உணவு அவரவர் விருப்பம்.
ஆனால் உணவு முறை பத்தியங்களுக்கும் கடவுளுக்கும் தொடர்பு படுத்துவது தான் இங்கு வேடிக்கையின் உச்சம்
இந்த உலகில் வாழும் அத்தனை விடயங்களையும் நான்கு வகை யோனிகளின் வழியாக வந்தவாறு பிரித்தார்கள் சித்தர்கள்.
அண்டம்,வித்து, வியர்வை, விந்து
அண்டம்:
முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் அத்தனை உயிர் வகைகளும் "அண்ட" யோனியில் அடங்கும்.
வித்து:
இப்புவியில் உள்ள அத்தனை தாவர வர்க்கங்களும் "வித்து" என்ற யோனியில் அடங்கும்.
வியர்வை:
ஈரப்பதம் மற்றும் நீர் நிலைகளில் உருவாகும் புழுக்கள் போன்ற உயிரினங்கள் "வியர்வை" யோனியில் அடங்கும்.
விந்து:
விந்துவை உள்வாங்கி கரு முட்டையை தன்னுள் வைத்து குட்டி போடும் அத்தனை இனங்களும் "விந்துவில்" அடங்கும் மனிதன் உட்பட.
எனவே அத்தனையும் இந்த நால் வகை யோனிக்குள் அடக்கினார்கள்..
இதில் எல்லையற்ற வரத்தை தரக்கூடிய சுத்த யோனியாக தாவரங்களை பகுத்தனர். இதனாலேயே இதற்கு "தா வரம்" என்று பெயரிட்டனர்.
இந்த கடவுள் வழிபாடுகள் மதங்கள் வேதம் மறைகள் ரகசியம் கோவில் புராணம் கட்டுக்கதைகள் இவை அனைத்தும் மரணம் இல்லாத வாழ்வை நோக்கி சென்ற மனிதர்களின் மறைப்புச் சொற்களே.
எளிமையாக கூற வேண்டும் என்றால் உங்கள் உடல் அழியாமல் மரணம் இல்லாமல் வாழ்வது. உடல் அழிவதற்கு நேரடி தொடர்பு கொண்டது உணவு என்பதால் உணவு முறை பத்தியத்தில் இருந்து தொடங்கினார்கள் கடவுளை.
ஆனால் இந்த பத்தியங்கள் ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கு மாறுபட்டது.
உச்சபட்சமானகுளிர்ந்த மற்றும் உச்சபட்சமான சூடான பிரதேசத்தில் வாழ்ந்த சித்தர்கள் ஜீவ வர்க்க உணவுப் பொருட்களை பற்றி பெரிதாக பத்திய முறைகளை கூறவில்லை. முகமது நபியோ இயேசு கிறிஸ்துவோ ஜீவ வர்க்க உணவு உண்ணாவிதிகளை பற்றி வலியுறுத்தியதாக குறிப்புகள் இல்லை.
தென்னிந்திய சித்தர்கள் குறிப்பாக தமிழ் சித்தர்கள் தாவர யோனி தவிர மற்ற எந்த யோனியும் மனித உணவுக்கு உட்படுத்த கூடாது என்று தீர்க்கமாக பாடுகிறார்கள்.
அத்தனை சித்தர்களுமே புலால் மறுப்பு என்ற தலைப்பை வைத்துப் பாடி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
இங்குள்ள தட்பவெட்ப நிலைக்கும் காலச் சூழலுக்கும் ஒற்றை அறிவு கொண்ட தாவரங்கள் மட்டுமே பாதிப்பை குறைவாக கொடுக்கும்.
அதற்காக தாவரங்கள் உண்டால் இறக்க மாட்டோமா என்றால் அதுவும் இல்லை தாவர உணவுகளை உண்டாலும் இறக்கத்தான் போகிறோம். ஜீவ வர்க்கத்தை விட தாவர வர்க்கத்தில் அறிவு குறைவு என்பதால் புற அறிவு தன்னறிவை குழப்புவது குறைவு என்றே அவர்கள் கூறினார்கள்.
ஆனால் நாமோ இதை உடல் சத்துக்களோடு நிறுத்திக் கொள்கிறோம் அதை தாண்டி இன்று நீங்கள் கூறும் டிஎன்ஏ என்ற அறிவு நிலை உள்ளது.
இதை சில பழங்காலத்து மக்கள் எந்த இறைச்சி தின்றாலும் அந்த இறைச்சியின் தன்மை வந்துவிடும் என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.
தாவர உணவுகளை மட்டுமே உண்டு வாழ்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று சில மடையர்கள் கூறுவது உண்டு.
உண்மையான கடவுள் நிலையை அடைய முற்படுபவன் உணவு உண்ணும் சுழற்சியில் இருந்து விடுபட்டவனாக இருப்பான் இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் புறஉலகோடு தொடர்பு பட்டிருக்கும் சுவாசத்தினையும் நிறுத்தியவனாக இருப்பான்.
நீங்கள் சுவாசிப்பதால் உங்களுக்கு எண்ண அலைகள் எலும்பும், எண்ணத்தினை செயலாக்கம் உட்படுவீர்கள். செயல் உங்கள் உடலை இயங்கச் செய்யும். உடல் இயக்கம் சத்துக்களையும் இழக்கச் செய்து களைப்பை ஏற்படுத்தும் அப்போதே உங்களுக்கு புற உணவு எடுத்துக் கொள்ளும் பசி என்ற ஒன்று ஏற்படும்.
இதற்கு சித்தர்கள் எரிவதை பிடுங்கினால் கொதிவது தானே அடங்கும் என்ற பழமொழிக்கு இணங்க மூலத்தை நிறுத்தினர் அதாவது தன் சுவாசத்தை நிறுத்தினால் அதிலிருந்து விளையும் எண்ணம் செயல் பசி காமம் தூக்கம் என அத்தனையும் நிறுத்தி விடலாம் என்று அறிந்தனர்.
இங்கு தாவர உணவு ஜீவ உணவோ எது நீங்கள் உண்ணுபவராக இருந்தாலும் உங்கள் உடலின் தட்பவெப்ப நிலையை வைத்தே உங்கள் உடல் ஆரோக்கியம் வாழ்நாள் என்று முடிவு செய்யப்படுகிறது தட்பவெட்பத்தை உணவு தீர்மானிக்கும் என்பதை நான் கூறி உங்களுக்கு தெரியப் போவதில்லை.
சித்தர்கள் தனது உடலை காயகல்பம் செய்வதற்காக சில பத்திய முறைகளை கடைப்பிடித்தனர் அந்த பத்திய முறைகளின் பாடல்களை அரைகுறையாக படித்துவிட்டு சகஜமான வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களும் அந்த பத்திய முறை தான் பொங்கலும் புளியோதரையும் உண்பது தான் உயர்ந்த நிலை என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் உங்களை விட முட்டாள்தனம் எதுவும் கிடையாது.
ஏனென்றால் பத்தியத்தில் வாழ்ந்த சித்தர்கள் முப்பு என்ற அருமருந்துனையும் சேர்த்து உண்ணமையால் ஒருவேளை உணவு அல்லது பால் என்ற விதிகளுக்கு உட்பட்டு வாழ்ந்தார்கள். அந்த விரதம் நடைமுறை வாழ்வியலுக்கு உழைக்கும் மக்களுக்கும் ஒப்புமா என்றால் ஒப்பாது.
வெட்டியான் 🙏
Facebook பதிவு. சுடுகாட்டு வெட்டியான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக