வியாழன், 7 மார்ச், 2024

தென்னாடுடைய சிவன்

நாம் வணங்கும் கடவுள் சிவன் சுமார் 20000 ஆண்டுகள் முன் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த ஒரு சித்தர். முதன் முதலில் ஒகத்தை( யோகத்தை ) கண்டு பிடித்தவர். அதனால் தான் ஆதியோகி என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பிரபஞ்சம் ( பெரு + பஞ்சம் ( ஐந்து) )ஐந்து மூலக்கூறுகளால் ஆனது என்ற ஐந்து பூத கோட்பாட்டை கண்டு பிடித்தவர்( நிலம், நீர், நெருப்பு ,காற்று, விண்) . அதனால் தான் பஞ்ச பூத கோயில்கள் அவருக்கு உள்ளது. அணுக்களை ஆராய்ச்சி செய்யும் சுவிட்சர்லாந்தின் செர்ன் ஆய்வுக்கூடத்தின் முன்பும் நடராஜர் சிலை தான் உள்ளது. நம் வரலாறை அழித்த யூதர்களுக்கு நம் வரலாறு நன்றாக தெரியும்.

சந்திர நாட்காட்டியை உருவாக்கியவரும் நம் ஆதி சித்தர் சிவன் தான். இரண்டு சூரிய உதயத்திற்கு இடைப்பட்ட நேரத்தை அதாவது சூரியன் அடிப்படையில் நாட்கள் மற்றும் இரண்டு பௌர்ணமி அல்லது அம்மாவாசை இடைப்பட்ட நேரத்தை அதாவது சந்திரன் அடிப்படையில் மாதங்களை உருவாக்கி ஆண்டு கணக்கை முதன் முதலில் தோற்றுவித்தவர். அதனால் தான் கால பைரவர் ( வை என்றால் ஒளி, ஒளிருவதால் வைரம் என்ற பெயர் வந்தது. ஒளிரும் சூரியனும் வைரவர் என்று அழைக்கப்பட்டு அதுவே பைரவர்  என்று ஆனது) என்று வணங்கப்படுகிறார். அதற்கு அடையாளமாக தான் தலையில் நிலா இருப்பது போல அவரது வடிவம் உருவக படுத்த பட்டுள்ளது.
சந்திர நாட்காட்டி என்பது மிகவும் பழமையான நாட்காட்டி விவசாயம் செய்வதற்கு அந்த நாட்காட்டி பயன்படாது. விவசாயம் செய்யாத அரேபியர்கள் மட்டுமே இன்றும் சந்திர நாட்காட்டியைப் பயன்படுத்தி வருகிறார்கள். கால பைரவர் வடிவத்தில் சிவனோடு நாயும் இருக்கும் அது அவர் வேட்டையாடியவர் என்பதை நமக்கு சொல்கிறது. மக்கள் முதல் முதலாக மலையும் மலை சார்ந்த பகுதியும் ஆன குறிஞ்சி நிலத்திலேயே வாழ்ந்தனர் குறிஞ்சி நிலத்தில் உள்ள குகைகள் தங்குவதற்கு வசதியாக இருந்ததால். அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மலை மகன் தான் நம் சிவன். மலைமகள் ஆன பார்வதி ஒரு உருவக கடவுள் உண்மையில் சிவனின் மனைவி அல்ல. வார் என்றால் மலை, மலையில் வதிப்பவள் வார்+வதி அதுவே பார்வதி ஆகியது. வரை என்றாலும் மலையை குறிக்கும். மலையில் இருக்கும் ஆடு வறைஆடு மலையில் வாழ்பவர்கள் வறையர் அதுவே பறையர் என்றானது. சிவன் பறையர் இனத்தை சேர்ந்தவர்.

முஸ்லிம் மதம் சிவனோடு நெருங்கிய தொடர்பு உடையது. சிவனை வழிபட்டவர்களே ஒரு காலத்தில் அந்த மதத்தை தோற்றுவித்தார்கள்.
ஈச+ லாமா = இஸ்லாம்,
லாமா என்றால் துறவி.

அதனால் தான் சந்திர நாட்காட்டியின் பயன்பாடு இன்றும் முஸ்லிம்கள் இடம் இருக்கிறது.

முதல் தமிழ் சங்கத்தை வைத்து தமிழுக்கு தொண்டாற்றியவர் தான் நம் சிவன். சொற்களை உருவாக்கி மக்களை பேச வைத்ததால் தான் அவர் நா+ தன்= நாதன் என்று அழைக்கப்பட்டார்.
கல் ஆல மரத்து அடியில் தன் சீடர்களுக்கு வேதங்களை கூறியதால் கூறு - குரு என்ற வார்த்தை  உருவாகியது. சிவனே நான்கு வேதங்களையும் தமிழில் எழுதியவர்.அந்த உண்மை வேதங்களை அழித்து பொய்யான வேதங்களை சம ஸ்கிருதத்தில் எழுதிக்கொண்டனர் யூத பிராமணர்கள். சமுத்திர மாந்தன் என்ற கதையில் வரும் ஆலகால விஷம் என்பது சிவன் ஆலமரத்தின் அடியில் அமர்ந்த காலத்தில் எழுதிய வேதங்களையே  மறைமுகமாக குறிக்கிறது. சிவன் எழுதிய வேதங்களையே விஷமாக உருவகப்படுத்தி அதை சிவனே பருகி விட்டார் அதனால் அவருக்கு கழுத்து நீலமாகிவிட்டது அதனால் அவர் நீலகண்டன் என்று ஒரு பொய்யான கதையை யூத பிராமணர்கள் புனைந்து இருக்கிறார்கள். உண்மையில் சிவன் குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததால் அந்த கண்டம் நீரில் மூழ்கியதால் நீரின் நிறம் நீலம் என்பதால் நீலகண்டன் என்ற பெயர் சிவனுக்கு வந்தது. இதுவே அந்தப் பெயரின் உண்மையான காரணம்.

இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தவர் சிவன் அதைத்தான் தனது உருக்கு ( ருக் )வேதத்தில் அவர் சொல்லியிருந்தார்.

விலங்குகளின் தோல் மூலம் தோல் இசைக்கருவிகளை உருவாக்கியவர் சிவன் அதை தனது அதிர்வண ( அதர்வண) வேதத்தில்  சொல்லியிருந்தார்.

அரசியல் பற்றி சாம ( சாம ,தான ,பேத ,தண்டம் ) வேதத்தில் சொல்லியிருந்தார்.

நாட்டியம் முதலான பிற விஷயங்களை யசூர் ( யா என்றால் தெற்கு, யசூர் என்றால் தெற்கத்தி அரசன் என்று பொருள்) வேதத்தில் சொல்லி இருந்தார்.

இந்த உலகம் இன்பம் - துன்பம், நல்லது - கெட்டது, இரவு - பகல் போன்ற இருமை நிலையால் ஆனது என்று இருமை தத்துவத்தை ( Duality concept)போதித்தவர் சிவன்.

தென்னாடான குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததால் அவர் தென்னாடுடைய சிவனே போற்றி என்று வணங்குகிறோம்.

சரி எந்நாட்டவருக்கும் சிவன் எப்படி இறைவன் ஆனார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா.

ஈச+ லாமா - ஈசலமா - இஸ்லாம்
மாலா தான் லாமா ஆனது. லாமா என்றால் சாமியாரை குறிக்கும். 
தலை +லாமா - தலாய்லாமா 

மால் +அய் - மாலை - மாலா

மால் என்றால் கருப்பு , அய் ஆச்சரிய விகுதி. மாலை என்ற வார்த்தை நீண்ட தலை முடியை கொன்ட துறவிகளை குறிக்கும்.

சா +மயிர் அதாவது நீண்ட தலைமுடி கொண்டவர் 
சா+ மயிர்+ ஆர் - சாமியார். நீண்ட கருப்பு முடி தான் மாலை. முடி தோளில் உள்ளது போல் பூ இருந்தால் அது பூமாலை . 

ஈ என்றால் கொடுப்பது ,  ஈசன் என்றால் அதிகம் கொடுப்பவன்.

ஈசா ரா எல் - இஸ்ரேல் ( ரா என்றால் இருட்டு காளியை குறிக்கும். ஈசனையும் காளியையும் ஒரு சேர இஸ்ரேல் என்ற வார்த்தை குறிக்கும்.)

ஈசா + ஆக்கு - ஈசாக்கு - ஐசக் ( ஆக்கும் கடவுள் ஈசன்)

ஈசா மா எல் - இஸ்மாயில் ( ஈசன் ஆகிய பெரிய கடவுள் )

ஈசா - ஏசா - ஏசுவா - ஜேசுவ - ஜீசஸ் ( ஈசனின் நினைவாக ஏசுவிக்கு வைக்கப்பட்ட பெயர்)

கிரேக்க கடவுள் போஸிடைன்னும் சிவன் தான்.

ஏகிப்து கடவுள் ஓரஸ் சும் ( ஒரையோன் ) சிவன் தான்.

இன்னும் பல நாகரிகங்களில் சிவன் வழிபடபட்டு கொண்டு தான் உள்ளார்.

விண்மீன்களை இணைத்து உருவாக்கிய முதல் ஓரை( ஓர்+ அய்) மூத்த சித்தர் சிவனுக்கு சூட்ட பட்டது . அதுவே ஆதி ஓரை என்பதால் ஆதிரை ஆகி 
திரு +ஆதிரை - திருவாதிரை ஆனது. 

திருவாதிரையின் பழைய பெயர் 
சித்தர் + ஓரை - சித்திரை ஆகும். வானில் 6 மணிக்கு திருவாதிரை தோன்றும் நாளில் தமிழ் மாதம் பிறந்தது. முதல் மாதத்தின் பெயரும் சிவனின் நினைவால் சித்திரை என்று வைக்கப்பட்டுள்ளது. 

ஆரிய பிராமணன் பொய்யான கதைகளை புனைந்து சிவன், முருகன், வீட்டினன் போன்ற நம் சித்தர்களின் வரலாற்றை மாற்றி விட்டான்.  திராவிடன் அந்த பொய்யான கதையை கேலி கிண்டல் செய்து போலி பகுத்தறிவு பேசி நாம் கடவுளை வணங்குவதில் இருந்து நம்மை தடுப்பான். இரண்டு பேருமே கூட்டுக் களவாணிகள். இவர்களின் சூழ்ச்சியிலிருந்து தமிழ் மக்கள் உண்மை வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும்.

நன்றி தமிழ் சிந்தனையாளர் பேரவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக