ஹோமியோபதி மருத்துவம்
காலை வணக்கம் அனைவருக்கும்
எனக்கு சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், பலவீனம் ஏற்பட்டது காய்ச்சல் பலவீனம் என்பதற்காக அதற்கான மருந்து கிடையாது நம் மருத்துவத்தில் ஆனால் அந்த காய்ச்சல் துயரரை என்ன செய்கிறது என்று தான் பார்க்க வேண்டியிருக்கிறது அப்படி பார்க்கும் போது காய்ச்சலால் போர்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரு விருப்பம் ஏற்பட்டிருந்தது இந்த குறி குணங்கள் கண்டு ஹோமியோபதி மருந்து நக்ஸ் வாமிகா 6 மருந்து தேர்வு செய்து இரவு மருந்து எடுத்துக் கொண்டு தூங்கிவிட்டேன் காலை காய்ச்சல் விட்டிருந்தது உடன் அசதியும் இருமலும் ஏற்பட்டது . ஒரு தொந்தரவாக இருந்தது இருமல்,இருமலுக்கு என்று மருந்து எடுக்க முடியாது ஓமியோபதி மருத்துவத்தில் இருமலால் துயரர் எப்படி துன்பப்படுகிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும் படுத்தால் இருமலால் தூக்கம் வருவதில்லை இந்தக் குறி குணத்துக்கு ஹோமியோபதி மருந்து பல்சடில்லா 6 எடுத்துக் கொண்ட பிறகு இருமல் குறைந்து தூக்கம் வர ஆரம்பித்து விட்டது இப்போது மூக்கில் கெட்டியான மஞ்சள் சளி குறைந்து கொண்டே வருகிறது இதற்கு தேவைப்பட்டால் பல்சடில்லா 6 திரும்ப எடுக்க வேண்டி இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக