வியாழன், 14 டிசம்பர், 2023

கருத்திணன் போற்றி

🌾🌴🌳🌾🌴🌳🌾🌴🌳🌾🌴🌳🌾

        கருத்திணன் போற்றி
         """"""""""""""""""""'''''''"""""""""''''''''''''"
     1.
     அருளென மொழிந்தே
          அறமா னளித்த
     திருமொழி யாம்திருக்
          குறளெனுங் கருத்தை
     பொருளுறப் பதித்தே
          உலகினுக் களித்த
     பொருகள வல்லவர்
          கருத்திணன் போற்றியே!

     2.
     கடற்கரை மீன்வால்
          மாட்டின் தலையுடன்
     உடலெனப் பொருந்திய
          மகர ராசியாம்
     ஆழி வாரென
          ஆயரு மானவன்
     வாழி மன்னவன்
          மாயோன் போற்றியே!

     3.
     விளைநிலம் பெருக்க
          குறவரின் எதிர்ப்பை
     களைந்தவர் பாண்டியர்
         ஐவரின் துணையென
     இடைநிலப் பரப்பை
         ஆண்டவ னான
     இடையனு மானவன்
         கருத்திணன் போற்றியே!

     4.
     வாரெனும் மேல்மலைத்
         தொடரில் வஞ்சகன்
     பாரதப் பெரும்பகை
         சகுனியை வென்று   
     கேரள கொல்லம்
         பகுதியில் ஆண்ட
     பாரத நாயகன்
         கருத்திணன் போற்றியே!

     5.
     ஆரியர் வருகையை
         தடுப்பது வேண்டி
     ஆரியங் காவில்
         அறனென அமர்ந்தாய்!
     அபயமு மகற்றி
         உபயமு மளித்தே
     சபரியி லமர்ந்தாய்
         ஐயப்பன் போற்றியே!

     6.
     அறுமூ வாண்டெனும்
         படிநிலைப் படியே
     குருகுல கல்வியை
         வரையரை செய்தே
     கலைகளும் ஞானவிஞ்
         ஞானமும் வழங்கி
     மலைதனில் அமர்ந்த
         ஐயப்பன் போற்றியே!

     7.
     கருத்திணன் ஆயனும்
         அப்பன் முருகனும்
     இருவரும் இணைந்தே
         திருவல் லவராம்
     திருவல் லவரும்
         பாண்டியர் ஐவரும்
     பொருத்திய எழுவராம்
         ஐயப்பன் போற்றியே!

     8.
     ஆயர் கலையாம்
         மாயோன் வகுத்த
     ஆயக் கலைகள்
         அறுபத்து நான்கில்
     மாயச் செய்கையில்
         மணிமுடி சூடிய
     மாயக் கண்ணன்
         கருத்திணன் போற்றியே!

     9.
     சதுரங்கள் ஏழேழ்
         சதுர வடிவிலும்
     சதுரங்க ஆட்டம்
         இருவ ரிடையென
     வல்லப் பலகையில்
         வழிவகை செய்த
     வல்லப நாதன்
         கருத்திணன் போற்றியே!

     10.   
     அரசனும் அமைச்சரும்
         ஒற்றனும் யானையும்
     வீரனும் சேர்ந்தே
         போரிடும் பயிற்சியாம்
     வல்லப்  பலகையில்
         வழிமுறை செய்த
     வல்லவ ராசன்
         கருத்திணன் போற்றியே!    

     11.
     பொதிகை குருகுல
         பள்ளியில்  பயின்றே
     சபரியில் குருகுல
         குருவென அமர்ந்தாய்!
     விரிந்த வனமெனும்
         பிருந்தா வனத்தின்
     ஆட்சி புரத்தில்
         கருப்பண்ணன் போற்றியே!

     12.
     மாறிலி ஒளியின்
         வேகத்தில் அணுவின்
     ஆற்றலும் நிறையும்
         முடிவிலி நிலையாம்
     ஆற்றலே அணுக்களாய்
         நிறையெனத் திணிவதை
     சாற்றிய அறிஞன்
         கருத்திணன் போற்றியே!

     13.
     ஒளிமின் விளைவெனும்
          தத்துவம் மொழிந்தும்   
     ஒளியுணர் திறனுடன்
         ஒளித்துக  ளுறிஞ்சியும்
     ஒளியில் நேர்மின்
         னாற்றலும் கண்டு
     தெளிந்த குருவென
         ஐயப்பன் போற்றியே!

     14.
     சூரிய தகடுகள்
         பொருத்திய கூரையில்
     சூரிய ஆற்றலை
         மாற்றிடும் கலனுடன்   
     சூரிய ஆற்றல்
         எந்திரம் பொருத்தி
     காரினை ஓட்டிய
         கருத்திணன் போற்றியே!

     15.
     இருமுனை யம்எனும்
         ஒளியுமிழ்க் கருவியும்
     ஒருவழி கடத்தியைக்
         கண்டவன்  நீயே!
     ஆளிலா விமானம்
         அர்ச்சுனன் படைக்க
     ஆய்வக மமைத்த
         கருத்திணன் போற்றியே!

     16.
     ஊடும் ஒளியென
         சீரொளி கண்டாய்!
     பாடும் வட்டத்
         தகட்டினைக்  கண்டாய்!
     அணுவின் ஆற்றலை
         அறியச் செய்தாய்
     அர்ச்சுனன் காத்த
         ஐயனார் போற்றியே!

     17.
     முருகனும் நீயும்
         ஆயர்கள் தானே!
     முருகனின் மகனைப்
         போன்றவன் நீயே!
     அருச்சுன பாண்டியன்
         நண்பனும் நீயே!
     தருமத்தைக் காத்த
         கருத்திணன் போற்றியே!

     18.     
     சுபத்தரை நல்கிய
         நண்பனும் நீயே!
     திரௌபதி காத்த
         தேவனும் நீயே!
     மணியை அணிந்த
         மணிகண்டன் நீயே!
     பணிவுடன் சபரியின்
        நாதனைப் போற்றியே!

     19.
     இருமுடி சுமந்து
          சபரிக்கு வந்தோம்
     குருகுல நாதனின்
         திருவடி போற்றி!
     நல்லறம் தந்த
         வல்லவர் போற்றி!
     புல்லாங் குழலிசை
         நாதனைப் போற்றியே!

     20.
     அறம்பொரு ளின்பம்
         வீடு பேற்றையும்
     திறம்படச் செய்து
         உலகினுக் களித்தே
     முத்தி யடைந்த
         முகுந்தனும் நீயே!         
     குந்த நாதனைப்
         போற்றிப் போற்றியே!!

⛰️🦚🐄🐐⛰️🦚🐄🐐⛰️🦚🐄🐐⛰️

16.இருமை
                """""""""""""""""
     222.
     உள்ள   தென்பது
         இருப்பது தானே
     இல்லை  யென்பதும்
          இருப்பதைத்  தானே  

     223.
     இல்லை யென்பது
          இல்லா ததல்ல
     இல்லா ததென
          புரிதலின் பிழையே

     224.
     என்னிடம் இல்லை
         உன்னிடம் உண்டு
     இல்லையும் உள்ளதும்
         என்பதைத் தானே

     225.
     இல்லை யென்பது
          இல்லா ததுவோ?
     இல்லா ததென
         அண்டத்தில் இல்லை

     226.
     இல்லை என்பதும்
         இருப்பது என்னில்
     இல்லை என்பதன்
         பொருளென ஏது?

     227.
     இல்லை என்பதற்கு
         பொருளில்லை என்னில்
     உள்ள தென்பதன் 
         பொருளென ஏது?

     228.
     உலகினில் உண்டென
         உள்ளதன் புரிதல்
     இல்லா ததென
         இல்லையின் புரிதல்

     229.
     உள்ளது யாவும்
         எண்ணமும் நினைவும்
     இல்லை என்பது
         உறக்கத்தின் நிலையே

இருமை என்பது எதிரெதிர் இரட்டைகளாகும்.
சரி தவறு, நன்மை தீமை, உள்ளது இல்லாதது போன்ற.

இவற்றில் உள்ளது இல்லாதது என்ற இரண்டு சொற்களின் பொருளும் ஒன்றே.

ஒரு பொருள் ஓரிடத்தில் இருக்கின்ற நிலையை உள்ளது என்றும், அப்பொருள் வேறொரு இடத்தில் இல்லாத நிலைய இல்லை என்றும் பொருள்படும்.
அதாவது ஒரு பொருள் என்னிடம் உண்டு உன்னிடம் இல்லை என்று கூறுவதைப் போல்.

இல்லை என்ற சொல் இல்லாததைப் பற்றி அல்ல.
இல்லாதது என்று அண்டத்தில் எதுவும் இல்லை.
இல்லை என்ற சொல் அண்டத்தில் இல்லாததைக் குறித்தச் சொல் என்ற புரிதல் தவறானதாகும்.

இல்லை என்ற சொல்லும் இருக்கின்ற நிலையைக் குறிக்கும் சொல் எனும்போது, அதாவது இல்லை என்பது இல்லாததைக் குறிக்கவில்லை எனும்போது இல்லை என்ற சொல்லுக்கு தனித்த பொருளில்லை அதுபோல் உள்ளதென்பதற்கும் பொருளில்லை என்பதாகும்.

அப்படியே அந்நிலையை குறிக்க வேண்டுமெனில் உள்ள நிலையாக எண்ணத்தையும் நினைவையும், இல்லை என்ற நிலையாக உறக்க நிலையையுமே குறிக்க முடியும்.

_பாடலாசிரியர் மணிகண்டன் நயினார் அவர்கள்🔯_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக