திங்கள், 1 ஜனவரி, 2024

குலதெய்வ படையல்

குல தெய்வ பலி என்பது அம்மனுக்கோ, ஐயனாருக்கோ நேரடியாக அல்ல...

அவர்களின் காவல் தெய்வத்திற்கு மட்டும் தான் பலி.

காவல் தெய்வத்திற்கு பலி கொடுத்தால் நேரடியாக அம்பாளுக்கும்,ஐயனாருக்கும் ஆக்டிவேட் ஆகி விடும்.

பலி கொடுத்து விட்டு கட்டாயம் பஞ்ச மகாரங்களோடு தான் பலி படையல் வைத்து வணங்க வேண்டும்.

பஞ்ச மகாரங்கள் :

1. பலி மாமிசம்

2. பலி மத்யம் அல்லது சுரா பானம் அதாவது பட்டை சாராயம்,கஞ்சா,கள் போன்றவை

3. பலி மத்ஸ்யம் அல்லது மீன் பலி

4. பலி முத்ரா எனும்  பச்சரிசி வகைகளில் செய்யப்படும் பொங்கல்,அவல்,பச்சை மாவு போற்றவை

5. மைதுணம் என்ற கணவன் மனைவி இணைந்து தங்கள் பங்காளிகள் மற்றும் குலத்தினரோடு சேர்ந்து மட்டுமே மேற்கண்ட 4 பூஜைகளையும் செய்வது.

இல்லையேல் அது பூரணமான பலி  படையல் அல்ல.

குல தெய்வத்திற்கு பலி கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டாலே குல தெய்வம் உங்கள் வருகைக்காக எழுந்து நிற்கும்.

குல தெய்வத்திற்கு நீங்கள் பலி கொடுத்தாகி  விட்டது என்ற உடன் அறிவற்ற ஆடு சிவபெருமானிடம் மோட்சம் அடைந்து பிறவிப்பயன் பெறும். 

குல தெய்வ கோயிலில் நீங்கள் பலி கொடுத்த உடன் அங்கு வாழ்ந்த சர்வ பீடைகளும் மறையத் தொடங்கும்.

குல தெய்வ கோயிலில் நீங்கள் பலி கொடுத்த உடன் அங்கு வாழ்ந்து வரும் உங்கள் பங்காளிகளுக்கும் உங்களுக்கும் இருந்த சர்வ பிரச்சனைகளும் மறையத் தொடங்கும்.

குல தெய்வ கோயிலில் நீங்கள் பலி கொடுத்த உடன் அங்கு வாழ்ந்து வரும் உங்கள் ஊர் செழிக்கத் தொடங்கும். 

குல தெய்வ கோயிலில் நீங்கள் பலி கொடுத்த உடன் அங்கு நீங்கள் அடிக்கடி செல்லும் நிலை ஏற்படும்.

குல தெய்வ கோயிலில் நீங்கள் பலி கொடுத்த உடனே உங்கள் குடும்பத்தில் இருந்த சர்வ பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும்.
ஒவ்வொரு ஆண்டு பலி முடிந்த பிறகும் ஒவ்வொன்றாக நாம் அதை உணர இயலும்.

பங்காளி என்பதே பலி பூஜை பிரசாதத்தை பங்கு போட்டு வாங்கி பங்கு போட்டு ஒன்றாக அமர்ந்து உண்பதே.

அரிசிக்கு உயிர் இருப்பதால் அதை பொங்கலாக சாமிக்கு படைத்து உண்கிறோம்.

அதே போல அன்று கொடுக்கும் பலியையும் அன்று பிரசாதமாக உண்கிறோம்.

உண்ணாமல் இருந்தால் தவறு இல்லை.
ஆனால் பலி தேவை.

பலி கொடுக்காத கோயிலும் விளங்காது.
பலி கொடுக்காத ஊரும் விளங்காது.
பலி கொடுக்காத மக்களும் விளங்காமல் ஊரை விட்டு ஓடோடி நாடோடி ஆவார்கள்.

ஆகவே சாக்த பலி தேவை.

என்னால் உங்களை தூண்ட மட்டும்தான் முடியும்.
சக்தி பெறுவதும்,மறுப்பதும் உங்கள் கர்மாவை பொறுத்தது.

அவன் அருளால் அவன்தாள் பணிந்து.

அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

பகிர்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக