வெள்ளி, 1 மார்ச், 2024

ராசி பிரிவுகளும் மருந்துகளும்

ராசிப்பிரிவுகளும் மருந்துகளும்

ஒரு நோயாளிக்கு எந்த வகை மருந்து எளிதில் குணமளிக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஜோதிடத்தில் வழியுண்டு. ஒரு குறிப்பிட்ட மருந்து எந்த மூலப் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பது தெரிந்தால் ஒரு நோயாளிக்கு எந்த மாதிரியான மருந்து பயன் தரும் என்பதை

கண்டறியலாம். சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மற்று ஹோமியோபதி மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகள் பெரும்பாலும் தாதுப்பொருட்கள் தாவரப்பொருட்கள மற்றும் விலங்குகள், பறவைகளின் உடல் உறுப்புகளிலிருநது தயாரிக்கப்படுகி ன்றன.

ஜோதிடத்தில் பன்னிரண்டு ராசிகளும் தாது, மூலம், ஜீவன் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுளளன. இந்த ராசிப் பிரிவுகளைப் பயன்படுத்தி நோயாளிக்கு எந்த விதமான மருந்து ஒத்துப்போகும் என்பதை கண்டறியலாம். தாது என்பது தாதுப்பொருட்களையும், உலோகப்பொருட்களையும் குறிக்கும். மூலம் என்பது தாவரப்பொருட்களைக்குறிக்கும். ஜீவன் என்பது உயிரினங்களைக்குறிக்கும். ஜோதிடத்தில் நோயைக்குறிக்கும் வீடு ஆறம் பாவமாகும். நோய்க்கு நிவாரணமளிக்கும் வீடு ஆறுக்கு ஏழாம் வீடான பன்னிரண்டாம் வீடாகும். ராசி சக்கரத்தைக் கவனித்துப் பார்த்தால் ஆறாம் வீடும்,பன்னிரண்டாம் வீடும் ஒரே கத்துவத்தைக் குறிப்பதைக் காணலாம்அது எப்படி என்றால், ஆறாம் வீடு தாது ராசி என்றால்,பன்னிரண்டாம் வீடும் தாது ராசியாகவே வருகிறது. ஆறாம் வீடு மூல ராசி என்றால்,பன்னிரண்டாம் வீடும் மூல ராசியாகவே வருகிறது. ஆறாம் வீடு ஜீவ ராசி என்றால்,பன்னிரண்டாம் வீடும் ஜீவ ராசியாகவே வருகிறது. "முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்” "விசத்தை விசத்தால்தான் முறிக்கவேண்டும்" என்பது போல் ஆறாம் வீடும்,பன்னிரண்டாம் வீடும் அமைந்துள்ளன. ஹோமியோபதி மருத்துவத்தின் தத்துவமும் இதுதான். ஜென்ம லக்கினத்திற்கு ஆறாம் வீடு என்ன ராசியாக அமைகிறதோ, அதைக்கொண்டு நோயாளிக்கு எந்த விதமான மருந்து கொடுக்கவேண்டும் என்பதை நிர்ணயம் செய்யலாம். ஆறாம் வீடு தாது ராசியாக அமைந்தால் தாதுப்பொருட்கள், உலோகப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு பவள பற்பம், தங்க பற்பம், அய செந்தூரம் போன்ற மருந்துகளை கூறலாம். ஆறாம் வீடு மூல ராசியாக அமைந்தால்

மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆவாரம் பூ கசாயம், நில வேம்பு குடி நீர் போன்ற மருந்துகளை கூறலாம்.

ஆறாம் வீடு ஜீவ ராசியாக அமைந்தால் விலங்கு உறுப்புகளிலிருநது தயாரிக்கப்பட்ட மருந்தை கொடுக்க வேண்டும். சித்த மருத்துவத்துவத்தில் குண வடாகம் என்னும் நூல் உள்ளது அதில் எந்தெந்த விலங்கின் மாமிசத்தைசாப்பிட்டால் எந்தெந்த நோய் குணமாகும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. ஆறுக்குடையவன் எந்த ராசியில் நிற்கிறானோ அந்த ராசியைக்கொண்டும நோயாளிக்கு கொடுக்கவேண்டிய மருந்தை நிர்ணயம் செய்யலாம்.

நடைமுறையில் உள்ள சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மற்று ஹோமியோபதி மருத்துவ முறைகளை கையாள்பவர்கள், ஜோதிடத்தையும் இணைத்து கையாண்டால் சிகிச்சை முறையில் பெரும் வெற்றிகளை அடையலாம்.
 கட்டுரை.
 சித்தயோகி சிவதாசன் ரவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக