கு வேலைக்கு உதவும். சிறுகலங்கள் செய்வதற்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. அம்பை வட்டத்திலுள்ள சிங்கம்பட்டிப் பகுதியிலும், சங்கரன் வட்டத்துக் குருவிக்குளம் பகுதியிலும் இது மிகுதியாகக் கிடைக்கிறது.

வேளாண்மை :

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வட்டங்களில் நெல்லும், சங்கரன் கோயில் வட்டத்தில் பருத்தியும், மிளகாயும் மிகுதியாக விளைகின்றன. இம் மாவட்டத்து நெல் வகைகளுள், ஆனைக் கொம்பன் என்னும் வகை குறிப்பிடத்தக்கது.
19-ஆம்நு}ற்றாண்டில் பருத்தி விளைச்சல் அதிகம் இருந்தது. தற்போது குறைந்தளவே சாகுவடி செய்யப்பட்டு வருகிறது.
தென்காசி வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகிய வையும் சங்கரன் கோயில் நாங்கு நேரி வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை எல்லாக் காலங் களிலும் இங்குக் கிடைக்கின்றன. இராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் பகுதிகள் பனைமரங்கள் மிகுதி.

பணப்பயிர்கள் :

1884-ஆம் ஆண்டு இங்கு காப்பித் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன.
1902-ஆம் ஆண்டு நாங்குநேரி வட்டத்தில் 27 காப்பி எஸ்டேட்டுகள் இருந்தன.
1915-இல் 13 தோட்டங்கள் மட்டும் தனியார் வசம் இருந்தன. சில தோட்டங்களில் பழங்களை விளைவித்தனர். இங்கு சீன-ஜப்பானிய வகைகள் பயிரிடப்பட்டன.
குற்றாலத்திற்கு மேல் மலைப்பகுதியில் இருக்கும் தெற்குமலை எஸ்டேட்டுகளும், ஹோப் எஸ்டேட்டுகளும் குற்றாலத்துத் தேனருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தெற்குமலை எஸ்டேட்டுகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.

சுற்றுலாத் தலங்கள் :

பாபநாசம் நீர்வீழ்ச்சி :

அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்திய மலையில் தோன்றும் சிற்றாறு மேலணையிலிருந்து 40 அடி தொலைவில் விழுகிறது.

மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி :

குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம்.
பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம்.

குற்றாலம் :

திருக்குற்றாலம், தென்காசியிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் அருவியைப் பார்ப்பதற்கு ஏற்று காலமாகும்.
இவ்வுரைச் சிறப்பித்து 'குற்றால குறவஞ்சி' என்ற இலக்கியம் எழுந்துள்ளது.
குற்றாலத்தில் அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு ஆகும். இந்த ஆறு திரிகூட மலையில் தோன்றி, வரும் வழியில் முதலில் நு}று அடி உயரத்திலிருந்து விழுகிறது.

தேன் அருவி :

தேன் அடைகள் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்று

ஐந்தருவி :

சிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகிறது. அதனால் இதனை ஐந்தருவி என அழைக்கின்றனர். ஆற்றுநீர், ஐந்து அருவிகளாக விழும் காட்சி கண்களுக்கு இனிமையாகும்.

முண்டந்துறை புலிகள் புகலிடம் :

திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது. இப்புகலிடம் புலிகளின் பாதுகாப்பு கருதி உண்டாக்கப்பட்டது. மேலும் இங்கு சிறுத்தை, சாம்பார் மான், பன்றிக் கரடி, நீலகிரி வகை குரங்கு, சிங்கவால் குரங்கு போன்றவைகளைக் காணலாம். முண்டந்துறையைக் காண ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து ஜனவரி வரை செல்லலாம். தங்குவதற்கு ஏற்ற வசதிகள் உண்டு. முன்னரே பதிவு செய்ய வேண்டும்.

களக்காடு விலங்குப்புகலிடம் :

திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது. தாவர வியலாளர்களுக்கும், விலங்கியலாளர்களுக்கும் ஏற்ற இடம்.
இங்கு பலவகையான தாவரங்களும், புலி, சிறுத்தை, குள்ளநரி, காட்டு நாய்கள், ராஜநாகம் மலைப்பாம்பு, பலவகைப்பாம்புகள் ஆகியவை காணப்படு கின்றன.
இப்புகலிடத்தைக் காண்பதற்கு ஏற்ற மாதங்கள் : மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை@ இங்கு சிங்கவால் குரங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் மேலும் காணத்தகுந்த இடங்களாக இருக்கும் பறவைகள் புகலிடங்கள் கூந்தக்குளம் பறவைகள் புகலிடம், மற்றும் அரியகுளம் பறவைகள் புகலிடம் முதலியவை.

தாமிரபரணி : 

திருநெல்வேலிக்குனு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அத்தனை பெருமைகளுக்கும் காரணம் தாய் தாமிரபரணி தாங்க. பொதிகை மலைல பிறந்து நெல்லை தூத்துக்குடியை செழிக்க வைக்கிற தெய்வம். உலகத்தில் உள்ள எல்லா  நதிகளும் மக்களின் பாவத்தை போக்விட்டு, தன்  பாவத்தை தாமிரபரணியிடம் வந்து போக்கிக்கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.  இந்த தண்ணியோட  ருசிக்கு எந்த தண்ணியும் ஈடாகாது. திருநெல்வேலி அல்வ

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

யார் இந்த யூதர்கள்..

யார் இந்த யூதர்கள?

 தமிழ் இனத்திற்கு ஆதி முதல் ஒரு எதிரி இனம் உள்ளது என்றால் அது யூத இனம் தான்.

11000 ஆண்டுகளுக்கு முன் குமரி கண்டம் நீரால் மூழ்கிய போது அதில் தப்பித்த மக்கள் உலகின் பல பகுதிக்கு கப்பல் மூலம் சென்றார்கள். உலகின் பல நாகரிகங்களில் நீரில் இருந்து தப்பித்த கதை உள்ளது.

கப்பலின் முன் பகுதி வாய் என்பர் . அந்த பகுதி நாக்கை போல் வளைந்து இருப்பதால் நாவாய் என்று கப்பலுக்கு பெயர் வந்தது.நாவாய் வலம் வந்ததால் குமரி கண்டம் நாவலன் தீவு என்று பெயர் பெற்றது.

பைபிளில் நோவா கதை கேள்வி பட்டிருப்போம். குமரி கண்டத்தில் இருந்து தப்பித்த நோவா ( நா வா = நோ வா, நாவாயில் தப்பித்ததால் அந்தப் பெயரை பெற்றார்) துருக்கி அருகில்  அராரத் பகுதியில் போய் சேர்கிறார். அவரின் வம்சாவலிகள் தான் இந்த யூதர்கள். 11000 முன் பழமையான கோயில் அங்கு கோபக்லி தெப்பேவில் கிடைத்து இருக்கிறது.

அவர்கள் குளிரான கசார் பகுதிக்கு செல்கிறார்கள். தங்கள் இனம் மட்டும் தான் நீரில் இருந்து தப்பித்ததாக நினைத்து கொண்டு தங்களை கடவுளுக்கு வேண்டிய மக்கள் ( choosen people of god ) என்று நினைத்து கொள்கிறார்கள். பிறகு அவர்கள் மற்ற இன மக்களும் தப்பித்தை தெரிந்து கொண்டாலும் தங்களை உயர்வாக நினைக்கும் போக்கை மாற்றி கொள்ள வில்லை. இன்றும் அவர்கள் இந்த மனநிலையிலேயே இருக்கிறார்கள் தங்கள் இனத்தை கடவுளின் பிள்ளைகளாகவும் பிற இனங்களை சேர்ந்தவர்களை ஆட்டு மந்தை ஆகவும் நினைக்கும் போக்கு இருக்கிறது. இந்த எண்ணம் தான் இன்று உலகம் படும் பல துயரங்களுக்கு அடிப்படை காரணம்.

உணவு கிடைக்காத குளிர் பிரதேசத்தில் அவர்கள் குணம் மாறுகிறது. பிறருக்கு சூழ்ச்சி செய்யும் குணம் உடையவர்களாக அவர்கள் மாறுகிறார்கள்.

இன்றும் உலகத்தை அவர்கள் தான் ஆள்கிறார்கள். அவர்கள் வணிகத்தில் கெட்டிக்காரர்கள். காசு அதிகம் வைத்திருந்ததால் அவர்கள் காசர் என்று அழைக்கப்பட்டனர். அதனால் தான் அவர்கள் வாழ்ந்த பகுதி காசர் → கசார் ஆனது. ஊதிய பொருள் நீரில் மூழ்காது இவர்களும் நீரில் மூழ்காமல் தப்பித்தால் ஊதியவர்கள் ஊதர்கள் என்றாகி பின் யூதர்கள் ஆனார்கள்.

7500 வருடங்களுக்கு முன் தமிழ்நாடு மற்றும் இலங்கையை சேர்த்து ஆண்ட மன்னன் இராவணன். அவனை வெல்வதற்கு யூதர்கள் தலைமையில் வந்தவர் ராமன் என்ற யூதர். வாலியிடம் இருந்து சுக்ரீவனையும் , இரவணனிடம் இருந்து விபீடனையும் பிரித்து தன்னுடன் சேர்த்து கொண்டு இராவணனை எதிர்த்தும் போரில் வெற்றி பெற முடியவில்லை.

5000 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்த யூதன் சகுனி . அவன் தன் அக்காவை தமிழர்களுக்கு மணமுடித்து பெரும் படை திரட்டி தென் தமிழக பண்டியர்களை எதிர்த்தும் போரில் தோற்கடிக்க படுகிறான்.

1700 வருடங்களுக்கு முன் பரசுராமன் என்ற யூதன் உடுப்பி வழியாக இந்தியா வந்து சூழ்ச்சியில் மேற்கு தொடர்ச்சி மலையை கைப்பற்றி பின் தமிழகத்தை கைப்பற்றி களப்பிரர்களாக நம்மை ஆண்டார்கள். இந்த காலத்தில் தான் தமிழ் சித்தர்கள் கழவேற்றி கொல்லப்பட்டு தமிழ் இலக்கியங்கள் அழிக்கப்பட்டும் சமஸ்கிருதத்தில் மொழி மாற்றம் செய்ய பட்டது.

இந்தியாவின் வட இந்திய தென் இந்திய பிராமணர்கள் யூத வம்சாவலிகள். வட இந்திய பிராமணர்கள் கசார் பகுதியில் இருந்து வந்த யூதர்கள். தென் இந்திய பிராமணர்கள் இஸ்ரேல் பகுதியில் இருந்து வந்த யூதர்கள்.

5000 ஆண்டுகள் முன் யூதர்கள் எப்படி தமிழகம் வந்தார்களோ அதைபோலவே அவர்களின் ஒரு பிரிவினர் எகிப்திற்கு சென்றார்கள். அங்கு வாழ்ந்த எகிப்து தமிழ் நாடார் மக்களுக்கு பல துன்பங்களை கொடுத்தார்கள். இவர்கள் தொல்லை பொறுக்காமல் எகிப்து மக்கள் இவர்களை விரட்டி அடித்தார்கள். ஆனாலும் யூதர்கள் எகிப்தை ஆள்வதற்காக தங்களை எகிப்தியர்கள் போல காட்டிக் கொண்டு மறைமுகமாக எகிப்தை தொடர்ந்து ஆண்டார்கள். தங்கள் இனத்தை சேர்ந்த குழந்தையை ஆற்றில் மிதக்க வைத்து எகிப்தின் அரசு குடும்பத்திற்குள் நுழைத்தார்கள் அப்படி நுழைந்தவன் தான் மோசஸ். மோசஸ் அவன் காலத்தில் எகிப்தை ஆண்டான் அவன் சந்ததியினரும் எகிப்தீயர்கள் போல தொடர்ந்து மறைமுகமாக எகிப்தை ஆண்டார்கள் கிளியோபாட்ரா காலம் வரை . நமக்கு சொல்லப்படும் வரலாறு பிழையானது. உண்மையில் மோசஸ் என்பது ஒரு நபர் அல்ல மூன்று நபர்கள். துட் மோஸ் 1, 2, 3 என்ற மன்னர்கள் ஒட்டுமொத்தமாக மோசசை குறிக்கிறார்கள். இதில் துட் மோஸ் 1 ஒன்று காலத்தில் எகிப்தியர்கள் யூதர்களை விரட்டி அடிக்கிறார்கள். துட் மோஸ் 3 காலத்தில்  இஸ்ரேலில் இருந்த சாணார்களை ( பணை ஏறிகள் ) விரட்டி விட்டு யூதர்கள் குடியமர்த்தப்படுகிறார்கள். சாணன் தேசம் தான் கானான் தேசம் என்று அழைக்கப்பட்டது. அங்கு பாலைவனம் இருந்ததால் பாலை திணை - பாலஸ்தீன் என்றும் அழைக்கப்பட்டது. இன்று அந்த சாணார் இன மக்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டார்கள். இன்று வரை பாலஸ்தீனர்களுக்கும் யூத மக்களுக்குமான சண்டை ஓயவில்லை.

யூதர்களைப் பற்றி சொல்லப்படும் மிகப்பெரிய பொய் யூத படுகொலை. ஜெர்மனியில் ஹிட்லர் 60 லட்சம் யூதர்களை கொன்றான் என்பது மிகப் பெரிய பொய். ஏனென்றால் அவ்வளவு எண்ணிக்கையிலான மக்கள் உண்மையில் அங்கு வாழவில்லை.

ஹிட்லர் என்பவனும் ஒரு யூதன் தான். பிறகு எப்படி ஒரு யூதன் மற்ற யூதர்களை கொன்றான் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. யூதர்களில் முக்கியமாக இரண்டு பிரிவுகள் இருக்கிறது ஒன்று ஷஃபாடிக் யூதர்கள் மற்றொன்று  அஸ்கனாசி யூதர்கள். 

ஹிட்லர் அஸ்கனாசி ( Ashkenazi ) யூத பிரிவை சேர்ந்தவன். அதனால்தான் தன் படைக்கு நாசி( Nazi )என்று பெயர் வைத்திருக்கிறான். அஸ்கனாசி யூதர்கள் இப்பொழுது தங்களை ஜியோனிஸ்ட் என்று அழைத்துக் கொள்கிறார்கள். சேயோன் என்ற முருகரை குறிக்கும் வார்த்தை தான் இது அதனால் தான் அவர்கள் சின்னங்களின் முருகரின் ஓம் மந்திரத்தை குறிக்கும் ஸ்வஸ்திக் குறியீடு , அறுகோண நட்சத்திரம், 6 6 6 என்ற எண்கள் உள்ளது. முருகரின் சின்னத்தை அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கும் காரணம் இருக்கிறது.

ஹிட்லர் தன் எதிரி இனமான ஷஃபாடிக் யூதர்களைத்தான் மிகச் சிறிய அளவில் கொன்றான். இதை பயன்படுத்திக் கொண்ட அஸ்கனாசி யூதர்கள் தங்களுக்கு என்று இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டார்கள். இன்றும் இஸ்ரேல் மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளை கட்டுப்படுத்தி இந்த உலகத்தையே தங்கள் கட்டுப்பாட்டில் யூதர்கள் வைத்திருக்கிறார்கள். தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற இவர்களின் மனநோய் மட்டும் மாறவே இல்லை.

சனி, 7 டிசம்பர், 2024

பனைமரம் 🌻🦚🦋

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை,
1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை
பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :
பனை உணவு பொருட்கள் :
🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை :
🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை
வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி
விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா
அலங்காரப் பொருட்கள் :
🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்
வேறு பயன்பாடுகள் :
🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரம்
கட்டிடப்பொருட்கள் :
🌴தளபாடங்கள்
🌴பனம் விதை
🌴எரிபொருள்
இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பனை உணவுப் பொருட்கள் பனைத் தொழிலாகளிடம் இருந்து நேரடி விற்பனை தமிழ் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் :
🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஓடியல்
படித்ததில் பிடித்தது