தமிழர்களின் மிக பழமையான வழிபாடு ஏழு கன்னி ஏழு முனி வழிபாடு . இன்றும் தமிழக கிராமங்களில் கன்னிமா கோயில்களும் அய்யனார் கோயில்களும் ஏராளமாக இருக்கின்றன . ஆனால் தமிழக எல்லை பகுதியை தாண்டினால் இந்த வழிபாடு அதிகமாக இல்லை . சிந்து சமவெளி நாகரிகத்திலும் ஏழு கன்னி வழிபாட்டிற்கான சின்னங்கள் கிடைத்திருக்கின்றன .
ஏழு என்ற எண்ணிற்கும் தமிழர்களுக்குமான உறவு மிக நெருக்கமானது .
பெண்ணின் ஏழு பருவங்கள்
1. பேதை
2. பெதும்பை
3. மங்கை
4. மடந்தை
5. அரிவை
6. தெரிவை
7. பேரிளம் பெண்
ஆணின் ஏழு பருவங்கள்
1. பாலகன்
2.விடலை
3.காளை
4. மீளி
5. மறவோன்
6.திறவோன்
7.முதுமகன்
இலை , பூ , காய் , கனி என்று ஒவ்வொன்றுக்கும் ஏழு பருவங்கள் தமிழில் உள்ளது .
வாரத்திற்கு ஏழு நாட்கள்
இசைக்கு ஏழு சுவரங்கள், உடலிலுள்ள குண்டலினி சக்தியை எழுப்ப வதற்கான சக்கரங்கள் ஏழு என்று அடுக்கி கொண்டே போகலாம் .
திருக்குறளில் கூட ஒரு குறளில் ஏழு வார்த்தைகள் உள்ளது .
மொத்தம் 133 அதிகாரங்கள் 1 + 3 + 3 = 7
மொத்தம் 1330 குறள்கள் 1 + 3 + 3 + 0 = 7
தமிழர் சமயம் ஆசிவகம் என்ற சமணம். இதன் கடவுள் வழிபாடு தான் இந்த ஏழு கன்னி , ஏழு முனி வழிபாடு
ஆசிவகம் நிற கொள்கை கொண்ட சமயம் . சமணர்கள் என்ற சித்தர்கள் மக்களுக்கு தாங்கள் உறங்கும் பள்ளிகளுக்கு அருகே கல்வி போதித்தார்கள் . மொத்தம் 18 வருட படிப்பு ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒரு நிறம் . மொத்தம் ஆறு நிறம் . ஏழாவது நிலை நீர்வண்ண நிலை என்ற நிர்வாண நிலை இந்த நிலை அடையும் ஒரு சிலர் மட்டுமே முக்தி என்ற கடை நிலை அடைந்தவர்களாக போற்றப்பட்டனர் . சித்தர்களை மக்கள் அண்ணன் என்று அன்போடு அழைத்தார்கள் சித்தர் அண்ணன் வாசல் சித்தன்னவாசல் ஆகியிருக்கிறது அங்கும் சமண ஓவியங்களே இருக்கிறது. திரு அண்ணா மலை என்ற திருவண்ணாமலையிலும் சமண வாழ்விடங்கள் நிறைய உள்ளது. தமிழர்களை அடிமைப்படுத்த இந்த சமண சித்தர்களை வதை செய்து ஆரியர்கள் கொன்றார்கள் அதுவே சித்தர் வதை சித்திரவதை என்ற வார்த்தை உருவாக காரணம். சமண கழுவேற்றம் இதைத்தான் குறிக்கிறது.
தமிழர் மெய்யியல் ஆன ஆசீவகத்தை 6 சமயங்களாக சைவம் ,வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் ,சௌரம் என்பது போல ஆரியர்கள் பிரித்து அழித்தார்கள். களப்பிரர் காலத்தில் நம்மை ஆண்டது ஆரியர்களே, பதினான்காம் நூற்றாண்டில் பிராமண அடிமைகளான விஜயநகர ஆட்சியில் ஆசீவகம் முற்றிலுமாக அழிந்து போனது.
முதல் வண்ணம் - கருப்பு - பெண்கடவுள் = காளி , ஆண் கடவுள் = காலன் என்ற சிவன் , தொடர்புடைய கோள் = சனி
இரண்டாம் வண்ணம் - நீலம் - பெண்கடவுள் = நீலாம்பரி என்கிற நீல காளி , தொடர்புடைய கோள் = சந்திரன்
மூன்றாம் வண்ணம் - பச்சை - பெண்கடவுள் = பச்சையம்மா , வள்ளி , மீனாட்சி , துரோபதி , பாஞ்சாலி ( அனைவரும் ஒரே கடவுளே ) , தொடர்புடைய கோள் = புதன்
நான்காம் வண்ணம் - சிவப்பு - பெண்கடவுள் = லட்சுமி , ஆண் கடவுள் - விஷ்னு , தொடர்புடைய கோள் = செவ்வாய்
ஐந்தாம் வண்ணம் - மஞ்சள் - பெண்கடவுள் = பொன்னாம்பால் , கனகம் , தொடர்புடைய கோள் = வெள்ளி
ஆறாம் வண்ணம் - வெள்ளை - பெண்கடவுள் = சரஸ்வதி , ஆண் கடவுள் - பிரம்மன் ( முருகர் தான் பிரம்மன், பெரிய+ அமணன்= பேர்+ அமணன்= பேரமணன்= பிராமணன் = பிரம்மன்) ,தொடர்புடைய கோள் = வியாழன்.
ஏழாம் வண்ணம் - நீர்வண்ணம் - பெண்கடவுள் = காவிரியம்மா ,கங்கையம்மா , தொடர்புடைய கோள் = சூரியன்
ஐயப்பனும் ஒரு ஐய்யனார் தான் அவரும் பள்ளி வைத்து நடத்தியவர் . இன்றும் கன்னி சாமிக்கு கருப்பு வண்ண உடையும் , குரு சாமிக்கு சிவப்பு உடையும் கோயிலில் வழிபாடு நடத்தும் பூசாரி வெள்ளை உடையும் அணியும் மரபு உள்ளது .18 படி உள்ளது .
கன்னி கோயில் கன்னிகளில் முதல் கன்னி கருப்பு நிறத்திலும் சிறிய அளவு இருக்க வேண்டும் . கடைசி கன்னி பெரிய அளவில் இருக்க வேண்டும் இதுவே முனிகளுக்கும் பொருந்தும் ஆனால் பழைய இந்த வழிபாடு தன் வளமையை இன்று இழந்து உள்ளது .அளவு நிறம் சரியாக இன்று கடைபிடிக்க படுவதில்லை .
கல்வி கடினமானவனை மென்மை ஆக்குகிறது . கராத்தே போன்ற தற்காப்புக்கலைகள் மென்மையானவனை கடினமானவன் ஆக்குகிறது . எனவே கராத்தேயில் முதலில் வெள்ளை பட்டையும் கடைசியில் கருப்பு பட்டையும் வழங்க படுகிறது .
இதே வழிபாடு சுமேரிய கலாசாரத்தில் அனுநாகி ( ஏழு நாயகி ) என்ற பெயரில் உள்ளது .
ஐரோப்பாவிலும் ஏழு தேவதைகள் ( sevan angles , sevan archangles ) என்ற பெயரில் உள்ளது .
ஒலிம்பிக் கொடியில் கூட இந்த ஆறு வண்ணங்கள் உள்ளது.
எல் என்றால் வெளிச்சம் சூரியன் , எல்லப்பன்
அல் என்றால் இருட்டு , அல்லி இரவில் பூக்கும் மலர் , அல்லும் என்றால் இரவு
தமிழர்கள் வெளிச்சம் இருட்டு இரண்டையும் வழிபட்டனர் .
எல் + அல் +அன் = எல்லாளன்
ஆனால் அரேபியர் வெய்யில் கொடுமையால் இருளை மட்டும் "அல்லா" என்று வழிபட்டனர் .
ஐரோப்பியர் குளிரின் கொடுமையால் வெளிச்சத்தை " எல்லோஹிம் (Elohim ) " என்று வழிபட்டனர்.
ஏழு கன்னிகளில்
காவேரி அம்மன் = காவேரி எல் = கேபிரியல் ( Gabriel )
மீனாட்சி அம்மன் = மட்சம் ( மீன் ) எல் = மிச்சேல் = மைக்கேல் ( Michel )
காளி அம்மன் = ரா ( இருட்டு ) எல் = ரபேல் ( Raphael )
அங்கு என்ற தமிழ் வார்த்தைக்கு வளைவு என்று பொருள் , வளைவாக இருப்பதால் அங்குசம் ,அங்கூரம் என்ற பெயர் பெற்றன. இந்த அங்கு என்ற தமிழ் வார்த்தையை தான் ஆங்கிலத்தில் கோணத்தை குறிக்கும் angle என்ற வார்த்தைக்கு மூலம். Angel என்ற வார்த்தைக்ககும் "அங்கு" என்ற வார்த்தை தான் மூலம். வட்டமான வளைவு பாதையில் கோள்கள் செல்வதால் அவைகளை ஏஞ்சல் என்று உருவகப்படுத்தினர். ஆகாயத்தில் மிதந்து உருளும் கோள்களை ரக்கை உள்ள பெண்களாக உருவகப்படுத்தினர். நம் ஏழு கன்னிகளும் 7 கோள்களோடு தொடர்புடையது.
வாரத்தின் ஏழு நாட்கள் ஏழு கோள்களின் ஆதிக்கத்தை வைத்து உருவாக்கப்பட்டது. சனிக்கிழமை சனி கிரகத்தை குறிக்கும் ஆங்கிலத்திலும் saturday என்றுதான் சொல்கிறார்கள். Saturn என்றால் சனி கிரகம். ஞாயிற்றுக்கிழமையை சூரியனை குறிக்கும் Sunday என்கிறார்கள். திங்கள் கிழமையை நிலவை குறிக்கும் moonday என்று சொல்வதற்கு பதில் Monday என்கிறார்கள். தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி தமிழ் கலாச்சாரமே உலகின் மூல கலாச்சாரம்.
சிந்து சமவெளி வரை இருந்த இந்தியாவில் தமிழர்கள் மட்டுமே இருந்தனர் . பின் வந்த ஆரியர் சூழ்ச்சியால் தமிழரை அடிமைப்படுத்தி தமிழர் வரலாறை திருடி தங்கள் வரலாறு என்று வெட்கம் இல்லாமல் சொல்லி கொண்டிருக்கிறார்கள் . இதே ஏழு கன்னி , ஏழு முனியை சப்த கன்னி சப்த ரிஷி என்று பொய்யான கடவுள் கதைகளை உருவாக்கி அதை நம்பவைத்துள்ளனர் .தமிழ் மொழியை புத்தர்களின் சமஸ்கிருத மொழியோடு கலந்து பல மொழிகளாய் மாற்றி தமிழர்களை பிரித்து இன்றும் மறைமுகமாக ஆண்டு கொண்டிருக்கின்றனர். தமிழர்கள் சுயத்தை உணர்ந்து விழிப்புணர்வு பெற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக