சனி, 18 மார்ச், 2023

இயற்கை வழி வேளாண்மை

உலகின் 
மிக மூத்த நாகரீகம் என்பது வெறுமனே பாடப்புத்தகத்தில் 
எழுதி வாசிப்பதற்கோ, #ஓட்டுப்பொறுக்க 
வீரவசனம் பேசுவதற்கோ 
பயன்படும் வாசகம் அல்ல.

மனிதன் 
நாடோடிச் சமூகமமாக 
வாழ்ந்ததில் இருந்து மாறி, முதன்முதலாக ஆற்றங்கரைகளிலும், வளமான பிரதேசங்களிலும் குடியேற்றங்களை ஏற்படுத்தி 
வேட்டையாடுதலை 
விட்டுவிட்டு #வேளாண்மை செய்ய துவங்கியதுதான்... 
நாகரிக, பண்பாட்டு பரிணாம வளர்ச்சிக்கு வரலாற்றில் அடித்தளமிட்ட மானுட புலிப்பாய்ச்சல் நிகழ்வாகும்.

ஒரு சமூகம் 
பழங்குடிச்சமூகம், 
ஆதிச்சமூகம் எனும்போதே 
#அது அங்கே பல்லாயிரம் ஆண்டுகளாக ஓரிடத்தில் நிலைத்து வேளாண்மை செய்து வாழ்கிறதென்றுதான் பொருள்.

வரலாற்றின் 
மிக அண்மைக்காலம் வரை நாடோடிச்சமூகங்களாக வாழ்ந்தவர்கள் #ஐரோப்பியர்கள். மேலாக, ஐரோப்பியர்களின்  இயற்கை சூழலும் வேளாண்மைக்கு உகந்தது இல்லை.

வேளாண் விஞ்ஞானிகள் 
மராட்டியர் சுபாஷ் பாலேக்கர், தமிழ்ப்பெரியார் நம்மாழ்வார், 
அறிவர் பாமயன் உள்ளிட்ட 
#பலரும் 'organic farming'ன் தந்தை என வெள்ளைக்காரன் 
எழுதி வைத்து இருக்கும் 
#ஆல்பர்ட்_ஹோவார்டு 
இங்கே இந்திய ஒன்றியத்தில் வேலை செய்தபோதுதான் #பழங்குடிகளிடம் இருந்து 
இயற்கை வேளாண்மை குறித்த அவர்களின் பாரம்பரிய மரபு அறிவை கற்றுக்கொண்டார் #என  விளக்கி இருக்கிறார்கள்.

The Agricultural Testament 
எழுதிய அந்த ஹோவார்டும் 
#தான் இந்திய பழங்குடிகளிடம் இருந்து கற்றதாக பல இடங்களில்  பதிவு செய்திருக்கிறார்.

ஐரோப்பியர்கள் 
மிக அண்மைக்காலத்தில் வேளாண்மை செய்யத்துவங்கி, அதுவும் உலகப்போர்களுக்கு பின்னர் வெடிமருந்தை உரம் என்று ஏற்றுமதி செய்து, 

காலனிய 
காலத்திற்கு பிந்தைய பலவீனமான அரசுகளிடம் அதை வலிந்து திணித்து, அதை 'பசுமை புரட்சி' என #ஏமாற்றி, 
உலகின் 'உணவுக்கொடையாக' இருந்த ஆசிய ஆப்பிரிக்க வெப்பமண்டல நாடுகளை பாலைவனமாக்கி 

 இந்த நாடுகளை  
#சுடுகாடுகள் ஆக்கியதோடு மட்டுமன்றி,  அதன் மூலம் 
'குளோபல் வார்மிங்'  எனும் 
மானுட பேரழிவிற்கு   
அழைத்துச் சென்று இருக்கிறது மேற்குலகம்.

கூடுதலாக, 
அறிஞர் #பாமயன் 
தனது பண்டைய தமிழர்களின் வேளாண் அறிவு குறித்தான '#திணையியல்_வாழ்வு' எனும் ஆய்வில் சங்க காலங்களில் 

மட்கு/humus  (தாதெரு மன்றங்கள்), உழவில்லா வேளாண்மை (தொய்யாத்துடவை) குறித்தான 
மரபு செயல்முறை குறிப்புகள்  #சங்கத்தில் இருப்பதை விளக்கி இருக்கிறார்.

இவ்வளவு 
விளக்கமெல்லாம் தேவை இல்லை, மேற்குலகின், காலனியவாதிகளின், வெள்ளைக்காரனின் பண வெறியும், accumulation of wealth எனும் சொத்துக்குவிக்கும் பேயாட்ட பண்பும் 

இங்கே 
திணிக்கப்படுவதற்கு முன்பு இங்கேயிருந்த மரபும், பழக்கமும் இயற்கை வழி, இயற்கை சூழலுக்கு #உகந்த இணக்கமான வழியே, 

அது 
வேதியுரங்களை, 
பூச்சிக்கொல்லி விஷமருந்துகளை பயன்படுத்திய வேளாண்மையல்ல  என்பது அடிப்படை அறிவு எனும் 'common sense' ஆகும்.

இதைக்கூட ஏன் #திராவிடர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? 

உலகிற்கு 
வேளாண் நாகரீகத்தையும், அறிவையும் கடத்திய, 
கொடையாக அளித்த 
தமிழர் நாட்டு அரசின் 
'#இயற்கை_வேளாண்மை' 
கொள்கை வரைவில் 
ஏன் காலனியவாத வெள்ளையர்களை கொண்டாடி,

தமிழினத்தின் 
வேளாண் தெய்வம் #நம்மாழ்வாரை தவிர்த்து இருட்டடிப்பு செய்கிறீர்கள்? ஏன் #இந்த திராவிட வன்மம்?

ஆதிப்பழங்குடிகளின் 
வரலாற்றை அவர்களே தூக்கிப்பிடிக்காமல், 
அவர்களை இருட்டடிப்பு செய்வது காலனிய அடிமைத்தனத்தை ஆதரிப்பதும், அடிமை  உளவியலை விதைப்பதுமாகாதா?

இன்னும் 
எவ்வளவு காலத்திற்கு 
#தங்களுக்கு வாழ்வளித்த வெள்ளைய காலனியவாதிகளுக்கு விசுவாசமாக இருக்கப்போகிறது திராவிடம்?

எப்போது 
திராவிடத்திற்கு 
அரியணை வழங்கிய #தமிழுக்கு விசுவாசம் காட்டப்போகிறது?

#Krishna

செவ்வாய், 14 மார்ச், 2023

டயாபடீஸ் காரணம் இதோ...

டயாபடீஸ்  காரணம் இதோ:

முதல் படியாக உணவிலிருந்து இரத்தத்தில் கலந்துள்ள க்ளுகோஸ் முறையற்ற ஜீரணத்தினால் தரம் குறைந்த நிலையில் இருக்கிறது. இது உடலுக்கு உகந்ததல்ல; ஒவ்வாதது என்று தீர்மானித்து பான்க்ரியாஸ் அவற்றை நிராகரிக்கிறது. இன்சுலின் கரப்பை நிறுத்துகிறது ஆங்கில மருத்துவம் தன்னுடைய மருந்துகளால் இந்த பான்க்ரியாஸை அடித்து வேலை வாங்குகிறது. இன்சுலின் சுரக்கிறது. உடலுக்கு ஒவ்வாதது என்று நிராகரிக்கப்பட்ட க்ளுகோஸ் வலுக்கட்டாயமாக உடல் உறுப்புகளுக்குள் திணிக்கப்படுகிறது இந்த க்ளுகோஸை உபயோகிக்கும் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றிலும், அவற்றின் செயல்திறன் குன்ற ஆரம்பிக்கிறது. 
நாளடைவில் செயலிழக்க ஆரம்பிக்கிறது. இன்னும் சில காலங்களில் பழுதுபட ஆரம்பிக்கின்றன.

இன்சுலினை வலுக்கட்டாயமாக இயற்கையின் நியதியை மீறி சுரக்க வைப்பதோ அல்லது இன்சுலினைக் கொடுப்பதோ மிக மிகத் தற்காலிகமாக மட்டுமே உபயோகப்படுத்தக் கூடிய மிக ஆபத்தான வைத்திய முறையாகும். ஆனால் ஆங்கில மருத்துவம் அதனை ஆயுள் பூராவும் கொடுப்பதன் விளைவு இந்த வைத்தியம் ஒரு மனிதனின் ஆயுளை மட்டுமல்ல; நாளைய வம்சத்தையே பலியாக்குகிறது.

-Dr பஸ்லூர் ரஹ்மான். MBBS DV MRSH MD phd(acu)

வெள்ளி, 10 மார்ச், 2023

தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள்

தமிழகத்தில் பல சமூகத்தினர் தெலுங்கு மொழி பேசுகின்றனர் [1][2]

அருந்ததியர்
ஆதி ஆந்திரர்
கொட்டா
கோசங்கி
சக்கிலியன்[3]
டொம்மர்
தோட்டி
பகடை
பஞ்சமர்
பண்டி
பன்னியாண்டி
மாதிகா
மாலா
முச்சி
வெங்கானூர்
ஜங்கம்
ஜக்கலி
ஜம்புவுலு
ஜோகி
ஏகலா 
ஒட்டர்
குலாலா
கொல்லவார்
சாட்டாடி
சாத்தாத ஸ்ரீ வைணவர்

சில்லவார் 
டொம்மரர்
தாசரி
தெலுங்குப் பட்டிச்செட்டி 
தொக்களவர்
தொட்டியநாயக்கர் 
தொழுவநாயக்கர் 
பட்டுராசு 
பெஸ்தா
போயர்
மகேந்திரா
மங்கலவாடு
மேதரா
மொண்டகொல்லா 
ராஜகம்பளம் 
ஜோகி
24 மலை தெலுங்குச் செட்டி
ஆஸ்தாந்திர கொல்லா
ஆயிர வைசியர்
ஈடிகா
உக்கிரக்குலச் சத்திரிய நாயக்கர்
உப்பரர்
உரிக்கார நாயக்கர்
எருகுலா
ஒட்டர்
கருகவாரு
கண்ட்லா
கமல்லா
கம்சலா
கல்லொட்டர்
கவரா / கவரை
கவரை வடுகர்
காதிக்காரர்
காலிங்கி
கொப்பள வேளமார்
கொல்லா
சக்கரவார் (காவதி)
சவளக்காரர்
சாக்களர்
சாதுச்செட்டி
சாலிவாகனர்
சூரமாரி ஒட்டர்
சேடர்
சௌதிரி
டொம்மர்
தெலிகுலா
தெலுங்குச் செட்டி
தெலுங்குப் பட்டிச் செட்டி
தெலுங்கு பிராமணர் (நீயோகி)
தேவாங்கர்
தொகட்ட வீரச் சத்திரியர்
தொங்கதாசரி
தொழுவ நாயக்கர்
நெல்லூர்ப் பேட்டை ஒட்டர்
பத்மசாலியர்
பாத்திரச் செட்டி
பாமுலு
பூசல (வாடு)
பெரிக்கே
பெத்தபோயர்
பெரிக்கே பலிஜா
போயர்
முத்திரியர்
முத்துராச்சா
பாளையக்காரன்
முடிராஜு

முத்திரிய நாயுடு
முத்திரிய நாயக்கர்
முத்திரிய ராவ்
முத்துராஜா நாயுடு
பாளையக்கார நாயக்கர்
பாளையக்கார நாயுடு
வடுக ஆயர்
வடுக இடையர்
வளையல் செட்டி
வால்மீகி
விசுவகர்மா
விசுவகர்மளா
விசுவ பிராமணர்
வெற்றிலைக்கார நாயக்கர்
மந்திரி
தெலுங்கு யாதவர்
ஜெட்டி
சாயர்
ஜோகி
க்ஷத்திரிய ராஜு 
ராவுத்த நாயுடு
கஞ்சம ரெட்டியார்
தேசூர் ரெட்டியார்
பண்டா காப்பு ரெட்டியார்
ஒருகுண்ட ரெட்டி
மூசிக பலிஜகுலம்
கோணக் கொல்லர்கள்
கம்மவார் நாயுடு
தெலுங்கு பிராமணர்
ஆரிய வைசியச் செட்டியார்
கோமட்டிச் செட்டியார்
பலிஜா நாயுடு
பேரி செட்டியார் 
போகநாட்டு ரெட்டியார்
கொங்கு நாயக்கர்
கொங்கு ரெட்டியார்
கொண்டக்காப்பு
காட்டு நாயக்கர்