செவ்வாய், 18 ஜூன், 2024

சேலத்தில் உள்ள ஜீவ சமாதிகள்

🔱 சேலத்தில் உள்ள ஜீவசமாதிகள் 🔱
🔔 மாயம்மா ஜீவசமாதி 🔔
      1920 முதல் கன்னியாகுமரி கடற்கரையில் நெடுநாட்கள் வாழ்ந்து வந்த அம்மையார் இவர்,9-2-1992-ல் சேலத்தில் ஜீவசமாதி அடைந்தார்,
        சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் சாலையில் லா காலேஜ் பேருந்து நிறுத்தம் அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 சாந்தானந்த சுவாமிகள் 🔔
      1921-ல் பிறந்தவர்,27-5-2002-ல் ஜீவசமாதி அடைந்தார்.
      சேலத்திற்கு அருகில் உள்ள உடையார்பட்டி மலைக்குன்று பகுதியிலுள்ள  ஸ்கந்தாஸ்ரமத்தில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் திருவடி பீடத்திற்கு சற்று முன்பாக இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 கஞ்சமலை சித்தர் 🔔
      சேலத்திலிருந்து 21.கி,மீ,தூரத்திலுள்ள கஞ்சமலை அடிவாரத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
      இவரது ஜீவசமாதி இருக்கும் கோயிலுக்கு அமாவாசைக் கோயில் என்று பெயர்,
〰〰〰〰〰〰〰〰
🔔 அப்பா பைத்தியம் 🔔
      கரூர் ஜமின் பரம்பரையில் 1859-ல் சித்திரை     புனர்பூசம்  நட்சத்திரத்தன்று பிறந்தார்.இவர் தன்னைப் பைத்தியம் என்று கூறிக் கொள்வார்.பக்தர்கள் இவரை அப்பா என்று அழைத்ததினால் இவருக்கு அப்பா பைத்தியம் என்ற பெயர் விளங்கிவிட்டது,இவர் ஜீவசமாதியானது 11-02-2000-ல் தை மாதம் ,அசுவினி நட்சத்திரத்தில்,சேலம் ரயில்வே ஜங்ஷனிலிருந்து அரை கி,மீ,தொலைவிலுள்ள திருவாக்கவுண்டனூரில் உள்ள தருக விலாஸ் என்னும் சத்குரு மாளிகையில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰 
🔔 பாவை அம்மாள் 🔔
      தியாகராசர் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகில் சேலத்தில் உள்ள ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 கரடிச் சித்தர் 🔔
     சேலத்திலிருந்து 5.கி,மீ,தூரத்திலுள்ள உத்தம சோழபுரம் கரபுரீஸ்வரர் சிவன் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது,
     ஔவையார் வழிப்பட்ட கோயில் ,
〰〰〰〰〰〰〰〰
🔔 சரபங்க முனிவர் 🔔
      சேலம் - மேட்டூர் சாலையில் 16.கி,மீ,தொலைவில் உள்ள ஒமலூர் கோட்டையில் வசந்தீஸ்வரர் கோயிலில் உள்ள நவக்கிரக சந்நிதிக்கு அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 நிர்வாண சுவாமிகள் 🔔
( 🌹 வரதர் சுவாமிகள் 🌹 )
      சேலம் ஆத்தூரிலிருந்து 5.கி,மீ.தொலைவிலுள்ள தளவாய்பட்டிக்கு வந்து அங்கிருந்து வண்டிப்பாதையில் 3.கி,மீ,தொலைவு நடந்து சென்று அங்குள்ள சாமியார் மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 அப்பண்ண சுவாமிகள் 🔔
      சேலம் ஆத்தூரிலிருந்து 15.கி,மீ,தூரத்தில் டவுன் பஸ் மூலம் சென்று வடக்கு மரை கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰
🔔 நடேச சுவாமிகள் 🔔
      ஆத்தூர் (௮) சின்ன சேலம் வந்து அங்கிருந்து காரியானூர் வந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது,
〰〰〰〰〰〰〰〰

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக