வியாழன், 2 ஆகஸ்ட், 2012



                  நல்ல செய்தி ;

     நமது மூளையில் VENTROMEDICAL PREFRONDAL CORTEX என்ற பகுதி நன்றாக இயங்கினால் அன்பு,கருணை,இரக்கம்,குற்றஉணர்வு போன்ற குணங்கள் வெளிப்படும்.
     
      நமது குடிகார சகோதரர்களுக்கு  மேலே குறிப்பிட்ட பகுதி யின் செயல்பாடு
மிக மிக குறைந்த அளவு இருக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
                                        *****************************


    கபடி வகைகள் ;
1.சுர்ஜீவனி
2.காமினி
3.அமர்
  இந்திய கபடி கூட்டமைப்பு  அங்கிகரித்தமுறை ; சுர்ஜீவனி (1950)

இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பு 1973 இல் ஆரம்பிக்கப்  பட்டது.


ஆண்களுக்கான முதல் தேசியபோட்டிகள் 1952இல் சென்னையில் நடைபெற்றது.

பெண்களுக்கான முதல் தேசிய போட்டிகள் 1955 இல் கொல்கத்தாவில் நடைபெற்றது.

                                        ***********************************




                           NUISANCE(தொந்தரவு );

  1.தாக்குவது,கோபமூட்டுவது,பயமூட்டுவது,தடை ஏற்படுத்துவது அல்லது  விரும்பத்தகாத விதத்தில் நடந்து கொள்வது போன்றவற்றால்  மற்றொருவரின் உரிமையிலும்,விருப்பத்திலும் தலையிடும் ஒரு செயல் அல்லது வழக்கம் என்று சட்டம் வரையறுக்கிறது
.
2.பொதுச் சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது, காற்றையும் நீரையும் மாசடையச் செய்வது,விபச்சாரவிடுதி நடத்துவது,வெடி பொருட்களை வைத்திருப்பது போன்றவை தண்டனைக்குரிய போதுத்தொந்தரவுகள்.
                                                                                                                                                                                                               3.தனிப்பட்ட தொல்லை என்பது தன் உடைமையைப்  பயன்படுத்தி                                              ஒருவர்              தொல்லை ஏற்படுத்தும் செயலையோ அல்லது நிலையையோ குறிக்கும்.
     (எ.கா) அதிகப்படியான ஒலியை ஏற்படுத்துவது, துர்நாற்றம் ஏற்படுத்துவது )
    

          இந்திய தண்டனை சட்டம் ;

      143 சட்டவிரோதமாக கூடுதல் 
      447 அத்துமீறி நுழைதல் 
      426 தவறான செயல்களை கையாளுதல் 
      506/2 கொலை மிரட்டல் விடுத்தல்  (ஜாமின் கிடையாது )
      323  சிறிய காயத்தை ஏற்படுத்துதல் 

புதன், 1 ஆகஸ்ட், 2012



            நான் 2004 வாக்கில் சென்னையில் சுற்றி திரிந்தபோது   அடிகடி நூலகங்களுக்கு செல்வது வழக்கம்.வடபழனியில் உள்ள நடிகர் விஜய் கல்யாண மண்டபம் பின்புறம் உள்ள நூலகத்தில் நுழைவது வழக்கம்.அப்போது கிடைத்த தமிழ் வார்த்தைகள்  உங்களுக்காக.

        செதும்பு           -        சேறு
        நுதல்                -        நெற்றி
        திட்டை            -      திண்ணை
          தாழம்            -       தாமதம்
        நறுமனம்       -       நன்மை
       செந்தலிப்பு     -      செழிப்பு
       துரப்புதல்        -      தேடுதல்
            திரிபு             -      வேறுபாடு
       நெகுதல்          -       உருகுதல்
        நொக்கு           -       வெடிப்பு
       வேழம்             -       யானை
          கயல்             -       மீன்  

செவ்வாய், 31 ஜூலை, 2012



1.முன்னாள் பிரதமர் 'ராஜீவ் காந்தி' நினைவிடத்தின் பெயர் என்ன?

                  விர்பூதி

2.முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி எது?

                G TV

3.சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் (தி.மு .க.) மொத்த பரப்பளவு என்ன ?

                18909 ச.மீட்டர்

4.பறக்கும் போது தூங்கும் பறவை எது ?

               அலபட்ரோ

5.துத்தி செடியின் தாவரவியல் பெயர் என்ன ?

                ABUTILON INDICUM

6.நம் நாட்டில் தேசியக்கொடி தயாரிக்கும் இடம் எது ?

                          உத்தரப்ரதேசம், ஷாஜகான்பூர்

7.உலகில் முதல் மின்சார விளக்கு எங்கு எப்பொழுது யாரால் எரியப்பட்டது ?

              நியூயார்க் 1880,தாமஸ் ஆல்வா எடிசன்

8.கனடாவின் பழைய பெயர் என்ன ?

                        GOLD CHOST

9.சிமெண்ட் -ஐ  கண்டுபிடித்தவர் யார் ?

                           ஜோசப் அபிஸ்டின் 

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

போன ஆட்சியிலே!உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நம்ம கோவையில் நடைபெற்றது.அதற்காக பள்ளிக் கல்வி துறை சார்பாக ஒரு கவிதை போட்டி நடத்தினார்கள்.அந்த கவிதைப் போட்டிக்கு கொடுத்த தலைப்பு 'சங்கத் தமிழ் அனைத்தும் தா'.அந்த கவிதை போட்டிக்கு ஒரு கவிதை அனுப்பி இருந்தோம்,பரிசு கிடைக்கவில்லை,இருந்தாலும் அந்த கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
                       சங்கத் தமிழ் அனைத்தும் தா! 
அன்புத்தமிழ்   அன்னைத் தமிழ் அழகுத் தமிழே,
அம்மா தமிழ்  அவ்வைத் தமிழ்  அணைக்கும் தமிழே,
இணையத் தமிழ்  இலக்கியத் தமிழ் இனிக்கும் தமிழே,
ஈகைத் தமிழ்  எழுச்சித் தமிழ் இளமைத் தமிழே,
உண்மைத் தமிழ்  உயிர்மைத் தமிழ் உலகத் தமிழே,
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லாம் வல்ல தமிழே,
ஒற்றுமைத் தமிழ்  ஓங்கு தமிழ் ஒளிரும் தமிழே,
செல்லத் தமிழ் சேவைத் தமிழ் செம்மொழித் தமிழே,
கல்வித் தமிழ்  கவிதைத் தமிழ் காதல் தமிழே,
மண்ணும் தமிழ் மரமும் தமிழ் மக்கள் தமிழே,
வைகைத் தமிழ் வாழ்க்கைத் தமிழ் வாகை சூடும் தமிழே,
பாமரன் தமிழ் பாசத் தமிழ் பாரினை ஆளும் தமிழே,
நெல்லை தமிழ் நேசத் தமிழ் நெருப்புத் தமிழே,
தென்னகத் தமிழ் தேவதைத் தமிழ் தேசத் தமிழே,
வில்லுத் தமிழ் வீணைத் தமிழ் வித்தகத் தமிழே,
புகழும் தமிழ் புதிரும் தமிழ் புலவன் தமிழே,
ஒன்றும் தமிழ் ஒடுக்கும் தமிழ் ஓசைத் தமிழே,
வேதத் தமிழ் ஞானத் தமிழ் மூத்தத் தமிழே,
உவமைத் தமிழ் ஊன்று தமிழ் உரிமைத் தமிழே,
கொங்கு தமிழ் கொடுக்கும் தமிழ் கொள்கைத் தமிழே,
செம்மைத் தமிழ் செல்வத் தமிழ் செழிக்கும் தமிழே,
சங்கத் தமிழ் அனைத்தும் தா! எங்கள் தமிழே.   
 
   

புதன், 4 ஏப்ரல், 2012

               உங்கள் பொது அறிவு எப்படி

1.காற்று மண்டலத்தில் எவ்வளவு நைட்ரஜன் உள்ளது?
                          78%
2.திரையில் சினிமா படம் காட்டப் பயன் படும் கருவியின் பெயர்?
                                            எபிடியாsகோப் 
3.ராஜதரங்கிணி என்னும் நூல் எந்த மன்னர்களைப் பற்றி விவரிக்கிறது?
                                            காஷ்மீர் மன்னர்கள்
4.நமது நாட்டில் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடை செய்த ஆங்கிலேய பிரபு யார்?
                                              வில்லியம் பெண்டிங் பிரபு
5.திருவந்தாதியை இயற்றியவர் யார்?
                                              நம்பியாண்டார் நம்பி
6.காபி செடிக ள் அதிகமாக விளையும் மாநிலம்?
                                             கர்நாடகா 
7.அமெரிகாவில் உள்ள வெள்ளை மாளிகை எந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது?
                                                 1792
8.தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டம் எது?
                                                நீலகிரி
9.'சர்வதேச அமைதி தினம்' என்று?
                                            செப்டம்பர்-16
10.இந்தியாவின் கோவில் நகரம் எது?
                                                புவனேஸ்வரம்                 

திங்கள், 26 மார்ச், 2012

                  தண்ணீர் குடங்களில் கவனம்;
    வெயில்  காலங்களில் பிளாஸ்டிக் குடங்களின் விற்பனை அதிகமாக இருக்கும்.என்ன காரணம் என்றல் பிளாஸ்டிக் குடங்கள் கையாள்வதற்கும்,கழுவுவதற்கும் எளிது என்பதால் மக்கள் விரும்புகின்றனர்.
      மார்க்கெட்டில் விற்பனை ஆகின்ற பிளாஸ்டிக் குடங்கள் அனைத்தும்,மறுசுழளர்ச்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செயபடுகின்றனர்.பிளாஸ்டிக் குடங்களின் தயாரிப்பில் மருத்துவ கழிவுகளும் பயன்படுதுகின்றனர்.
       மறுசுழற்சிக்கு முன்னர் இவை AUTO CLAVE முறையில் சரியான அளவில் BACTERIAL தன்மையை நீக்கிவையாக இருக்க வேண்டும்.செலவு காரணமாக பிளாஸ்டிக் குடங்களின் உற்பத்தியில் இது நடைமுறையில் இல்லை.
         பிளாஸ்டிக் குடங்களை தண்ணீர் பிடிக்க பயன்படுத்தலாம்.ஆனால் அவற்றில் அதிக நேரம் வைத்திருந்த தண்ணீரை குடிப்பது நல்லதல்ல. மேலும் பிளாஸ்டிக் குடங்களில் நிறத்திற்காக சேர்க்கப்படும் வேதி பொருட்களும் அலர்ஜியை ஏற்படுத்தும் ஏனவே உங்கள் உடல் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் விழித்துக் கொள்ளுங்கள்.
                                                                                    Thanks to Kalai kathir.

சனி, 24 மார்ச், 2012

புத்தக தினம்-ஏப்ரல்-23 (ஷேக்ஸ்பியர் இறந்த தினம்)
                                                        *
புத்தகம் படிக்கறது ஒரு அலாதியான அனுபவம்.
நிறைய படிங்க,ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு அனுபவம்.
நம்மை வாழ்கையில் கையை பிடித்து கூட்டி செல்வது புத்தகங்கள்தான்.
'ராகுல்ஜி'என்று நம்மால் அன்போடு அழைக்கபடுகின்ற திரு.ராகுல சாங்கிருத்தியாயன் அவர்கள் தன்னோட வாழ் நாளில் 40 ஆண்டுகள் செலவிட்டு இரண்டு புத்தகங்களை எழுதி இருக்கிறார்.அது வால்காவிலிருந்து கங்கை  வரை,ஊர் சுற்றி புராணம் .இந்த இரண்டு புத்தகங்களை எழுதுவதற்காக 40 ஆண்டுகள் பயணித்திருக்கிறார்.அப்படியன்றால் அந்த புத்தகங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று பாருங்கள்.என்னிடம் வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் இருக்கிறது.ஊர் சுற்றி புராணத்தை தான் தேடி கொண்டு இருக்கேன்.தெரிந்தவர்கள் எனக்கு தெரிவிக்கவும்.நன்றி.

வெள்ளி, 23 மார்ச், 2012


      சரியான முடிவு எடுப்பது
      அனுபவத்தால் வருகிறது!
      அனுபவம் தவறான முடிவு
      எடுப்பதால் வருகிறது!
                         *
       எதிரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
       அவர்கள்தான் உங்கள் தவறுகளை முதலில்
       கண்டுபிடிகிறார்கள்!
                            *
      
                                     என்னதான் சுகமோ.....
        
             அழகான கனவே உன்னை
             ஆசை ஆசையாய் வைத்தேன்-என்
             இதையத்தில்!
              ஈருடல் இணைந்து  ஓருடலாக..
              உன்னை கண்டேன் அன்று ஒரு நாள்!
             ஊனமனது என் இதயம் மறுநாள்!
             என்னென்னவோ கனவுகள் உன்னைபற்றி!
             ஏன் என்று தெரியவில்லை என் மனம் வருகிறது உன்னை சுற்றி!
              ஐயமே வேண்டாம் என் வாழ்வு உன்னோடுதான்!
              ஒன்றுமே புரியவில்லை உன் நினைவை சுமந்த பின்பு!
              ஓதுகின்றேன் உன் நாமத்தை தினம் விழித்த பின்பு!
              ஔ அப்போது என்னையும் மறக்கிறேன் நம் காதல் வந்த பின்பு,
                

புதன், 21 மார்ச், 2012

ஒரு தொழில் தொடக்கி வெற்றி பெற 32 குணங்கள் தேவை;
  1. நல்ல தோற்றம் ,
  2. நற்பண்பு,
  3. தகவல் தொடர்புத்திரன்,
  4. முதிர்ச்சி,
  5. போதிய அறிவு,
  6. அனுபவம்,
  7. ஞானம்,
  8. வெற்றி பெரும் விருப்பம்,
  9. முன்னின்று வழி நடத்தும் குணம்,
  10. பொறுப்புணர்வு,
  11. கடின உழைப்பு,
  12. கண்ணியம்,
  13. ஒத்துழைப்பு,
  14. சுய வாழ்க்கைதரம்,
  15. ஆரோக்கியம்,
  16. உற்சாகம்,
  17. நம்பிக்கை,
  18. நேர்மை,
  19. ஆர்வம்,
  20. உறுதி,
  21. நம்பகத்தன்மை,
  22. கற்பனை,
  23. சுயகட்டுபாடு,
  24. துணிவு,
  25. மனகனிப்பு,
  26. தோழமைகுணம்,
  27. சமூக நலனில் அக்கறை,
  28. பேச்சுத்திறன்,
  29. பழகும் பாங்கு,
  30. பிறர் மீது அக்கறை,
  31. சுய ஒழுக்கம்,
32.நேர்மறை மனோபாவம்.
                                         இனிஎன்ன வெற்றி உங்களுக்கே .   
                           பழமொழி ;
      பழமொழி ஒரு சின்ன வாக்கியம் தான்
      ஆனால்,நீண்ட அனுபவத்தை உள்ளடக்கியது.
                        தைரியம்;
      தைரியம் என்பது வேறில்லை ,
      நம் பயத்தை எதிராளிக்கு தெரியாமல்
      மறைப்பது!
                நேற்று இன்று நாளை;
      இன்றைய தினத்தின் பெரும் பகுதியை நேற்றைய தினம்
       அபகரித்து விடாமல் பார்த்துகொள் ,அப்போதுதான்
        நாளைய தினம் உன் வசமாகும்.
                  மூன்று முத்துகள்;
      கேள் மறந்து விடுவாய்,
      பார் நினைவு கொள்வாய்,
      செய் புரிந்துகொள்வாய்!
                      புகழ்ச்சி;
      உன் தகுதிக்கு மீறி உன்னை ஒருவர் புகழ்கிறாரா?
      உண்மையில் உன்னை அவர் இகழ்கிறார்! 
        
        

சனி, 17 மார்ச், 2012

ஒன்பது வகை நவரசங்கள்;
1.அமைதி
2.ஆச்சர்யம்
3.கோபம்
4.வெறுப்பு
5.அருவருப்பு
6.ஆனந்தம்
7.வீரம்
8.நகைச்சுவை
9.கருணை.
1.அமைதி;
      மனைவி திட்டும்போது.
2.ஆச்சர்யம்;
மனைவி நியூஸ் சேனல் பார்க்கும்போது.
3.கோபம்;
     மனைவி,குழந்தைகளிடம் மட்டும் காட்டுவது.
4.வெறுப்பு;
      தமிழ்நாடு மின்வெட்டு.
5.அருவருப்பு;
      புகை பிடிப்பவர்களை எதிர்கொள்ளும்போது.
6.ஆனந்தம்;
      கொடுத்த கடன் திரும்ப வந்தால்.
7.வீரம்;
       அப்படின்னா.....!
8.நகைச்சுவை;
         இன்றைய தலைமுறை மறந்தது.{including me}
9. கருணை;
         அப்படின்னா.....!       

வெள்ளி, 9 மார்ச், 2012

காதல்
 சோம்பேறிகளின் வேலை,
வேலையாய் இருப்பவர்களின்
சோம்பேறித்தனம்.
[எங்கயோ படித்தது]
பிரபலங்களின் பார்வையில் காதல்:
  1. 'காதல்' காமத்தையும் நட்பையும் கலந்த கலவை[ELLIS].
  2. 'காதல்'மூளையில் தோன்றும் செக்ஸ் உணர்ச்சி.[FOREL]
  3. தற்காலிக நிலையில் இருந்து கற்பனையின் உதவியுடன் காசுவதம் பெற்றுவிட்ட இன உணர்ச்சி.[GAND]
  4. 'காதல்' கொஞ்சம் கவர்ச்சி கொஞ்சம் சரணாகதி கொஞ்சம் தேவை கொஞ்சம் நம்பிக்கை கொஞ்சம் திருப்தி எல்லாம் கலந்த உணர்ச்சி.[FISTER]
  5. 'காதல்' சுயநலத்தின் வெளிப்பாடு .......[FRUED]