பெண்களின் வசிய ரகசியம்:
-------------------------------------------------------
எப்படி சாத்தியமாகிறது?
பெண்களை எட்டு வகையாக பிரிகின்றது கொக்கோக சாஸ்திரம். இதில் யார்;யாரோடு வசியம் ஆகும்?
அதை எப்படி செய்யலாம்? என்ற தகவல்கள் மிக துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றிய அபூர்வ ரகசியங்களை மட்டும் இங்கு சுருக்கமாக சொல்கிறேன்.
முதல் பாடல் கவனியுங்கள்....
"உத்திரை மனுஷமோன முத்திராட்டாதி தெய்வ
மத்தமாதிரை ரோகணி மகசிரமிருடயாகு
மொத்தபநாடஞ்சோதி விசாகமாயிலிய நாதங்கைத்தாளஸ் பதியவிட்டஞ்சதைய நாள்காந்தர்மாதே"
அதாவது இந்த பாடலில்;
உத்திரம், அனுஷம், திருவோணம், உத்திரட்டாதி இந்த நான்கு நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்
தெய்வ தத்துவப்பெண்கள் ஆவார்கள்.
அஸ்தம், திருவாதிரை, ரோகிணி, மிருகசீரிடம் இந்த நான்கு நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் முனி தத்துவப் பெண்கள் ஆவார்கள்.
பூராடம், சுவாதி, விசாகம், ஆயில்யம் இந்த நான்கு நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நாக தத்துவப் பெண்கள் ஆவார்கள்.
அஸ்வினி, அவிட்டம், சதயம் இந்த மூன்று நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கந்தர்வ தத்துவப் பெண்கள் ஆவார்கள்.
இரண்டாவது பாடலை பார்க்கலாம்...
"பூர நாளுடனே மூலம் ரேவதி பூதமாகுஞ்
சீரியபரணியோடு சித்திரை மகமியங்கி
காரியகேட்டை புரட்டாதி கார்த்திகையாக்கி
பாரிய புணர்ந்தபூசம் பகருமுத்திராடம் பேயே"
இந்த பாடலின் பொருள் என்னவென்றால்;
பூரம், மூலம், ரேவதி இந்த மூன்று நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பூத தத்துவப் பெண்கள் ஆவார்கள்.
பரணி, சித்திரை, மகம் இந்த மூன்று நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்
அரக்கி தத்துவப் பெண்கள் ஆவார்கள்.
கார்த்திகை கேட்டை புரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் இயக்கித் தத்துவப் பெண்கள் ஆவார்கள்.
புனர்பூசம், பூசம், உத்திராடம்
இந்த மூன்று நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பிசாசு தத்துவப் பெண்கள் ஆவார்கள்.
மூன்றாவது பாடல்...
"ஒருநிலம் செம்மையாண்மை கருமை யென்றுரைத்த மூன்றில்
திருநிறஞ்செம்மை தெய்வ
மிருஷபூதம் பெண்ணாகு
மிருநிறமாண்மைநாகங் காந்தருவமியக்கியாகுங்
கருநிறமாக்கிப் பேய்க்கணமென வருத்துச்சொல்லாம்"
இந்த பாடலில் பெண்களின் நிறங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளது
அதில், செந்நிறம், மாநிறம், கருநிறம் இவைகளில் செந்நிறம் என்பது
தெய்வம் மற்றும் பூத தத்துவப் பெண்களுக்குரியது. மாநிறம் என்பது நாகம், கந்தர்வம், முனி ஆகிய தத்துவப் பெண்களுக்குரியது. கருமை நிறம் பிசாசு தத்துவப் பெண்களுக்குரியது.
எட்டுவகையான பெண்களின் லட்சணங்களைப் பார்க்கலாம்....
(1) தெய்வ லட்சணம்.
----------------------------------------
"வில்லெனப் புருவங் கண்கள் வேலெனக் கூர்மையாகுங்
கல்லென நெஞ்சம்வல்லி காயமே சிவந்திருக்கு
மெல்லென நடையும் பார்வை மெத்தெனகீழே நோக்கு
மில்லையா மிடையுமுற்றமிவள் தெய்வபெண்ணதாமே."
இந்த பாடலில் தெய்வ பெண் என்பவள் எப்படி இருப்பாள் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.
அதாவது, வில்லைபோன்ற வளைந்த புருவமும், வேல் பேன்ற கூர்மையான கண்ணும், கலங்காத மனமும், சிவந்த மேனியும், அண்ணம்போல மெல்லிய நடையும், கருணையோடு கூடிய கீழ்ப்பார்வையும், மெல்லிய இடையும் கொண்டவள் தெய்வ லட்சணம் பொருந்திய பெண்ணாகிறாள்.
மேலும், தெய்வ தத்துவ லட்சண பெண்ணை கவனியுங்கள். சிவந்த பொன்னிறமான உடலும், கால்களும்,
தேன்போன்ற இனிய பேச்சும், களவுப்புணர்ச்சியில் பயமும்,
லீலைப்புணர்ச்சியில் விருப்பமும் உடையவள் என்றும் கூறப்படுகின்றாள்.
1.உத்திர நட்சத்திரம்:
"சித்திரரூபமாக சிறு சிவப்புடையமேனி
பத்திரஞ் சிறுத்துக் காமபத்தின்மேல் மறு உண்டாகுங்
கொத்த விளகுளறிக் கொண்டே கோள்விடாற் குணமும் குப்பை யுத்தமபகுதியாகு முத்திர நாளினாலே"
இதன் பொருள்:
விசித்திரமான சிவந்த சிறு உடலும், முழங்கைகள் சிறுத்தும், அழகிய பாதங்களில் மருவும், மலர்க்கொத்தணிந்த கூந்தலும்,
கொண்டகொள்கையை விடாதவளும், குணம் குற்றம் என ஆராயும் தன்மையும், உத்தம நடத்தையும் உடையவள் இந்த நட்சத்திரதில் பிறந்த தெய்வீக பெண் ஆவாள்.
2.அனுஷம்:
"முகமது கமலம் போல மூக்கு நீண்டுயர்த்த கண்ணாள்
மிக விளர்த்திருக்கும் கொங்கை விளம்பசிற் கோங்குபோலாம்
சுகமெனப் பகரவேண்டுஞ் சுத்தமுடையாளாகும்
அகமகிழ்ந்திருக்கு மனப்பாளனுஷநாள் பிறந்துளாளே"
இதன் பொருள்:
தாமரை போல முகமும், நீண்ட மூக்கும், உயர்ந்த கண்ணும், பூரித்து வளர்ந்த மார்பும், நறுமணம் கமிழும் உடலும், கிளிப்போன்ற பேச்சும், சுத்தமான மனமும், மனமகிழ்த்த அன்பும் கொண்டவள் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த தெய்வ பெண் ஆவாள்.
3.திருவோணம்:
"சிவந்தழகு குடையாளாகுஞ்
சீரிய செல்வியாகு
மவம்படவுரை யாளோன்று மறிவுடனன்பு முன்னாள் தவிர்த்திடுங் கோபத்தாலுஞ் சிந்தையாற் றணிவு முண்டா முவந்த வர்க்கன்பு முள்ளாளோண நாட் பிறந்துளாளே"
இதன் பொருள்:
சிவந்த அழகுடைய மேனியும், செல்வமும், பலனில்லா தன் சொல்லாமையாலும் அறிவும் யாரிடத்தும் அன்பும் கோபங்கொண்டால் உடனே அதை மறப்பதும், துணைவரிடம் நீங்காத அன்பும் உடையவள். திருவோண நட்சத்திரத்தில் பிறந்த தெய்வ தத்துவ லட்சணம் கொண்ட பெண் ஆவாள்.
4.உத்திரட்டாதி:
"உன்பெருத்துடையாளாகி மென்றுக்குமிச்சை செய்யா வளமிகு மதலையின் சொல்லுள்ளடி கணைக்கால் நோக்கி யளவுபட்டுருவமாகி யணைத்தவர்கன்பு முள்ளாள் உளமற வெளியாளன வுத்திரட்டாதியாளே"
இதன் பொருள்:
பெருத்துள்ள துடையும், எது ஒன்றிலும் விருப்பமில்லாத தன்மையும்
குழந்தை போன்ற பேச்சும், மெல்லிய பாதமும், கணைக்காலும், அளவுக்கு ஏற்ற உடலும், துணைவரிடம் மனகசப்பும், அளவுக்கு அதிகமான கற்பனை (சிந்தனையும்) உடையவள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த தெய்வீக தத்துவ லட்சணம் பொருந்திய பெண் ஆவாள்.
பொதுவாக இந்த தெய்வ தத்துவ லட்சணம் பொருந்திய பெண்களுக்கு, வெண்மையான ஆடைகள்,
வாசனை மிகுந்த பூக்கள், பால், நெய் போன்ற உணவுகள், சந்தனம், ல் வெண்ணை, புனுகு, பச்சைக்கற்பூரம் போன்ற வாசனை திரவியங்கள் மிகவும் விரும்புவார்கள்.
(2) முனி லட்சணம்.
----------------------------------------
"சலவேகால் காளோத்து சடக்கென வெழுந்திருக்கும்
வேலவேல் விழிகன்கொல்லு
மெல்லியர் வல்லியாகு
மாலனே விளிக்கும்போது
வீசியமேவுடையாளகுங்
கோலமாஞ் சிவப்புமேனி கூர்முனைபப் பெண்ணே"
இந்த பாடலின் விளக்கம்,
மிகுதியும் கால்கள் சமமாகி
விரைவிலெழுந்துருப்பதும்
கொல்லதக்க வேல்போன்ற கண்ணும்,
மெல்லிய கொடிபோன்ற சாயலும்,
மையாலோடன அழகை கையில் வசியப்படும் தன்மையும் செந்நிறமுடையவள் என்கிறது.
அடுத்த வரிகளை கவனியுங்கள்....
"மாந்தளிரையாளைய மேனி
மதிமுகம்வடி ந்துய்யா
ளேந்தியநளின கொங்கை யிடைவளர்ந்தொடகிசேருங்
காந்தளிர் மலர்கள்போலக் கைவிரற் கழுத்துநீளும்
மாந்தரிலிச்சையாகு மாமுனி மங்கை தானே"
இந்த வரிகளின் பொருள்:
மாந்தளிரைபோன்ற மேனியும்,
பூரணச் சந்திரணைப் போன்ற முகமும்; பரிசுத்தமும், மேல் நேக்கிய மார்பும்,
அழகிய இடையும், கந்தால் மலர்களைப்போன்ற கைவிரல்களும், நீண்ட கழுத்தும், கணவனிடத்தில் காம இச்சையும் கொண்டவள்.
"செவ்புளந்தளிர்போல் மேனிதிரண்ட தாளுருண்ட தோளாற்
கொவ்வையாகுழிழின் மூக்குக்குனி சிலைப்புருவமாகு
நவ்விபோல்வீன்ற கண்ணாள்நளின மொட்டணைய கொங்கை
இவ்வுருவுடையளாகி மிருஷிதத்துவத்தினாளே"
இதன் பொருள்:
செந்தளிர் போன்ற மேனியும்,
திரண்ட தாளும், உருண்ட தோளும், கோவைக்கனியை ஒத்த இதழ்களும், குமுழமவர் போன்ற மூக்கும், வளைந்த வில் போன்ற புருவமும், மான் போல கண்ணும், தாமரை மொட்டைபோன்ற மார்பும் உடையவள் என்பதாகும்.
"சிவந்தவாய் சிவந்த கண்கள் செந்தளிர்மாவின் மேனி
குவிந்த பெண்முலையாள் கூந்தல் சுருண்டிடுங் குணத்தாளகு
மவம்படவுரையாலொன்று மரும்மியவமுதச் சொல்லாள்
தவம்பெற விரும்பிநிற்பள் தவமுனி மங்கைத்தானே"
இதன் பொருள்:
சிவந்த வாயும், சிவந்த கையும்,
குவிந்த மார்பும், சுருண்ட கூந்தலும், அவ வார்த்தையின்றி நல்ல வார்த்தைகள் பேசுவதும் தவமுனி லட்சணம் பொருந்திய பெண்கள் என்கிறது.
"மங்கைதான் மெய்பூரி த்து வளர்கொங்கை தொங்குநேர்த்து
சங்கையுமுடையதாகிச் சருவுதல் மிகவும் வேண்டிப்
பங்கைய கதைகளுற்றுப் பரவிய கிரணமற்றத்
திங்கள்போல் நுதலேருள்ளாள் சிறுமுனி மங்கைதானே"
இதன் பொருள்:
பூரித்த சரீரமும் (பெருத்த உடல்)
தேங்காயை ஒத்து வளர்ந்த மார்புகளும், மனகிலேசமும் அதிகமாகப் புணர்ச்சியில் விருப்பமும், தாமரைபோன்ற கைகளும், பரந்த கிரணங்களையுடைய சந்திரன் போன்ற முகமும் உடையவள் சிறுமுனி மங்கை என்கிறது.
"மிக கூறுவளர்ச்சிகொண்டு மிகப்படவுரையாள்மேனிச்
சிக்கெனத்தெளிந்த சிந்தை சிறுநகை செய்யுங்கோபி
தக்கவற் கூட்டம் பேணுஞ்சற்குரு நோக்காதுண்ணா
லிக்குண முடையாளாகு மிருடி தத்துவத்தினாளே"
இதன் பொருள்:
மிக வளர்ந்துயிறுத்தாலும்,
அதிகம் பேசாமையும், இவ்விஷியங்களை புணர்தலும், புன்னகையும், பொய்க்கோபமும், நல்லோர் வழிபாடும், கடவுள் தரிசனமும் கொண்ட குணங்களைக் கொண்டவள் ஆவாள் என்கிறது.
இனி முனிதத்துவ நட்சத்திரங்களும் அதன் குணங்களும் பார்க்கலாம்...
1.அஸ்தம் நட்சத்திரம்:
"புளிப்புட நுண்ணவேண்டும் புனிதங்கள் பலவும் பேச
நளிப்படுஞ்செல்லி நல்லாள் நளின மொட்டனைய கொங்கை
கழிப்புடவளர் திட்டொல்கிச் சமாரியுற்ற கண்ணாள்
அளிப்பட பெருமைபேசு மஸ்த்தநாள் பிறந்துளாளே"
இதன் பொருள்:
புளிப்போடு கூடிய உணவு பதார்த்தங்கள் உண்ண விருப்பமும்,
சுத்தமான விஷயங்களை பேசுவதும்,
செல்வமும், நற்குனமும், தாமரை மொட்டுப் போன்ற தனமும், வளப்பமாக அரி பரந்த கண்களும், அன்பு உண்டாக்குவது போல புகழ்ந்துப் பேசுவது போன்ற குணங்களை கொண்டவள் அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவள் அவாள்.
2.மிருகசீரிடம்:
"கரிவாய் பெரியாளாகுங் கருணையுமவள்பாலில்லை
யரியதா மென்று மீயா ளகங்கனிவில்லஞ்தாரள்
உரிமைகள் பலதும்பேசு முன்பதும் புளிப்பேயுண்ணும்
பெருமுலையுருண்ட தோளாள் பெருமிருக சீரிடத்தாளே"
இதன் பொருள்:
கருத்துப் பெருத்தவாயும், கருணையின்மையும், அறிய பொருட்களை பிறருக்கு கொடுக்க மனம் இல்லாமையும், மனங்களித்து வீட்டில் நில்லாமையும், உரியவர்களோடுடெல்லாம் பேசுவது,
புளிப்புண்பதும், பெரிய மார்பகம், அதிகமாக சாப்பிடும் வழக்கம் கொண்டவள் மிருகசிரீட நட்சத்திர பெண்கள்.
3.திருவாதிரை:
"நேர்ந்திட நிதம்பநன்றாய் நிரைமயிரொழுக்க முன்னாள்
சார்ந்தவற்கன்பு செய்வாள் சதிரதாயழகுக்குய்யாள்
சேர்ந்தவற் கின்பஞ்செய்வாள் தேனமுதனைய சொல்லாளாந்ததோர் மனத்தாளர்கு மாதிரைநாளிநாளே"
இதன் பொருள்:
நிதம்பம் நிறைய மயிரொழுங்குடையவும், தன்னையடுத்தவர்க்கு அன்பு செய்தும்,
அழகும்;பரிசுத்தமும் கணவனுக்கு இதம் கொடுத்தும், தேன் போன்ற அமுத வார்த்தையும், ஆழ்ந்தமனமுடையவள் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவள் ஆவாள்.
4.ரோகிணி:
"மெனிகளறவுந்துய்யாள் வெவ்விய கோபஞ்செய்யும்
கானிடைதிரியவேண்டிக் கருது வாள் பிறரையெண்ணி
மானிடமில்லை மென்மேல் மனக்களவுடையாளாகு
முனமில் திரண்ட கொங்கையும் ரோகிணி நாளினாளே"
இதன் பொருள்:
உடல் முழுவதும் மாசு;மருவின்றித் தூய்மையும் கொடிய கோபங்கொண்டலும், கானகத்தில் (காட்டில்) திரியும் எண்ணமும், பரபுருஷனை (கடவுளை) சேர விருப்பமும், மனிதர்களிடத்தில் அன்பு இல்லாமையும், கபட மனமும், திராண்ட குடம் போன்ற மார்பும் கொண்டவள் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவள் ஆவாள்.
பொதுவாக முனி தத்துவப் பெண்களுக்கு செவ்வாடை, இனிப்புச்சுவை, மாலைப்பொழுதில் தூக்கம், நல்ல குணம் கொண்டவர்களையும், பரிமள களபம், விரும்புவார்கள்.
(3) நாக லட்சணம்.
----------------------------------
தெய்வீக லட்சணம், முனி லட்சணம் போன்ற தத்துவங்களை தொடர்ந்து
இந்த பதிவில் நாக தத்துவ லட்சணம் பொருந்திய பெண்களை பார்க்கலாம், இந்த பாடலை கவனியுங்கள்.
"அங்கமும் விரலுநீளு மரைவெகு நுண்ணிதகுங்
கொங்கையுங் குறும்பைதானே குமிழன மூக்குச்
செவ்வாய் யிங்கிவையுடையாளாகி தளர்நடைகண்சுழற்ற
நங்கயு நகைக்கு பண்பாள் நாக தத்துவத்தினாளே"
அதாவது,
நீண்ட விரலும் உடலும் அற்பமான இடையும் தென்னங்குரும்பையொத்த மார்பும் அதாவது தென்னங்குறும்பை போன்ற சிறிய அளவு மார்பும்,
குமிழமலர் போன்ற மூக்கும்,
சிவந்த வாயும், தளர்ந்த தாடையும் சுழன்ற பார்வையும் உடையவள் என்று பொருள்.
அடுத்து,
"போன்றகு முலையுந்தோளும் பொளிவுள கையுமெய்யும்
உன்றிய திரட்சியுண்டாம் யோனியும் பெரிதாகும்.
தன் றலைக் குனித்துப்பாரில் நடக்கும்கால் சுழற்றிநோக்கு
நன் றிதேர் புலவர் சொன்ன நாகதத்துவத்தாளே"
அதாவது, அழகுடைய குய்யமும், புயமும், கையும், உடலமைப்பும் ஒத்திருந்து இருப்பதும், பெரிய துவரத்தையுடைய யோனி(பெண் குறி)யும், தரையைப் பார்த்து நடப்பதும், மருண்ட கண்ணும் உடையவள் என்கிறது இந்த பாடல்.
அடுத்து,
"அருகியமதலைச் சொல்லாளகங்கண்டஞ்சாள்கூசாதா
ளூருக்கிட நேர்ந்திட்டொல்கி யுள்ளுறவளைந்தகண்டஞ்
சொரிகுலல் நெகிழ்ந்து நீளுந்
துள்ளிய நடையாண்டு முருகிடாள் மெய்யும் பேசாளுரக தத்துவத்தினாளே"
அதாவது,
ஓசை நிறம்பாத மழலைச் பேச்சும், வீட்டில் இருந்தாலும் குடும்பத்தாருக்கு பயப்பிடாதகுணமும், அச்சம், நாணம் இல்லாமையும், கண்டோர் மனம் கவரும் வளைவாகிய கழுத்தையும், அதனோட சேர்ந்த நீண்ட கவர்ச்சியுள்ள கூந்தலையும், உதறிய நடையும்,
யாரிடமும் மனமுருகி பேசமையும், அதிகம் பொய் பேசுவராகவும் உடையவள் என்கிறது இந்த பாடல்வரிகள்.
அடுத்து,
"உறக்கமிக்கவ ணெட்டுயிர் பாக்குவாள்
மிறைந்து சோம்பிக் கொட்டாவி விடுக்குவாள்
இறக்கணு நிலையின் றிச் சுழலுவாள்
சிறக்கு நாடர்தஞ் சேயிழை யென்பவே"
அதாவது, மிகுந்த தூக்கமும், அடிக்கடி பெருமூச்சி விடுதலும், சோம்பலால் கொட்டாவி விடுதலும், சதா காலமும் ஓரிடத்தில் நிலையில்லாமல் நகர்வது அல்லது தூக்கத்தில் புறண்டுக்கொண்டே இருப்பது
இவர்கள் தான் நாக தத்துவபெண்களின் பொதுவான அறிகுறி.
இதில் சில பெண்கள் பிறந்த நட்சத்திர அடைப்படையில் சில மாற்றத்துடன் காணப்படுவார்கள்.
1.சுவாதி:
முதலில் பாடலை கவனியுங்கள்....
"மேனி கால்கை தோள் மெய்மிகுந் தோங்கியே
யூனமின்றி யுருண்டயர் கொங்கையாள்
மீனிறைச்சி விரும்பினவுண்டிடு
மான் மறிக்கண் மதித்தெழு சோதியே"
அதாவது,
சுவாதி நட்சத்திரத்தில் நாக தத்துவத்தோடு கூடியா ஒருவள் பிறந்தாள். அவள், நல்ல மேனியும், கால் கையும், பிறரைக் கவரும் வண்ணத் தோளும், அழகிய உடல் அவயங்களும், மிகுந்த சிறப்புடைமையும், குற்றமற்று உருட்சியாகிய (உருண்டு உயர்ந்த) மார்புகளும், மீன்களை விரும்பி உண்ணும் விருப்பமும், மான் போல கண்ணும் உடையவள் இந்த சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவள் ஆவாள் என்கிறது.
2.விசாகம்:
"நெடியளாகியு நீள்கரஞ் கொங்கை கால்
தடியளாகித் தகை விலளி யவர்க்கு
மிடவியாள் மனமின்பு றிசைந்திடாள்
மிடிகள் செய்யும் விசாக நாள் மங்கையே"
அதாவது,
உயர்ந்த நீண்ட கையும், பூரித்த மார்புகளையும், நீண்ட கால்களும் ஸ்துல தேகமும், யாரிடத்திலும் அன்பு இல்லாமயும், ஒருவருக்கும் நன்மை செய்யாமலும், பிறருக்கு தீமை மட்டுமே செய்யும் மனமும் கொண்டவள் விசாகத்தில் பிறந்தவள் ஆவள் என்கிறது.
3.ஆயில்யம்:
"தட்சியோ விலைதண்ணளி யெசன்றிலை வாள்
மாட்சிக் கூறி மனக்களவே செய்யும்
பேட் சிலந்திடப் பெண்மையழைத்திட
மாட்சி பாடிலப் பீலியப் பெண்ணே"
அதாவது,
யாருக்கும் அடங்காமையும் மற்றவர் மேல் அன்பில்லாமையும், மேலுக்குப் பெருமைபேசி மனதில் கபடு வைத்திருப்பதும், பெண் தன்மைகளிற் சிறந்த கற்பையழித்தலும், மேற்பாடில்ல்லா மையும், உடையவள் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவள் என்கிறது இந்த வரிகள்.
4.பூராடம்:
"மேல் மெலிந்து குறங்கு பருத்திடுங்
கால் விரல்கள் தடித்து கண்சுற்றிடு
நூலெனச்சிறு நெய்ய மருங்கினள்
பாலெனச் சொல்பகரும் பூராடமே"
அதாவது இந்த பாடலின் விளக்கம் என்னவென்றால், உடல் மேற்பாக மெலிந்து தொடைகள் இரண்டும் பெரியதாகவும், கால்விரல்கள் தடித்தும்,
சுழற்கண்ணும், நூல் போன்ற நுண்ணிய இடையும், பால் போன்ற இனிய (தூய) சொல்லும் உடையவள் பூராடம் நட்சத்திரநாளில் பிறந்தவள் என்கிறது.
பொதுவாக இந்த நாக தத்துவ லட்சணம் பொருந்திய பெண்களுக்கு கருப்பு ஆடைகளும், பால் பொருட்களும், மஞ்சள் பூசுவதும், சந்தனம் போன்ற வாசனைகளும் மிகவும் பிடிக்கும்.
(4) கந்தர்வ லட்சணம்.
----------------------------------
பாடலை கவனியுங்கள்....
"ஒருமுலை சிறுத்தும் ஒருமுலை பருத்தும்
மருகவள் பலகால் தின்று தாவியே கிட்டச்செல்லு
மருகவிள் குழலாளாரு முன்பின்னே ரறியாளாகுங்
கரமது நெரித்து நிற்கும் காந்தருவத்தினாளே"
இதன் பொருள்:
ஒரு மார்பகம் சிறுத்தும் மற்றொரு மார்பகம் பெருத்தும் சருகு பட்சணத்தில் விருப்பம் யாவரிடத்தும் சம்பித்தும் சமீபித்துச் செல்லுதும் வாசம் வீசும் கூந்தலும் போக்கு வரவுத்தெரியாமையும், கைநெறித்துக் கொள்ளுவதும் உடையவள்.
"கரும்புறு குழல்களோங்கி சுருண்டனயன நீண்டு
குருமலப்போல் கவணைகொங்கை கொடியரவிந்தமல்குங்
பெருந்துடை பெரியாளாகும் பெரும்பிடி நடையாளாங்
கரும்புபோ லினிதாய்ப் பேசுங் காந்தர்வ தத்தினாளே"
அதாவது,
வண்டு மொய்க்கும் மலர்சூடிய கூந்தலும், நீண்ட கண்ணும், உயர்ந்த சரீரமும், தென்னங்குரும்பையொத்த மார்பங்களும், தாமரை இதழ்போல அல்குலும், பெரிய தொடையும்,
தாட்டியான உடலும், பெரிய பிடியானைபோல நடையும், கரும்பு போல மதுரமாகப் பேசுதலும் உடையவள்.
"சிறுதுதல் புருவநோக்கில் சிலையெனக் குனிந்திருக்கும்
சறிதரும் கலைபின்சொல் செவ்விளநீர்போல் கொங்கை
அருதிகளுடையாள் சாலவன் பருக்கன்பு நல்லாள்
கறிநெய் பாலணையவுண்டி கந்தருவத்தினாளே"
இதன் பொருள்:
குறுகிய நெற்றியும் வில்லைப் போலவே வளைந்திருக்கும் புருவமும், மதலைச் சொல்லும் செவ்விளநீர் போன்ற மார்பாகங்களும் ;அதன் கண்டிப்பும், தன்னிடத்தின் அன்புள்ளவர்க்கு அன்பும், கறி நெய் பாலோடு சேர்ந்த உணவும் விரும்பி உண்ணும் குணங்களைக் கொண்டவள்.
இனி நட்சத்திர குணங்களை பார்க்கலாம்......
1.அஸ்வினி:
"குரும்பை போற்பணைத்த கொங்கை
குளீர்மதிமுகஞ் செவ்வாய்
சுருண்ட நீண்டனைய கூந்தல்
துய்யகால் கரமு நொய்யகள்
கரும்புபோலினிய சொல்லாள்
காதலர்க்கன்பு செய்வா
ளரும்பிய முல்லை யாரு
மசுபதி நாளிலே"
இதன் பொருள்:
தென்னங்குரும்பை போன்ற சிறிய அளவு மார்பகங்களும், குளிர்ச்சியுள்ள சந்திரன் போன்ற முகமும், சிவந்த வாயும், மென்மையான கரும்பைப் போன்ற சொல்லும், நாயகனிடத்தில் அன்பும் முல்லையரும்பை போன்ற பல்வாரிசையும், உடையவள் அஸ்வினி நட்சத்திர நாளில் பிறந்தவள் ஆவாள்.
2.அவிட்டம்:
"கண்விழி பெரியாளாகும் கரும்புபோலினிதாய்ப்பேசும்
பெண்மையுமுடையாளாகும் பெருகிடும் பொம்மைபேசும்
உண்மையே யுரைப்பார்க்குற்ழற் குளங்கொடுத்தினிது வாழ்வா
நண்ணூவார்க் கமுதமாகு நல்லவிட்டத்தினாளே"
இதன் பொருள்,
பெரிய விழியும், மதுரமான சொல்லும், பெண் தன்மையும், பருத்த உடலும் தற்பெருமை பேசுதலும், உண்மை பேசுவோருக்கும் உறவினர்களுக்கும் உள்ளமுருகி கலந்து வாழ்வதும், தன்னையடுத்தவர்க்கு உதவும் குணமுடையவளாகவும் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவள் இருப்பாள்.
3.சதயம்:
"புருவங்கள் நெருங்கி நீண்டு புகன்ற வேலைனைய கண்ணாள்
பெருந்தன முடையால் பெண்மை பேசுவாள் குணங்கள் கூறி
மருந்தறி மங்கையாகு மாந்தரை மருட்டும் போகா
தரமன்றிச் செய்ய வல்வாள் சதய நாளளிற் பிறந்துளாளே"
இதன் பொருள்:
நெருங்கி நீண்ட புருவமும், வேல் போன்ற விழியும், பருத்த மார்பாகங்களும், பெண்மை பேசுதலும், நல்ல குணமான வார்த்தைகள் பேசுதலும், ஆடவனுக்கு (ஆண்களுக்கு) ஈடு மருந்து (வசியம்) செய்யும் குணமும், கணவனை மயக்க நீடித்த கடின போகஞ் செய்பவளும் இந்த சதய நட்சத்திரத்தில் பிறந்தவள் ஆவாள்.
பொதுவாக இந்த கந்தர் தத்துவம் பொருந்திய லட்சணங்களை பொருந்திய பெண்களுக்கு நிறம் பொருந்திய மேகலாபரணமும், பிச்சிமலர்கள், சந்தனம், அகில், சாம்பிராணி, சடாமஞ்சரி, பச்சைகற்பூரம், புனுகு இவைகள் மிகவும் பிடிக்கும்.
(4) பூத லட்சணம்.
----------------------------------
வழக்கம் போல பாடலை கவனியுங்கள்....
"பருத்ததலை யுகந்தபல்லும் பணைமுலைப்பருத்திருக்கும்
முருமிக பெருங்கண்ணோக்கு முணிலே குறயவுண்ணா
கருகிடப் பருந்தகை கால்வளைந்திருக்கும்
பெருமைகள் சிரிமுல்லை பூத தத்துவத்தினாளே"
இதன் பொருள்,
பருத்த தலையும் உயர்ந்தபல்லும் பூரித்த மார்பும் ஸ்தூல சரீரமும் விசாலமான கண்ணும் அதிக உணவும் கருத்துத்தடித்து வளைந்திருக்கின்ற கை கால்களும் பொறுமையென்பது சற்றும் இல்லாமையும் உடையவள்.
"பிடித்திடும் மடிக்கும் பேசாம் பெருகிடும் பிணங்குங்கையைக்
கடித்திடுங் கலவிக்காகாள் கண்டது கனவாய்க்கொல்ளு
கடிந்திடு நயத்தசொல்லாள் நயப்பில்லாள் பொய்யும் பேசுஞ்
தடுத்திடும் துத்தத்தோடே தன்மையை பொழியவெறான்"
இதன் பொருள்:
அருகிலிருப்பவரை பிடித்துக்கொள்வதும், பெண்களோடு அடித்துக்கொண்டு கூக்குரலிட்டு சண்டைப் போடுவதும், கையை கடித்துக் கொள்வதும், புணர்ச்சியில் விருப்பமில்லைமையும், பார்த்த பொருளை திருடுவதும், பொய் சொல்வது, தாடிக்குரலுடையவளும் ஆவாள்.
"கண்கள் பெருகிக்குறடுயர்ந்து
கால் தான் குறுகி யுடல் பருத்து
வெண் பல்லுயற்து வாய் குறுகிய மெல்ல பேசாள்
குறல்மூழ்கி யுன் கையளவிற் குறையாது
வுடுக்கவும் விருப்புயில்லாதாள் பெண்களுரவே
யில்லாதாள் பெரியபூத தத்துவ மே"
இதன் பொருள்:
பெருத்த கண்ணும் உயர்ந்த குதியும், குறுகிய கால்களையும், பெருத்தவுடலும், வெளுத்து உயர்ந்த பல்லும், குறுகிய வாயும், மெல்லப் பேசமையும், மிகுந்த உணவும், ஆடை முதலியவற்றில் விருப்பம் இல்லாமையும், பெண்களோடு நட்பு இல்லாமையும் உடையவள் பூத தத்துவப் பெண்.
இனி நட்சத்திர குணங்களை பார்க்கலாம்.....
1.மூலம்:
"குறிய கூந்தல் கொடுபெரு கொங்கையாள்
அறிவிலோதுவா ளாரையுஞ் சங்கியா
ளுறவி வன்பிலுகந் தவர்க்கன்பிலாள்
முறையிலாதவள் மூலநாள் மங்கையே"
இதன் பொருள்:
குறுகிய தலைமுடியும் பிரமிக்க தக்க பெரிய மார்பகங்களும், புத்தி இல்லாமல் பேசுதலும், யாவரிடத்திலும் வெட்கமில்லாமையும், உறமுறையாரித்தும் நாயகனிடத்தும் ஆசைவையாமையும் உடையவள் மூல நாளிற் பிறந்த பெண்.
2.ரேவதி:
"பெரிய கண்கள் பிதுங்கிய பிணங்கிடும்
வரிய வாம்மலர் பார்த்தச் சொல்லாலொன்றும்
பிரிசை யாகவணைத்தவர்க் கன்பிலா
ளிருள் செறிந்த யிரேவதிக் கன்னியே"
இதன் பொருள்:
பெரிய கண்களும் பிணக்குண்டான போது கண்கள் பிதுக்கலும் பருத்தவுடலும், சிறிதும் யோசிக்காமல் பேசுவதும், கலந்த நாயகரிடத்தில் அன்பு இல்லாமையும், கரிய கூந்தலும் உடையவள் ரேவதி நாளிற் பிறந்தவள்.
3.பூரம்:
"குறடுபர்ந்து நெடுமுழ ந்தாள் கறுக்
கறலெனுங் கூந்தல்மிக நீண்டுளாள்
நறவுவேட்டுண் ணசையின் ளறியும்
புற முறைந்திடும் பூரநாள் மங்கையே"
இதன் பொருள்:
கூதிகால்கள் உயர்ந்தும், நீண்ட
முழந்தாளும், கறுபணற்படிவுபோல் மிக நீண்ட கூந்தலும், கள் குடிசையும், காணாத விடத்தில் வசிக்கும் குணமும் உடையவள், பூரண நாளில் பிறந்தவள்.
பொதுவாக இந்த பூத தத்துவ லட்சணம் பொருந்திய பெண்களுக்கு சிவந்த சேலை, துவர்வான சேலை, சந்தனம் போன்றவைகளும், செவ்வந்தி, தாழை, முல்லை போன்ற மலர்களும், மாமிசம், நெய் பால் கூடிய உணவுகளும் மிகவும் பிடிக்கும்.
(4) இயக்கி லட்சணம்.
-----------------------------------------
அடுத்து இயக்கி தத்துவ லட்சணம் பொருந்திய சித்திரை, மகம், பரணி ஆகிய பெண்களை பார்க்கலாம்..
"அறவெகு வுறக்கமுள்ளா ளாக்கையு நெடியாளாரும்ங்
குறைவில்லா வடிவேயாகுங் கொங்கையுஞ் செப்பேயாடு
மறமிகவுடையளாகும் வார்தையு மிளிதாய்ப்பேச
மிறைவிரல் மிகநீற மியக்கிதத்துவத்தினாளே"
அதாவது,
மிகுந்த தூக்கமும், உயர்ந்த உடலும், குறைன்றி தடித்த ரூபமும், மிகுந்த தேகமும், இனிய சொல் பேசாமையும், நீண்ட விரல்களும் உடையவளாம்.
அடுத்த வரிகளை கவனியுங்கள்...,
"மருவுது மேனிநல்லாள் வந்தடைந்தாரைப் பேணும்
பெருகிய புருவங்கண்கள் பிணக்குடனுரைப் பானாகும்
வெருவீறு முருகமிக்கள் வெளிப்பேடு தத்தமுள்ளாள்
இருநிதி யேதுவேண்டாளிக்கி தத்துவத்தினாளே"
அதாவது,
அர்த்தமில்லாத உடலும், தனக்கு அடைக்கலம் கொடுத்தவருக்கு உண்மையாக இருப்பதும், அகன்ற புருவங்களும், விசுவாசமான கண்ணும் கோபம் சொல்லும் பயமுறுத்தக்க சத்திரவடிவமும், வெளியே எழும்பி நின்ற பல்லும், பொன் பொருளின் மீது ஆசையில்லாத குணமும் கொண்டவளாம்.
"செறியவி யொலித்தகுஞ்சி செய்திருந்தவங்கொடுப்பாள்
நொறிதரு முலையும்பல் நோய்யவாய் வளமொப்பாள்
செறிவில்லான புறமுறைக் குஞ்சிறு முழங்காலும்கையும்
மெறிகனல மெழுகை யொப்பாணிக்கய தத்துவத்தாளே"
அதாவது,
வண்டொலிக்கும் கூந்தலும், பிறர் செய்யும் தவங்களை அழிப்பதும், முல்லையரும்பு போன்ற பல்வரிசைக்கொண்ட வாயும், பிறர் மேல் புறம் கூறுதலும், குறிக்கிய முழங்காளும், கையும், உலைவாய் மெழுகுப்போல கோபமும் உடையவள் இயக்கித் தத்துவபெண்.
இந்த இயக்கி தத்துவத்தில் பிறந்த பெண் சித்திரை நட்சத்திரம் கூடிய நாளில் பிறந்தாள் என்றால் அவள் எப்படி இருப்பாள்..?
ஒரு நண்பர் அவர் ஜோதிடர் என்று நினைக்க இடம் உள்ளது. ஐயா தயவு செய்து பதிவுகளை தொடர்ந்து படியுங்கள். லட்சணம் வேறு, நட்சத்திரம் வேறு, இந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவள் இப்படித்தான் இருப்பாள் என்று நான் இங்கே கூற வில்லை. அதற்கு மாறாக இந்த லட்சணம் அதாவது (அவள் உடல் அமைப்பு)
அதைபொருந்தே ஒருவளின் குணம், உடல் அமைப்பு இருக்கும்.
இதை யாரும் ஜோதிட ரீதியாக பார்க்க வேண்டாம். அப்படி பார்த்தால் உங்களுக்கு மிஞ்சுவது குழப்பம் மட்டுமே. ஒவ்வொரு ராசி அடிப்படையிலும்; நட்சத்திர அடிப்படியிலும் பல்வேறு மாற்றம் இருக்கும். உதாரணமாக இந்த ராசி நட்சத்திரத்தில் பிறந்தவளுக்கு இங்கேங்கே தான் மச்சம் இருக்கும் என்று எந்த சோதிட சாஸ்திரத்திலும் இல்லை, ஆகவே, இங்கே நான் குறிப்பிடும் தகவல்கள் பெண் லட்சணம் சம்பந்தபட்டது.
1.சித்திரை:
"சிற்றிடை முல்லையாம்பல் சிறுநுதல் பவளச் செவ்வாய்
கற்றவர்க்ன்பு செய்வாள் கைபொருள் கருணையில்லை
யுற்றவர் கின்பஞ் செய்வா ளுடலூறு கலவிக்கெல்லாந்
தெற்றிய வுடையாகுஞ் சித்திரை நாளிநாளே"
அதாவது,
நுட்பமான இடுப்பும், முல்லைமொக்கைப்போன்ற பல்லும், சிறிய நெற்றியும், பவளம் போலவாயும், படித்தவர்களிடம் அன்பும், பொருட்கள் மீது ஆசையில்லாமையும், தன்னை சேர்ந்தோரிடத்தில் ஆசையும், துணைவர் செய்யும் புணர்ச்சி விதங்களுக்கெல்லாம் இடம் கொடுக்கும் உடலுடையவள் சித்திரை நாளில் பிறந்த பெண்ணாம்.
2.மகம்:
"சிரியள் சேர்ந்தக்கென்னும் சிறுபணிசெய்யுஞ் சிந்தை
கூறிய குறளைச் சொல்லால் குணமெனிந் கூடி வாழ்வர்
ளாரியளன்ன மோகநடை யொருவல்லியாகும்
மாரனை வசிக்க தல்லாள் மகத்துநாள் பிறந்துளாளே"
அதாவது,
தன்னைச் சேர்ந்தவர்களை சிறப்பானவர்களாக நினைத்தல், அவர்கள் சொல்லும் வேலையை சிறப்புடன் செய்தல், அவர்களை கோள் சொல்லாமையும், நலம்பட்டால்கூடி வாழ்தலும், காண்போர் மோகிக்கும்படி கொடிப்போல நடந்துபோகுதலும், மன்மதனை வசிக்கதக்க ரூபலாவண்யமுடையவள் மக நாளில் பிறந்த பெண்.
3.பரணி:
"வடிவமு துடையாளாகு வந்தடைந்தாரைப் பேணுங்
கடியனத விருங்காமற் களத்தினில் களவுகாட்டும்
வடிவுறு புணர்ச்சிக்கெல்லா மருளுடை பிரிந்த சிந்தை
படி தனிற் சென்னோயிந்த குணமெலாம் பரணியாளே"
அதாவது,
வடிவுடைமையும், அடைந்தாரைக் காத்தலும், புணருங்காலத்தில் துணைவனை வஞ்சித்து (ஏமாற்றி)திருட்டு புணர்ச்சி செய்வதும், துணைவரின் கடினப் புணர்ச்சிக்கெல்லாம் மனம் விரும்புவதுமுடையவள் பரணி நாளில் பிறந்தவள்.
இவர்களுக்கு செண்பகமலர்,
பிச்சி, முல்லை, நீல வண்ண ஆடைகள்,
ஆண் விதவையை விரும்புதல் போன்ற அற்ப சுகங்களை விரும்புவது போன்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்கு நாகப்பாம்பு வாசம் நன்றாக உணர முடியும். இது ஒரு அபாய நிலை வசியமுறையாகும் அதலால் இது மறைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
பொதுவாக மேல் சொன்ன அனைத்து வசிய முறைகளும் ஆபத்தான முறைகள் தான், இது பண்டையக்கால கொக்கோக சாஸ்திரத்தில் கூறிய வசிய முறைகள் என்பதால் இதில் நன்மையும் உண்டு சில தீமைகளும் உண்டு. இந்த மருந்தை சாப்பிடும் பெண்களுக்கு சில நாட்களில் உடல் பாதைகள் ஏற்படும் அதை சரி செய்யும் வைத்தியமுறைகளை அன்று நன்றாக அறிந்திருந்தார்கள். ஆனால் இன்றோ எங்கோ சில நபர்கள் மட்டும் உள்ளார்கள். அவர்கள் எல்லாமே உண்மையானவர்கள் என்று நம்மால் முழுமையாகவும் கூறிவிட முடியாது. இப்படி ஒரு தகவல் கொக்கோக சாஸ்திரத்தில் உள்ளது என்று கூறினேன். இதை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் இந்த வசிய மருந்து முறைகளை நீங்களாகவே முயற்சி செய்ய வேண்டாம். அது ஒரு உயிருக்கு ஆபத்தில் கூட போய் முடியாலாம்.
என்பதை எச்சரிக்கிறேன். ஒரு தகவலுக்காக பகிர்ந்தேன்.
பதிவு- சித்தர்களின் குரல் முகநூல் பக்கத்தில் இருந்து.